You are on page 1of 1

மனிதத்துவ அணுகுமுறை

       மனித நேய மனிதாபிமானம் மற்றும் மனித நேயம் போன்ற சொற்களானது மனிதத்துவ


அணுகுமுறையுடன் தொடர்பான சொற்களாகும். இது முழு மனித நபர்கள் பற்றியும் மற்றும்
ஒவ்வொரு நபரின் தனித்துவம் பற்றியும் கற்கின்ற அணுகுமுறையாகவே காணப்படுகின்றது.
தனிப்பட்ட நபர் எனும் போது தனிப்பட்ட நபரின் மதிப்பு, மனிதப் பெறுமதிகளுடைய
மையம், படைப்பு மற்றும் மனிதர்களின் செயல்களினையே வலியுறுத்துகின்றது. இந்த
மனிதத்துவ அணுகுமுறையானது மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்கள், வலி, மற்றும் விரக்தியை
சமாளிக்கக் கூடிய உன்னதமான மனிதத் திறனை மையமாகக் கொண்டே
காணப்படுகின்றது. ஆகவே மனிதத்துவ அணுகுமுறையானது ஒவ்வொரு மனிதரும் திறனை
அடைந்து கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்துகின்றது.

மனிதத்துவக் கொள்கையின் வரலாறு எனும் போது, மாஸ்லோ (1943) மனித உந்துதலின்


ஒரு படிநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார். அதே ஆண்டில் க்லார்க் ஹுல்ஸ்
நடத்தையினுடைய அடிப்படைகளை வெளியிட்டார். மேலும் இந்த மனிதத்துவ
கொள்கையில் பிரசித்தி பெற்ற ஒருவராக கார்ல் ரொஜர்ஸ் காணப்படுகின்றார். இவர் 1951
இல் தனியாள் மையப்படுத்தியக் கொள்கையை வெளியிட்டார். தனியாளை
மையப்படுத்தியக் கொள்கை எனும் போது, இது ஒரு வகையான சிகிச்சையாகும். இது
வாடிக்கையாளர் தனது சொந்த அனுபவங்களைப் புரிந்து கொள்வதற்கும், மதிப்பீடு
செய்வதற்கும் சிறந்த நிலையில் உள்ளதொன்றாகக் காணப்படுகின்றது. தனியாளை
மையப்படுத்தியக் கொள்கையில், சூழலை உருவாக்க கார்ல் ரொஜர்ஸ் 3 நிபந்தனைகளாக
நிபந்தனையற்ற நேர்மறையான கருத்து, பச்சாதாபம், ஒற்றுமை போன்றவற்றை
முன்வைத்தார். இவர் மனித நேய உளவியளின் ஸ்தாபக நபர்களில் ஒருவராகவும்
காணப்பட்டார். இவர் உளவியல் சிகிச்சை (1954) மற்றும் ஆளுமை மாற்றம் என்ற
நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

கட்டமைக்கப்படாத நேர்காணல்களை, தரமான முறைகளில் பயன்படுத்துவதன் மூலம்


மனித நேயம் தொடர்பான ஒரு நபர் பற்றிய சிறந்த பார்வையைப் பெற முடியும். இந்த
அணுகுமுறை மனித நடத்தை பற்றிய முழுமையான பார்வையை வழங்கக் கூடியனவாகவே
காணப்படுகின்றது. மனித நேய உளவியல் 1970 மற்றும் 1980 களில் அதன் செல்வாக்கை
விரிவுபடுத்தியது. அதனை மனித இயல்பு, மனித நிலை புரிதலை அணுகுவதற்கு புதிய
பெறுமதிகளை வழங்கியமை மற்றும் மனநிலை சிகிச்சையின் தொழில் முறையில்
பரந்தளவிலான சிகிச்சை முறைகளை வழங்கியமை என்பதிலிருந்து கண்டு கொள்ளலாம்.
மனித நேய அணுகுமுறையின் உளவியலாளரின் கருத்துப்படி மனிதன் சுற்றுச் சூழலால்
கட்டுப்படுத்தப்படுகின்றான். ஆகவே மனிதனுக்கு சுற்றுச் சுழல் ஆதாரமாக இருந்தால்
மாத்திரமே சுயமாக இயங்க முடியும்.

You might also like