You are on page 1of 9

இன்றைக்கு படிக்க வேண்டிய வேத பகுதி (ஜனவரி 01)

ஆதியாகமம் 1

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள்


இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும்


தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று


பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

6 பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது


ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

7 தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீ ழே இருக்கிற


ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்;
அது அப்படியே ஆயிற்று.

8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும்


விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று.

9 பின்பு தேவன்: வானத்தின் கீ ழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும்,


வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம்


என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும்


பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத்
தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும்
முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

12 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப்


பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள்
விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது;
தேவன் அது நல்லது என்று கண்டார்.

13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.


14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம்
என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள்
அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும்
குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே


சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய
இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்.

18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம்


உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்;
தேவன் அது நல்லது என்று கண்டார்.

19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற


ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய்
ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

21 தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே


திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள
ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது
என்று கண்டார்.

22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை


நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு


மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப்
பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான


நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும்
உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை


உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்
பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும்
சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத்


தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச்
சிருஷ்டித்தார்.

28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,


அதைக் கீ ழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்,
பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று
சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்


பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்
உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல


பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான
சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே
ஆயிற்று.

31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது


மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள்
ஆயிற்று.

ஆதியாகமம் 2

1 இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத்


தீர்ந்தன.

2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம்


உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே
ஓய்ந்திருந்தார்.

3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம்


முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து,
அதைப் பரிசுத்தமாக்கினார்.

4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே,


வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும்
உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும்
முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும்
மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும்
இருந்ததில்லை.

6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி,


ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி,


தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித


விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை
அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.

10 தோட்டத்துக்குத் தண்ண ீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி,


அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம்


முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும்,


கோமேதகக்கல்லும் உண்டு.

13 இரண்டாம் ஆற்றுக்குக் கீ கோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம்


முழுவதையும் சுற்றி ஓடும்.

14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே


ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்


கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல


விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

17 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்


புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று
கட்டளையிட்டார்.
18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற
துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின்


சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு
என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில்
கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே
அதற்குப் பேராயிற்று.

20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப்


பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ
ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை


வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில்
ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக


உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில்


மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி
என்னப்படுவாள் என்றான்.

24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன்


மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும்,


வெட்கப்படாதிருந்தார்கள்.

மத்தேயு 1

1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவதின்


ீ குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய
வம்ச வரலாறு:

2 ஆபிரகாம்ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு


யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

3 யூதா பாரேசையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ்


எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன்


சல்மோனைப் பெற்றான்;
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை
ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

6 ஈசாய் தாவது
ீ ராஜாவைப் பெற்றான்; தாவது
ீ ராஜா உரியாவின்
மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப்


பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;

8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம்


உசியாவைப் பெற்றான்;

9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ்


எசேக்கியாவைப் பெற்றான்;

10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன்


யோசியாவைப் பெற்றான்;

11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும்


அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப்


பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீ மைப் பெற்றான்;


எலியாக்கீ ம் ஆசோரைப் பெற்றான்;

14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீ மைப் பெற்றான்; ஆகீ ம்


எலியூதைப் பெற்றான்;

15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்;


மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில்


கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.

17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல்


தாவதுவரைக்கும்
ீ பதினாலு தலைமுறைகளும்; தாவதுமுதல்
ீ பாபிலோனுக்குச்
சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்;
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு
தலைமுறைகளுமாம்.

18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய


மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே,
அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன்


சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவதின்
ீ குமாரனாகிய யோசேப்பே, உன்
மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில்
உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;


ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான்.

22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி


இதெல்லாம் நடந்தது.

23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;


அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.
இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

24 யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக்


கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து,


அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

மத்தேயு 2:1-12

1 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு


பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய


நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.

3 ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம்


நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து:


கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:


6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என்
ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று,
தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம்


காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:

8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக்


கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள்
என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே


கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்
அவர்களுக்குமுன் சென்றது.

10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த


சந்தோஷமடைந்தார்கள்.

11 அவர்கள் அந்த வட்டுக்குள்


ீ பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய
மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள்
பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும்
வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று


சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத்
திரும்பிப்போனார்கள்.

சங்கீ தம் 1:1-6

1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில்


நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் ,

2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய


வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து,


இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம்
வாய்க்கும்.

4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல்


இருக்கிறார்கள்.
5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும்
நிலைநிற்பதில்லை.

6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ


அழியும்.

நீதிமொழிகள் 1:1-6

1 தாவதின்
ீ குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின்
நீதிமொழிகள்:

2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை


அடையலாம்.

4 இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும்


விவேகத்தையும் கொடுக்கும்.

5 புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி


நல்லாலோசனைகளை அடைந்து;

6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும்,


அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.

You might also like