You are on page 1of 1

சுந்தர மூர்தத

் ி நாயனார் வரலாறு

முற்பிறவியில் செய்த பாவங்கள் வினைகள் அனைத்தும் இப்பிறவியில் நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பது
இறைவன் நமக்கு கொடுத்த நியதி ..என்பதை விளக்கக்கூடிய சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு.
சிவத்தொண்டு புரிந்து சிவனடியாராய் சிவனுக்காகவே வாழ்ந்து சிவனடியார் சுந்தரமூர்த்தி நாயனார் எனும் புகழ்பெற்ற
அவருடைய பிறந்த வரலாறு காண்போம்.
விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பெரிய சாலையில் பரிக்கல் எனும் இடத்தில் இருந்து கிழக்கு
பண்ருட்டி செல்லும் பாதை திரு நாவலூர் .
அந்த ஊரில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் .அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்பது இதுதான் போலும். ஆரூரன்
அந்தணர் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஆடி ஓடி விளையாடும் அழகோ அழகு. கண்டான் அரசன்... கண்டனன்
கவர்ந்தது குழந்தை முகம்.
அடுத்து வளர்ந்ததோ ராஜ் வம்சம் தலையெழுத்து மாறியது. அதிர்ஷ்டம் எனும் மழை அடித்தது. அந்தணன் வீட்டு
சிறுவன் ராஜ வீட்டு குடும்பத்தில் பிள்ளையாய் மாறினான்.
இப்படித்தான் ஆரம்பித்தது சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு. சிவனடியார் தொண்டனாய் வருங்காலத்தில் சிவ நாமம்
பாடி அறுபத்து மூன்று நாயன்மார்களில் தலைவனாக முதல் சிவனடியார் எனும் புகழ் பெற்றார் சுந்தரமூர்த்தி
நாயனார்.
ஆரூரன் என்கிற அந்தண குடும்பத்து பிள்ளை சிவனடியாராக மாறிய வரலாறு...
பிறப்பிலே அந்தணராய் வளர்ப்பிலே ராஜகுமாரனாய் ஆனந்த வாழ்வு கண்ட ராஜகுமாரன் ஆரூரன்..
காதலியை மணமுடிக்க கனவு கண்ட காதலனாய் அந்தோ திருமணம் தடைப்பட்டு சிவனடியார் கோலத்தில் நின்ற
சுந்தரமூர்தத ் ி நாயனார் வரலாறு கேளீரே..
பீதாம்பரம் பளபளக்க ராஜ கிரீடம் தலையிலே அலங்கரிக்கவெண்பட்டு குடை கொண்டு வெள்ளை குதிரையிலே
வீற்றிருக்கும் மணமகன் ஆரூரன் எனும் சுந்தரன் பவனி வர...
ஆயிரம் கனவுகள் மனதிலே சுமந்து, காதலி பறவையாரை காணும் துடிப்போடு ,சற்று நேரத்தில் சம்சார பந்தத்தில்
இணைந்து- இனிதுகண்டு வாழ்நத ் ிடும் நினைவுகள் மலர்ந்து, மலர்ந்த கற்பனையை அனைத்தும் நிஜத்தில் காண
துடித்தவனாய் பவனி வருகின்றான் ஆரூரன் .
திடீரென்று எங்கிருந்தோ வந்தார் முதியவர் ஒருவர். கையிலோ எழுத்து ஓலை. திருமணத்தை நிறுத்து என்றார்.
ஆரூரா நீ என் அடிமை . இதோ அடிமை சாசனம் என்றார். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவரோ உன் பாட்டன்
என்றார்.
அதிர்நத ் னர் அனைவரும. மணக்கோலம் கலையைக் கண்டான் ஆருரன். மலர்ந்த முகம் வாட்டம் கொண்டான்.
இதற்கு யார் சாட்சி ? . என்றான் .அது மட்டுமன்றி ஓலையை பிடுங்கி கிழித்து விட்டு" இனி எது அத்தாட்சி
"என்று சொல்லி சாதித்தோம் என்று சிரிக்கின்றான். முகத்திலோ வெற்றி கண்டான்.
அதிர்நத ் ார் முதியவர். சுற்றி இருந்தவர்களிடம் நியாயம் கேட்க அனைவரும் சொல்வதறியாது திகைத்தனர்.
முதியவரோ கோபம் கொண்டு ஆரூரன் கையை பிடித்து அழைத்து (அதாவது) . இழுத்து சென்றார் .
அடுத்த ஒரு சில நேரத்தில் திருவாரூர் கோவிலில் 'அனைவரும் நின்றிருக்க முதியவர் கையிலோ அதே ஓலைசுவடி
உண்மை சுவடி என மறைத்திருந்த சுவடி தனை காட்டி .. ஆரூரனை பார்த்து சிரிக்கின்றார்.
" முதியவரே நீ யார் ?எங்கிருந்து வருகின்றாய் ! ஏன் விளையாடுகிறாய் என் வாழ்வினை சோதிப்பதில் உனக்கு
என்ன மகிழ்ச்சி ! உம்முடைய இருப்பிடம் தான் எது?" என அடுத்தடுத்து கோபத்துடன் ஆரூரன் வினவ ..
என்னுடைய இடத்தை பார்கக ் துடிப்பவனே.. இதோ பார் என்று சிரித்தபடி கோவிலுக்குள் கர்ப்ப கிரகத்துக்குள்
மூலவர் இருக்கும் இடத்தில் நுழைகிறார்.
அனைவருக்கும் ஆச்சரியம் முதியவரோ திரும்பி வரவில்லை. 'சிவபெருமானே நீயா என்னிடம் விளையயாடியது'
சாஷ்டாங்கமாக விழுகிறான் ஆரூரன்.
அசிரீரி ஒலிக்கின்றது. ஆம் வந்தது நானே . முற்பிறவியில் செய்த பாவ வினை தீர யாமே விளையாடினோம்.
இப்பிறவி எமக்காகவே வாழ்ந்து உன்னுடைய பிறவிபயனைனை நிறைவு செய்வாயாக .என ஒலிக்க..
ஆனந்தத்தோடு ஆரூரன் ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் சிவனுக்காக தொண்டு செய்துசிவனடியாராய் தொண்டு
புரிந்து பல கோவில்களுக்கு சென்று சிவனை வழிபட்டு பல பாடல்கள் பாடி புகழ் பெற்ற 63 சிவனடியார்களில்
முதன்மையான சிவனடியாராக புகழ்பெற்று வாழ்ந்தவர்தான் சுந்தரமூர்தத ் ி நாயனார்.
சிவனடியார்களை வணங்கி பக்தியோடு வழிபட்டாலே சிவனின் பூரணமான அருள் நமக்கு கிடைத்து வாழ்ககை ்
சிறப்பாகும்.

You might also like