You are on page 1of 5

தமிழின் சிறப் பு

April 11, 2017

தாய் வாழ்க ! தாய் தந்த தமிழ் வாழ்க !

மதிப்பிற்குறிய அவைத்தலவர் அவர்களே, நீதியை நிலைநாட்ட


வந்திருக்கும் நீதிவழுவா நீதிபதிகளே, மணிக்காப்பாளரவர்களே,
அவையில் வற்றிருக்கும்
ீ பெரியோர்களே, சக மாணவ நண்பர்களே,
அனைவருக்கும் முத்தான முத்தமிழ் வணக்கத்தை சமர்ப்பித்துக்
கொள்கிறேன், வணக்கம்.

இன்று நான் ‘தமிழின் சிறப்பு’ எனும் தலைப்பில் தொண்மை தமிழின்


மான்புகளையும் தனிச் சிறப்புகளையும் எடுத்துரைக்க
விரும்புகிறேன்.

தொன்மை தமிழ், இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் கொண்ட


மொழியாக திகழ்ந்து வருகிறது. தமிழின் தொண்மையை ஆராய்ந்து
கண்டறிந்த  மொழி ஆராய்ச்சியாளர்கல் தமிழ்மொழி சுமார் 50
ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக அகல்வாராய்ச்சியின் வழி
நிருபித்துள்ளார்கள்.

முச்சங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு


மட்டுமே உண்டு. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம்,
கடைச்சங்கம் என பகுத்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். அகத்தியம்
எனும் நூல் முதற்சங்கத்தில் தோன்றிய முதல் நூலாக
கருதப்படுகிறது. தொல்காப்பியம் இடைச்சங்கத்தில் தோன்றிய
நூலாக கருதப்படுகிறது. திருக்குறள், குறுந்தொகை போன்ற நூல்கள்
கடைச்சங்க நூல்களாக கொள்ளப்படுகின்றது.

சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இருப்பிரிவுகளாக


புலவர்களால் பாடப் பட்டிருக்கின்றது. கலவு வாழ்க்கை, கற்பு
வாழ்க்கை ஆகியவற்றை அகப்பாடல்களில் நிரம்பியிருப்பதைக்
காணலாம். மன்னர் ஆட்சி முறை, வரம்,
ீ புலமை போன்றவை
புறப்பாடல்களில் வெளிபடுவதை உணரலாம். இத்தகைய
பிரிவுகளைக் கொண்டு வாழ்க்கைக்கு வேண்டிய
நற்சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் தமிழர்கள் சங்க
இலக்கியம் தொடங்கி இன்று பல பரிணாமங்களை கடந்து,
காலத்தை வென்று நிற்கிறது என்றால் இம்மொழியின் சிறப்பை
என்னவென்று கூறுவது. எனவே, தமிழை தாய்மொழியாகக்
கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மாதவம் செய்திருக்க வேண்டும்
என்றால் அது மிகையாகாது.

அவையோர்களே ! மதிப்பு சால் அறிஞர் பெருமக்களே !

தமிழ்மொழியிம் மற்றொரு சிறப்பு பற்றி உங்களுடன் பகிர்ந்து


கொள்வதில் அடியேன் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இலக்கணம்
தொண்மை தமிழுக்கு அரனாக இருந்து இம்மொழியின்
கட்டுகோப்பை சிதைக்காமல் கட்டிகாத்து வருவது குறிபிடதக்கது.
முதல் நூலான அகத்தியம் கிடைக்கபெறாத நிலையில்
தொல்காபியம் வழி நூலாக கிடைக்கப்பெற்றது
பெருமைக்கூரியதாகும்.

சபையோரே !

எழுத்து, சொல், தொடர் போன்ற சீர்மையான முறையில் இலக்கண


பகுப்புகள் செய்து கொடுத்தமை தமிழ் இலக்கண நூலின் தனிச்
சிறப்பாக கருதப்படுகிறது. அன்று, இன்று, என்றும் மாறாத
தன்மையுடையதாக இலக்கண கோட்பாடுகள் விளங்கி வருவது
மொழியின் தெளிவை நமக்குச் சுட்டுகிறது.

பிற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழி கற்பதற்கு


எளிமையானதாக கருதப்படுகிறது. எழுதுவதைப் போன்றே
உச்சரிக்கும் தன்மை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.
எடுத்துக்காட்டாக, ‘க’ என்ற வரிவடிவம் எல்லா நிலைகளிலும்
சொல்லின் முதலிலும், இடையிலும், கடையிலும் ‘க’ என்ற
ஒலியையே கொண்டிருக்கும். இதுபோன்றே தமிழில் உள்ள 246
எழுத்துகளும் ஒலிக்கப்படுகின்றன. ஒருவர் மொழியை
விரைவாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள தமிழ் பெரும்
துனையாக இருக்கும் என்று கூறினால் யாராலும் மருக்க இயலாது.
இத்தகு எளிமையும் தன்மையும் உலகத்தில் எம்மொழிக்கும்
இல்லை என்று துணிந்தே கூறலாம்.

சபையோர்களே !

இலக்கியமும் இலக்கணமும் கொண்டு காலத்தை வென்று பல்வேறு


நூற்றாண்டுகள் கடந்து இன்றும் இனிமை குறையாமல் கற்போர்
நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருந்தமிழ் சிறப்பினை
வார்த்தைகளால் சொல்ல இயலாது. இதனையே, கவிஞர் நாமக்கள்
இராமலிங்கம் அவ்ர்கள்,

‘ தமிழன் என்றொரு இனமுண்டு

அவனுக்குத் தனியொரு குணமுண்டு

அமிழ்தம் அவந்தம் மொழியாகும்

அன்பே அவனது வழியாகும் ‘

என தமிழின், தமிழரின் மான்புகளை நெகிழ்ந்து பாடியுள்ளார்.


இவ்வாறு தமிழின் சிறப்பைப் போற்றி பாடியவர்கள் எண்ணிக்கை
எண்ணில் அடங்கா. பழமையும் இனிமையும் கொண்டிருக்கும்
தமிழை நாளும் கற்றும் கற்பித்தும் பார் போற்றும் இனமாக
திகழ்வோம் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி ‘சாவிலும்
தமிழ் படித்து சாக வேண்டும் என் சம்பலும் தமிழ் மனந்து வேக
வேண்டும்’ என்று கூறிக் கொண்டு தங்களிடமிருந்து தற்காலிகமாக
விடைபெறுகிறேன்.

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

நன்றி, வணக்கம்

= சிவயாழினி தமிழ்ச்செல்வன் =

சுங்கை பட்டாணி , கெடா.


Advertisements
REPORT THIS AD
Advertisements
REPORT THIS AD

SHARE THIS:

 Twitter
 Facebook

Permalink.

POST NAVIGATION
 வாசிப்பின் பயன் (முன்னுரை)
LEAVE A REPLY

SEARCH
Search for:
RECENT POSTS

 தமிழின் சிறப்பு
 வாசிப்பின் பயன் (முன்னுரை)
 பாரம்பரிய விளையாட்டு
 உறவுக் கடிதம்
 பொழுதுப்போக்கு
ARCHIVES

 April 2017
 November 2016
 September 2016
Advertisements
REPORT THIS AD

CONTACT US
3999 Mission Boulevard,
San Diego CA 92109

1-202-555-1212

ABOUT SELA
Sela is not your typical business theme. Vibrant, bold, and clean, with lots of space for large images, it’s a
perfect canvas to tell your company’s story.
Sela is responsive, which means it adapts to any screen, providing your visitors with a great browsing
experience on any device.

NAVIGATION
 SIVAYAALINI
 About
 Contact
 Blog
 FACEBOOK
 
 TWITTER
 
 PINTEREST
 
 FLICKR
 
 INSTAGRAM

BLOG AT WORDPRESS.COM.
Close and accept
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy

You might also like