You are on page 1of 1

மாணவர் கடமை

ஒரு மனிதனின் வாழ்நாளில் மிகவும் சிறந்ததொரு காலப்பகுதியாகவே


மாணவப் பருவம் காணப்படுகின்றது. இந்த மாணவப் பருவத்தை நாம்
சிறந்த முறையில் பயன்படுத்துவோமே ஆனால் எமது எதிர்காலமும்
சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்த வகையில்
மாணவர்கள் கைக்கொள்ள கூக டியகடமைகள் பல உள்ளன . அவற்றுள்
முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் நோக்கலாம்.

பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்க்கக்க ஒ


டியகூவ்வொரு
பெற்றோர்களையும் மதிப்பது மாணவர்களாகிய எமது கடமையாகும்.
அதாவது “தாயிற் சிறந்த கோயில் இல்லை. தந்தையின் சொல் மிக்க
மந்திரம் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப பெற்றோரின் சொற்படி
கேட்டு நடப்பது அவசியமானதாகும். கண்கண்ட தெய்வங்களான தாய்,
தந்தை ஆகியவர்களது மனம் மகிழும் வகையில் நாம் ஒவ்வொருவரும்
நடந்து கொள்வோமே ஆனால் அவர்களுடைய ஆசிர்வாதமும் எமக்கு
கிடைக்கப்பெற்று உயர்ந்த நிலைகளினை அடைந்து கொள்ள முடியும்.
எனவே பெற்றோரின் சொற்படி கேட்டு நடப்பது எமது மிகப்பெரிய
கடமையாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என சான்றோர்களால் வணங்குவதற்கு


தகுதியானவர்களின் வரிசையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இந்த
ஆசிரியர்களே முன்னிறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில்
மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும்
உறுதுணையாகவும் இருக்கக்கூடிய ஆசான்களை எப்பொழுதும் மதித்து
நடப்பது மாணவர்களின் தலையாயக் கடமையாகும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகளை பெறுவதற்கு
ஏணிப்படி போல் இருப்பவர்கள் ஆசிரியர்கள் எனவே அந்த ஏணிப்படியை
உபயோகித்து விட்டு தள்ளி விடுவது போல் ஆசிரியர்களை மறந்து
மதிக்காமல் செயல்படுவது ஒரு போதும் சிறந்ததல்ல.

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியினையும் கடைபிடித்தல்


“முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழிக்கு ஏற்ப மாணவர்கள்
ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்குகளை நோக்கி, எப்பொழுதும்
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்களாக இருக்க
வேண்டும். அதாவது “விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்” என்ற வாசகங்களுக்கு அமைவாக மாணவர்கள்
ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு முயற்சித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அந்த முயற்சி கைக வ டிகூிட்டால் வெற்றி ,
இல்லையேல் அது ஓர் அனுபவமாகி மீண்டும் முயற்சிப்பதற்கு
உறுதுணையாக இருக்கும். எனவே இலட்சியத்தை நோக்கிய
மாணவர்களின் பயணத்தில் தன்னம்பிக்கையையும்,
விடாமுயற்சியையும் கடைபிடிப்பது, மிக முக்கியமான கடமை
ஒன்றாகவே காணப்படுகின்றது.

மாணவர்களுக்குரிய கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய


பலர் இன்று உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.எனவே மேற்குறிப்பிட்ட
கடமைகள் தவிர நேர முகாமைத்துவம்,பொதுநலம் பேணுதல், பணிவு
நடத்தை போன்ற இதர கடமைகளையும் மாணவர்கள் உரிய முறையில்
அறிந்து கொண்டு அவற்றினை செயல்படுத்துவது அவசியமான
ஒன்றாகும்.

You might also like