You are on page 1of 1

SMK TANJONG RAMBUTAN MINGGU 18 / 30

RANCANGAN PENGAJARAN HARIAN

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 2 (2 GM / 2 AZ)


தலைப்பு : நவீன வளர்ச்சி
நேரம் : 12.30 - 1.30 மாலை
நாள் : திங்கட்கிழமை / 10.08.2020
கற்றல் தரம் : 1.4.4 ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூறுவர்.
2.3.6 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
3.4.13 160 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :
i) ஒரு பொருளைப் பற்றி விவரித்துக் கூற அறிந்திருப்பர்.
ii) அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிந்திருப்பர்.
iii) 160 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுத அறிந்திருப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் :
1. ஆசிரியர், மாணவர்களின் நலம் விசாரித்தல்.
2. நடவடிக்கை 1 : ஆசிரியர், வெண்பலகையில் தொலைநோக்கு கருவியின் படத்தை ஒட்டுதல்;
கேள்விகளின் வழி மாணவர்களை அப்பொருளைப் பற்றி விவரித்துக் கூற தூண்டுதல்.
தொடர்ந்து, பாடபுத்தகத்தில் பக்கம்.136-இல் கொடுக்கப்பட்டுள்ள ‘குரல்வழி இயக்கும் சக்கர
நாற்காலி’ பற்றிய தகவல்களை இணையர் முறையில் வகுப்பு முன்னிலையில் விவரித்து கூறச்
செய்தல்.
3. நடவடிக்கை 2 : பாடபுத்தகத்தில் பக்கம். 138-இல் கொடுக்கப்பட்டுள்ள ‘விண்வெளிப் பயணம்’
தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துத் தொடர்ந்துவரும் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிக்க செய்தல்; ஆசிரியர், காணொலியின் துணையுடன் விண்வெளிப் பயணம் தொடர்பான
விவரங்களை மாணவர்களுக்கு விளக்கப்படுத்துதல்.
4. நடவடிக்கை 3 : “நான் ஒரு விஞ்ஞானியானால்” எனும் தலைப்பில் வகுப்பரையில் மாணவர்களைக்
கருத்துபரிமாற்றம் செய்ய செய்தல்; ஆசிரியர், கற்பனை கட்டுரை எழுதும் முறையை வகுப்பில்
விளக்குதல். தொடர்ந்து, மாணவர்களை “நான் பணக்காரனானால்” எனும் தலைப்பில் கட்டுரை
எழுத பணித்தல்.
5. ஆசிரியர், இன்றைய பாடம் தொடர்பான உயர்நிலைச் சிந்தனை கேள்வியோடு வகுப்பை நிறைவு
செய்தல்.
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல்
பண்புக்கூறுகள் : சுயமுயற்சி
பயிற்றுத் துணைப்பொருள் : படத்துண்டுகள், காணொலி, பாடபுத்தகம்
மதிப்பீடு : ஆசிரியர் மாணவர்களின் புத்தகத்தை
சரிபார்ப்பதன்வழியும் வகுப்பறை படைபின் வழியும், மாணவர்களை
மதிப்படு
ீ செய்வார்.
சிந்தனை மீட்சி : / மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி
வழங்கப்படும்.
மாணவர் வருகை : ( / )

You might also like