You are on page 1of 2

ஏவா மக்கள் மூவா மருந்து

புனிதாவின் அம்மாவிற்கு உடல்நலம் சரி இல்லை. இருந்தாலும்

வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டுமே என்று படுக்கையை

விட்டு எழுந்தார். படுக்கறையை விட்டு வெளியே சென்று

பார்த்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி. புனிதா அனைத்து வீட்டு

வேலைகளையும் செய்து முடித்திருந்தாள். தன் மகள்

குறிப்பறிந்து செயல்படும் பிள்ளையாக இருப்பதை எண்ணி

பெருமிதம் அடைந்தார்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

கபிலன் தன் வீடடி


் ன் முற்றத்தில் அமர்ந்து தமிழ்மொழிப்

பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவ்வேளையில் அவன்

அப்பா அங்கே வந்தார். மொழிப் பாடத்தைப் படிப்பதை விட

கணிதப் பாடத்தை படிக்குமாறு கூறினார். அதுவே சிறந்தது

என கூறினார். அதற்கு அவன், தன் வாழ்வின்

முன்னேற்றத்திற்கு எண்ணோடு சேர்ந்து மொழியும் மிக

அவசியம் என கூறினான். இல்லேயேல் தான் ஒரு முட்டாள்

பையன் ஆகிவிடுவேன் என்றான். கபிலனின் அப்பா அவனின்

கூற்றைக் கேட்டு, எண்ணும் மொழியும் நமது இரு கண்கள்

போன்றது என ஆமோதித்தார்.

You might also like