You are on page 1of 21

தொடர் 10

புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 1 ஆண்டவர் இயேசுவின் தாய் மரியாள்

பாடம்-2 ஆண்டவருக்காக காத்திருந்த சிமியோன்

பாடம்-3 பேதுருவின் பரிதாப வீழ்ச்சி

பாடம்-4 யூதாஸ்காரியோத்து காட்டிக் கொடுத்த துரோகம்.

பாடம் 5 ஸ்தேவான் - முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சி

பாடம் 6. பிலிப்பு என்ற நற்செய்தியாளர், மூப்பர்.

பாடம் 7. தொற்காள் நற்செயல்கள் நிறைந்தவர்

பாடம் 8. வார்த்தையில் வல்ல அப்பல்லோ

பாடம் 9. பக்குவமுள்ள சீடர் மினாசோன்

பாடம் 10 இயேசுவுக்காக பிரகாசித்த பெபேயாள்

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 1 ஆண்டவர் இயேசுவின் தாய் மரியாள்


லூக்கா 1 26 – 55; யோவான் 2: 1 – 11
இந்த முதல் பாடம் கீழ்க்கண்ட காரணங்களால் மிக முக்கியமானதாகும் :

1. இது கன்னி மரியாளை பற்றியது. இவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தாயாக இருக்கும்படி கடவுளால்
தெரிந்து கொள்ளப்பட்டவர் (கலாத்தியர் 4:4). வித்தாக பிறக்க (ஆதியாகமம் 3: 15), கன்னியின் மகனாகப் பிறக்க (ஏசாயா
7:14), எந்த ஆணின் தொடர்பும் இன்றி பரிசுத்த ஆவியி னாலே (மத்தேயு 1:20), உருவாகி பிறக்க தெரிந்து கொண்ட
பாத்திரம் இவர்.

2. வேதாகமத்தில் மரியாளை குறித்து நல்ல காரியங்கள் பல கூறப்பட்டுள்ளன. திருமுழுக்கு யோவான் ஆண்டவர்


இயேசுவை அறிமுகப்படுத்தியது போல(யோவான் 3: 30), மரியாளும் அவரை உலகிற்கு கொடுத்தார் என்பதோடு மங்கி
மறைந்து விடுகிறார். அதன்பின் அவரை சில குறிப்புகளிலும், மேல் அறையில் சீடரோடு (அப்போஸ்தலர் 1: 14)
இருந்ததையும் காண்கிறோம். தள்ளுபடியாகமம், பாரம்பரிய கதைகளிலும் மரியாள் பற்றிய கதைகளைக் காணலாம். ஆனால்
அவைகள் யாவும் நம்ப முடியாதவை, நிரூபிக்கப்படாதவை, எனக்கூறி தள்ளிவிட்டனர்.

3. அவர் நல்ல பண்புகளைக் கொண்டவர். வேத வசனங்கள் மூலம் நாம் இதை காண்கின்றோம். கடவுள் அவருக்கென
மிகப்பெரிய கிருபையை கொடுத்துள்ளார் (லூக்கா 1: 28, 30).

4. ரோமன் மார்க்கத்தின் பிழைகளும் மிகைப்படுத்தலும் அதிகம். இந்த சபை மரியாளை, பாவ மற்றவராகவும், நிரந்தர
கன்னியாகவும், அவர் கடவுளுக்கும் மனிதருக்கும் நடுவே மத்தியஸ்தராக நம் ஜெபத்தை கேட்பவராகவும், இருக்கிறார் எனக்
கூறி, அவரை ஒரு பெண் தேவதை நிலைக்கு உயர்த்தி உள்ளனர்.

5. ஆனால் புராட்டஸ்டண்ட் மார்க்க சிந்தையில் மரியாள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளார். நாம் இந்தப்
பாடத்தில், மரியாள் கடவுளிடத்தில் கிருபை பெற்ற, நற்பேறு பெற்ற பெண்மணியாகப் படிக்கப் போகிறோம். இதற்கென நாம்
மரியாளின் பண்புகளை காட்டும் வசனங்களை எடுத்து ஆராயலாம்.

1. மரியாள் இயேசுவின் தாய் ஆகப் போவது குறித்து தூதன் காபிரியேல் கூறியதை முதலாவது படிக்கிறோம்
வேதாகமத்தில், லூக்கா 1: 26 - 37 வரை படித்துப் பாருங்கள். மரியாள் நாசரேத் என்ற ஒரு மோசமான சிறிய ஊரில்
(யோவான் 1: 46)  வாழ்ந்தார். அவர் ஒரு கன்னிகை. திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது (மத்தேயு 1:18). காபிரியேல் தூதன்
மரியாளுக்கு கொடுத்த அறிவிப்பை லூக்கா 1: 26 - 36 வரை படிக்கிறோம். வசனம் 38 இல் மரியாள் கடவுள் மீது
கொண்டுள்ள விசுவாசத்தையும், அவரது சித்தத்திற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்ததையும் காண்கி றோம். நாம்
வசனங்கள் 31 - 33 வரை படிக்கும் போது தீர்க்கதரிசனமாக நடக்கவிருக்கும் ஆறு காரியங்கள் கூறப்பட்டிருப்பதை
காண்கிறோம். இந்த தீர்க்கதரிசனங்கள் சில நிறைவேறி விட்டன. ஆனால் இன்னும் சில நிறைவேற வேண்டியுள்ளன. வசனம்
34 இல் மரியாளின் இயல்பான கேள்வி யையும் வசனம் 35 இல் தேவதூதன் கொடுத்த பதிலையும் பாருங்கள். இங்கே நாம்
ஒரு பெரிய ஆவிக்குரிய சத்தியத்தை காண்கிறோம். நாம் எவ்வாறு மறுபடியும் பிறக்க முடியும்? எவ்வாறு பரிசுத்தமாக
முடியும்? எவ்வாறு கடவுளுக்கென வல்லமையான ஊழியம் செய்ய முடியும்? இதை ஆவியானவரின் உதவியைக் கொண்டு
மட்டுமே செய்ய இயலும் (யோவான் 3: 3; 1 கொரிந்தியர் 12:3; சகரியா 4:6). இது மரியாளுக்கு கொடுக்கப்பட்ட பெரிய
மரியாதையாகும். ஆனாலும் அவரைச் சுற்றியுள்ள மக்கள் அவரை தவறாக புரிந்து கொண்டு சந்தேகப்பட்டதை நினைத்துப்
பாருங்கள். நாம் கடவுளின் சித்தத்தை செய்ய எப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்று வர வேண்டியுள்ளது (1
கொரிந்தியர் 2: 14 )! தேவதூதன் தனது அறிவிப்பை எவ்வளவு நேர்த்தியாக முடிக்கிறார் என்பதை வசனம் 1:37 இல்
படித்துப்பாருங்கள்.

2. தெய்வீக அறிவிப்பை பெற்றபின் நாசரேத்தை விட்டு வெளியேறி தன் உறவினர் எலிசபெத் துடன் இருக்க மலை
நாட்டிற்கு சென்றார். இதை நாம் லூக்கா 1:39 இல் பார்க்கலாம். பாவம் யோசேப்பு, அவருக்கென பரிதாபப்பட யாரும்
இல்லை. ஆனால் கடவுள் கிருபை செய்தார் (மத்தேயு 1: 18 – 25). மரியாளின் செய்தியை கேட்ட எலிசபெத் மகிழ்ச்சி
அடைந்தார். அதோடு ஒரு முக்கியமா னதைக் கூறினார்- லூக்கா 1:45 படியுங்கள். இது கர்த்தர் கூறியது, இன்னும்
நிறைவேறவில்லை என்று தவிப்போருக்கு ஒரு ஊக்கம் தரும். எலிசபெத்து மட்டும் துதி பாடவில்லை மரியாளும் கூட
பாடுவதை காண்கிறோம்(லூக்கா 1:46 – 56). குறிப்பாக வசனம் 47 இல் மரியாள் ‘இரட்சகராகிய தேவனே’ எனக் கூறுகிறார்.
இது மரியாளும் ஒரு பாவி, அவருக்கும் இரட்சகர் தேவை என்பதை காட்டுகிறது.

3. மரியாளைப் பற்றிய அடுத்த குறிப்பு இயேசுவின் பிறப்பின் போது கூறப்பட்டுள்ளது. லூக்கா 2:6,7 வசனங்களைப்
படித்துப்பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த உடனே மேய்ப்பர் கள் சென்று அவரை தரிசித்தனர் (லூக்கா 2: 8 –
20). இதனை தொடர்ந்து சாஸ்திரிகள் சென்று தரிசித்தனர் (மத்தேயு 2: 1 – 12). மரியாள் தான் கண்டு கேட்ட யாவற்றையும்
பெரும் பொக்கிஷமாக கருதி அவற்றை தன் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினார் (லூக்கா 2:19). இதையடுத்து ).
þ¨¾ÂÎòÐ, À¢û¨ÇìÌ ä¾ º¼í¸¢ýÀÊ ¦ÀÂ÷ÝðÎõ ¿¡Ùõ Åó¾Ð. (லூக்கா 2:21). பின்னர் அவர்கள் எகிப்துக்கு தப்பி ஓடியது மத்தேயு
2: 13 - 15 வரை பார்க்கலாம்.  கடைசியில் நாசரேத்து திரும்பி வந்தனர். அங்கு மரியாள் தன் குழந்தையை 12 ஆம் வயது
வரை வளர்ப்பதற்கு, பயிற்றுவிக்க, தன்னை அர்ப்பணித்துக் கொண் டார். இயேசு வளர்ந்து ஆவியிலே பலங்கொண்டு
ஞானத்தினால் நிறைந்தார். கர்த்தருடைய கிருபை அவர்மேல் இருந்தது (லூக்கா 2:40 ). பெற்றோரே தயவு செய்து உங்கள்
கவனத்தை நீதிமொழிகள் 22: 6 க்கு திருப்புங்கள்.

4. மரியாளும் யோசேப்பும் 12 வயது இயேசுவை எருசலேம் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றனர் (லூக்கா 2:41 - 52 )
அவர்கள் அவர் காணாமல் போனபோது, அவர் போதகர் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களிடம்
கேள்விகள் கேட்பதை கண்டனர்( லூக்கா 2: 46). அவர் கூறிய அர்த்தமுள்ள வார்த்தைகள் ( லூக்கா 2: 48, 49 ஐப் பாருங்கள்)
இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்ததோடு உன்னை தேடினேh மே என்றார் மரியாள். அதற்கு இயேசு என் பிதாவுக்கு
அடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியது என்று அறிய P ர்களா என்றார். ஒரு தனித்துவ மான பொருளில் கடவுள்
தம்முடைய பிதா என்பதையும், தாம் அவருடைய குமாரன் என்பதையும், தனித்துவம் கொண்ட வகையில் வெளிப்படுத்தினார்.

5. கானாவூர் கலியாணத்தில் மரியாள் இருந்தார். இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார் (யோவான் 2:1 – 11).
திராட்சரசம் குறைவுபட்டதை மரியாள் அறிவித்தார். அதற்கு நம் ஆண்டவர் கூறிய பதில் விகர்ப்பமாக தோன்றுகிறது.
ஆனால் அது மரியாதைக்குரிய சொல். அது உறவில் மாற்றம் அடைந்ததை காட்டுகிறது. அதாவது இப்பொழுது முதல்
அவர் மரியாளின் கட்டுப் பாட்டில் இல்லை ( லூக்கா 2: 51). நாம் மரியாளின் விசுவாசத்தையும் அவரது கீழ்ப்படிதலையும்
அருமையாக வெளிப்பட காண்கின்றோம்.

6. கல்வாரி சிலுவை அருகில் மரியாள் இருந்தார் (யோவான் 19: 25 – 27). அங்கே மரியாள் தமது முதற்பேறான மகன்
ஒரு குற்றவாளியைப் போல சிலுவையில் அறையப்படுவதை நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். லூக்கா 2: 35 இல்
சிமியோன் கூறிய தீர்க்கதரிசனம் இங்கு நிறைவேறியது. திடீரென இயேசு மரியாளைப் பார்த்து பேசினதை யோவான் 19: 26
இல் பார்க்கிறோம். பின்னர் அவர் யோவானைப் பார்த்து பேசினதை வசனம் 27 இல் பார்க்கிறோம். இதன் மூலம் நாமும்
கூட பெற்றோரை மதிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம் (எபேசியர் 6:2). நம் ஆண்டவர் கூறிய வார்த்தைகளின்
முக்கியத்துவம் என்ன? பூமியில் அவர் செய்யவந்த ஊழியம் முடிவுற்றது. எஞ்சிய நாட்களில் மரியாளை
கவனித்துக்கொள்ளும் பெரிய பாக்கியத்தை யோவான் பெற்றிருந்தார்.

7 மரியாள் பற்றிய கடைசி குறிப்பு: அப்போஸ்தலர் 1: 14 .


கர்த்தராகிய இயேசுவையும் அவர் செய்த வேலையையும் பெந்தெகொஸ்தே நாளில் மட்டுமே அவர் முழுமையாக புரிந்து
கொண்டார். . சத்திய ஆவியினால் நாம் ஞானம் பெறும்போது, இந்த ஆழமான மர்மங்களை நாமும் புரிந்து கொள்ள முடியும்.

மரியாள் நம் கர்த்தருடைய தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நாம் எப்போதும்
நன்றியுள்ளவர்களாக இருப்போம். உண்மையிலேயே, கர்த்த ருடைய ஜனத்தின் எல்லா தலைமுறையினரும் அவரை
பாக்கியவதி என்று அழைப்பார்கள் - லூக்கா 1:45 மற்றும் 48 ஐ பாருங்கள்.

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம்-2 ஆண்டவருக்காக காத்திருந்த சிமியோன்


வேத பகுதி: லூக்கா 2: 25 - 35 வரை

சிமியோன் எருசலேமில் வாழ்ந்து வந்தவர். அவர் வயது முதிர்ந்தவர். அவர் என்ன வேலை செய்தார்? ஏழையா?
பணக்காரரா? என்ற விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அவரைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தி இங்கு
கூறப்பட்டுள்ளது. அது, நாள்தோறும் அவர் உலக வாழ்க்கையில் ஈடுபட்டு, வேலை செய்துகொண்டு, இஸ்ரவேலின்
ஆறுதலுக்காக காத்திருந்தார் ( லூக்கா 2: 25). அதாவது மேசியாவின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தார். அவருடைய
பெயருக்கு அர்த்தம் “எதிர்பார்த்து கேட்பது” என்பது, அவர் பெயருக்கேற்றபடி செய்தார். கடவுளின் குமாரனின்
அடிச்சுவடுகளின் சத்தம், நாளுக்கு நாள், மணிக்கு மணி, நேரம் நெருங்கி, அருகில் வந்து கொண்டிருந்தது.

அன்று, சிமியோன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு சற்று முன் வாழ்ந்து அவரது வருகையை,
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போலவே, இன்று, நீங்களும் நானும், அவருடைய இரண்டாம் வருகைக்கு சற்று
முன்னதாகவே வாழ்ந்து வருகிறோம். நாமும் கூட அவருடைய வருகையை எதிர் பார்க்க வேண்டும். சிமியோன்,
பெத்லேகேம் பாலனுக்காக காத்திருந்தது போலவே, நீங்களும் நானும், நான் திரும்பி வருவேன், உங்களை என்னுடன்
அழைத்துச் செல்வேன், என கூறிச் ( யோவான் 14: 3) சென்றவருக்கு காத்திருக்க வேண்டும். இரட்சகரின் முதலாம்
வருகையின் திடநம்பிக்கை, சிமியோனின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கர்த்தருடைய இரண்டாம் வருகை
என்ற நமது ஆசீர்வாதமான நம்பிக்கை, நமது பரிசுத்த வாழ்வுக்கும், தியாகமாக ஊழியத்திற்கும் பெரிதும் ஊக்கம்
அளிப்பதாக இருக்க வேண்டும். தீத்து 2: 11 - 13 வரை படிக்கவும்.

கிறிஸ்துவின் முதலாம் வருகைக்காக காத்திருந்த, இந்த மனிதரின், சில பண்புகளை நாம் லூக்கா 2: 25- 35 வரை படிக்கலாம்.

1. ஆண்டவராகிய இயேசு நிச்சயமாகவே வருவார் என சிமியோன் நம்பினார்.


அவருக்கு இது குறித்த எவ்வித சந்தேகமும் இல்லை என வசனம் 26-ம் மூலம் காண்கிறோம். கிறிஸ்துவின் மனித அவதாரம்
குறித்து பல்வேறு விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு எதுவும் தெளிவாகத் தெரியாது. ஆனால் அவர்
வருவார் என்பதை உறுதியாக நம்பினார். பரியாசக்காரர் அவரது உறுதியான நம்பிக்கையை குறித்து கேலி பரிகாசம்
செய்தாலும், அவர்க ளால் அவரது நம்பிக்கையை எடுத்து போட முடியவில்லை. அது உறுதியாக இருந்தது. கிறிஸ்துவின்
இரண்டாம் வருகையின் வெளிச்சத்தில் வாழும் நாமும் கூட மகிமையான வார்த்தையில் உறுதியாக நிற்க வேண்டும்.
வேதாகமத்தின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் ( 2 தீமோத்தேயு 3: 16; 2 பேதுரு 1: 21). வேதாகமம் கூறும் எதிர்காலம்
குறித்த பெரிய செய்தி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரப்போகிறார் என்பதே ( யோவான் 14: 1 - 3 ;
அப்போஸ்தலர் 1:9 – 11; 1 தெசலோனிக்கேயர் 4: 13 – 18; 1 யோவான் 3: 1 – 3 ). நாமும் கூட சிமியோன் போல ஆண்டவரின்
வார்த்தையை நம்புவோம். நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையான இதிலே நாம் மகிழ்வோம்.

2 ஆண்டவராகிய இயேசு எந்த நேரத்திலும் வருவார் என்று சிமியோன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்


வசனம் 26 இல் இதைத் தெளிவாகக் காண்கின்றோம். சிமியோன் தனக்கு வயதாக, வயதாக, இரட்சகரின் பிறப்பு
நெருங்கிவிட்டது என்று, மிக உறுதியாக நம்பினார். அவர் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால் அவரது தலைமுடி
வெண்மையானது, கைகள், கால்கள் வலுவிழந்து, தள்ளாடின. இவையாவும் ஆண்டவரின் வருகை சமீபம் என்று கூறியது.
தம்முடைய குமாரனின் இரண்டாம் வருகை, மிக அருகில் இருக்கிறது என்பதை, கடவுள் பல்வேறு அடையாளங்கள் மூலம்
வெளிப்படுத்துகிறார். மதம், ஒழுக்கம், வியாபாரம், அரசியல் போன்றவற்றின் மாறுதல்கள், வளர்ச்சி போன்ற யாவுமே யாக்கோபு
5:8 இல் கூறப்பட்ட உண்மையை பறைசாற்றுகின்றன. என் ஆண்டவர் என்று வருவார் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு
நாளையும் ஆரம்பித்திருப்பார். அதே போன்று நாமும் ஆண்டவரின் வருகையை ஒவ்வொருநாளும் எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருக் கிறோம்.

3. சிமியோன் நீதியுள்ள மனிதனாய் இருந்தார்.


இதை நாம் வசனம் 25 இல் காண்கிறோம். அவர் நேர்மை உள்ளவராகவும், நீதியுள்ளவராகவும் இருந்தார். அவர்
உண்மையுள்ளவராகவும், குறை கூறப்படாதராகவும் இருந்தார். கிறிஸ்தவர்களா கிய நாமும் கூட நேர்மையானவராகவும், பிறர்
நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கமுள்ள சாட்சியின் வாழ்வு வாழவேண்டும். நாம் இந்த சரீரத்தில்
வாழும் வரை, பூரணம் உள்ளவராக வாழ முடியாது. ஆனால் கடவுள் நாம் குற்றமற்ற வாழ்வு நடத்த, ஒரு ஏற்பாடு
செய்துள் ளார்( வசனம் 25). அந்த ஏற்பாடு பரிசுத்த ஆவியானவர். இதன் பொருள் நாம் அவருடைய நாம மகிமைக்காக
வாழ வேண்டும். மற்றவர்கள் நம்மைப் பார்த்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே.

4. சிமியோன் ஒரு பக்தியுள்ள மனிதராய் இருந்தார்


(வசனம் 25) அவர் நீதிமானாக, நேர்மையானவராக, மக்கள் நடுவே வாழ்ந்தாலும், கடவுளின் பார்வையில் மெய்யான
பரிசுத்தம் உள்ளவராய் இருந்தார். நாம் பரிசுத்தம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் கட்டளையாகும்
(லேவியராகமம் 20: 7 ). இதற்கென அவர் நமக்கு அருளியவர் பரிசுத்த ஆவியானவர். அவர், ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் பரிசுத்தத்தை நம்மிலே உருவாக்கியவர். ஆண்டவராகிய இயேசு மீண்டும் வருகிறார், என்ற நம்பிக்கையில்
வாழ்ந்து, ஊழியம் செய்ய, இந்த பரிசுத்த வாழ்வு நம்மை ஊக்குவிக்கும் என்பது உறுதி ( 1 யோவான் 3:3 பார்க்கவும்)

5 சிமியோன் ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்ட மனிதர்


மனிதருக்கும் ஆண்டவருக்கும் பிரியமுள்ள வாழ்வு நடத்த உதவும் இரகசியம் பரிசுத்த ஆவியான வரின் நிரப்பபடுதல்,
ஆளுகையாகும். எபேசியர் 5: 18 படியுங்கள். ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்ட , சிமியோனின் வாழ்வில், 3 முக்கிய
பண்புகள் இருந்தன:
1. வசனம் 25 அவர் மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என காண்கின்றோம்.
2 வசனம் 26 பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
3 வசனம் 27 அவர் ஆவியானவரின் ஏவுதலால் அங்கு வந்திருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆவியானவரால் ஆளுகை செய்யப்படும் வாழ்க்கை என்பது, ஆவியானவரால் நடத்தப்படுவது. ஆவியானவரால்
போதிக்கப்பட்டு நடத்தப்படும் வாழ்க்கையாகும். வசனம் 30 முதல் 32 வரை சிமியோனுக்கு கர்த்தரின் காலங்கள் குறித்த
வெளிப்பாடு கிடைத்துள்ளதை அறிகிறோம். வசனம் 30 ல், இயேசு கிறிஸ்துவை புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளி என
முதலில் கூறி, என்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமை என யூதரை பின்னுக்கு தள்ளிவிட்டார். அவர் தமக்குச் சொந்த
மானதிலே வந்தாலும் அவருக்கு சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், புறஜாதிகளுக்கு
சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்பதையும் அறிந்திருந்தார் (யோவான் 1: 11 அப்போஸ்தலர் 28 : 28). பரிசுத்த ஆவியானவர்
ஆண்டவர் இயேசுவை எப்போதும் முன்னிறுத்தி, மையப்படுத்துகிறார் என்று வசனம் 27, யோவான் 16 :13, 14 உடன்
ஒப்பிட்டு அறியலாம்.

6. சிமியோன் அர்ப்பணித்த மனிதர்.


வசனம் 29 கூர்ந்து படியுங்கள். இது உண்மை என அறிய மூன்று வார்த்தைகள் அதில் உண்டு. ஆண்டவரே என்பது, அவர்
எஜமான் என்பதையும், அடியேன் என்பது, தான் கட்டப்பட்ட அடிமை என்பதையும், உமது வாக்கின்படி என்பது, நீர்
சொல்வதைக் கேட்கும் அடிமை, என்பதையும் குறிக்கும். இதுவே அர்ப்பணம் செய்த வாழ்வை காட்டும் படம். இது
ஆண்டவர் இயேசுவை ஆண்டவராக அங்கீகரிப்பது. இதற்காக தன்னை அடிமையாக்கி, அவருடைய அதிகாரத்தின் கீழ்,
முழுமையாக ஒப்புக்கொடுக்கும் அர்ப்பணம்.

7. இவ்வாறாக சிமியோன் ஆண்டவர் இயேசு வரும்போது வரவேற்க ஆயத்தமாய் இருந்தார்.


வசனம் 28 இதை படம் பிடித்து காட்டுகிறது, சிமியோனின் ஆத்மா யாருக்காக ஏங்கிக் காத்திருந் ததோ, அவரைக்
கண்டதும், தன் கைகளில் அவரை ஏந்திக் கொண்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இரண்டாம் முறையாக வரும்போது,
அவரை வரவேற்க, நாம் தயாராக இருக்க வேண்டும். சிமியோன் அவர் முதல்முறை வந்தபோது வரவேற்றார்.
வெளிப்படுத்தல் 22: 20 படிக்கவும் !

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம்-3 பேதுருவின் பரிதாப வீழ்ச்சி


வேதபாடம் லூக்கா 22: 31 – 62

அப்போஸ்தலரான பேதுருவை பற்றி கூறப்பட்ட அற்புதமான காரியங்கள் பல உண்டு. அப்படியி ருக்க அவரைப் பற்றி
மோசமாக கூறும் ஒரு வேத பகுதியை நாம் தெரிந்து கொண்டது, இது நமக்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில் பேதுரு செய்தது போல, நாம் ஒவ்வொருவரும், வீழ்ந்து போகும், அவல
நிலையில்தான் இருக்கிறோம். ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்து எவரும் தப்ப முடியாது.

பேதுரு மிகவும் அன்புக்குரிய அப்போஸ்தலராக இருந்தார். நமக்கும் அவர் பிரியமானவரே. ஏனெ னில் அவர் தீவிரம்
உள்ள மனிதராக இருந்தார். அவர் நம்மைப் போலவே சுறுசுறுப்பும், உற்சாகமும், உள்ளவராக இருந்தார். நம்மை போன்றே,
அவர் தவறு செய்பவராகவும், ஞானம் என்று, அவசரப் பட்டு பேசுகிறவராகவும் இருந்தார். பேதுரு அதிகம் படிக்காதவர்,
முரட்டு மீனவர், கடினமான மனிதன் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

லூக்கா 22: 31 - 62 நாம் பேதுருவின் வீழ்ச்சியை பற்றி படிக்கின்றோம். கவனமாய் படித்து இரண்டு காரியங்களை;ப்
பார்க்கவும்.

1 பேதுரு, ஆண்டவரை மறுதலிப்பதை எதிர்பார்க்கவில்லை.


ஆண்டவர் எச்சரித்த போதும்,எச்சரிக்கையும் மீறி, தனது ஆண்டவரை மறுதலித்தார் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை.
நாமும் நம்முடைய ஆண்டவரை மறுதலிப்பதை விரும்புவதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லைதான். ஆனாலும் அவருடைய
கிருபையினால், நாம் ஒரு போதும் அவரை மறுதலிக்க மாட்டோம். இதிலே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என
கொரிந்தியர் 10:12 ல் எச்சரிக்கப்படுகிறோம்.

2 இரண்டாவதாக பேதுருவின் வீழ்ச்சி படிப்படியான தாகும்.


எவரும் திடீரென வீழ்வது இல்லை. பின் மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சறுக்குவது. இது ஒவ்வொரு அடியாக
எடுத்து வைப்பது போல படிப்படியாக நடப்பது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பேதுரு மும்முறை மறுதலிக்க, அவர்
கீழ்நோக்கி சென்ற வீழ்ச்சியின் படிகளை நாம் பார்ப்போம்.

முதல் படி தன்னம்பிக்கை.


வசனம் 33 இது அளவுக்கு மிஞ்சின நம்பிக்கை அல்ல. ஆண்டவர் எச்சரித்த போதிலும் பேதுரு இதைச் செய்தார். வசனம் 31
பாருங்கள். இது அகந்தை. இது ஆபத்தானது. ஒரு கிறிஸ்தவன் தான் செய்யப் போவதை, பெருமையுடன் கூறுவது
ஆபத்தானது. ஆண்டவரிடம் செல்ல தண்ணீரின் மேல், நடந்து செல்ல முயன்றபோது, பேதுரு செய்ததும் இந்த
தன்னம்பிக்கையே.( மத்தேயு 14 28 32). நாமும் கூட, எந்த வடிவில் தன்னம்பிக்கை வந்தாலும், எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். தன்னம் பிக்கை தோல்விக்கே வழிநடத்தும். (நீதிமொழிகள் 28: 26). நீங்களும் கூட எதிலே நம்பிக்கை
வைத்துள்ளீர்கள்? சொந்த ஞானத்திலா, சொந்த பலத்திலா, எதிலே நம்பிக்கை வைத்துள்ளீர்கள்? என நீங்களே சோதித்துப்
பாருங்கள்.

இரண்டாவது படி ஜெப குறைவு.


வசனங்கள் 40, 45. தன்னம்பிக்கையும், ஜெப குறைவும் இணைந்தே செல்லும். நாம் பலம் உள்ளவர் களாக இருக்கிறோம் என
நினைத்தால், நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்? ஜெபம் என்பது, நம்முடைய பலவீனம், இயலாமையை, ஒப்புக் கொள்ளும் நிலை.
90 சதம் ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு காரணம் ஜெபக்குறைவு. நீங்கள் தூரத்திலே ஆண்டவரை பின்தொடர்கிறீர்களா?.

மூன்றாம் படி மாம்ச சிந்தை.


வசனம் 50 படித்து யோவான் 18: 10 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள் . ஆவிக்குரிய வல்லமையை, சார்ந்து இருப்பதற்கு பதிலாக,
மாம்ச பலத்தை நம்பி செய்யப்படுவதே இது. ஆண்டவரோடு இருப்பதற்கு பதிலாக, மாம்ச பலத்தை நம்பி செய்யப்படுவதே
இது. நம் ஆண்டவரோடு உள்ள உறவை விட்டு விலகி விட்டதற்கு இது அடையாளமாகும். அப்பொழுது நாம்
அவசரப்பட்டு, ஆவிக்குரிய மனிதராக நடவாமல் போய்விடுவோம். மாம்சத்திற்குரிய கிறிஸ்தவன், ஆண்டவரின் நாமத்திற்கு
விரைவில் இழிவைக் கொண்டு வருவான். 1 கொரிந்தியர் 3: 1 – 3.. பாருங்கள். வளராமல், குழந்தைப் பருவத் திலேயே
நீடித்திருப்பது, மாம்ச கிறிஸ்தவனின் நிலை. பேதுரு மல்குவின் காதை வெட்டிய போது ஒரு ஒழுக்கமற்ற குழந்தையைப்
போல, நடந்துகொண்டார். கிறிஸ்தவரே, நீங்கள் எப்போதாவது இப்படி பேசியது உண்டா? அவசரப்பட்டு நடந்து
கொண்டதுண்டா?

நான்காம் படி பேதுரு தூரத்திலே பின் சென்றார்.


வசனம் 33 மீண்டும் படியுங்கள், அதோடு வசனம் 54 படியுங்கள். என்ன முரண்பாடு! ஆண்டவருக்கு இக்கட்டான வேளையில்
உதவுவதற்கு பதிலாக, காணாமல் போய்விட்டார். இது வேதனைக்குரியது. கர்த்தருடைய பிள்ளைகள், ஒருவருக்கொருவர்
ஒத்தாசையாக நெருங்கி இருக்க வேண்டிய காலம் இது. நீங்கள் பிரிந்து, தூரமாய் போகிறீர்களா? லூக்கா 9: 62 பாருங்கள்.
முன்பு நீங்கள் ஜெப கூட்டங் களுக்கு தவறாமல் செல்வதுண்டுஆனால் இப்போது நீங்கள் தூரமாய் போய் விடுகிறீர்களா?
முன்பு, இழந்துபோன மக்களை தேடிச் செல்வீர்கள், ஆனால் இப்போது தூரமாய் போய் விட்டீர்கள். உங்கள் வாழ்வில் இது
உண்மையா?

ஐந்தாம் படி உலக சிநேகம்


வசனம் 55 படித்து பின் சங்கீதம் 1:1 படிங்கள். ஆண்டவரிடம் இவ்வளவு உறுதியளித்து பேசின . பேதுரு, நம்முடைய
கர்த்தர் விசாரிக்கப்படும் போது, அவரை புறக்கணித்து, உலகத்தோடு ஒத்து போனார். நாம் இப்படி இருக்கிறோமா ? உலக
சிநேகம் என்பது, ஆண்டவரை விட்டு பிரிக்கும் எல்லாம், எந்த காரியமானாலும் கூட. பேதுரு உலகத்தோடு சேர்ந்து
உட்கார்ந்தார். நீங்கள் எங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள்? இன்று அநேக கிறிஸ்தவர்கள் உலக அக்னியில் குளிர் காய்ந்து
கொண்டிருக்கிறார்கள். என்ன பரிதாபம்! உலக நெருப்பினால் நீங்கள் குளிர்காய்ந்து கொண்டிருக் கிறீர்களா? அப்படியானால்
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் அனல் இழந்து விட்டீர்கள் என்பது உறுதி. 2 தீமோத்தேயு 1: 6
படியுங்கள். சுடரை கிளறிவிடுங்கள், காற்று வீசி மீண்டும் எழுப்புங்கள். உங்களுக்குள் அனல் உள்ளவர்களாய் இருங்கள் .

ஆறாம் படி சொரணை கெட்டுப் போயிற்று


நிலைமை மிக மோசமான நிலைக்கு சென்றபோதும், ஆண்டவர் ஏற்கனவே எச்சரிப்பு கொடுத் திருந்த போதிலும், மேலும்
மேலும் அதிகமாக ஆண்டவரை மறுதலித்தார். ஜெபத்துடன் வசனங்கள் 31 - 33, 40 படித்துப்பாருங்கள். நாமும் பின்மாற்றம்
அடையும் போது இதுதான் நமக்கும் நடக்கும். நாமும் கூட தன்னம்பிக்கை மிகுந்து, ஜெபத்தை வெறுத்து, மாம்ச சிந்தையில்
வாழ்ந்து, தூரத்தில் பின் சென்றால், உலகத்திற்கு இடமளிக்கும் போது, நாம் அதிகமதிகமாய் ஆவிக்குரிய வாழ்வில் கீழே
சரித்து செல்கிறோம். ஒரு உணர்ச்சியற்றவர்கள் ஆகி , நமது வாழ்வுக்கு, ஆண்டவர் வைத்துள்ள சித்தத்தை பற்றிய அறிவை
உணர முடியாத நிலைக்கு, மரத்துப்போய் உணர்வற்று, சொரணை கெட்டு, போய் விடுவோம். இதை தடை செய்வதற்கான
ஜெபத்தை நாம் அடிக்கடி செய்ய வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

இறுதி படி, பகிரங்க மறுதலிப்பு


வசனங்கள் 56 60. ஒருமுறை இருமுறை அல்ல மும்முறை ஆண்டவரை மறுதலித்தார். இந்த புனித வாழ்விலிருந்து, ஆழமான
பள்ளத்தில் விழுவது எவ்வளவு பரிதாபம். நாம் ஆண்டவருக்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில் நாம் பேதுருவின்
பின்மாற்றத்திலிருந்து, மனம் திரும்பவும் , ஆண்டவரிடம் மீண்டும் வரவும், வழி நடத்தப்பட்டதை கூறி இந்தப் படத்தை
முடிக்கலாம். வசனம் 61, 62 படியுங்கள். அந்தப் பார்வை எப்படிப்பட்டது? வருத்தமும், மன்னிப்பும், உருகும் பண்புகளையும்
வெளிப்படுத் தும் பார்வை! அதுவே, திரும்பி வா, என்று கூறுவது போல் இருந்தது. யோவான் 21: 15 - 17 படித்து சங்கீதம்
139: 23, 24 ஒப்பிட்டுப் பாருங்கள்.

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம்-4 யூதாஸ்காரியோத்து காட்டிக் கொடுத்த துரோகம்


வேத பகுதி: அப்போஸ்தலர் 1: 15 - 26

வேதாகமத்திலுள்ள சோக வரலாறுகளில் ஒன்று யூதாசின் கதையாகும். தன் சகோதரனை கொன்ற காயீன் (ஆதியாகமம் 4: 1 -
10), கொலை விபச்சாரம் போன்ற இரட்டை பாவங்களை செய்த தாவீது (2 சாமுவேல் 11: 1 – 27), இயேசுவிடம் வந்து
துக்கத்தோடு திரும்பிப் போன ஐசுவரிய வாலிப தலைவன் ( லூக்கா 18: 18 - 25 ), அனனியா சப்பிராள் ஏமாற்றிய பாவம்
(அப்போஸ்தலர் 5:1 - 11) போன்ற இவை யாவற்றையும் விட, சோகமான வரலாறு யூதா ஸ்காரியோத்துடையதுதான். யூதாசின்
வரலாறும் முடிவும் அவமானம் வெட்கம் நிறைந்தவையே. இந்த மனிதனின் வரலாறு நான்கு சுவிசேஷங்களில்
கூறப்பட்டுள்ளது. அதோடு அப்போஸ்தலர் 1: 15 - 26 வசனங்களிலும் சேர்க்கப்பட்டி ருக்கிறது. இந்தப் பகுதியில் இருந்து
நாம் சில பாடங்களை கற்றுக் கொள்வோம்.

1. யூதாஸ் மாற்றம் பெற்ற மனிதன் அல்ல .


யூதாஸ் பின்மாற்றம் பெற்ற மனிதன் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போஸ்தலர் 1: 25 இல் இழந்து
போன என்ற சொல் உள்ளது. அவர் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதை இழந்து போகவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும்
கிறிஸ்தவனாக இருந்தது இல்லை. அவர் தனக்குரிய இடத்தையும், அப்போஸ்தலர் நடுவே, தனக்குள்ள பதவியையும்
இழந்தார். பிதாவின் மற்றும் இரட்சகரின் கையில் பாதுகாப்பாக இருப்பது தான் மெய்யான பாதுகாப்பு. நித்தியமான
பாதுகாப்பு எனலாம்.(யோவான் 10: 28, 29). இரட்சிக்கப்பட்ட வர்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த பாதுகாப்பை யூதாஸ்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. யோவான் 6: 70; 17: 12 படிக்கவும்.

2. யூதாசை தெரிந்தெடுத்த போது இயேசு அனைத்தையும் அறிந்திருந்தார்.


யூதாசின் தேர்வும், துரோகமும், பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசனமாக இருந்தன. அப்போஸ்தலர் 1: 16 சங்கீதம் 41: 9; 109: 1 – 8
ஒப்பிட்டு படிக்கவும். நம்முடைய ஆண்டவர் யூதாசை தேர்ந்தெடுத்தது என்ன ஒரு மர்மம் (யோவான் 2: 25 ; 6: 64 - 70 ).
அவர் நம்மை தெரிந்தெடுத்து இருப்பதும் ஒரு மர்மம் தானே! நமக்கு புரியாத பல விஷயங்கள் உண்டு. இதுவும்
அப்படிப்பட்ட ஒன்றே. யோவான் 13: 7 இல் கூறப்பட்டுள்ள உண்மை இதன் தொடர்பில் நமக்கு உதவும்

3. யூதாஸ் பன்னிருவருள் ஒருவராக தெரிந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர்.


அப்போஸ்தலர் 1: 17 இதை கூறுகிறது. யூதாஸ் சிறப்புச் சலுகை பெற்ற மனிதர் என்பதை இது குறிக்கிறது. ஆண்டவரை
நெருக்கமாக அறிந்து, அவரது போதனைகளை அடிக்கடி கேட்டு, கவனித்த, உள்வட்டத்தில் இவரும் ஒருவராக இருந்தார்.
அவர் அப்போஸ்தலர் குழுவில் பொருளாளராக இருந்தார்( யோவான் 13: 29). அவர் ஆண்டவருக்கு துரோகம் செய்யும்
வரை முழுமையாக மதிக்கப்பட்டார். முழுமையாக நம்பப்பட்டார்.

4. யூதாஸ் ஒரு சிறிய தொகைக்கு ஆண்டவரை விற்றுப் போட்டார்.


அப்போஸ்தலர் 1: 18 ஐ படித்து மத்தேயு 26: 15, 24; 27: 5, 9, 10 உடன் ஒப்பிட்டு படித்தால், இவை யாவும் சகரியா 11:12, 13
இன் நிறைவேற்றம் என அறியலாம். இன்றும் பலர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மிகக்குறைந்த விலைக்கு விற்று
வருகிறார்கள். நம்முடைய முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து இருப்பது மிக முக்கியமாகும். நாம் கிறிஸ்துவுக்கு முதலிடம்
கொடுத்தால் எல்லாம் நன்றாக இருக்கும். மத்தேயு 6: 33 படிக்கவும்.

5. யூதாஸ் இயேசுவை ஒரு முத்தத்தால் காட்டிக் கொடுத்தார்.


அப்போஸ்தலர் 1:16 படித்து மத்தேயு 26 :47 - 49 வரை ஒப்பிட்டுப் பார்க்கவும். பாவம் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறது
என்பதையும், மனித இருதயத்தில் பதுங்கியிருக்கும் கேவலமான ஆழத்தையும், இங்கே வெளிப்படுத்த காண்கின்றோம். -
எரேமியா 17:9 படியுங்கள்.

6. குற்ற உணர்வு நிறைந்த யூதாஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அப்போஸ்தலர் 1: 18 படித்து மத்தேயு 27 3 - 5 வரை ஒப்பிட்டுப் படிக்கவும். இது ஆண்டவராகிய இயேசுவோடு நெருங்கிய
நட்பையும், ஐக்கியத்தையும் அனுபவித்த ஒருவருக்கு நேரிட்ட பயங்கரம்.

7. யூதாஸ் தனக்குரிய இடத்திற்குப் போனார்.


அப்போஸ்தலர் 1: 24 இல் கூறப்பட்டது ஒரு தனித்துவமான வெளிப்பாடு. கிறிஸ்து இல்லாத வாழ்க்கையின் முடிவு.
இரட்சகரை நிராகரிக்கும் வாழ்க்கையின் முடிவு இது. அவருடைய முடிவாகிய நரகத்தை மட்டுமே இது குறிக்கும். யூதாஸ்
தற்கொலை செய்து கொண்டதால் இழந்து போகவில்லை. ஆண்டவர் ஏசுவை நிராகரித்ததால், இது வந்தது. யோவான் 5: 40
படிக்கவும்.

இது யூதாஸின் சுருக்கமான கதை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை
எனக் காணலாம்.

1. நல்ல ஆவிக்குரிய சூழலும் ஆவிக்குரிய சலுகைகளும் மட்டும் மாற்றப்பட்ட இருதயங்களை உருவாக்காது. இதைவிட
வேறு எவருக்கும் இப்படிப்பட்ட சிலாக்கியம் கிடைத்திருக்காது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டவரோடு
இருந்தும்கூட, அவரது இருதயம் மாறவில்லை. கிறிஸ்தவ குடும்ப சூழலும், சுவிசேஷ சபையும் இருந்தும், இன்னமும்
இரட்சிக்கப்படாத மக்கள் ஏராளம் சபைக்குள் உண்டு (எரேமியா 8: 20 ). ஆண்டவராகிய இயேசுவோடு இணைந்திருந்து,
அவரது வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய வல்லமையை கண்டும், கடைசியில் இரட்சிக்கப் படாமல் போவது
வேதனைக்குரியதாகும் .

2. சன்மார்க்க வாழ்வு இரட்சிப்பை கொடுக்காது வெளிப்பார்வைக்கு யூதாஸ் நல்ல மனிதர் மாற்கு 14 18 19


கூறப்பட்டுள்ளபடி, யூதாஸ் ஆண்டவருக்கு துரோகம் செய்வார் என்று அவரோடு இருந்த சீடர்களும் கூட
சந்தேகப்படவில்லை. தங்கள் பொருளாளராகவும் அவரை நம்பி வைத்திருந்தனர். தீத்து 3: 5 பாருங்கள். கெட்டவர்களை
போலவே நல்லவர்களும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிக்கப்பட வேண்டும். லூக்கா 18: 9 – 14 வரை பாருங்கள்.

3. ஆண்டவராகிய இயேசுவின் மீது மக்கள் வைத்திருப்பது ஒரு சிறிய மதிப்பு . இன்றைய பணம் மதிப்பிழந்து உள்ளது
ஆயினும் சிலர் ஆண்டவர் இயேசுவை மிகக் குறைந்த விலைக்கு, சில ரூபாய்க்கு விற்று போடுகின்றனர். மலிவான
விலைக்கு விற்று போடுகின்றனர்’

4. மனம்திரும்பாத ஒரு பாவம் கிறிஸ்து இல்லாத நித்தியத்திற்கு வழிநடத்தும். யூதாஸ் ஒரு பேராசைக்காரர், அவர் ஒரு
பாசாங்குக்காரர், இதைத் தவிர வேறு வகையில் மோசமான பாவி என்று கூறப்பட வில்லை. ஒரே ஒரு பாவம் ஒரு
மனிதனை பரலோகத்திலி ருந்து விலக்கி வைக்க முடியும் (நீதிமொழிகள் 28:13).

5. வாய்ப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து இறுதி பேரழிவிற்கு வழிவகுத்தன. கர்த்தராகிய இயேசுவை நம்புவதற்கும்
யூதாவை விட அவரை இரட்சகராக நம்புவதற்கும் அதிக வாய்ப்புகள் யாருக்காவது இருந்திருக்க முடியுமா? ஆயினும் அவர்
அவர்களை மறுத்து, மன்னிப்பு இல்லாத பாவத்தைச் செய்தார் - கிறிஸ்துவை வேண்டுமென்றே, தொடர்ந்து மற்றும் இறுதியாக
நிராகரித்தார் - நீதிமொழிகள் 29: 1 ஐ பாருங்கள்.

6. நாம் மரிக்கும்போது நாம் நமக்கென ஆயத்தப் படுத்தப்பட்ட இடத்திற்கு செல்வோம் யோவான் 14:1 - 3;
அப்போஸ்தலர் 1:25 மத்தேயு 25: 41 உடன் ஒப்பிட்டுப் படிக்கவும். இது நம் அனைவருக்கும் மோட்சம், அல்லது நரகமாக
இருக்க வேண்டும்.

7. நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அறியப்பட்டு இருப்போம் அப்போஸ்தலர் 1: 19 இது ஒரு பயங்கரமான
வசனம் எனலாம். ஏனெனில் இது யூதாஸின் புகழ்பெற்ற செயலுக் கான, நிரந்தர நினைவு மண்டபத்தை குறிக்கிறது. இதற்கு
மாறாக மத்தேயு 14: 3 - 9 வரை படிக்கவும். ஆண்டவர் யூதாஸுடன் எவ்வளவு பொறுமையாக இருந்தார் யூதாஸ் தன்னை
காட்டிக் கொடுக்கப் போவதை அவர் நன்கு அறிந்திருந்தார் அவர் நம்மிடமும் எவ்வளவு பொறுமையாகவும் அன்பாகவும்
இருக்கிறார். அவருடைய இந்த அன்பிற்கு நாம் என்ன பதிலளித்திருக்கிறோம்?

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 5 ஸ்தேவான் - முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சி


வேதப்பகுதி: அப்போஸ்தலர் 6: 5 – 15; 7: 1 - 60

புதிய ஏற்பாட்டில் ஸ்தேவான் பற்றி கூறப்பட்டுள்ள யாவும், அப்போஸ்தலர் 6: 5 – 15; 7: 1 - 60; 8:2; 11: 19; 22:20 இல்
மட்டுமே உள்ளது. அவர் ஆண்டவருக்கென வாழ்ந்த ஆவிக்குரிய தலை வர்களில் ஒருவராக இருந்தார். இரத்த
சாட்சியாக மரித்தபடியால் அவரது கிருபையின் ஊழியம் திடீரென பாதியில் முடிந்தது. கிறிஸ்தவ ரத்த சாட்சிகளில் அவர்
முதலாவது ஆனவர் என்று நாம் நினைவு கூறுகிறோம். அவரைத் தொடர்ந்து, அவரது அடிச்சுவடுக ளைப் பின்பற்றிய பலர்
உண்டு என்றும், பலர் இத்தொடரில் இணைக்கப்பட்டு சுவிசேஷத் திற்காக தங்களது உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.

பந்தி விசாரணைக்கென தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு பேர்களில் (அப்போஸ்தலர் 6: 3). இவரும் ஒருவர் (அப்போஸ்தலர் 6: 5 ).
இதற்கென தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தேவான், ஜனங் களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்(
அப்போஸ்த லர் 6: 8 ). அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் படிக்கிறபடி, கடவுள் யாரை பயன்படுத்தி னாலும்,
அவர்களைப்போலவே, ஸ்தேவான் பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்தவராய் இருந்தார் ( அப்போஸ்தலர் 6: 3 ).
விசுவாசமும் வல்லமையும் நிறைந்தவராய் இருந்தார் அப்போஸ்தலர் 6: 8). அவரது வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் இருந்து
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏழு முக்கியமான பாடங்கள் உண்டு.

1. ஆண்டவருக்காக ஒளி வீசுவதே ஒவ்வொரு விசுவாசியும் செய்யக்கூடிய மிகப் பெரிய ஊழியமாகும்.


நாம் அனைவரும், இதேபோன்று பிரசங்கிக்க, அற்புதங்களைச் செய்ய, விசுவாசத்திற்கு போராட முடியாது. ஆனால் நாம்
அனைவரும் அவரைப் போல கர்த்தருக்கென்று ஒளி வீசி பிரகாசிக்க முடியும் (அப்போஸ்தலர் 6: 15 ). பாருங்கள், இது
ஒவ்வொரு கிறிஸ்தவனாலும் செய்யக் கூடிய மிக அருமையான ஊழியமாகும். பிரகாசிக்கும் முகத்தின் ஆசீர்வாதத்தை
மோசேயை அனுபவித்தார் (யாத்திராகமம் 34: 29, 30, 35 ). மறுரூப மலையில் நம் ஆண்டவர் பிரகாசித்தார் என்று
படிக்கிறோம் (மத்தேயு 17: 2 ). நாம் அனைவரும் கிறிஸ்தவர்களை சந்திக்கும்போது அவர்களது முகங்களில், கர்த்தருடைய
மகிமை பிரகாசிப்பதைக் காணலாம். பிரகாசிக்கும் முகத்தின் ரகசியம் என்ன? இது வெளிப்படையான இரகசியம் 2
கொரிந்தியர் 3: 18 படியுங்கள் தெரியும்!

2. ஆவியானவரால் நிரப்பப்பட்ட ஊழியர் எப்போதும் வேதாகமத்தை கையாளுவ தில் வல்லவர்களாக இருப்பார்கள்.


இதை நீங்கள் கவனித்தீர்களா? அப்போஸ்தலர் 7 ஆம் அதிகாரத்தில் ஸ்தேவான் யூதரின் வரலாற்றை முழுமையாக
விவரித்து கூறியுள்ளார். அவர் 2 தீமோத்தேயு 2: 15 ஆம் வசனம் கூறும் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. கடவுள் ஒரு
ஊழியரை பெரிதும் பயன்படுத்தும் போதெல்லாம், அவர் வசனத்தால் நிரப்பப்பட்டு இருந்து, வசனத்தைக் கொடுப்பார்
என்பதைக் காண்கிறோம். மேலும் வார்த்தையால் நிரப்பப்படுவது என்பது, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டுவதற்கான
வழியாகும். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப் படுவதற்கு வார்த்தையால் நிரப்பப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவரால்
நிரம்புவது என்பது ஒவ்வொரு விசுவாசியின் சிலாக்கியமாகும்( எபேசியர் 5: 18 ). இதற்கு நமது கொள்ளும் திறன் எவ்வளவு
என்பதே முக்கியமாகும். கிறிஸ்துவில் உள்ள ஒரு குழந்தை, முதிர்ந்த விசுவாசிபோல நிரப்பப் பட்டதாக இருக்கலாம்.
வளர்ச்சிக்கான ஒரே வழி, ஆண்டவருடைய வேதத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதேயாகும். ஆகவே இது அவரில்
முழுமை பெறுவதற்கும், திறமை வளர்வதற்கும் வழி எனலாம். கொலோசெயர் 3: 16 படியுங்கள்.

3. கடவுளிடம் விசுவாசம் வைத்தலும், துன்பமும், பிரிக்க முடியாதபடி இணைக்கப் பட் டுள்ளன.


அப்போஸ்தலர் 7: 54, 58, 59 படியுங்கள். உண்மையுள்ள எல்லா சத்தியத்தையும் மறைக்காமல் அறிவிக்க ஸ்தேவான் உறுதியாக
இருந்தார். இதன் விளைவாக அவருடைய எதிரிகள் கோபம் அடைந்தனர். ஆனால் கீழ்ப்படிதலும், ஊழியம் செய்தலும்,
எந்த வகையிலும் எளிதானது அல்ல என்று ஆண்டவர் கூறியுள்ளதை ஸ்தேவான் அறிந்திருந்தார். மத்தேயு 5: 10 - 12
யோவான் 16: 33 அப்போஸ்தலர் 5: 41 பிலிப்பியர் 1: 29 இவற்றைப் படித்து, 1 பேதுரு 4: 12; எபிரேயர் 11: 34 - 37 உடன்
ஒப்பிட்டு பார்க்கவும். இன்னொரு முக்கியமான செய்தி என்ன வெனில் கடவுளின் சித்தத்திற்குள் இருப்பதும், அவருக்கு
கீழ்ப்படிந்து இருப்பதுமானது, நான் இரண்டாக வெட்டப் படுவதற்கு அல்லது மரணத்தில் இருந்து தப்புவதற்கு வழி
வகுக்கும்.

4. அதரிசனமானவரை நோக்கிப் பார்ப்பதன் மூலம், மெய்யான விசுவாசம், சோதனை களிலும் நீடிக்கின்றது.


 மோசே அதரிசனமானவரை தரிசித்தார் என எபிரேயர் 11 27 இல் வாசிக்கின்றோம். மோசே செய்ததையே ஸ்தேவான்
செய்தார். அப்போஸ்தலர் 7: 54 - 55 , 59 வரைப் படி யுங்கள். சுற்றுப்புற சூழல்நிலை சரியில்லை எனில் மேல் நோக்கிப்
பாருங்கள் 2 கொரிந்தியர் 12 7 முதல் 10 வரை படித்துப் பார்க்கவும். பவுலும் சீலாவும் சிறையில் துன்பப்பட்ட போதும்
கடவுளை துதித்து ஜெபிக்க முடிந்தது. அவற்றை தாங்குவதற்கு போதுமான கிருபையைப் பெற்று வெளிப்படுத்தி னர்.
அப்போஸ்தலர் 16: 22 முதல் 25 வரை படித்துப்பாருங்கள்.

5. ஒரு கிறிஸ்தவர் - கிறிஸ்துவைப் போன்றவர்.


நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்வது மட்டுமல்ல நாம் அவரை உடையவராக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவன்
கிறிஸ்துவை பிரதிபலிக்கும்படி அவரை கொண்டிருப்பவன். அவரைப்போல மாறுபவன். கலாத்தியர் 2: 20 கொலோசெயர் 1: 27
படித்துப் பார்க்க. ஸ்தேவான் ஆண்டவரை போன்றவர் அவர் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராய் இருந்தார் அவரை
துன்பப்படுத்தினவர்களுக்காகவும் ஜெபித்தார். மத்தேயு 5: 44; 11: 28, 29 படியுங்கள். ஆண்டவர் இயேசுவைப் போலவே தனது
மரணத்திலும் கடவுளை அழைத்தார். அப்போஸ்தலர் 7: 59 மத்தேயு 27: 46 உடன் ஒப்பிட்டு படிக்கவும். அவர் தம்முடைய
ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்போஸ்தலர் 7: 59; லூக்கா 23: 46 உடன் ஒப்பிட்டுப் பார்க்க 1 பேதுரு 4: 19. அவர் தமது
தனது எதிராளிகளுக்காகவும் ஜெபித்தார். அப்போஸ்தலர் 7: 60 லூக்கா 23: 34 இவைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். நாமும்
இயேசுவைப் போல நடக்கிறோமா?

6. இரத்த சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் விதை.


ஸ்தேவானை கல்லெறிந்து கொல்கிறவர்களில் ஒருவராய் தர்சு பட்டணத்து சவுல் இருந்தார். இவர் ஸ்தேவானின்
சாட்சியையும் அவர் இறக்கும் போது எடுத்த ஜெபத்தையும் கேட்டவர் (அப்போஸ்தலர் 7: 58; 22: 20). இந்த நிகழ்ச்சி
சுவிசேஷத்தின் எதிரியாய் இருந்த இந்த வாலிபனின் இதயத்திலும் மனசாட்சியில் ஆழமான விசுவாசத்தை ஏற்படுத் தியது
என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்த மரணத்தினால் வந்த உடனடி நன்மை, சவுலின் மனம் மாற்றம் எனலாம்.
அப்போஸ்தலர் 11: 19 படியுங்கள். கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப் பட்ட னர். அதனால் சுவிசேஷம் பரவியது பிலிப்பியர் 1: 12.
எவ்வளவு பெரிய உண்மை! 

7. விசுவாசிக்கு மரணம் என்பது ஒரு தூக்கம் தான்.


அப்போஸ்தலர் 7 : 59, 60 ல் உள்ள வார்த்தைகளை பாருங்கள். அவர் ஏற்கனவே, தம்முடைய ஆவியை ஆண்டவருக்கு
ஒப்புக் கொடுத்திருந்தார்.( வசனம் 59 ). அவரது உடல் தான் தூங்கி விட்டது. தெசலோனிக்கேயர் 4:13 முதல் 17 இதனுடன்
ஒப்பிட்டுப் பாருங்கள். ஸ்தேவான் உடலி லிருந்து விலகி ஆண்டவருடைய வீட்டில் இருந்தார்( 2 கொரிந்தியர் 5: 6 – 8).
மரணம் = தூக்கம். உழைப்புக்குப் பிறகு ஓய்வு என்பது தூக்கம். இந்த தூக்கம் எவ்வளவு அழகாய் உள்ளது. பயம் துக்கம்
மற்றும் வாழ்க்கையில் எல்லா பாடுகளில் இருந்து விடுபடுவது ஆகும். தூக்கத்தில் நாம் ஒரு நாளில் இருந்து இன்னொரு
நாளுக்குள் செல்கிறோம். கிறிஸ்தவனை பொருத்தவரை மரணம் என்பது பூமியின் பிரச்சினைகளில் இருந்து நீங்கி
பரலோகத்தின் நித்திய மகிமைக் கான குறுகிய பகுதியாகும். நீங்களும் நானும் இந்த மரண தூக்கத்தை தூங்க மாட்டோம்.
ஆனால் அவ்வாறு செய்ய நேரிட்டால் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில் 1 கொரிந்தியர் 15: 51 முதல் 55 வரை காண்க!

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

10 -6 பிலிப்பு என்ற நற்செய்தியாளர், மூப்பர்.


( அப்போஸ்தலர் 6:1 – 7; 8: 1 – 40; 21:8 )

இந்தப் பாடத்தில் இருவகை ஊழியம் செய்த ஒருவரை குறித்து படிக்கிறோம். பிலிப்பு மூப்பராக
இருந்தார் (அப்போஸ்தலர் 6:1 – 7). நற்செய்தியாளராகவும் இருந்தார் (அப்போஸ்தலர் 8: 1- 40 ). ஆனால் ஆவியானவர்
இவரை நற்செய்தியாளராகக் குறிப்பிட்டுள்ளார் (அப்போஸ்தலர் 21: 8 ). அன்றைய திருச்சபையில் ஒவ்வொரு விசுவாசியும்
பதவி வகிக்கவோ, திருச்சபையில் தலைமைப் பதவி பெறவோ இல்லை. ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவனும்
நற்செய்தியாளனாக இருக்கவேண்டும் பிலிப்பு ஒரு நற்செய்தியாளர். அவரது ஊழியம் ஆண்டவர் இயேசுவை பற்றி
பிறரிடம் கூறுவதும், மற்றவர்களை ஆண்டவரிடம் வழிநடத்துவதுமே. அதுவே நம்முடைய ஊழியமாகவும் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு நற்செய்தியாளராகவும், போதகராகவும், இருப்பது கூலிக்காக செய்யப் படும் தொழில் அல்ல. சுவிசேஷம்
கூறுவது தொழில் அல்ல; அது ஒரு தூண்டும் உணர்வு எனலாம். பிலிப்புவுக்கு தொழில் ஏதும் இல்லை. அவர் ஒரு
சாதாரண மனிதர். சபையின் உறுப்பினர் காலங் கள் தோறும் திருச்சபை இப்படிப்பட்ட மக்களுக்கு கடன் பட்டுள்ளது.
இவர்கள், வீட்டு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஏதோ ஒன்றில் ஈடுபட்டு, தங்கள் நேரம், தாலந்துகள், திறமைகள்,
மற்றும் தங்களின் வாழ்க்கையை, ஊழியத்திற்கும் கடவுளுக்கும், அவரது வேலைக்கும், அர்ப்ப ணிப்பதில் மகிழ்ச்சி
அடைகின்றனர். ளும்

ஆதி திருச்சபைக்கு சிறப்பு தகுதியுள்ள ஏழு பேர் தேவைப் பட்டனர். அப்போஸ்தலர் 6: 3 இல், சபையார் இதற்கு
ஜெபத்துடன் வாக்களித்து வந்தவர் பிலிப்பு. அந்தப் பட்டியலில் அவரது பெயர் இரண்டாவதாக உள்ளது ( அப்போஸ்தலர்
6: 5 ). சில மனிதர் பதவி, பட்டம் என்று அதிகாரத்திற்காக அலைகின்றனர். அதைத் தேடி ஓடுகின்றனர். சபைகளில்
இப்படிப்பட்ட மக்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. சபை வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. கிருபையும், வரங்களும், பெற்று
சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றவர்கள் பதவியை விட்டு விலகி இருக்க முடியுமா? பிலிப்பு இப்படிப் பட்டவர்.
சபையில் ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.

அப்போஸ்தலர் எட்டாம் அதிகாரத்தில் பிலிப்பு ஒரு நற்செய்தியாளக இருப்பதைக் காண்கின்றோம். முதலில் அவர்
சமாரியாவில் ஒரு பெரிய கூட்டத்தினருக்கு பிரசங்கித்தார் ( அப்போஸ்தலர் 8:5 – 8). பின்னர் பாலைவனப் பாதையில் ஒரு
தனிமனிதனிடம் பிரசங்கித்தார் (அப்போஸ்தலர் 8: 26 -40). அவர் மக்கள் கூட்டத்தினருக்கு, நற்செய்தி அறிவிக்கும் வரம்
பெற்ற மனிதர், நாம் தனி நபருடன் கிறிஸ்து வைப் பற்றி பேச, எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நாம்
எல்லோரும் வல்லமை யான போதகர்கள் அல்ல. ஆனால் நற்செய்தி கூறும் பணியாளர்கள். அப்போஸ்தலர் 8: 26 - 40 வரை
நாம் பிலிப்புவைப் பற்றி கூற காண்கின்றோம். புதிய ஏற்பாட்டு நற்செய்தியாளர் பண்புகளை நாம் அவரில் காண்கின்றோம்.

1. முதலாவது அவர் தனது கடவுளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அப்போஸ்தலர் 8 26, 29 வசனங்களில்
கர்த்தருடைய தூதன் சொன்னதையும், ஆவியானவர் பிலிப்புக்கு சொன்னதை யும் காண்கின்றோம். கடவுளின் குரலைக்
கேட்கும் அளவுக்கு, நாம் அவருக்கு அருகில் வாழ வேண்டும். ஏசாயா கடவுளின் குரலை கேட்டது போல நாமும் கேட்க
வேண்டும் (ஏசாயா 6: 8). நம்முடைய தனிப்பட்ட தியானத்தில் அவர் பேசுவதை நாம் கவனிக்க வேண்டும். தொடர்ந்து
தியானத்தில் இருப்பது நல்லது. அல்லாவிடில் நாம் தோல்வி அடைவோம்.

2. இரண்டு பிலிப்பு ஆண்டவர் கூறும் இடத்திற்குச் செல்ல அவர் வசம் இருந்தார். அவர் எல்லா வற்றிற்கும்
ஆயத்தமாய் இருந்தார். ஏதுமில்லை என்றாலும் அதுவும் கடவுள் சித்தம். ஆனால் எதற்கும் ஆயத்தம். சமாரியாவின் மக்கள்
கூட்டத்திற்கு பிரசங்கம் செய்ய ஆயத்தம் (வசனம் 5 ). கருப்பு நிறமுள்ள அண்ணகனைத் தேடி வனாந்திரம் செல்லவும்
ஆயத்தம் (வசனம் 30). மக்கள் கூட்டத்தின் முன் மேடையில் நிற்கவும் ஆயத்தம். அதைவிட்டு விலகி ஓடவும் ஆயத்தம்.
ஆண்டவரே என்னை பயன்படுத்துங்கள். உங்கள் விருப்பம் போல எங்கே எப்போது வேண்டுமானாலும் ஆயத்தம் என்று
உங்கள் உள்ளத்திலிருந்து கூற வேண்டும். இதை நாம் மனப்பூர்வமாக கூற முடியுமா? ஆண்டவரின் வேலையில் அவரது
வெற்றியின் ரகசியம் என்ன? என ஜெனரல் வில்லியம் பூத்திடம் கேட்டபோது தனது முழுமையான அர்ப்பணிப்பு என்று
கூறினார்.

3. பிலிப்பு கேள்வி ஏதும் கேட்காமல் கீழ்ப்படிந்த மனிதன்.


வசனம் 26. கர்த்தருடைய தூதன் நீ எழுந்து வனாந்திர மார்க்கமாய் போ என்றான். வசனம் 27 அவன் எழுந்து போனான்
எனக் கூறியிருப்பது கீழ்ப்படிதலுக்கு சரியான எடுத்துக்காட்டாகும். எந்த வாதமும் இல்லை ‘ஆனால்’ ‘ வந்து’ என்று எந்த
தயக்கமும் இல்லை. “சரி ஆண்டவரே, நீங்கள் சொன்னால், நான் அதைச் செய்வேன்” என்பதாய் இருந்தது. அவர் ஏதாவது
சாக்குப்போக்கு கூறியிருக்கலாம். பிலிப்பு எதையும் பரிந்துரைக்கவில்லை. கடவுள் அவரிடம், மந்திரியை தேடிப் போகச்
சொன்னார். அவர் தேடினார். கீழ்ப்படிந்து சென்றார். மந்திரியை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார்.

4. கடவுளுடைய வார்த்தையை கைக்கொள்வது எப்படி என பிலிப்பு அறிந்திருந்தார்.


அப்போஸ்தலர் 8: 30 - 35 வசனங்களில் ஒரு ஆத்துமாவை ஆண்டவரிடம் எவ்வாறு வழி நடத்துவது என்பது அழகாக
விளக்கப்பட்டுள்ளது. முனைவர் ஆர். எ. டோரே என்பவர், ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியரும் வேதாகமத்தை பற்றி நன்கு
தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு காரியங்களை கூறியுள்ளார். அவைகள்:
1. ஒரு மனிதனுக்கு இரட்சகர் தேவை என்பதை காட்ட வேதாகமத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர்
அறிந்திருக்க வேண்டும்.
2. இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் அவர்களுக்கு தேவை என்பதை காட்ட வேதாகமத்தை எவ்வாறு பயன்படுத்துவது
என்று அறிந்து இருக்க வேண்டும்.
3. இயேசுவை எவ்வாறு தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்வது என்று காட்ட வேதாகமத்தை எவ்வாறு பயன்படுத்துவது என
அவர் அறிந்திருக்க வேண்டும்.
4. நற்செய்தி கேட்பவருக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவது எப்படி என காட்ட
வேதாகமத்தை பயன்படுத்த அறிந்திருக்க வேண்டும்

5. பிலிப்பு ஆண்டவராகிய இயேசுவை அதிகம் உயர்த்தினார்.


வசனம் 35 படியுங்கள். அவருடைய பிரசங்க மையக்கருத்து கிறிஸ்துவே. ஒருவர் கூட்டத்தில் பேசினாலும், தனி நபரிடம்
பேசினாலும் தனது பிரசங்கத்தில் ஆண்டவரை உயர்த்தினால் என்ன நடக்கும் என பிலிப்பு அறிந்திருந்தார். யோவான் 12:
32 படியுங்கள். எப்போதும் அவரது செய்தி ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. தமது குமாரனை உயர்த்தும் பிரசங்கத்தையும்,
சாட்சியையும், கடவுள் எப்போதும் மதிக்கிறார். யோவான் 5: 22, 23 படித்து 1 கொரிந்தியர் 2: 2 உடன் ஒப்பிட்டுப்
பாருங்கள்.
6. பிலிப்பு சோர்வை வெற்றி கொண்டார்.
கடவுளின் அறுவடைப் பணியில் இறங்கும் எவருக்கும் இது தேவை. நாம் ஆண்டவருக்கென உழைக்கும் போது பல
ஏமாற்றங்களை சந்திக்கிறோம். சோர்வு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது எப்படி என நாம் அறிய வேண்டும். அப்போஸ்தலர்
8: 9 முதல் 24 வரை படியுங்கள். இது அவருக்கு கிடைத்த அடி எனலாம். ஆனால் ஏமாற்றம், அச்சுறுத்தல், சோர்வு,
போன்றவை வரும்போது கர்த்தருடைய கிருபை நமக்கு போதுமானதாய் உள்ளது 2 கொரிந்தியர் 12: 9 படியுங்கள்

7 பிலிப்போ தன் பார்வையை இழக்கவும் ஆயத்தமாய் இருந்தார்.


வசனம் 39 இல் இருந்து இதை நாம் கற்றுக்கொள்கிறோம். மேலும் இதோடு யோவான் 3: 30 ஒப்பிட்டுப் பார்க்கவும். இதன்
ரகசியம் என்ன? பிலிப்பு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவர் அப்போஸ்தலர் 6: 3.

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 7. தொற்காள் நற்செயல்கள் நிறைந்தவர்


வேத பாடம்: அப்போஸ்தலர் 9: 36 - 42

தொற்காளின் வாழ்க்கை ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் நாம் மதிப்புள்ள
பாடங்களை கற்கின்றோம். இவை யாவும் நமக்கு முக்கியமானவையாகும். அவற்றுள் சில இக்காலத்தில் வலியுறுத்திக் கூற
வேண்டியனவாகும். தொற்காள் மத்தியதரைக் கடலின் கரையில் உள்ள யோப்பா என்ற நகரில் வாழ்ந்தவர். இது
அக்காலத்தில் பாலஸ்தீனத்தின் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது ( யோனா 1: 3; அப்போஸ்தலர் 10: 5 – 8).
யோப்பாவில் ஒரு கிறிஸ்தவ சபை இருந்தது. விசுவாசிகளின் வீட்டில் கூடி ஆராதித்து இருக்கலாம். ஆதிசபை வீடுகளில்
கூடுவது வழக்கம் (அப்போஸ்தலர் 12: 12; ரோமர் 16:5)

1. அவருடைய பெயரின் முக்கியத்துவம்


அராபிய மொழியில் இவரது பெயர் தபீத்தாள் என்பது ( வசனம் 36). கிரேக்க மொழியில் அது தொற்காள். அதாவது மான்
அல்லது கலைமான் எனப்படும். இது ஒரு அழகான விலங்கு அவருடைய பெயர் வேதாகமத்தில் நாப்தலியின்
அடையாளமாய் உள்ளது (ஆதியாகமம் 49: 21 ). நல்ல வார்த்தை யை கூறுபவர். மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
கடவுளுக்கு உகந்தவற்றை தேடுபவர் (சங்கீதம் 42: 1). குதிக்கும் கால்களை கொண்டவர் (2 சாமுவேல் 2: 18). குதித்தல்(
ஏசாயா 35: 6) என்பது மென்மையான அன்பின் வெளிப்பாடு( நீதிமொழிகள் 5: 19). அழகான வடிவம்( உன்னதப்பாட்டு 2:9).
கர்த்தருடைய சத்தம் வருவது போன்றது (சங்கீதம் 29: 9). என்று ஒரு வேத பண்டிதர் கூறியுள்ளார். இதை
சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய வாழ்க்கை மான் போன்றதாக அழகாக இருக்கவேண்டும் அப்போஸ்தலர் 4: 33; 11: 23
படித்து யோவான் 1: 14 உடன் ஒப்பிடுக.

2. தொற்காள் சீடர்களில் ஒருவராக கருதப்பட்டார்


வசனம் 36 இல் ஒரு சீஷி என்றுள்ளது சீடன் என்ற பெயர் முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் மக்களை
குறிக்க பயன்படுத்தப்பட்டது. இப்படியே நற்செய்தி நூல்களிலும் அப்போஸ் தலர் நூலிலும் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.
சீடர் என்பவர் யார்? மாணவர் அல்லது கற்றுக் கொள்பவர் என்பதே. இயேசுவின் சீடர் அவரது காலடியில் அமர்ந்து கற்றுக்
கொள்பவர்கள் லூக்கா 10: 38 – 42; மத்தேயு 11: 29; சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயரிட்டு உள்ளதை அப்போஸ்தலர்
11: 26 இல் காண்கிறோம். இங்கு சீஷி என்ற சொல் கிறிஸ்தவள் என்று அர்த்தப் படுகிறது. சீடர்கள் என்ற சொல்லுக்கு
பொருத்தமில்லாத கிறிஸ்தவர்கள் பலர் இன்றும் உள்ளனர். உண்மையுள்ள சீடனாக இருப்பது என்பது கடவுளின் அதிகாரம்,
அவரது ஆளுகை, அவரது ஒழுக்கம், ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அவரது சித்தத்தை செய்வதேயாகும். நீங்கள் ஒரு
விசுவாசியாக இருக்கலாம் ஆனால் அவரது சீடராக இருக்கிறீர்களா?

3. தொற்காள் நற்செயல்களை செய்வதற்கென அர்ப்பணித்தவர்.


வசனம் 36 இல், அவள் நற் கிரியைகளையும், தர்மங்களையும் மிகுதியாய் செய்து கொண்டு வந்தாள், என்று கூறப்பட்டுள்ளது.
வசனம் 39 இல் அவர் வாய்ப் பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் ஈடுபடுபவர் என்று காண்கிறோம். அவருடைய அதிகமான
நேரத்தை எடுத்த ஒரு ஊழியத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அங்கியையும் பிற ஆடைகளையும் தைத்தவர். ஒரு ஊசி
என்பது மிகச்சிறிய பொருள். அதை பயன்படுத்தும் திறன் இன்றும் வளர்ந்து வருகிறது. ஆனால் இங்கே அது
ஆண்டவருக்கென ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஊழியமாய் இருந்தது. அது அவருடைய பிள்ளைகளுக்கு ஆறுதலையும்,
நிம்மதியையும் அளித்துள்ளது. இங்கே நாம் நற்கிரியை செய்யும் பெண்மணி மூலம் ஒரு முக்கிய பாடத்தைக் கற்கவேண்டும்
(எபேசியர் 2: 8, 9; தீத்து 3: 5 ). இரட்சிக்கப் பட்ட ஒவ்வொரு விசுவாசியும் நற்கிரியை செய்ய வேண்டும். ஆனால் ஒருவரும்
நற்கிரியை செய்வதனால் இரட்சிப்பைப் பெறமுடியாது. எபேசியர் 2: 10 படிக்கவும். இங்கே நாம் இரண்டு சத்தியங்களை
பார்க்கவேண்டும். முதலாவது: நாம் இரட்சிக்கப்பட நற்கிரியைகள் தேவை யில்லை. இரண்டாவதாக, நாம்
இரட்சிக்கப்பட்டுளோம் என்பதற்கு அடையாளம், நாம் செய்யும் நற்கிரியைகள் 1 தீமோத்தேயு 1: 15; தீத்து 3: 8 யாக்கோபு 2:
14 முதல் 26 வரை படியுங்கள். குறிப்பாக கடைசி இரு வசனங்களையும் கவனியுங்கள். பெண்களின் சிறந்த அலங்கரிப்பு
பற்றி 1 தீமோத் தேயு 2: 9, 10 இல் காணலாம். நாம் அனைவரும் தீத்து 2:14 இன்படி வாழ வேண்டியவர்கள்!

4. திருச்சபையில் செய்யப்படும் பல்வேறு வகை ஊழியங்கள் உண்டு. தொற்காள் இறந்த போது நாம் அதை
பார்க்கிறோம்
1. சில பெண்மணிகள் அவரை குளிப்பாட்டி மேல் அறையில் வைத்தது ஒரு ஊழியம். வசனம் 37.
2. பேதுருவை அழைத்துவர லித்தாவுக்கு சென்ற பெயர் சொல்லப்படாத இரண்டு ஆண்கள். அவர்கள் செய்ததும் ஊழியம்.
வசனம் 38.
3. பேதுரு வந்து ஏறெடுத்த, விசேஷ விசுவாச ஜெப ஊழியம். வசனம் 39 முதல் 41 .
4. விதவைகளும் சாட்சி ஊழியம் செய்தனர். வசனம் 39.

கடவுளின் ஆலயத்தில் வாஞ்சை உள்ள யாவருக்கும் ஊழியம் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எல்லாராலும்
எல்லாம் செய்ய முடியாது. ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு. நம்மில் சிலர் அதிகமாக செய்ய முடியும். 1
கொரிந்தியர் 12 முதல் 14 எபேசியர் 4 11 12 படித்துப்பாருங்கள். ஒரு மனிதனைக் கொண்டு ஊழியம் செய்வது கடவுளின்
திட்டம் அல்ல. இது நாம் பலராக இணைந்து செய்ய வேண்டிய ஊழியம். ஒவ்வொரு விசுவாசியும் தனக்கென
கொடுக்கப்பட்ட ஊழியத்தை கண்டுபிடித்து செய்வதே மேலான ஊழியம் ஆகும்.

5. பேதுரு விசுவாசத்துடன் ஜெபித்தார். தொற்காள் உயிருடன் எழுந்தார்.


பேதுருவின் இந்த அணுகுமுறை நமக்கு அதிகமான படங்களைப் போதிக்கின்றது. செத்த ஆத்துமாக்களை உயிர் மீட்சி
அடையச் செய்வது எப்படி என்று இதில் நாம் பார்க்கிறோம். அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துப்போன
(எபேசியர் 2:1) ஆத்துமாக்களை உயிர்மீட்சி அடைய செய்வது எப்படி? என்று இதில் நாம் பார்க்கிறோம்.

1. பேதுரு யாவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பினார். ( வசனம் 40 ). கடவுள் மட்டுமே தொற்காளை
உயிருடன் எழுப்ப முடியும். ஆகவே தனித்திருக்க வேண்டும்.

2. பேதுரு முழங்காலிலிருந்து ஜெபித்தார். ( வசனம் 40 ). பயபக்தி நேர்மை ஆர்வம் இவற்றோடு விசுவாசமுள்ள ஜெபம். (
யாக்கோபு 5 13 முதல் 18 ).

3. பேதுரு தொற்காளிடம் பேசினார். ( வசனம் 40 ). ஆத்துமாக்களின் உயிர் மீட்சியை தேடும் நாம் சாட்சி கூற வேண்டும். (
யோபு 22: 29; சங்கீதம் 107: 2 ).

4. பேதுரு கரிசனையுடன் தொற்காளுக்கு உதவினார் (வசனம் 41). இளம் விசுவாசிகள் வளருவதற்கு நாம் கைகொடுத்து
உதவ வேண்டும்
5. பேதுரு அவரை உயிரோடு முன்வைத்தார். ( வசனம் 41 ). பேதுருவும் சோகத்தில் இருந்த விசுவாசிகள் யாவருக்கும்
எத்தனை மகிழ்ச்சி! ( சங்கீதம் 126: 6 ). உயிர்மீட்சி பெற்ற ஒவ்வொரு ஆத்மாவும் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி
உண்டாகும். ( லூக்கா 15: 5, 8 – 10, 23, 24 ).

6. நடந்தவை யாவும் கடவுளின் நாம மகிமைக்காக, அவரது ராஜ்யம் பரப்புவதற்காகவும் மாறியது. வசனம் 42
பார்க்கவும். தொற்காள் நோயுற்று மரித்தார். உயிருடன் எழுப்பப்பட்டார். மக்கள் பார்த்தனர். அதனால் பலர் விசுவாசித்தனர்.
அவருக்கு நேரிட்டவை யாவும் சுவிசேஷம் பரப்புவதற்கு வழிவகுத்தது. பிலிப்பியர் 1: 12 பார்க்க.

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 8. வார்த்தையில் வல்ல அப்பல்லோ


(வேதப்பகுதி அப்போஸ்தலர் 18: 24 – 19: 7)

அப்பொல்லோ பற்றி நமக்குத் தெரிந்தவை யாவும் அப்போஸ்தலர் 18: 24 – 28; 19: 1 1 கொரிந் தியர் 1: 11 – 12; 3: 4 – 6;
16: 12; தீத்து3:13 இல் உள்ளவை மட்டுமே. அப்பொல்லோ ஒரு யூதர் (அப்போஸ்தலர் 18: 24). எகிப்தில் உள்ள புகழ்பெற்ற
அலெக்சாந்திரியா பட்டணம் மத்திய தரைக் கடற் கரையில் உள்ளது. மகா அலெக்சாந்தரால் உருவாக்கப்பட்டதால் அவர்
பெயரே இதற்கு வழங்கப்பட்டது. அப்பொல்லோ குறித்த பல சிறப்பு பாடங்களை நாம் இன்று படிக்கலாம்.

l. அப்பொல்லோ மிகச்சிறந்த வரங்கள் பெற்ற மனிதர்.


இதை நாம் அப்போஸ்தலர் 18: 24 - 26 இல் காண்கின்றோம். அவையாவன:
1. அவர் சிறந்த கல்விமான். அப்பொல்லோ ஒரு சிறந்த சொற்பொழிவாளர். அனேகமாக பவுலை விட பேச்சிலே
வல்லவராய் இருக்கலாம் என 2 கொரிந்தியர் 10: 10 இல் நாம் பார்க்கிறோம். அவர் பிரசங்கம் செய்யும் இடமெல்லாம் மக்கள்
கூட்டம் கூட்டமாக கேட்பதற்கு கூடி வந்தனர். இந்த பேச்சுத் திறமை இயற்கையாக வந்த திறமை. இதை அவர்
அனுபவத்தாலும், கடின உழைப்பினாலும், வளர்த்துக்கொண்டார்.
2. வேதாகமத்தை பற்றிய முழுமையான அறிவு அவருக்கு இருந்தது. பழைய ஏற்பாட்டு வசனங் களில் சிறந்திருந்தார்.
அதை விளக்கிக் கூறும் வரம் அவரிடம் இருந்தது. அவருக்கு அறிவு இருந்தது மட்டுமல்ல, தான் அறிந்ததை தெளிவாகக்
கூறும், ஆற்றல் மிக்கவராய் இருந்தார். வேதாகமங்களில் வல்லவராக வேண்டுமெனில், அவர் தொடர்ந்து வேதாகமத்தை
படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் பெரேயா பட்டணத்தார் போல, வேத வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டு
பார்த்து படிக்க வேண்டும். ( அப்போஸ்தலர் 17: 11 ). இது நமக்கும் கூறப்படும் அறிவுரை யாகும் 2 தீமோத்தேயு 2: 15 !
3. அவர் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப் பட்டிருந்தார். திருமுழுக்கு யோவானுடன் நம்மை இணைக்கும்
வார்த்தைகள் இவை எனலாம். லூக்கா 3: 4 ; 7: 27 பார்க்கவும். அப்பொல்லோ திருமுழுக்கு யோவானுடன் நேரடியாகவோ
அல்லது யோவானின் சீடர் மூலம் தொடர்பு கொண்டி ருந்தார். திருமுழுக்கு பெற்றிருந்தார். அவரது போதனையையும்
ஏற்றுக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் யோவான் பிரசங்கித்ததையே அப்பொல்லோ பிரசங்கித்தார். நாமும்
கூட கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப் படுகிறோமா?
4. அப்பல்லோ மிகுந்த அனலுடன் பேசினார். அவருடைய ஆத்துமா நெருப்பாய் இருந்தது. அவரது உற்சாகம் நிரம்பி
வழிந்தது (மத்தேயு 12: 34 ) கடைசி வார்த்தைகளை பாருங்கள்! பரிசுத்த வைராக்கியம் உள்ள மக்கள் கடவுளுக்குத் தேவை.
உலக மக்கள் கால்பந்து, இசை, அரசியல் , போன்ற காரியங்களில் அதிக உற்சாகம் காட்டும்போது, நாமும் கூட
வைராக்கியமாக நீர் கொதிப்பது போல அவருடைய காரியங்களில் ஆர்வம் காட்ட வேண்டாமா ரோமர் 12: 11 பாருங்கள்.
மத்தேயு ஹென்றி என்பவர் வேத பண்டிதர். அவர் அப்பொல்லோவை ஒரு உயிரோட்டமுள்ள, பாசமுள்ள, போதகர் என்று
கூறுகிறார். அவரைப் போன்ற உற்சாகம் நமக்கும் வேண்டும்!
5. அவர் விடாமுயற்சி உடையவர் கவனத்தோடும் துல்லியமாகவும் பேசுபவர். சுவிசேஷம் துல்லியமாக வெளிப்பட,
கருத்து மாறுபடாது இருக்க, விடாமுயற்சி, கவனம், துல்லியம், போன்றவை தேவை. கடவுளின் வேலையை அசட்டையாக
செய்யாமல், ஜாக்கிரதையோடும், அக்கறையோடும், ஜெபத்தோடும், செய்ய வேண்டும்.
6. அவர் ஆண்டவருக்கடுத்தவைகளை மட்டுமே பிரசங்கித்தார். அவர் வேதப் புத்தகத்தை, வைத்தே போதித்தார். அவர்
வசனத்தை பிரசங்கித்தார். அப்பொல்லோவின் உதடுகளிலிருந்து அரசியல் சொற்பொழிவுகள் வராது. 2 தீமோத்தேயு 4: 2
பார்க்க.
7. அவர் தைரியமாக, தீரமுடன் இருந்தார். தமது செய்தியை அவர் நம்பினார். அவர் பயமோ, தயக்கமோ, இன்றி செய்தியை
எடுத்துரைத்தார்.
அப்பொல்லோ, போதகர், ஊழியர், யாவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ll. அப்பொல்லோவின் அனுபவத்திலும், அவருடைய ஊழியத்திலும், மிகப் பெரிய குறை பாடுகள் இருந்தன.
அப்போஸ்தலர் 19: 1 - 7. அனேகமாக அவர்மூலம், மதம் மாறிய அவருடைய வர்கள், மற்றும் அப்போஸ்தலர் 18: 25 இல்
உள்ள 12 பேரைப் போலவே, அப்பொல்லோவும் யோவானின் திரு முழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். யோவானின்
திருமுழுக்கு மனம்திரும்புத லுக்குரியது. மேசியாவின் வருகையை எதிர்நோக்கி பாவத்தை விட்டு விலக ஒப்புக்கொண்ட
வாக்குமூலம் எனலாம். மேசியா வந்ததாக அப்பொல்லோ கேள்விப்படவில்லை. கர்த்தராகிய இயேசு வாழ்ந்து, கல்வாரி
சிலுவையில் மரித்தார். ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை ஏசாயா 53: 5,6 நிறைவேற்றினார். உயிருடன் எழுந்து பரத்திற்கு ஏறி,
மகிமையில் உயர்த்தப் பட்டார் பெந்தெகொஸ்தே நாளில் தூய ஆவியானவர் இறங்கி வந்தார் என கேள்விப்படவில்லை.
இது எதைக் காட்டுகிறது?

1. புதிய ஏற்பாடு கூறுகிறபடி பார்த்தால் அப்பொல்லோ ஒரு கிறிஸ்தவர் அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த
பூமிக்கு வந்து தனக்காக மரித்தார் என்று விசுவாசித்து தனது உள்ளத்தில் அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டவன்
(யோவான் 1: 12). தனது வாயின் வார்த்தையால் சாட்சி கூற வேண்டும் (ரோமர் 10: 9, 10). அப்போதுதான் அவன்
கிறிஸ்தவன் ஆகிறான்.

2. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் குறித்து அப்பொல்லோ அறியார். அவர் மறு படியும் பிறந்தவர் அல்ல
(யோவான் 3: 3- 5). கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டி அல்ல (2 கொரிந்தியர் 5: 17). கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உறுப்பினர்
அல்ல (1 கொரிந்தியர் 12 :13).

3, அப்பொல்லோ சத்தியத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரசங்கித்தார். அவர் சிறந்த கல்வி தகுதி பெற்றவர். அவர்
கூறினால் யாவும் உண்மையே. ஆனால் அவருக்கு ஆவிக்குரிய புரிதலோ, ஞானமும் இல்லை (1 கொரிந்தியர் 2: 14);
வல்லமையும் இல்லை (அப்போஸ்தலர் 1: 8). அவர் சுவிசேஷத்தை பிரசங்கிக்கவில்லை. இன்றும் அநேகர் இப்படித்தான்
இருக்கிறார்கள். இதனால் அவரால் எவரையும் பாவம் உணர்வுக்குள் சென்று, மனம் திரும்பி, இரட்சிப்புக்குள் வர, வழி நடத்த
இயலவில்லை.

lll. தாழ்மையான இரண்டு விசுவாசிகள் மூலம் அப்பொல்லோ சுவிசேஷத்தின் முழு ஒளிக்குள் வழிநடத்தப்பட்டார்.
அப்போஸ்தலர் 18: 26 இல் இதைப் படிக்கிறோம். இந்த அன்பான இரண்டு ஆத்துமாக்கள், இந்த மனிதனின் ஊழியத்தில்
உள்ள குறைபாட்டை கண்டறிந்தனர். இந்தக் குறைபாட்டை குறித்து விமர்சனம் செய்யவோ, மற்றவர்களிடம் பேசவோ
இல்லை. ஆனால் அவர்கள் ஜெபத்துடன் உதவ முன்வந்தனர்.  கடவுள் அவர்கள் முயற்சிகளுக்கு ஆசீர்வதித்து உதவினார்.
அவர்கள் அவருக்கு சுவிசேஷம் கூறி, அதன் முழுமையான ஆசீர்வாதத்திற்குள் வழி நடத்தின ஆக்கில்லா பிரிஸ்கில்லாள்
ஆகியோருடைய அறிவுரைகள் கேட்டு, பெற்றுக் கொண்டது, அப்பொல்லோவின் பெரிய தாழ்மையை காட்டுகிறது.

lV. அப்பொல்லோ தமது சொந்த ஆவிக்குரிய வளர்ச்சி அளவுக்கேற்ப மட்டுமே மற்றவர் களுக்கு உதவ முடிந்தது. நாம்
யாவரும் இதைத்தான் செய்ய முடியும். ஆனால் இப்போது வல்லமையுள்ள உயிருள்ள இரட்கரில் மகிழ்ச்சியை பெற்றபின்,
அவரது ஊழியம் எவ்வளவாய் மாறிப் போயிற்று . அப்போஸ்தலர் 19: 1 - 7 இல் கூறப்பட்ட 12 பேருக்கு நற்செய்தியை
குறித்த தெளிவான புரிந்து கொள்ளுதல் இல்லை. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதனால் மட்டுமே இரட்சிப்பை பெற
முடியும் எனவும் அவர்கள் அறியாதிருந்தனர். ஏனெனில் அவர்கள் யாவரும் அப்பொல்லோவைப் போன்று பின்பற்றி
வந்தவர்கள்.
V. சபைகளில் செயல்படும் பல்வேறு வரங்களை அப்பொல்லோ நினைவுபடுத்துகிறார். 1 கொரிந்தியர் 3: 4 – 6.
பவுல் நட்டார், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். இதை 1 கொரிந்தியர் 12: 4 - 11 உடன் ஒப்பிட்டு படியுங்கள். நாம் எல்லாரும்
நடுபவர்களாக இருக்க முடியாது. ஆனால் நாம் யாவரும் தண்ணீர் பாய்ச்சுபவராக இருக்கலாம். நம்முடைய ஜெபங்களில்
கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி ஒன்றாக இருக்க முடியும்.

Vl . ஊழியன் ஒன்றும் இல்லை, கடவுள் தான் எல்லாமே என அப்பொல்லோ உணர்த்துகிறார். 1 கொரிந்தியர் 3: 4 -


6 பாருங்கள். பவுல் நட்டார், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார், விளையச் செய்கிறவர் கடவுள் 1 கொரிந்தியர் 12: 4 – 11 வரை
ஒப்பிடுக.

7. உடன் விசுவாசிகள் எடுக்கும் முடிவுகளை மதிக்க நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள்
ஆண்டவரின் சித்தத்தில்தான் இருப்பதாக கருதி நாம் நம்பினால், அவர்களை நியாயம் தீர்க்கவோ, விமர்சிக்கவோ கூடாது.
அவர்களுடைய செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பாளிகள். அவர்களுடைய தீர்ப்பை நாம் மதிக்கவேண்டும்
1 கொரிந்தியர் 16: 12 படிக்கவும்

கடைசி குறிப்பு: எபிரெயர் நிருபத்தை அப்பொல்லோ எழுதி இருக்கலாம் என மார்ட்டின் லூதர் கருதுகிறார்.

தொடர் 10 புதிய ஏற்பாட்டின் பத்து மாந்தர்

பாடம் 9. பக்குவமுள்ள சீடர் மினாசோன்


(வேதம் பகுதி: அப்போஸ்தலர் 21: 15-16)

மினாசோன் சைப்ரஸைப் பூர்வீகமாகக் கொண்டவர், அவர் எருசலேமுக்கு அருகில் வசித்து வந்தார். அவர் ஒரு கிரேக்க
யூதர், அதாவது அவர் பரம்பரை யூதர். ஆனால் அவர் புறஜாதி மண்ணில் பிறந்து கிரேக்க மொழியைப் பேசினார். அவர் "
பழைய சீடர்" என்று கூறப்படுவது அவர் நம்முடைய ஆண்டவரின் ஆரம்பகால சீடர்களில் ஒருவராக இருப்பதைக்
குறிக்கிறது, மேலும் இது அவர் பல ஆண்டுகளாக வளர்ந்து வருவதைக் குறிக்கிறது. இந்த சுருக்கமான பகுதியிலிருந்து
நாம் மினாசோன் பற்றிய மூன்று காரியங்களைப் பார்க்கலாம்

l. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடராக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.


மினாசோன், "ஒரு சீடர்" என்று கூறும்போது, அவர் ஒரு கிறிஸ்தவர், நம்முடைய ஆண்டவரை நம்பியவர் என்று அர்த்தம்.
லூக்கா கூ றுவது போல, அவர் மறுபடியும் பிறந்த மனிதர். இன்னும் நாம் இங்கே ஒரு வேறுபாட்டைக் காட்டலாம்,
ஏனென்றால் ஒருவர் கிறிஸ்தவராக இருக்க முடியும், ஆனால் ( வேறு அர்த்தத்தில்) சீடராக இருக்க முடியாது. ஒரு
கிறிஸ்தவன், யோவான் 6:37; அப்போஸ்தலர் 16: 31 ல் இருந்து நாம் கற்றுக்கொள்வது போல், கிறிஸ்துவிடம் வருபவன் ,
அவரை நம்புகிறவன். ஆனால் சீடன் என்றால் என்ன? ஒரு சீடன், அவருடைய காலடியில் அமர்ந்து கிறிஸ்துவைக்
கற்றுக்கொள்பவன், அவரைத் தெரிந்துகொள்வதும், அவருடைய ஒழுக்கத்திற்கு அடிபணிந்தவனும் சீடன்,. நான் ஒரு
கிறிஸ்தவனா ? நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடனா? அவருடைய ஒழுக்கத்தையும், அவருடைய
அதிகாரத்தையும், என்மீது கொண்டிருக்கிறேனா? நான் அவரை நாளுக்கு நாள் கற்றுக் கொண்டிருக்கிறேனா?

ll. பக்குவமுள்ள முதிர்ச்சியடைந்த சீடராக இருப்பது எவ்வளவு பெரிய காரியம், ஆண்டவரைத் தெரிந்து கொள்வது
மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக அவரை அறிந்தவர்.
வயதாகிவிடுவது கடினமான அனுபவம் என்று சிலர் கூறுகிறார்கள். நாம் இளமையாக இருக்கும்போது வயதாகிவிடுமோ
என்ற பயம் இருந்தது. வருடங்கள் நழுவும்போது, பிறந்தநாளின் எண் கூடும்போது நாம் எச்சரிக்கையாக இருக்கிறோம், பல
ஆண்டுள் நழுவுவதில்லை - அவை பறக்கின்றன! இருப்பினும், நாம் உணரும் அளவுக்கு மட்டுமே வயதானவர்கள், ஒவ்வொரு
கிறிஸ்தவனும், சீடனும் முதுமைக்கு பயப்படுவது தவறானது என நாம் நம்பலாம். சந்தேகத்திற்கு இடமின்றி முன்னேறும்
ஆண்டுகள் பெரும் அபாயங்கள், தனியார்மயமாக்கல் மற்றும் பிரச்சனைகள், சிக்கல்கள் உள்ளன, ஆனால் 80 அல்லது 90
ஆண்டுகள் என்பது என்னவென்றால், நித்தியமெல்லாம் இறைவனுடன் செலவழிப்பதன் வெளிச்சத்தில், “என்றென்றும்
கர்த்தருடைய ஆலயத்தில்” இருப்பது (சங்கீதம் 23: 6 ). "ஒரு முதிர்ந்த சீடர்" என்ற நிலை யில் ஆசீர்வாதங்களையும்
இழப்பீடுகளையும் ஒரு கணம் சிந்தியுங்கள்.

1. ஒரு முதிர்ந்த சீடர் இறைவனை அறிந்து கொள்வதற்கும் கிருபையில் வளருவதற்கும் ஒரு அருமையான வாய்ப்பு
கிடைத்துள்ளது.
இது ஒரு பெரிய நன்மை - தானியேல் 11:32 ஐ யோவான் 14: 9; பிலிப்பியர் 3:10 மற்றும் 2 பேதுரு 3:18. உடன் ஒப்பிட்டுப்
பாருங்கள்; ஆண்டுகள் செல்ல செல்ல, கடவுள்மீது உள்ள நமது விசுவாசம் வலுவடைந்து, அவரைப் பற்றிய நமது அறிவு
இன்னும் நெருக்கமாகிவிட்டால் எவ்வளவு பெரிய காரியம். நாம் அவருடைய வார்த்தையை உண்கிறோமா? அவருடன்
ஐக்கியம் கொள்கிறோமா? நாம் கிருபையில் வளர்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும் - தானியேல்
11:32 ஐப் பாருங்கள்.
2. ஒரு முதிர்ந்த சீடர் பல ஆண்டுகளாக, அனுபவ பள்ளியில், ஆண்டவரை அறியும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இளைய கிறிஸ்தவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் மிகக் குறைவுதான், ஆனால் பல ஆண்டுகளாக இறைவனுக்கு சேவை
செய்தவர்கள் எழுந்து, துக்கம் மற்றும் கஷ்ட காலங்களில் அவர் அவர்களுக்கு உதவிய விதத்திற்கு சாட்சியளிக்க முடியும்.
அவர்கள் என்ன சாட்சிகளை வழங்க முடியும், மற்றவர்களுக்கு என்ன ஆறுதல் அளிக்க முடியும்! - 2 கொரிந்தியர் 1: 3-4
வரை பாருங்கள். பழைய கிறிஸ்தவர்களால் சங்கீதம் 37:25, சொல்ல முடிகிறது –-அவர்களால் எப்படி அதைச் சொல்ல
முடிகிறது? ஏனெனில் கடவுள் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதாக வாக்களித்ததால் மட்டுமல்ல, அவர்கள் அதை தங்கள்
அனுபவத்தில் கண்டதாலும் அதைச் சொல்ல முடிகிறது.
3. ஒரு முதிர்ந்த சீடர் குறிப்பாக மற்றவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் தகுதியானவர். இந்த வரிகளைப் படித்த பலர்
கர்த்தருடைய காரியங்களில் தங்களை வளர்த்தவர்களை நன்றியுடன் நினைவிற் கொள்வார்கள். இன்று நம்முடைய
இளைஞர்களிடமும் நாம் சொல்ல வேண்டியது, “உங்கள் சபைகளில் உள்ள முதிர்ச்சியடைந்த சீடர்களை கௌரவிக்கவும் ,
அவர்களை மதிக்கவும், அவர்களை நேசிக்கவும், உங்கள் வழியிலிருந்து வெளியேறவும்; அவர்களைப் பற்றி அறிந்து
கொள்ளுங்கள், இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும் இடையில் இருக்கும் வயதுத் தடையை உடைக்க உங்களால்
முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் ”. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் - எபேசியர் 3:15 ஐ பாருங்கள். ஆகவே, வயதானவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்; அவர்கள்
உங்களுக்கு எவ்வளவோ கற்பிக்க முடியும்! ஆண்டவர் உங்கள் காலத்தை நீடித்தால், நீங்களும், ஒரு நாள் “முதிர்ந்த
சீடராக” இருப்பீர்கள் !
4. ஒரு முதிர்ந்த சீடர், இளம் சீடனை விட , மகிமையின் நாட்டிற்கு மிக அருகில் இருக்கிறார். கர்த்தர் முதலில் திரும்பி
வரவில்லை என்றால், உலக நியதிப்படி முதிர்ச்சியடைந்த சீடர், இளம் சீடனுக்கு முன்பாக இறைவனுடன் சேர அதிக
வாய்ப்புள்ளது, நிச்சயமாக, -அப்படியே இன்று அவர் வந்தால் நாம் அனைவரும் அவருடன் இருக்க செல்வோம் (1
கொரிந்தியர் 15: 51-53 மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4: 16-18). ஆயினும், நாம் நாளுக்கு நாள் வாழும்போது, கர்த்தர் நமக்காக
வர வேண்டும் அல்லது நம்மை அழைக்க வேண்டு மென்றால், நாம் அவருடைய வாக்குறுதியை சார்ந்திருப்போம் - ஏசாயா
46: 4 ஐ பாருங்கள்.

ஆகவே, ஒரு முதிர்ச்சியுள்ள சீடராக இருப்பதால் சிறப்பு ஆசீர்வாதங்கள் இருப்பதைக் காண்கிறோம்; ஆனால் இந்த
குறிப்பிலிருந்து மினாசோன் மூலம் வெளிவரும் ஒரு இறுதி விஷயம் உள்ளது.

lll. இந்த மனிதர் மினாசோன் போன்ற சீடராக இருப்பது எவ்வளவு மகிமையான காரியம்.
பல காரியங்களில் அவர் ஒரு பழைய சீடர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதிரியாக இருந்தார். எடுத்துக்காட்டாக
:

1.தன்னால் முடிந்ததைச் செய்தார். சில காலமாக இறைவனை அறிந்தவர், ஆண்டுகளில் முன்னேறி வருபவர். எனவே,
இப்போது அவரால் செய்ய முடியாத சில காரியங்கள் இருந்தன. ஒரு காலத்தில் அவர் ஒரு போதகராகவோ அல்லது
அமைப்பாளராகவோ இருந்திருக்கலாம், ஆனால் இப்போது வயதின் நிலைமை அவரது செயல்பாடுகளை
தடைசெய்திருக்கலாம். இருப்பினும், அவர் செய்யக்கூடிய ஒரு காரியம் இருந்தது; அவருக்கு ஒரு வீடு இருந்தது, அவர்
கடவுளின் ஊழியர்களுக்கு விருந்தோம்பல் செய்தார். பவுல், லூக்கா மற்றும் அவர்களது மற்ற உறுப்பினர்களுக்கு இது
எவ்வளவு அர்த்தமுள்ளது என்று சிந்தியுங்கள். சில சமயங்களில் முதிர்ச்சியடைந்த சீடர்கள், “இப்போது என்னால் செய்ய
முடிந்ததெல்லாம் ஜெபம் செய்வதுதான்” என்று சொல்வது கேட்கிறது. திரைக்குப் பின்னால் ஜெ, பம் செய்வதற்கும், நோய்ப்
படுக்கையிலிருந்தும் ஜெபிப்பது அனைவருக்கும் மிகப் பெரிய ஊழியத்தைச் செய்வதாகும்; அல்லது மிஷனரிகளின்
ஆதரவிற்கும் சுவிசேஷத்தின் முன்னேற்றத்திற்கும் ஜெபம் செய்வது ஒரு சிறந்த ஊழியமாகும்.

2. அவரது திறந்த மனம் மற்றும் புதிய யோசனைகள் மாற்று முறைகளுக்கு ஏற்றதாக இருந்தது. மினாசோன்
அப்போஸ்தலனாகிய பவுலை வரவேற்றார், பவுலை ஒரு மேலதிகாரியாகக் கருதுபவர் களும் இருந்தார்கள் என்பதில் சிறிதும்
சந்தேகம் இல்லை, அவருடன் ஒருவர் இணைந்திருப்பது சிக்கலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். பவுல்
எப்பொழுதும் “எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்துகிறார்”, மினாசோன் தன் ஊழியத்தைப் பற்றி “என் இளம்
நாட்களில் இந்த வகையான ஊழியம் தேவையில்லை. இந்த மாற்றங்களை நான் விரும்பவில்லை! ” என சொல்லியிருக்கலாம்,
ஆனால் அவருடைய மனம் நெகிழ்வானதாக இருந்தது, கடவுள் பவுலை பெரிதும் பயன்படுத்துகிறார் என்பதை அவரால்
காண முடிந்தது, ஆகவே அவர் ஜெபத்திலும் அன்பிலும் அவருக்குப் பின்னால் இருந்தார், அவர் அவருக்கு
விருந்தோம்பல் செய்தார். இன்று இதற்கு இணையாக ஏதும் இருக்கிறதா? நிச்சயமாக உள்ளது. சுவிசேஷத்தின் வழிமுறைகள்
மாறிவிட்டன, மேலும் இது முதிர்ந்த சீடர்களுக்கு கணிசமான அளவு சரி செய்ய வேண்டியது அவசியம். முதிர்ச்சியடைந்த
சீடர்கள் கடவுளுக்கு அவர் செய்கிற எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லவும், அவருடைய சபையை கட்டியெழுப்பவும்,
அவருடைய நற்செய்தியின் பரவலுக்காகவும் அவர் பயன்படுத்தக்கூடிய “எல்லா வழிகளையும்” ஆதரிப்பதில் உற்சாகமாக
இருக்க முடியும். இது எவ்வளவு மகிமை வாய்ந்தது! - செய்தி நீடிக்கப்பட்டிருக்கும் வரை பரிசுத்த ஆவியானவர்
ஆசீர்வதிக்கக்கூடிய ஒரு முறை - 1 கொரிந்தியர் 9: 19-23 வரை பாருங்கள்.
நேரம் வந்ததும், தனது இறைவனுடன் இருக்கத் மினாசோன் தயாராக இருந்தார் என்பதையும், அவருடைய “நல்லது!”
(மத்தேயு 25:21) என்ற பாராட்டையும் அவர் பெற்றார் என்பதையும் நாம் உறுதியாக நம்பலாம்.
தொடர் 10 புதிய ஏற்பாட்டின் மாந்தர் பத்து

பாடம் 10 இயேசுவுக்காக பிரகாசித்த பெபேயாள்


(வேத பகுதி: ரோமர் 16: 1-2)

இந்தப் பெண்மணி ரோமர் 16 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். இது பல பெயர்களைக் கொண்ட ஒரு கண்கவர்
அதிகாரமாகும். இதில் சில பெயர்கள் உச்சரிக்க மிகவும் கடினமா யுள்ளன! இவருடைய பெயர், “பிரகாசம்” என்று
பொருள்படும். இவர் நிச்சயமாக பெயருக்கேற்ப வாழ்ந்ததாகத் தெரிகிறது. பவுல் இதில் குறிப்பிட்ட அனைவருமே
பெபேயாளைப் போன்றவர்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, ரோமர் 16:17 மற்றும் பிலிப்பியர் 4: 2 ஐப் பாருங்கள்! சிலர்
சபையில் ஒரு தடையாக இருந்தவர்கள். ஆனால் மற்றவர்கள், பெபேயாளைப் போலவே சபைக்கு ஒரு ஆசீர்வாதமாக
இருக்க முடியும்! இதில் கவனிக்க இரண்டு விஷயங்கள் உள்ளன:

l. சபைக்கு பவுலின் கட்டளை


பவுல் ரோமாபுரியில் உள்ள சபைக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். ரோமர் 16: 1-2 இல் அவர் கூறியுள்ளத்தைப்
பாருங்கள். நிச்சயமாக பெபேயாள் பவுலின் பாராட்டு கடிதத்தை தன்னுடன் எடுத்துச் சென்றார், அதில் ரோமாபுரியில்
உள்ள கிறிஸ்தவர்களிடம் இவரை ஏற்றுக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் இதைச் செய்ய மூன்று
வழிகளைக் குறிப்பிட்டார், ஏனென்றால் ஒரு நபரைப் சபையில் ஏற்றுக்கொள்ளுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன!

1.அவர்கள் இவரை "கர்த்தருக்குள் ஏற்றுக்கொள்ள” வேண்டும் (வசனம் 1). இதன் பொருள் அவர்கள் இவரை ஏற்றுக்
கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர்களைப் போலவே இவர் “கர்த்தருக்குள்” இருந்தார், அதாவது ஒரு விசுவாசி.
அவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதால் அவர்கள் இவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம்.
கர்த்தராகிய இயேசு உங்கள் சபைக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு வந்தால், நீங்கள் அவரை எவ்வாறு ஏற்றுக் கொள்வீர்க
களா ? –- லூக்கா 10:38 ஐ பாருங்கள்.

2. அவர்கள் இவரை "பரிசுத்தவான்களுக்கேற்றபடி” ஏற்றுக்கொள்ள வேண்டும் (வசனம் 1). அதாவது, அவர்கள் இவரை
தகுதியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசிகள் எல்லா நேரங்களிலும் ஒருவரை ஒருவர் அவர்களின்
இதயங்களுக்குள், வீடுகளுக்குள் மற்றும் சபைகளுக் குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. அவர்கள் “எந்தக் காரியத்தில்.…உதவி தேவையாய் இருக்கிறதோ” அந்த உதவிகளை வழங்க வேண்டும் (வசனம் 2).
இவர் ஒரு அன்னிய நகரத்தில் அன்னியயகராக இருப்பார், ரோமா புரியில் உள்ள விசுவாசிகள் தேவையான எல்லா
உதவிகளையும் இவருக்கு வழங்க வேண்டும் என பவுல் விரும்பினார். உண்மையில், அவர் தனது கோரிக்கையை மிகவும்
வலுவாக முன்வைத்தார் --- “..நீங்கள் அவளுக்கு உதவி செய்ய வேண்டும்...” இவருக்கு அவர்கள் தரக்கூடிய தேவைப்படும்
உதவி, ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்க வேண்டும்.

இவை அனைத்தும் நமக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைக்குரியவை. எபேசியர் 4: 25-ல் உள்ள சத்தியம், “நாம்
அனைவரும் ஒரே உடலின் அங்கங்கள்” என்பதே. நம்முடைய சபைகளில், தேவைப்படுவது உண்மையான கிறிஸ்தவ நட்பு
மற்றும் ஐக்கியம். பெபேயாள் ரோமாபுரியில் நல்ல வரவேற்பைப் பெறுவார், அவர்கள் நேசிப்பார்கள், கவனித்துக்
கொள்வார்கள் என்று பவுல் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். எனவே அவர் இந்த அழகான பெண்மணிக்கு ஒரு சிறப்பு
பாராட்டு வார்த்தையை அளித்தார், இதனால் ரோமாபுரியில் உள்ள விசுவாசிகள் அவளை ஏற்றுக்கொள்வதற்கான சிறப்பு
காரணங்களைக் கூறினார்.
2. பெபேயாள் குறித்த பவுலின் பாராட்டுகள்
பெபேயாளைப் பற்றிய மூன்று முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் பாராட்டினார்.
1. அவர் இவரை “நம்முடைய சகோதரி” (வசனம் 1) என்று கூறினார். இதன் பொருள் அவர் தேவனுடைய குடும்பத்தில்
இருந்தார் - கலாத்தியர் 3:28; அவர் பவுலின் சகோதரியாக இருந்த படியே ரோமாபுரியில் உள்ள கிறிஸ்தவர்களின்
சகோதரியாகவும் இருந்தார் - 1 கொரிந்தியர் 12: 12-14 வரை பாருங்கள்.
2. அவர் “சபைக்கு ஊழியக்காரி …” (வசனம் 1) என்று பெபேயாளைப் பற்றி விவரித்தார். கெங்கிரேயாவில் சந்தித்த
விசுவாசிகளின் கூட்டத்தில் அவர் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு ஊழியக்காரி, பரிசுத்தவான்களுக்கு
ஊழியம் செய்த ஒரு உதவியாள்; சுவிசேஷம் பரம்ப எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அத்தகைய தெய்வீக
பெண்களுக்கு நம் சபைகள் எவ்வளவு கடன்பட்டிருக்கின்றன! கடவுளின் ஊழியத்தில் அவர்களுக்கு ஒரு சிறப்பு இடம்
உண்டு; நாம் அவர்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் சிறப்பு வரங்களை பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு
இருப்பதைக் காண வேண்டும்.
3. பெபேயாளைப் பற்றி “அவள் அநேகருக்கும் எனக்கும்கூட ஆதரவாயிருந்தவள்” என்று அவர் விவரித்தார் (வசனம்
2). ஒரு பெரிய உதவியாக இருக்கும் ஒருவர், ஊக்கத்தையும் ஆதரவையும் பெற மற்றொருவரிடம் செல்வார்கள். காரணம்
அவர் கருணையுள்ளவர், கனிவான வர், மென்மையானவர், நேர்மையானவர், அனுதாபமுள்ளவர் என்பது. சில சிறப்பு
வழிகளில் அவர் பவுலுக்கு ஊழியம் செய்தார், அவர் ரோமாபுரியில் செல்லும் சபையில் விசுவாசிகளுக்கு இதே போன்ற
ஊழியத்தை செய்ய இது தகுதி பெற்றது.

இந்தப் பாடத்தை முடிக்கும் முன், நாம் அனைவரும் பெபேயாளைப் பின்பற்ற சில வழிகளைக் கவனிக்கலாம்:
1. புதிய விசுவாசிகளுக்கு தாய் போல் செயல் படல். இவர்கள் கிறிஸ்துவில் உள்ள குழந்தைகள் - 1 பேதுரு 2: 2; எல்லா
இடங்களிலும் (கொரிந்திலும்) புதிய விசுவாசிகளுக்கு என்ன உதவி தேவை என்று சிந்தியுங்கள்! -அப்போஸ்தலர் 11: 19-23
வரை பாருங்கள். “குழுக்களை வளர்ப்பது” மற்றும் தனிப்பட்ட விசுவாசிகள், புதிய விசுவாசிகளை வளர்ப்பதற்கு இன்று
வாய்ப்புகள் பல உள்ளன.
2. துக்கத்தை ஆறுதல்படுத்துவதன் மூலம். பெபேயாள் ஒரு விதவையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை திருமணம்
செய்து கொள்ளாதிருக்கலாம், ஆனால் எந்த வழியில் இருந்தாலும் அவர் சிறப்பு சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு உதவவும்
ஊக்குவிக்கவும் தகுதி பெற்றிருக்கலாம். நம் சபைகளில் ஏராளமானவர்கள் பல சுமைகளை சுமக்கிறார்கள் - கலாத்தியர் 6: 2
மற்றும் 10 ஐ பாருங்கள்.
3. வயதானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் உதவுவதன் மூலம். நம் சபைகளில் இது போன்ற பலர் உள்ளனர்,
அவர்கள் எவ்வளவு பெரிய ஆத்மாக்கள்! ஆனால் அவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, புறக்கணிக்கப்
படுகின்றனர்; சிலருக்கு நிதி உதவி தேவை, சிலர் தனிமையாக இருக்கின்றனர், மற்றவர்கள் நேசிக்கப்பட வேண்டும்.
4. ஜெப ஊழியத்தால். உங்களிடம் ஜெபக்குறிப்பு பட்டியல் உள்ளதா? நற்செய்தி வேலையின் முன் வரிசையில் இருக்கும்
பலர், பெபேயாள் போலவே தங்களுக்காக ஜெபிப்பவர்களை சார்ந்து இருக்கிறார்கள் - எபேசியர் 6: 18-20 வரை பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான,ஆறு அன்புக்குரியவர்கள், நண்பர்ககளைக்கொண்டு இங்கே ஒரு பட்டியலை உருவாக்குவது
எப்படி? - அதாவது, இனிமேல் யாருடைய இரட்சிப்புக்காக நீங்கள் தவறாமல் ஜெபிப்பீர்கள்?

எனக்கு விருப்பமான ஆறு பேர்


1.-------------------------------------------
2.-------------------------------------------
3.-------------------------------------------
4.-------------------------------------------
5.-------------------------------------------
6.-------------------------------------------

எரேமியா 33: 3; யோவான் 14: 13-14; 1 யோவான் 3: 18-24 மற்றும் 1 யோவான் 5: 14-15. ஐ பாருங்கள்.

5. தனிமையான சோர்வுற்ற மக்களுக்கு உங்கள் வீட்டைத் திறப்பதன் மூலம். உங்கள் வீடு மிகச் சிறியதாக இருக்கலாம்,
அல்லது அது பெரியதாக இருக்கலாம், ஆனால் அது தனிமையான, சோர்வுற்ற, கவனிப்பாரற்ற மக்களுக்கு ஒரு
உண்மையான சொர்க்கமாக இருக்கலாம்
பெபேயாள்: பிரகாசிக்கும் ஒருவர்! –- கர்த்தருடைய கிருபையையும் மகிமையையும் அமைதியாக வும் பிரகாசமாகவும்
பிரதிபலித்தவர் - 2 கொரிந்தியர் 3:18 ஐப் பார்த்து, சங்கீதம் 34: 5 ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

இது ஒரு புதிய மொழி பெயர்ப்பு: “அவர்கள் அவரைப் பார்த்து, பிரகாசமாகிவிட்டார்கள் … ”

You might also like