You are on page 1of 7

சிலப்பதிகாரம்

(கட்டுரை காதை)
பாடல் 10: சிறுவர் செயல்
சூழலும், குடுமியும் மழலைச் செவ்வாய்த்
தளர்நடை ஆயத்து, தமர்முதல் நீங்கி,
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தரக்,
“குண்டப்பார்ப்பீர்! என்னோடு ஒதி, என்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்” எனச்,
பதவுரை பொருள்
சூழலும் சுருண்ட முடி
குடுமியும் உச்சியில் வைத்த தலைமுடி
மழலைச் குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; குதலைப் பேச்சு
செவ்வாய்த்
தளர்நடை குழந்தைகள் தொடக்கத்தில் தடுமாறி நடக்கும் நடை
ஆயத்து  சுற்றம்
தமர்முதல் சுற்றத்தார்,உறவினர்,பெரியவர்கள்
நீங்கி நகர்ந்து அல்லது தள்ளி செல்லுதல்.
விளையாடு விளையாடும்
சிறாஅர் சிறிய தலையையுடைய சிறுவர்கள்
எல்லாம் அனைவரும்
சூழ்தரக் சூழ்ந்துக் கொள்ள
குண்டப்பார்ப்பீர் பிராமணச் சிறுவர்களே
என்னோடு என்னொடு / என்னுடன்
ஓதி மந்திரங்களை ஓதுதல்
என் என்னுடைய, எனது
பதவுரை விளக்கம்
பண்டச் பழமை
சிறுபொதி பரிசு மூட்டையை
கொண்டு எடுத்துச்
போமின் செல்லுங்கள்

பதவுரை பொருள்
பண்டச் பொருட்கள்
சிறுபொதி சிறு மூட்டை
கொண்டு எடுத்துச்
போமின் செல்லுங்கள்
தெளிவுரை :
சுருண்ட முடியும், குடுமியும், மழலை பேசும் செவ்வாயும், தளர்ந்த நடையும்
உடைய சிறுவர்கள், தங்கள் சுற்றத்தாரை பிரிந்து வந்து விளையாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் ஊருக்கு வந்து சேரனை வாழ்த்திய
பராசரனைக் கண்டு அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“பிராமணச் சிறுவர்களே! என்னோடு இணைந்து வேதம் ஓதுங்கள். அப்படி
ஓதினால், என்னுடைய சிறு மூட்டையில் இருக்கும் பொருட்களை நீங்கள் பரிசாக
எடுத்துக் கொண்டு செல்லலாம்”, என்று அவர்களை நோக்கி கூறினார் பராசரன்.
விளக்கம் :
• விளையாடும் சிறுவர்கள் தம் பெற்றோரை விட்டு நீங்கிப் பராசரனைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள்
முன்னிலையில் தனக்குப் பரிசளித்த சேரனைப் பராசரன் வாழ்த்தினான். 

வெண்குடையின் கீழ் வெற்றி கண்ட வேந்தனே வாழ்க 


இமயமலைப் பிளவில் வில் பொறித்த திறம் மிக்கவனே வாழ்க 
பொருநை ஆற்றின் வேந்தனே வாழ்க 
மாந்தரஞ்சேரல் மன்னவனே வாழ்க 
என்று சொல்லி  வாழ்த்திக்கொண்டிருந்தான். 

அதனைப் பார்த்து விளையாட்டுச் சிறுவர்கள் தம் பெற்றோரை விட்டுவிட்டு ஓடிவந்து பராசரனைச்


சூழ்ந்துகொண்டனர். அவர்களில் சிலர் கூந்தலை வளர்த்திருந்தனர். சிலர் உச்சிக் குடுமி வைத்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துப் பராசரன் கேட்டான். 

"குண்டு குண்டு பார்ப்பனச் சிறுவர்களே! என்னோடு சேர்ந்து மறை ஓதி என்னிடமுள்ள இந்தப் பரிசு
மூட்டையை எடுத்துச் செல்லுங்கள்" என்றான். 
புதைப்பொருள் :
• துணிச்சல்
• ஒற்றுமை
• போற்றுதல்
• அங்கீகரித்தல்
• அறிவாற்றல்

You might also like