You are on page 1of 16

SULIT 1 6354/2

SEKOLAH MENENGAH KEBANGSAAN DATUK

BENDAHARA, JASIN MELAKA

UJIAN PENTAKSIRAN 2 TAHUN 2020

TINGKATAN 4
KERTAS 2
BAHASA TAMIL
2 JAM 15 MINIT Dua jam lima belas minit

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAHU

1. Kertas soalan ini mengandungi 22 soalan

2 Jawab semua soalan

3 Jawapan anda hendaklah ditulis dalam kertas tulis yang disediakan.

Kertas ini mengandungi 15 halaman bercetak

பிரிவு அ : கருத்துணர்தல் (பல்வகை)

6354/2
SULIT
SULIT 2 6354/2

[30 புள்ளி]

1 கீழ்க்காணும் கருத்துப் படத்தைக் கூர்ந்து கவனித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை

எழுதுக.

சிறிது நேரத்திற்கு முன்புதான்

முகநூலில் மூழ்கியிருந்தான்.
இப்போது நூலின் மேல் இவன்
முகம் இருக்கிறது.

இப்படம் உணர்த்தும் கருத்து யாது?

__________________________________________________________________________
________
__________________________________________________________________________
________
__________________________________________________________________________
________ [2 புள்ளி]

2 கீழ்க்காணும் பாடப்பகுதி உணர்த்தும் முக்கியக் கருத்து யாது?

சாதனையாளர்கள்...
 8 வயது மதுரை மாணவி லவணாஸ்ரீ மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய ஆன்லைன் தேர்வில்
1000 க்கு 842 மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்து உலக சாதனை
புரிந்துள்ளார்.
 மாவீரன் அலெக்சாண்டர் 16 வது வயதில் தனது தந்தையின் போர் படையில் தளபதியானார்.
 ஜப்பானைச் சேர்ந்த கடாசுக்கே யாங்கி தமது 71 வது வயதில் 29 035 அடி உயர எவரஸ்ட்
சிகரத்தை ஏறி சாதனை படைத்தார்.

 அமெரிக்காவைச் சேர்ந்த மூதாட்டி நோலா, தமது 92 ஆவது வயதில் போர்ட் ஹேஸ்

பல்கலைக்க்கழகத்தில் தற்கால அரசியல் பாடத்தைப் படித்துப் பட்டம் பெற்று உலக சாதனை
படைத்தார்.

________________________________________________________________________________
______

________________________________________________________________________________
______

6354/2
SULIT
SULIT 3 6354/2

[2 புள்ளி]

3 கீழ்க்காணும் உரைவீச்சு உணர்த்தும் முக்கியக் கருத்து யாது?

உறங்கிக் கொண்டிருக்கும்
போர்வாளைக் காட்டிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழு கூட உயர்ந்தது தான்!

-மு.மேத்தா

__________________________________________________________________________
_______

__________________________________________________________________________
_______

__________________________________________________________________________
________
[2 புள்ளி]

4 கீழ்க்காணும் நகைச்சுவைத் துணுக்கில் மதியரசியின் கூற்றிலிருந்து அறியும் தகவல் யாது?

மதிநிலா : ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்தப் பிச்சைக்காரர் உங்களிடமிருந்து

சாப்பாடு வாங்கிட்டுப் போகிறாரே? மற்ற நாள்களில் ஏன் வாங்குவதில்லை?
மதியரசி : ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் நாங்கள் உணவகத்திலிருந்து
உணவு வாங்குவோம்.

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________
[2 புள்ளி]

6354/2
SULIT
SULIT 4 6354/2

5 கீழ்க்காணும் பகுதியை வாசித்து, ஐயா அபு.திருமாலனார் அவர்களின் சிறப்பு ஒன்றனை

எழுதுக.

தமிழ்மொழியைத் தனது வாழ்வின் மூச்சாக எண்ணி

அம்மொழிக்காகத் தம்மை ஈகம் செய்த நல்லோரில், மலேசிய
மண்ணின் முகவரியாக, இந்நாட்டில் தமிழுக்கும்
தமிழினத்திற்கும் பாடாற்றியத் தமிழ்நெஞ்சர்தான் ஐயா
அபு.திருமாலனார். பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனாரின்
தனித்தமிழ்ப் பாசறையில், மெய்மம் கொண்டு மலேசியாவில்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர். துறைதோறும்
தமிழ் வளர வேண்டும் என்பதற்கு ஒப்ப, தமிழ்ப் பணியாற்றி தமிழுக்குத் தொண்டுகள் பல
செய்தத் தமிழாய்ந்த அறிஞர் இவர். மொழி, இனம், சமயம் ஆகியவற்றையும் கடந்து,
நாடகங்களை இயக்கவும் பாடல்களை எழுதி அதற்குச் சுயமாக இசை அமைக்கும்
புலமையையும் அவர் பெற்றிருந்தார்.

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________
[2 புள்ளி]

6 கீழ்க்காணும் பகுதியை வாசித்து, ராஜாமணி மயில்வாகனம் அவர்களைப் பற்றி நீ அறிந்த

இரண்டு செய்திகளை எழுதுக.

ராஜாமணி மயில்வாகனம்
மலேசியாவில் புகழ்பெற்ற
ஓட்டப்பந்தய வீராங்கனை. இவர்
ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவைப்
பிரதிநிதித்தவர். ஆசியான்,
தென்கிழக்காசிய விளையாட்டுகளில்
பல தங்கப்பதக்கங்களை வென்றவர்.
பல ஆசிய, தேசியச் சாதனைகளைப்
படைத்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை விருதைப் பெற்ற முதல்
பெண்மணி இவராவர். இவர் புகழ்பெற்ற மலேசியப் பெண்களின் பட்டியலில் முதல் பத்து
பெண்களில் ஒருவராக உள்ளார். 1964 ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறும்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ராஜாமணி தகுதி பெற்றார். பிற்காலத்தில்
உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தேசிய விளையாட்டு மன்றம்
போன்றவற்றில் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

6354/2
SULIT
SULIT 5 6354/2

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________
[2 புள்ளி]

கேள்விகள் 7 – 10

கொடுக்கப்பட்டுள்ள பகுதியை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடை காண்க.

மனத்திற்கு இன்பம் தரவும் கலை, பண்பாடுகள் வளரவும் நடைமுறை வாழ்வுக்குப்
பொருந்தும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்த்திரைப்படம். இயல், இசை, நாடகமென
முத்தமிழ் இரசத்தையும் ஒன்றாய்த் தேன் சொட்டச் சொட்ட நமக்குத் தரவல்லது
தமிழ்த்திரைப்படங்களே. நல்ல பாடல்கள், இன்னிசை, பக்தி, தன்முனைப்பு, நன்னெறிக்கோட்பாடு,
தமிழர் பண்பாடு, குடும்பப்பாசம், நாட்டுப்பற்று ஆகியவை சிதறிப்போகாது சிறப்பாகத்
தந்தவைதாம் அன்றையத் தமிழ்த்திரைப்படங்கள். ஆனால் இன்றையத் தமிழ்த்திரைப்படங்களோ
அதற்கு எதிர்மாறான விளவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இன்றையத் தமிழ்த் திரைப்படங்களில் கருத்தாழமிக்க விரசமில்லாத வரிகள் கொண்ட

பாடல்கள் மிகவும் அருகிவிட்டன. ஓரிரு பாடல்களைத் தவிர மற்றவை விரசத்தைத் தூண்டும்
பாடல்களாகத்தான் இருக்கின்றன. இவ்வாறான பாடல்கள் இளையோரிடையே தீய சிந்தனைகளை
ஏற்படுத்தித் தீய செயல்களுக்கு இட்டுச்செல்கின்றன என்றால் அது மிகையாகாது. கருத்துகள்
குன்றிய பாடல்களைக் கேட்கும் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் சிந்தனையாற்றல்
குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

தமிழ்த்திரைப்படங்கள் இந்த அளவிற்கு மட்டும் நம்மினத்தை இழுத்துச் செல்லவில்லை.

தற்போது கல்விக்கூடங்களிலும் சினிமாவின் தாக்கங்களை அதிகமாகவே காண முடிகிறது.
கல்விக்கூடங்களில் காணப்படும் ஒழுங்கீனச்செயல்கள் தமிழ்த் திரைப்படங்களின்
பிரதிபலிப்புகளாகவே தென்படுகின்றன. கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டிய மாணவர்கள்
புகைபிடிப்பது, மது அருந்துவது, குண்டர் கும்பல் ஈடுபாடும், அடிதடி, சண்டை, வெட்டு, குத்து என
பல்வேறான தீச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்த் திரைப்படங்களின் தாக்கத்தாலேயே பல பதின்ம வயதினர்

சிறுவயதிலேயே காதல் கொண்டு தங்கள் இளமைக் காலத்தை வீணடித்துவிடுகின்றனர். இதனால்
அவர்களின் கல்வி பாதிப்படைவதோடன்றி தங்களூக்கும் தங்கள் பெற்றோருக்கும் அவமானத்தை
விளைவிக்கின்றனர் என்பதனையும் அவர்கள் உணர மறுக்கின்றனர்.

திரைப்பட நகைச்சுவைகளிலும் ஆபாசமில்லாமல் இல்லை. திரைகளில் இரு பொருள்தரும்

பேச்சு முறை நாகரிகமாகிவிட்டது. விரசமான சொற்களைக் கொண்டே பெரும்பாலான
திரைப்படங்கள் வெளிவருகின்றன. இதைப் பார்க்கும் கள்ளமில்லா பிஞ்சுகள் கூட சினிமா
மொழிகளை, உரையாடல்களைப் பின்பற்றுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

6354/2
SULIT
SULIT 6 6354/2

[எடுத்தாளப்பட்டது]

7 திரைப்படங்கள் அறிமுகப்பட்டதன் நோக்கம் யாது?

________________________________________________________________________________
__

________________________________________________________________________________
__
[2 புள்ளி]

8 அ) இன்றைய இளைஞர்கள் சிந்தனையாற்றல் குறைந்தவர்கள் என்று கட்டுரை

ஆசிரியர் கூறுவதற்குக் காரணம் யாது?

____________________________________________________________________
_______

____________________________________________________________________
_______
[2 புள்ளி]

ஆ) கல்விக்கூடங்களில் தமிழ்த்திரைப்படங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி

வருகின்றன?

____________________________________________________________________
_______

____________________________________________________________________
_______
[2 புள்ளி]

9 கருமையாக்கப்பட்டுள்ள சொல்லுக்குச் சூழலுக்கு ஏற்ற பொருள் தருக.

இன்றையத் தமிழ்த் திரைப்படங்களில் கருத்தாழமிக்க விரசமில்லாத வரிகள்

கொண்ட பாடல்கள் மிகவும் அருகிவிட்டன.

__________________________________________________________________________
________
[2 புள்ளி]

6354/2
SULIT
SULIT 7 6354/2

10 இளைஞர்களிடையே தமிழ்த்திரைப்படங்களின் தாக்கத்தைத் குறைப்பதற்கு நாம்

மேற்கொள்ள வேண்டிய ஐந்து நடவடிக்கைகளை 50 சொற்களில் எழுதுக.

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

6354/2
SULIT
SULIT 8 6354/2

[10 புள்ளி]

பிரிவு ஆ : கருத்துணர்தல் (படைப்பிலக்கியம்)

[30 புள்ளி]
கேள்விகள் 11 முதல் 14 வரை
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக.
"ஆமாம். என்புள்ள வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆகுது. எப்போ கேட்டாலும்
வேலைம்...மா ஓன் கால் இருக்கும்மானு சொல்லுவான். பிறகு தான் தெரியும் ஒரு பொல்லாத
சீக்கு வந்து எல்லாரையும் கொல்லுதாமே... அதான் என் புள்ளை வீட்டுக்கே வரலை. நாளைக்குச்
சபாக்கு வேற போவனும்...மா அதான் அங்க போறதுக்கு முன்னுக்கு என்னை வந்து
பார்த்துட்டுப் போக சொன்னேன். என்னத்தான் ஊருக்கு டாக்டரா இருந்தாலும்... எனக்கு நான்
பெத்த பிள்ளைதானே லெட்சுமி...," தன்னுடைய கவலையைக் கணேசின் அம்மா லெட்சுமியிடம்
இறக்கி வைத்தார் சரோஜா.

6354/2
SULIT
SULIT 9 6354/2

"ஆமாக்கா. ரொம்ப மோசமான வைரசாம். தம்பியைப் பார்த்து இருக்க சொல்லுங்க.

நேத்துக் கூட யாரோ டாக்டர் இறந்துட்டாராம். சபாவுக்கா தம்பி போவுது. அங்கேயும் இந்தச்
சீக்கு இருக்காம்கா. பார்த்துக்கோங்க. நான் போய் சமையலைக் கவனிக்கிறேன். மஞ்சளைக் கலந்து
தண்ணி வைங்க. வாசலிலேயே காலைக் கழுவச் சொல்லுங்கக்கா."

-------------------------------------------------------------------------------------------------------------------
"ஹலோ...ம்மா.. நான்தான்". மறுமுனையில் டாக்டர் நாதன்.

"ஐயா, சொல்லுய்யா. எத்தனை மணிக்கு..யா வர? அம்மா சமைச்சுட்டேன்.. வெளிய

சாப்பிடாம வாயா…" மிகவும் ஆசையோடு தன் மகனைக் காணவிருக்கும் வேகத்தில்
இடைவிடாமல் பேசி முடித்தார்.

"இல்லைம்மா... நா....நான் வரலைம்மா..." மிகவும் சிரமத்தோடு தன் பதிலைக் கூறினான்.

"வரலையா? ஏம் பா? உனக்காக சமைச்சு வெச்சு உட்கார்ந்து இருக்கேன். திடிர்னு

வரலைன்னு சொல்லிட்டியே யா?"

அம்மாவின் குரல் சற்று தழுதழுத்தை உணர்ந்த நாதன் மேலும் தொடர்ந்தான்.

"வரலாம்னு தான் மா நினைச்சேன் ஆனா திடிர்னு எனக்குக் கொஞ்சம் காய்ச்சலா

இருக்கு. அதான்மா" என்று முடித்தான்.

ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு "சரி யா. உடம்பைப் பார்த்துக்கோ. நாளைக்குக்

கிளம்புறதுக்கு முன் எனக்கு போன் பண்ணு...யா," என்று தொடர்பைத் துண்டித்தப் பிறகு மிகவும்
சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகை தன்னையும் அறியாமல் வெளி வருவதைக்
கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் குழந்தை போல் தேம்பி அழ ஆரம்பித்தார்.

-------------------------------------------------------------------------------------------------------
மறுபடியும் தொலைபேசி மணி அடித்ததும். என் பையன் தான். “ஹலோ ஐயா.."

"அம்மா, நான் தான் பவாணி. சாப்பிட்டீங்களா? என்ன சமைச்சீங்க…?” சரோஜாவின்

மகள்.

"சொல்லும்மா. நான் தம்பின்னு நினைச்சேன்," என்று தன் ஏக்க பெருமூச்சை

வெளிப்படுத்தினார்.

"அம்மா, தம்பி வீட்டுக்கு வரலையாம். அவனுக்கு லேசா காய்ச்சலாம்..,” என்று தன்

தாயைச் சமாதானபடுத்தினாள்.

"ஆமா, இப்பத்தான் போன் பண்ணி சொன்னான். நானும் ஓய்வு எடுக்கட்டும்னு

வரவேண்டாம்னு சொல்லிட்டேன்," என்றார்.

"அம்மா, அவன் உங்களால தான் வீட்டுக்கு வரலை. ரொம்ப கவலையா என்கிட்ட

சொன்னான். என்னா பண்றதும்மா. அவனைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. இவ்வளவு நாள்
மலாக்கா மருத்துவமனையில வேலை. அங்கேயும் அவனுக்கு ஓய்வு இல்லை. இப்போ சபா
மருத்துவமனையில எந்த மாதிரி இருக்கோ தெரியலே..., சாமியெ வேண்டிக் கோம்மா. இந்த
நோய் குணமானதான் நம்ப தம்பி மாதிரி டாக்டருங்களுக்கு நிம்மதி. அது வரை ஓய்வே
இல்லைம்மா. சரி நான் அப்புறம் உங்ககிட்ட பேசுறேன் மா!," என்று தன் தம்பியின் இக்கட்டான
நிலையை வெளியுலகமே தெரியாமல் வாழ்ந்து வரும் தாயின் கண்முன்னே கொண்டு வந்தாள்.

6354/2
SULIT
SULIT 10 6354/2

"ஐயோ! அப்போ என் புள்ள எனக்காகத்தான் வரலையா?”

நேரே சாமி அறைக்கு ஓடியவர், "கடவுளே, யாரு மேலப்பா உனக்குக் கோவம்..உன்

குழந்தைகள் தானே நாங்க. எங்கள் பிழையை மன்னிச்சுடுப்பா... இந்தக் கொடிய வைரசுல இருந்து
சீக்கிரம் விடுதலை கொடுப்பா. என்னை மாதிரி எத்தனை அம்மாக்கள், மனைவி, பிள்ளைங்கள்
அவங்க சொந்தங்களுக்குக் காத்துக்கிட்டு இருக்காங்களோ…? காப்பாத்துப்பா."
----------------------------------------------------------------------------------------------------------
மறுநாள், "ஹலோ, அம்மா. நான் கிளம்புறேன். உங்க உடம்பைப் பாத்துக்கோங்க."
மற்றவர்களின் உடல் நலத்தைக் கூடவே இருந்து பார்த்தாலும் தன் வயோதிக தாயின்
நலனைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் குரலில் தெரிந்தது.

" ஐயா, பார்த்துப் போய்ட்டு வாயா. அம்மா சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன். சீக்கிரம் நிலைமை
மாறிடும். அப்புறம் வாயா. நீங்க இப்போ சாமி மாதிரி. உன் உடம்பையும் பார்த்துக்கோயா,"
மேலும் பேச முடியவில்லை சரோஜாவால்.

சிரித்துக் கொண்டே "சாமி கூம்பிட்டதெல்லாம் சரிதாம்மா. எங்கேயும் வெளியே போகாம

அரசாங்கம் சொல்லுற விசயங்களைச் செஞ்சாலே போதும்மா. வைரசைக் கட்டுப்படுத்தலாம். சரி.
போய்ட்டு வரேன்மா!" என்று தொடர்பைத் துண்டித்தார் டாக்டர் நாதன்.

(மருத்துவர்-: கண் முன்னே நடமாடும் தெய்வங்களின் குடும்பத்தினருக்கு இக்கதை சமர்ப்பணம்.)

ஆக்கம்: திருமதி சுமத்ரா அபிமன்னன்.
[சில மாற்றங்களுடன்]

11 அம்மா சரோஜாவின் கவலைக்குக் காரணம் என்ன?

_________________________________________________________________________

_________________________________________________________________________
[2 புள்ளி]

12 அ) இச்சிறுகதையில் வரும் டாக்டர் நாதனின் பண்பு நலன்களுள் இரண்டினை

அவை வெளிப்படும் சம்பவத்தோடு குறிப்பிடுக.
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
____________________________________________________________________
[4 புள்ளி]

ஆ) கீழ்க்காணும் சொற்றொடர்களின் சூழலுக்கு ஏற்ற பொருளை எழுதுக.

i) மோசமான:
____________________________________________________________________

6354/2
SULIT
SULIT 11 6354/2

ii) இக்கட்டான நிலையை:

____________________________________________________________________
[4 புள்ளி]

13 அ) “அம்மா, அவன் உங்களால தான் வீட்டுக்கு வரலை,” என்ற பவாணியின் கூற்றுக்கு

எவை காரணங்களாக அமைந்திருக்கும் என நீ கருதுகின்றாய்? இரண்டு
காரணங்களை எழுதுக.
__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________
[4 புள்ளி]

ஆ) டாக்டர் நாதனின் முடிவைப் பற்றிய உமது கருத்து என்ன?

__________________________________________________________________________

__________________________________________________________________________
[2 புள்ளி]

14 இச்சிறுகதையின் வழி எழுத்தாளர் மாணவர் சமுதாயத்திற்கு உணர்த்தும் படிப்பினைகள்

இரண்டினை எழுதுக.
__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________
[4 புள்ளி]

15 கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து, அவற்றிலுள்ள கருத்துகளைத் தொகுத்து

எழுதுக.

கதைபேசித் திரிகின்றீர் காலம் நேரம்

கருதாமல் வாழ்நாளைக் கழிக்கின் றீரே!
எதையெதையோ பேசுகின்றீர் எனினும் என்ன?
இருக்கின்ற நிலைமாற்ற நினைத்த துண்டோ?

சமுதாய நிலையெண்ணிப் பாரீர்! நும்மைச்

சாக்காட்டுக் குப்பின்னும் பாரி லுள்ளோர்
அமைவாக நினைத்திடவே வேண்டும் என்னில்

6354/2
SULIT
SULIT 12 6354/2

ஆயிரந்தொண் டாற்றிடவும் வேண்டும் நன்றே!

-கவிஞர் பொன்முடி

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________

__________________________________________________________________________
________
[10 புள்ளி]

பிரிவு இ : செய்யுளும் மொழியணியும்

[20 புள்ளி]

16 கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரைப் பொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக்

காட்டுக.

இருதலைக் கொள்ளி எறும்பு போல

________________________________________________________________________________
__

________________________________________________________________________________
__
[2 புள்ளி]
6354/2
SULIT
SULIT 13 6354/2

17 கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.

எவ்வ துறைவது உலகம் உலகதோடு

அவ்வ துறைவது அறிவு.

________________________________________________________________________

________________________________________________________________________
[2 புள்ளி]

18 கோடிடப்பட்ட செய்யுளடிகளின் பொருளை எழுதுக.

புத்திமான் பலவா னாவன் பலமுளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல.

________________________________________________________________________________
___

19 கீழ்க்காணும் சிறுகதையில் அடைப்பு இருக்கும் இடங்களுக்குப் பொருத்தமான

மொழியணிகளை எழுதவும். பத்தியை மீண்டும் எழுத வேண்டாம்.

ஐந்தாம் படிவ அரசாங்கத் தேர்வு நேற்றுதான் முடிவடைந்தது. தேர்வு முடிந்த

ஆனந்தத்தில் மிதந்திருந்தான் தேனரசன். அடுத்துத் தனது ஆசையை நிறைவேற்றும்

6354/2
SULIT
SULIT 14 6354/2

பொருட்டு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஏற்ற நேரம் வந்துவிட்டது

என்று எண்ணினான். (I இணைமொழி)

புதிய வடிவமைப்பில் கட்டப்படும் நவீன வீடுகளைப் பார்த்து மகிழ்ச்சியுறுவது

தேனரசனுக்கு மிகவும் பிடித்த செயலாகும். தான் எங்குச் சென்றாலும் அங்குள்ள
வீடுகளைப் பார்த்து அவற்றின் அமைப்பு முறைகளைப் பற்றித் தன் தந்தையுடன்
உரையாடுவான். அவரும் அவனை உற்சாகப்படுத்துவார். (II மரபுத்தொடர்) தனது
விருப்பத்திற்கேற்ப தானே ஒரு வீட்டை வடிவமைத்து அதில் தனது குடும்பத்தோடு
வாழ வேண்டும் என்று சிறுவயது முதலே அவன் முடிவெடுத்திருந்தான்.

தனது ஆசை நிறைவேற வேண்டுமென்றால், அதற்குரிய முயற்சியில்

இறங்குவதே சிறந்தது. மாறாகக் கவலைப்பட்டால் திட்டங்கள் யாவும்
நிலையில்லாமல் போய்விடும் என நினைத்தான். (III உவமைத்தொடர்) விருப்பத்தை
அடைய வழி தெரியாமல் தவிக்கும் தனக்கு வழி காட்ட ஆசிரியரைத் தவிர வேறு
யாருமில்லை (IV பழமொழி) என்ற எண்ணத்தில் அவரைப் பார்த்து ஆலோசனை
பெற விரைந்தான்.

i)
____________________________________________________________________________
______

ii)
____________________________________________________________________________
_____

iii)
____________________________________________________________________________
______

iv)
________________________________________________________________________________
__
[12 புள்ளி]

பிரிவு ஈ : இலக்கணம்

6354/2
SULIT
SULIT 15 6354/2

[20 புள்ளிகள்]

20 கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

அ. கீழ்க்காணும் சொற்குவியலில் உயிர்த்தொடர் குற்றியலுகரங்களை மட்டும்
அடையாளம் கண்டு வட்டமிடுக..

படகு பாகு உருபு

கூத்து

பரிசு அம்பு விருது

[4 புள்ளி]

ஆ. i) ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? _______________________________

[1 புள்ளி]

ii) அவற்றுள் ஏதாகிலும் இரண்டு வகையினை எழுதுக.

___________________________________________________________
___________________________________________________________
[2 புள்ளி]

21 சேர்த்தெழுதுக.

அ) ஆறு + பத்து = ____________________________________

ஆ) பத்து + ஆறு = ___________________________________

இ) ஆறு + ஆறு = ___________________________________

[3 புள்ளி]

22 கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் ஐந்து பிழைகளை மட்டும் அடையாளங்கண்டு

அவற்றைச் சரிபடுத்தி எழுதுக.

6354/2
SULIT
SULIT 16 6354/2

[பத்தியை மீண்டும் எழுத வேண்டாம், நிறுத்தக் குறிகளைப் பிழையாகக் கருதவேண்டாம்]

இன்றைய கால கட்டத்தில் பொய்ச்செய்திகள் மிகச் சாதாரணமாகச் சமூக ஊடகங்களில்

பரப்பப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இப்போது பறவிவரும் கொரொனா கிருமித்தொற்றுப்
பற்றியத் தகவல்களைக் குறிப்பிடலாம். நம் அரசாங்கமும், காட்டுத் தீயாகப் பரவும்,
இப்பொய்ச் செய்திகளை பரப்புவோருக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தும்
கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும், கடலில் கரைத்த உப்பாக, எந்தப் பலணும்
கிடைக்காமல் அல்லாடுகிறது. இந்த பொய்ச் செய்திகளால் கொரொனா கிருமித்தொற்று
பற்றி மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

விடைகள்:-

1 _________________________________ -
______________________________________

2 _________________________________ -
______________________________________

3 _________________________________ -
______________________________________

4 _________________________________ -
_______________________________________

5 _________________________________ -
_______________________________________
[10 புள்ளி]

தேர்வுத்தாள் முடிவுற்றது
KERTAS PEPERIKSAAN TAMAT

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh

…………………….. ………………………………. ………………………...........

(Cik Thivya A/P Jorie.) (Pn. Velambal A/P Muthu Pandithan) (Pn.Rasidah binti Abd Gani)
Guru Bahasa Tamil Ketua Bahasa Tamil GKMP Bahasa

6354/2
SULIT

You might also like