You are on page 1of 4

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீ து சேவல் உட்கார்ந்து இருந்தது.

காலை நேரம்
இதமாக இருந்ததால்
உற்சாகமாய் பல முறை சேவல்
கூவியது. இதைக்கேட்ட நரி அங்கே வந்தது. அப்போது நரிக்கு சரியான பசியாக
இருந்தது.

அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால், சேவல்


மரத்தின் மீ து இருந்ததால் அதைப்
பிடிக்க முடியவில்லை.

இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து, சகோதரனே!,


வணக்கம்.

ஒரு நல்ல செய்தியை நீ கேள்விப்பட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும்


ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. அன்பாய் நடந்துக்


கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
நீ கொஞ்சம் கீ ழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம் என்றது.

நரியின் தந்திரப் பேச்சை சேவல் புரிந்து கொண்டது. ஆனால், அதை வெளியே


காட்டவில்லை.

தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. இதைக்கண்ட


நரி, என்ன சகோதரா?, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே.
அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

இன்றைய பரபரப்பான உலகில் தானியங்களை உட்கொள்ளும் வழக்கம் மெல்ல


குறைந்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவசியம் சேர்க்க வேண்டிய நவதானிய


வகைகள் நேட்டிவ் ஸ்பெஷல்.காம் இணையம் வாயிலாக மக்களிடம் கொண்டு
சேர்த்து வருகின்றனர்.

சுட்டிக்குழந்தைகள் சுறுசுறுப்பாக படிக்கவும், வயதானவர்கள் உடல் நலத்துடன்


இருக்கவும் உடனே வாங்கி பயன்பெறுங்கள்!

அதற்கு சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருகிற மாதிரி தெரிகிறது. வேட்டை
நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன் என்றது.

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது. வேகவேகமாக சரி, சரி நான்
அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பியது.
சேவல், என் அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீ ழே வருகிறேன்.
நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய்,
எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினாயே!

அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்,


அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன
கதி ஆவது? நான் போகிறேன் என்றது.

இதைச் சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக காட்டுக்குள் ஓடி சென்று மறைந்தது.
சேவல் யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய
கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.

நீதி : ஏமாற்றுபவர்கள் இருந்தாலும் நாம் புத்திசாலியாக செயல்பட்டால் நம்மை


யாராலும் ஏமாற்ற முடியாது.
ஒரு கிராமத்தில் புத்திசாலி சேவல் ஒன்று இருந்தது. அது தன்னுடைய கடமைகளை
நன்கு செய்து வரும். அது அதிகாலையில் எழுந்து மக்களை எழுப்பி விட்டு தனது
அன்றாட கடமைகளை செய்து வந்தது.

ஒரு நாள் அந்த சேவல் மரத்தின் மேல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது


ஒரு கொடிய நரி ஒன்று அந்த இடத்தை கடந்து சென்றது. நரி அந்த சேவல் மேலே
ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தது. அப்பொழுது அந்த நரிக்கு அந்த சேவலை
சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

உடனே நரி சேவலிடம், வணக்கம் சேவலே, நான் சொர்க்கத்திலிருந்து உனக்கு ஒரு


செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நமக்கு ஒரு புதிய உத்தரவு
வந்திருக்கிறது. 'இப்போதிலிருந்து எல்லா பறவைகளும் விலங்குகளும் நண்பர்களாக
ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு" என்றது.

சேவல் ஆச்சரியப்பட்டு 'இந்த செய்தி உண்மை தானா என்று கேட்டது?"

அதற்கு அந்த நரி 'ஆம் உண்மைதான், உனக்கு சந்தேகமாக இருந்தால் கீ ழே வந்து


அனைத்து விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கின்றது
என்பதை பார்" என்றது நரி.. உடனே அந்த சேவல் சாதுரியமாக சிந்திக்கத்
தொடங்கியது. அதற்கு அந்த சேவல் நரியிடம்.. 'ஒரு நிமிடம் காத்திருப்பாயா நம்
நண்பர்கள் சிலர் வருகிறார்கள்" என்றது.

அந்த நரி ஆச்சரியத்துடன், நண்பர்களா! யாரெல்லாம் வருகிறார்கள்? நீ என்ன


சொல்கிறாய் என்றது. அதற்கு அந்த சேவல் இங்கு சில வேட்டை நாய்கள் வரும்.
அதற்காக தான் நாம் இங்கு காத்திருக்கிறோம் என்றது.

அந்த வேட்டை நாயின் சத்தத்தை கேட்டதும் அந்த நரி எரிச்சலடைந்தது. உடனே


அந்த நரி ஓட்டம் பிடித்தது. அதற்கு அந்த சேவல் ஏன் நீ ஓடுகிறாய்? நம் நட்பு என்ன
ஆயிற்று என்றது? உடனே அந்த நரி 'மறந்துவிடு" என்று பதிலளித்துவிட்டு ஓட்டம்
பிடித்தது.

You might also like