You are on page 1of 1

சிறுவர் பாடல்

தமிழில் சிறுவர் சிறுமியர் பாடி மகிழ நிறைய பாட்டுகள் உண்டு. இவை


பொதுவாக வாய்வழிக் கலையுருக்களாக வளர்ந்தவையாகும். அதனாலேயே ஒரே
பாடலுக்கு பல்வேறு திரிபுகள் இருக்ககூடும்.

எ.கா:- கூடி வாழ்வோம்

பறவை எல்லாம் பாடுச்சு


பக்கம் வந்து தேடுச்சு

கறவை மாடு சிரிச்சுச்சு


கறந்து பாலும் தந்துச்சு..!

குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு


கூட்டம் சேர கத்துச்சு

பசிக்கு இங்கே வந்திட


பாடிப் பாடி அழைச்சிச்சு..!

எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு

இனத்தின் குரலைக் கேட்டுச்சு


இறங்கி வந்து பார்த்துச்சு..!

கோமாதா நமக்கு எல்லாம்


குடிக்க பாலும் தந்துச்சு

கூடி நாமும் கூட்டம் போட்டு


‘அன்னை' யென்று சொல்லுச்சு..!

பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது

சாதுவாக இருந்த அதுவும்


சினந்து காடு வெல்லுது..!

பறவைக் கூட்டம் நாமெல்லாம்


போற்றி அதை வணங்குவோம்

சிறகாய் நாமும் இருந்துமே


பறக்க வைத்து மகிழுவோம்..!

You might also like