You are on page 1of 2

நிகழ்ச்சி நெறியாளர் ஆசிரியர் திருமதி இராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

அன்பிற்கும் பண்பிற்கும் உரிய தலைமையாசரியர் அவர்களே, மதிப்பிற்குரிய


பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் அவர்களே, எங்கள் பாசத்திற்குரிய
துணைத்தலைமையாசிரியர்களே, நேசத்திற்குரிய ஆசிரிய ஆசிரியைகளே, என்
சக மாணவர் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இவ்வினிய காலை
வேளையில் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய
நன்னாளில் மாணவர்கள் சார்பில் உரை ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த
இவ்வாய்ப்பை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.
கெடா மாநில கல்வி இலாகாவின் பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி உதவி
இயக்குனராக பதவி நியமிக்கப்பட்டுள்ள நம் தலைமையாசிரியர் அவர்களுக்கு
மாணவர்கள் சார்ப்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்தது
் கள் ஐயா.
தலைமை ஆசிரியர்
பள்ளியின் நிர்வாகி, ஒரு பண்முகப் பணியாளர், பள்ளியின் தரக் காவலர்,
மாணவர் நலப்பொறுப்பாளர், சக ஆசிரியர்களின் தலைவர், கல்வி ஆர்வலர்,
என்றும் கற்க விரும்பும் மாணவன், பள்ளிக்கும் கல்வித்துறைக்கும் இணைக்குநர்,
வழிகாட்டும் ஆர்வம் மிக்க முன்மாதிரி ஆசிரியர் எனச் சொல்லிக் கொண்டே
போகலாம். இப்படி எல்லா பண்பு நலன்கள் கொண்ட ஒருவரே நம் தலமையாசிரியர்.
“கடிகாரத்திற்குக் கம்பிச் சுருள் போல், இயந்திரத்திற்கு இயக்கச் சக்கரம் போல்,
விசைப்படகுக்குத் எந்திரம் போலப் பள்ளிக்கு நம் தலைமையாசிரியர் ஆவார்”
“தலைமையாசிரியரைச் சார்ந்தே பள்ளியின் பணிகள், அமைந்துள்ளன”
தன்னுடைய அலுவல் காரணமாக, அரசிற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும்,
நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும், ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்,
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தன்னுடைய நடத்தை, நுண்
நயம் மற்றும் இரக்க குணங்களின் வழியாக உறவை மேம்படுத்துபயவர் நம்
தலைமையாசிரியர் என்றால் அது மிகையாகாது.
நம் தலைமையாசிரியர் பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும் நல்ல மனிதர், நல்ல
கொள்கைகள், அறிவு, சமூகப்பணி, தலைமைப் பண்பு, நடுநிலையாளர் எனும்
குணநலன்களைப் பெற்றுத் திகழ்கிறார். நிர்வாகி என்ற முறையில் திறமையான
நிர்வாகப் பொறுப்பையும், கல்வியாளர் என்ற அடிப்படையில் பள்ளியில் கற்றல்
சூழலை ஏற்படுத்தவும், ஆசிரியர் என்ற முறையில் முறையான கல்வியை வழங்கி
அடைவுகளை மேம்படுத்தியுள்ளார். மனிதன் என்ற முறையில் மனித உறவுகளை
வலுப்படுத்தவும், தலைவர் என்ற முறையில் பள்ளியின் அனைத்துச்
செயல்களிலும் மனமுவந்து பொறுப்பை ஏற்கும் பண்பைக் கொண்டவராகவும்
திகழ்நத
் ிருக்கிறார் நம் தலைமையாசிரியர். மேலும், கடமையுணர்வு,
கருணையுள்ளம், பணியாற்றுவதில் ஆர்வம், சுயக்கட்டுப்பாடு, போதுமான
தொழில் வல்லமை, மனிதநேயம் மிக்க பல் உருவம் கொண்ட மாமனிதர் நம் ஐயா.
அனைத்திலும் மிகு புலமை வாய்ந்தவராக, ஆலோசித்து வழிகாட்டுபவராக,
விளையாட்டுகளை அமைப்பவராக, பள்ளியின் ஆவணங்களைச் சீராகப்
பராமரிப்பவராக, நேர்மைமிக்க பொதுநிதி ஆள்பவராக, மாணவர்களின் உடல்,
அறிவு மற்றும் ஒழுக்க நலன்களைப் பாதுகாப்பவராகச் செயல்பட்டுக் கடமை
ஆற்றி, வந்துள்ளதை நாம் கண்கூடாக இந்த இரண்டரை ஆண்டுகளிலேயே
பார்த்துவிட்டோம்.
கெடா மாநில கல்வி இலாகாவின் பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி உதவி
இயக்குனராக பதவி நியமிக்கப்பட்டுள்ள நம் தலைமையாசிரியர் தன்னுடைய
அனுபவம், திறமை, சக்தி, விழிப்புணர்வு, நுண்நயம், கடமை உணர்வு, சமூக
உணர்வு, கற்பனைத்திறன், புதியன படைக்கும் திறன் ஆகியவற்றைப்
பயன்படுத்தி கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால, நிகழ்காலக் கல்வி
நலனைக் காப்பார் என்ற நம்பிக்கையில் விடைபெறூகிறேன். நன்றி.

You might also like