You are on page 1of 12

வகுப்புசார் மதிப்பீடு

தமிழ்மொழி

பெயர் : ______________ ஆண்டு : 2

பிரிவு 1

பிரிவு அ : செய்யுள் மொழியணி

( கேள்விகள் 1 – 10 )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1.
சூதும் வாதும் வேதனை செய்யும்.

A. சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே

தரும்.
B. கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க

வேண்டும்.

2.
அச்சம் தவிர்.

A. பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

B. முயற்சியை விட்டு விடக்கூடாது.

3.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

A. சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளாடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

B. நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு

அறியலாம்.

1
4.
ஆண்மை தவறேல்.

A. எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.

B. பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

5.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

A. நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும். இறைவனை

வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

B. நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப்

பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால்

பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு

ஒப்பாகும்.

6.
முழு மூச்சு

A. முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக

B. எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு / உளறிக்

கொட்டிவிடும் நபர்.

7.
ஓட்டை வாய்

A. முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக

B. எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு / உளறிக்

கொட்டிவிடும் நபர்.

8.
அல்லும் பகலும்.

A. நல்லது கெட்டது
2
B. இரவும் பகலும் / எப்பொழுதும்
9.
நன்மை தீமை.

A. நல்லது கெட்டது
B. இரவும் பகலும் / எப்பொழுதும்

10.
சிறு துளி பெரு வெள்ளம்.

A. சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளாடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

B. நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு

அறியலாம்.

பிரிவு 2
பிரிவு ஆ : இலக்கணம்

( கேள்விகள் 11 – 20 )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

11. தம்பி படம் வரைந்தான் _______.

A. செய்தி வாக்கியம்
B. வினா வாக்கியம்

12. உன் பெயர் என்ன ________?

A. செய்தி வாக்கியம்
B. வினா வாக்கியம்

13. நேற்று கனத்த _____________ பெய்தது.

A. மலை

3
B. மழை

14. நாங்கள் _____________ மீன்களைப் பார்த்தோம்.

A. வன்ன
B. வண்ண

15. _____________ பெற்ற மாணவனுக்கு ஆசிரியர் பரிசு கொடுத்தார்.

A. வெர்ரி
B. வெற்றி
16. _____________ பூங்கா.

A. இது
B. இஃ:து

17. தாத்தா பழமரம் நட்டார்.

A.
தாத்தா பழமரக்கள் நட்டார்.
B.
தாத்தா பழமரங்கள் நட்டார்.

18. தம்பி திடலில் ______________________.

A.
விளையாடுகிறான்
B.
படித்தான்

19. முயல் __________ கூரிய பற்களால் பழத்தைக் கொரித்தது.

A.
தன்
B.
தம்

4
20. அண்ணன் நேற்றுச் சிறப்பு வகுப்பிற்குச் ___________________.

A.
சென்றார்
B.
செல்வார்

பிரிவு 3

பிரிவு இ : கருத்துணர்

i.

ii. உயர்திணை அஃறிணைச் சொற்களைச் சரியாக

வகைப்படுத்துக.

அக்காளமாம ஆடு

மரம் மன்னர்

5
மருத்துவர் முயல்

செடி ஆசிரியர்
உயர்திணை அஃறிணை

iii. சொற்களை முறைப்படுத்தி வாக்கியமாக்கி எழுதுதல்

1. 1. நலமாக உண்ண சத்துள்ள வாழ வேண்டும் உணவை

2.
___________________________________________________________.

3. 2. உடல் உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்

4. செய்வது
5.
____________________________________________________________.

6. 3. நடைப்பயிற்சி உடற்பயிற்சியாகும் மிகச் சிறந்த

7.
____________________________________________________________.
6
iv. பனுவலை வாசித்து; கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்

ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. சரவணன் குடும்பத்தினர்

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்தனர். புத்தாடை அணிந்து

கோயிலுக்குச் சென்றனர். அனைவரும் இறைவனை வழிப்பட்டனர். பின்னர்

இல்லம் திரும்பினர்.

அம்மா பலகாரம் எடுத்து வைத்தார். அப்பா விருந்தினர்களை

வரவேற்றார். விருந்தினர்கள் விருந்து உண்டனர். அம்மா சுட்ட முறுக்கு

மிகவும் சுவையாக இருந்தது. இரவில் மத்தாப்புக் கொளுத்தி விளையாடினர்.

அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் தீபத் திருநாளைக் கொண்டாடினர்.

1. இந்துக்கள் தீபாவளியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?

அ) அக்டோபர் ஆ) ஐப்பசி இ) தை

2. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியவர் யார்?

அ) அகிலன் ஆ) மாதவி இ) சரவணன்

7
3. காலையில் எழுந்தவுடன் அனைவரும் என்ன செய்தனர்?

காலையில் எழுந்தவுடன்_______________________________________.

4. அவர்கள் இரவில் என்ன செய்தார்கள்?

_________________________________________________________________.

பிரிவு 4

பிரிவு ஈ : கட்டுரை

i. வாக்கியங்களை நிரல்படுத்திக் கதையாக எழுதுதல்

 எறும்புகள் தாங்கள் சேமித்த உணவை உண்டன.

 வெட்டுக்கிளி உணவு கேட்டு நின்றது.

 எறும்புகள் வெட்டுக்கிளிக்கு அறிவுரை கூறின.

 குளிர்காலம் வருமுன் எறும்புகள் உணவு சேகரித்தன.

 வெட்டுக்கிளி பசி தாளாமல் எறும்புகளிடம் சென்றது.

 வெட்டுக்கிளி ஒன்று உணவு சேகரிக்காமல் பாடித் திரிந்தது.

 குளிர்காலம் வந்தது.

 வருமுன் காக்க மறந்த வெட்டுக்கிளியை எறும்புகள் மன்னித்து

ஆதரித்தன.

 வெட்டுக்கிளி எறும்புகளின் அறிவுரையைச் செவிமடுக்கவில்லை.

8
 உணவைப் பெற்றுக் கொண்ட வெட்டுக்கிளி தன் அலட்சியப்

போக்குக்காக வருந்தியது.

9
__________________________________________________________

_______________________________________________.

ii. மனவோட்டவரையின் உதவியுடன் வாக்கியங்களை

பத்தி அமைப்பில் எழுதுதல்.

10
செம்பருத்தைப்
தேசிய

அழகிய

ஐந்து நிறங்களில்

___________________________________________________________________________

______________________________.

11
12

You might also like