You are on page 1of 4

விளையாட்டுச் செய்திகள் 27-1-2022 வியாழக்கிழமை

பூப்பந்து

1. கடந்த ஆண்டு சனவரி மாதம் தாய்லாந்தில் நடந்த Yonex தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி,
Toyota தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி, BWF இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறந்த அடைவு
நிலையைப் பதிவு செய்யாததைத் தொடர்ந்து அப்போதிருந்தே தாம் ஒரு தனி நபர் பூப்பந்து வல்லுநராக ஆக
வேண்டும் எனும் எண்ணம் கொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார் நாட்டின் முதன்மை நிலை பூப்பந்து வீரர்
Lee Zii Jia.
கடந்த ஓராண்டாக இவ்வெண்ணம் தமது மனதில் நிழலாடியதை Alor Setar ரைப் பூர்வீகமாகக் கொண்ட
23 வயது Zii Jia சொன்னார்.
இது தான் இறுதியா அல்லது இதனைத்தான் தாம் கடக்க வேண்டியச் சூழல் எற்படுமா எனத் தமது
பயிற்சியாளர்கலைக் கேட்டதாகவும் கூறிய Zii Jia, இறுதியில் கடந்த ஆண்டு ஐரோப்பியப் போட்டிகள்
முடிந்த பிறகு மலேசியப் பூப்பந்து சங்கமாக BAM இல் இருந்து தாம் வெளியேற முடிவெடுத்ததாகக்
குறிப்பிட்டார்.

உலகத் தர வரிசையில் 7 ஆம் இடத்தில் இருக்கும் அவர் அதிக அழுத்தம், மலேசிய பூப்பந்து அக்காடெமியின்
அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை முரை ஆகியவற்றைக் காரனங்களாக முன்வைத்து BAM இல்
இருந்து தாம் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், மலேசியாவை மையமாகக் கொண்டு தமது சொந்த அணியை நிறுவி தாமஸ் கின்ணம், 2022
ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி போன்ற மிக முக்கியமானப் போட்டிகளில்
நாட்டைப் பிரதிநிதித்துக் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் உறுதிப் படுத்தினார்.
தமது விலகல் கடிதத்தை ஒப்படைக்கும்போதே இரண்டு ஆண்டுகளுக்கு எந்த உலக நிலையிலானப்
போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது போன்ற மிக மோசமானச் சூழலைச் சந்திக்கத் தாம் தயாராக
இருந்ததாகத் தெரிவித்த Zii Jia, குடியுரிமையை மாற்றிக் கொண்டு வேறூ எந்த நாட்டிற்குச் செல்ல
சிந்தித்ததே இல்லை எனவும் தெளிவு படுத்தினார்.

இருந்த போதிலும், Zii Jia வுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அவர் செய்த மேல்முறையீடு ஏற்ற்றுக்
கொள்ளப்பட்டு அத்தடை தர்போது விலக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2. இதனிடையே, குழு நிலையிலான ஆசியப் பூப்பந்து போட்டி BATC அடுத்த மாதம் 15 முதல் 20
ஆம் தேதி வரை Shah Alam இல் உள்ள Pusat Konvensyen Setia City யின் நடைபெற உள்ளது. அதில்
பங்கு பெறூம் விளையாட்டாளர்கள் பட்டியலை மலேசியா தயார் செய்ய உள்ளது என BAM இன் பொதுச்
செயலாளர் Datuk Kenny Goh தெரிவித்தார்.
அப்பட்டியல் நிறைவு பெறும் இறூதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தனித்து இயங்கக்க்கூடிய
விளையாட்டாளர்கள் பெயரும் அதில் இடம் பெறலாம் எனவும் அவர் சொன்னார்.
இப்போட்டியில் குறைந்தது அரை இறுதிச் சுற்றுக்குச் செல்லும் குழுக்கள் தாமஸ் / ஊபர் கிண்ணப்
போட்டிக்கு இயல்பாகவே தகுதி பெற்றூ விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறீய மலேசிய ஆண்கள் அணி இந்தோனேசியாவிடம் 1 – 3
எனும் புள்ளிகளின் அடிப்படையில் தோல்வியைத் தழுவி இருந்தன. அதே சமயம், பெண்கள் அணி
அரையிறூதிச் சுற்றில் தோல்வி அடைந்தனர்.

இம்முறை மலேசியாவில் அப்போட்டி நடக்கவிருப்பதாக கடந்த ஆண்டு இறுதி - அக்தோபர் நவம்பர்


மாதங்களீல்தான் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மலேசிய அணி தயாராக இருப்பதாக பயிற்றுநர்கள்
தரப்பிலிருந்து தமக்குத் தெரிவிக்கப் பட்டிருப்பதாக அவர் விளக்கினார்
மேலும் சிறந்த போட்டியாளர்களே களமிறக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் இது
குறித்து Wong Choong Hann, Rexy Mainaky ஆகிய இரு பிரிவு பயிற்றூநர்களையும் தாம் அடிக்கடி
தொடர்பு கொண்டு இப்போட்டிக்கானத் தயார் நிலை குறித்து பேசி வருவதாகக் கூறிய Datuk Kenny Goh
கூறினார்.

சீ விளையாட்டுப் போட்டி – பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி

3. சீ விளையாட்டுப் போட்டியிலும் பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளி,


வெண்கலப் பதக்கங்களை வெல்லும் போட்டியாளர்களுக்கு ஊக்கத் தொகை அதிகரிக்கப்படும்
மகிழ்ச்சியானச் செய்தியை இளைஞர் விளையாட்டு அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu
வெளியிட்டுள்ளார்.

அப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வெல்கிறவர்களுக்கு ரிம 800 இல் இருந்து ரிம 1,500 ஆகவும்

வெண்கலப் பதக்கம் வெல்கிறவர்களுக்கு ரிம 800 இல் இருந்து ரிம 1,000 ஆகவும் அதிகரிப்பட
உள்ளது.
விளையாட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் பயிற்சி
குறித்த திட்டமிடலையும் கருத்தில் கொண்டு இவ்வாறு
அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.
அதே சமயம், அப்போட்டிகளில் தகுதி பெறத் தவறி இன்னும் முழு நேரப்
பயிற்சித் திட்டத்திலேயே நீடித்திருக்கும் விளையாட்டாளர்கள் பயிற்சிக்கு
வரும் ஒவ்வொரு முறையிம் அவர்களுக்குக் கட்டம் கட்டமாக உதவ
தேசிய விளையாட்டு மன்றம் MSN ஐ பணித்திருப்பதாகவும் கூறினார்.
குறிப்பாக, தங்குமிடம், பயிற்சிக் கூடம், உணவு, ஆலோசனைகள்
போன்றவற்றை திட்டமிட்டபடி ஒவ்வொரு தேசிய நிலை விளையாட்டு
அமைப்புகளுக்கும் வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
அமைச்சர் அறிவித்த ஊக்கத் தொகை அதிகரிப்பை 45 விளையாட்டாளர்களும் 12 பாரா
விளையாட்டாளர்களும் பெறுவர்.

Le Tour de Langkawi (LTdL) 2022


4. இவ்வாண்டு நிச்சயம் Le Tour de Langkawi
(LTdL) 2022 உலகத்தர சைக்கிளோட்டப் போட்டி
நடத்தப்படும் என இளைஞர் விளையாட்டு அமைச்சு உறுதியளித்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu, மலேசிய தேசிய
சைக்கிளோட்ட அமைப்புடனும் அப்போட்டியின் ஏற்பாட்ட்டாளரான Human Voyage நிறுவனத்துடனும்
நடத்திய விவாதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் சொன்னார்.
இது குறித்து தொடர் விவாதங்கள் சீனப் புத்தாண்டுக்குப் பிறகும் தொடரும் எனவும் அதில் பல மேம்பாடுகள்
உட்படுத்தப்படும் எனவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக நிலையிலான சைக்கிளோட்டப் போட்டியான LTdL ஆல் பல வெளிநாட்டு போட்டியாளர்கள்


மலேசியாவுக்கு வருகை தருவது மட்டும் இல்லாமல் அது நாட்டிற்கு பெரும் புகழைக் கொண்டு வரக் கூடிய
ஒன்றாகும் என Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்தார்.
காற்பந்து

5. 2022 சூப்பர் லீக்கில் களமிறங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் Penang FC அணிக்கு மற்றோர்


இறக்குமதி விளையாட்டாளர் கொண்டுவரப்பட்டால் அவ்வணியின் தாக்குதல் பகுதி மேலும் வலுவாக
இருப்பதோடு அவ்வணியின் Casagrande உடன் கைகோர்த்து மேலும் வலுபெற ஏதுவாக இருக்கும் என
நம்புகிறார் பயிற்றுநர் Tomas Trucha.\
யார் அந்த இறக்குமதி ஆட்டக்காரர் என்பது இது வரையில் இரகசியமாகக் காக்கப்படுவதும் அவ்வணிக்கு
வலுவே எனக்கூறிய அவர், ஓர் இறக்குமதி ஆட்டக் காரர் கட்டாயம் இணைவார் என்பதில் ஐயமில்லை எனக்
குறிப்பிட்டுள்ளார்.

Czech குடியரசு நாட்டைச் சேர்ந்த அந்தப் பயிற்றுநர் குறிப்பிடுகயில், தாக்குதல் ஆட்டகாரராக


Casagrande மீது மட்டுமே கவனம் செலுத்தப்படாமலும் அவரை மட்டுமே நம்பி இல்லாமலும்
இன்னொரு ஆற்றல் வாய்ந்த ஆட்டக்காரரை உருவாக்கி இத்தவணையில் சிறந்த அடைவு நிலையைப் பதிவு
செய்ய பினாங்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Casagrande மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டாளர்களும் கோல் புகுத்தும் உத்திகள் குறித்து பயிற்சி
அளிக்கப்பட்டு தயாராகிக் கொண்டு இருப்பதாகவும் அது அணிக்கு கூடுதல் பலமாக
உருவாக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தற்போது வரையில் Penang FC Casagrande, Rafael Vitor, Endrick dos Santos ஆகிய 3
இறக்குமதி ஆட்டக்காரர்கள் இடம்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவ்வணிக்கு மேலும் இரு
இறக்குமதி ஆட்டக்காரர்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You might also like