You are on page 1of 4

பையப் பயிலும் மாணவர்களுக்கான கணினிவழி வாசிப்பு

படைப்பு :
ஜெயதேவி பன்னீரசெ ் ல்வம்
ஆசிரியர்,
ஆயிர் ஈத்தாம் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

1. முன்னுரை
மொழித்திறன்களில் வாசிப்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனத் தர
அடிப்படையிலான புதிய தமிழ்மொழிக் கலைத்திட்டம், 2010 இல் அமலுக்கு வந்தது. இருப்பினும்,
தொடக்கப்பள்ளிகளில் வாசிப்பில் எழும் சிக்கல் குறைந்தபாடில்லை. அவ்வகையில் பையப் பயிலும்
மாணவர்களே அதிகளவில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளில் பையப் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையாகக்


காணப்படுவது வாசிப்பில் எழும் சிக்கல்களே ஆகும். 247 எழுத்துகளையும் நினைவுகூர்ந்து சரியாக
உச்சரித்து, எழுத்துகளை இணைத்துச் சொல், சொற்றொடர்கள், வாக்கியமாக வாசிப்பது பையப் பயிலும்
மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்நிலை கற்றல் கற்பித்தலின் போது
மாணவர்கள் ஆர்வமின்றி கட்டாயச் சூழலில் கற்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குகின்றது.
அவர்களுக்கெனப் பாடத் திட்டங்களில் குறைநீக்கல் கற்றல் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது.

குறைநீக்கல் கற்றல் என்பது இயல்பான கற்றலைத் தொடர இயலாத குறிப்பிட்ட மாணவர்களுக்கென


நடத்தப்படும் கற்றல் ஆகும். வகுப்பில் பாட வேளையின் போது கற்றலில் பின் தங்கிய மாணவர்களைக்
கண்டறிந்து அவர்களுக்கெனச் சிறப்புக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது
ஆசிரியர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

2. நோக்கம்

பையப் பயிலும் மாணவர்களும் வாசிப்பில் சிறந்து விளங்குவதற்காக ஆசிரியர்கள் பல உத்திகளைக்


கையாண்டு வருகின்றனர். அவ்வகையில் 21 ஆம் நூற்றாண்டுக் கற்றல் அணுகுமுறையின் ஓர்
உத்தியான அதே வேளையில் மாணவர்களுக்குக் கற்கும் ஆர்வத்தையூட்டும் தளமாகவும் அமைவதுதான்
கணினிவழி வாசிப்பாகும். கணினிவழி வாசிப்பு மாணவர்களுக்கு மிக இலகுவாகவும் ஈர்க்கும்
வகையிலும் வாசிப்பினைக் கற்றுக் கொடுக்கும். இதன் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே
ஏற்பட்டிருக்கும் வாசிப்புச் சிக்கலை மிக விரைவாக நிவர்த்தி செய்வதே ஆகும். மேலும், மாணவர்கள்
பள்ளியில் மட்டுமின்றி வீட்டிலும் வாசிப்பினைத் தொடர்ந்து செயல்படுத்த இந்தக் கணினிவழி வாசிப்பு
உறுதுணையாக இருக்கும். பையப் பயிலும் மாணவர்கள் மனத்தில் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைத்
தவிர்த்து அவர்களும் மிக விரைவில் தம் சக நண்பர்களைப் போல் சரளமாக வாசிக்க வேண்டும் என்பதே
இந்தப் படைப்பின் நோக்கமாகும்.

3. கணினிவழிக் கற்றல்

தமிழ் பயிற்றும் முறை நூலில் வாய்விட்டு வாசிக்கும் முறையைப் பல படிகளாகப் பிரித்துக் காட்டியுள்ளார்
ந. சுப்புரெட்டியார். அவற்றுள் பார்த்துச் சொல்லும் கற்றலே அதிகளவில் கையாளப்பட்டு வருகின்றது.
பொதுவாக பையப் பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகள் மற்றும் சொற்களைப் பார்த்து வாசித்தல், படம்
பார்த்து வாசித்தல் போன்ற அணுகுமுறைகளே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய 21 ஆம் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளுக்கு ஏற்ப வாசிப்பைக் கணினிவழிக்
கையாளுவது சாலச் சிறந்ததாகும்.

3.1 எழுத்து ஒலிப்புமுறை


மாணவர்கள் வாசிக்கத் துவங்குவதற்கு முன்னதாக, எழுத்து ஒலிப்புமுறை மிக அவசியமாகும்.
எழுத்துகளையும் அதன் ஒலிப்பு முறையையும் சரிவரக் கற்றுக் கொள்ள இணையம்வழி எழுத்து
உச்சரிப்புக் கற்றல் துணைசெய்யும். இந்த உத்தி மாணவர்களிடையே சலிப்பின்றி வாசிக்க ஆர்வமூட்டும்
புதிய அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பையப் பயிலும் மாணவர்கள் கணினிவழி
ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் நெடுங்கணக்குகளையும் அதன் உச்சரிப்பையும் கற்றுத் தங்களின்
வாசிப்புத் திறனை மேலும் வளப்படுத்திக் கொள்ள இது பேருதவியாக அமையும்.

படி 1 - தமிழ்நெடுங்கணக்குகள் ஒலிப்புமுறை

இணையத் தளம்
மேற்காணும் நடவடிக்கையைப் பையப் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் சுயமாகச் செய்வதற்கு
https://
ஆசிரியர் வழிகாட்டலாம். இப்பயிற்சியானது வகுப்பறையில் மட்டுமின்றி வீட்டிலும் மாணவர் களைச்
சுயமாக இயங்க துணைநிற்கும். இந்நடவடிக்கை மாணவர்கள் தொடர்ந்து கற்றல் நடவடிக்கை www.youtube.com/
களில்
ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கின்றது. watch?
v=ZH0Wb6aoFvI
3.2. சொல், சொற்றொடர் மற்றும் வாக்கிய வாசிப்பு
சொல் மற்றும் சொற்றொடர்களைக் கணினிவழிப் பதிவு செய்து வாசிப்பது மாணவர்களுக்கு
ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். இவ்வழிமுறை தொடர் நடவடிக்கையாகவும்
இருந்து மாணவர்களை மேன்மேலும் வாசிக்கத் தூண்டும் கருவியாகவும் அமையும். எழுத்து
உச்சரிப்பினைத் தொடர்ந்து அதனை இணைத்துச் சொல், சொற்றொடர்களாக வாசிப்பது
மாணவர்களிடையே ஒலியன்களின் சேர்க்கையையும் உடன் கற்றுத் தரும்.

படி 2
i) ஈரெழுத்துச் சொல் வாசிப்பு

இணையத் தளம்

https://
www.youtube.com
/watch?
ii) மூவெழுத்துச் சொல் வாசிப்பு v=6w1vVy1-T30

இணையத் தளம்
https://
www.youtube.com/
watch?v=hYjkYIVcaJg
iii) சொற்றொடர் வாசிப்பு

இணையத் தளம்

https://
www.youtube.com/
watch?v=ej5TQW39-
5c

iv) வாக்கிய வாசிப்பு

இணையத் தளம்

https://
www.youtube.com/
watch?
v=KHGf8R6d01A
&t=2s

v) பத்தி முறை வாசிப்பு

இணையத் தளம்
https://connecton.in/
lykplus/blogdetail.php?
blog_id=139&title
மேற்காணும் கணினி வாசிப்பு முறையின்படி ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள்,
சொற்றொடர் என வாசிப்புப் படிகள் தொடர்நது ் வாக்கிய வாசிப்பாக அமைவது சரள வாசிப்பிற்கு
இட்டுச்செல்லும். அவ்வாறே பத்தி வாசிப்பு முறைகளும் மிக எளிதில் கைவசம் ஆகும். வாசிப்புத்
தரத்தினை அதிகரித்துக் கொள்வதால் மாணவர்களின் வாசிப்பிலும் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.
கணினிவழிக் கற்றல், வாசிப்பில் இருக்கும் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் அகற்றி, வாசிப்பில்
புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். மேலும், சொற்களோடு இணைந்து வரும் படங்கள், வண்ணப்
பின்னணி வாசிப்பின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும். ஆகவே, இந்தக் கணினிவழிக் கற்றல் பையப்
பயிலும் மாணவர்களின் வாசிப்புச் சிக்கலை மிக விரைவில் களைய உதவும் என்பது உறுதி.

4. முடிவுரை
குறைநீக்கல் கற்றலில் தொழில்நுட்ப அணுகுமுறைகளைச் சேர்த்துக் கற்பிப்பது மாணவர்கள்
மனத்தில் புதிய உந்துதலையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம். எனவே, பையப் பயிலும்
மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் விரும்பும் வகையில் பல்வேறு அணுகுமுறைகளில்
கற்றலை மேற்கொண்டால், அவர்களும் வாசிக்கத் தெரிந்த மாணவர்களாக விளங்குவர் என்பது
திண்ணம்.

துணைநூற் பட்டியல்

இராஜேந்திரன், என்.எஸ். (2008) மலேசியாவில் தமிழ்க் கல்வியும் கற்றல் கற்பித்தலும்,


கோலாலம்பூர், உமா பதிப்பகம்.
கணபதி , வி. ( 2002 ) நற்றமிழ் கற்பிக்கும் முறை. சென்னை. தமிழ்நாடு
சுப்புரெட்டியார், ந. (2005) தமிழ் பயிற்றும் முறை. தமிழ்நாடு
Kementerian Pelajaran Malaysia. (2010). KSSR Bahasa Tamil Tahun 1 – 3, Bahagian Pembangunan
Kurikulum, Kementerian Pelajaran Malaysia.

You might also like