You are on page 1of 12

தேசிய வகை சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG SUNGAI KELAMAH, 73400 GEMAS,NSDK

PEPERIKSAAN AKHIR TAHUN 2021

ஆண்டிறுதி சோதனை 2021

__________________________________________________________________________________________

BAHASA TAMIL /தமிழ்மொழி ( தாள் 1)


TAHUN /ஆண்டு 5
1 மணி 15 நிமிடம்

பிரிவு அ: மொழியணிகள்
( கேள்வி 1 – 10 )
( 10 புள்ளிகள் )

1) வாக்கியத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால் தம்மால் நிலத்தில் இறங்கி வேலை செய்ய


முடியாது என அந்த விவசாயி கூறினார்.

A) பெயர் பொறித்தல்
B) தட்டிக் கழித்தல்
C) திட்ட வட்டம்
D) தொன்று தொட்டு

2) கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்


A) பெயர் பொறித்தல்
B) தட்டிக் கழித்தல்
C) திட்ட வட்டம்
D) தொன்று தொட்டு

3) கொடுக்கப்பட்ட திருக்குறளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.

தீயவை தீய பயத்தலால் தீயவை


________________________ (202)

A) மெய்ப்பொருள் காண்ப தறிவு


B) மாடல்ல மற்றை யவை
C) தீமை இலாத சொலல்
D) தீயினும் அஞ்சப் படும்

4) சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அமரன் : இந்த ஆற்றை நாம் எப்படிக் கடப்பது?


அகிலன் : என் பையில் வெட்டுக்கத்தி இருக்கிறது. சுற்றிலும்
மரங்களும் கொடிகளும் இருக்கின்றன.
மரக்கிளைகளை வெட்டி ஒரு கட்டுமரம் செய்வோம்.
துடுப்புகள் செய்வோம். ஆற்றைக் கடப்போம்.
அமரன் : ....................................................................................... என்பதை நிரூபித்து
விட்டாயே!
A) மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
B) புத்திமான் பலவான்
C) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
D) வருந்தினால் வாராதது இல்லை

5) இப்படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.


A) போகாத விடந்தினிலே போக வேண்டாம்
B) மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
C) நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
D) மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

6) சூழலுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

அம்மா : அவன் உனக்குத் தீங்கு இழைத்துப் பகைமை


கொண்டவன். மீண்டும் வந்து நட்பு கொள்கிறான்.
அவனை நம்பாதே!
முத்து : …………………………………………………… என்பதை
நினைவில்
A) போகாத கொள்கிறேன்
விடந்தினிலே அம்மா!
போக வேண்டாம்
B) மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
C) நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
D) மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்

7) சூழலுக்கேற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

மன்னர் பரமேஸ்வரா நீதிநேர்மையுடன் ஆட்சி செய்ததால் அந்நிய


வணிகர்கள் மலாக்காவில் சிரமமில்லாமல் வணிகத்தில் ஈடுபட்டனர்.

A) மன்னர்க் கழகு செங்கோன் முறைமை


B) செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
C) அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
D) பெருமையும் சிறுமையும் தாந்தர வருமே

8) கீழ்க்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடி என்ன?

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு


சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

A) உயிரினும் ஓம்பப் படும்


B) இகழ்வாரை நோவது எவன்
C) தீயினும் அஞ்சப் படும்
D) தீமை இலாத சொலல்
9) கீழ்க்கண்ட செய்யுளில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.

அடக்க முடையா ___________________ றெண்ணிக்


கடக்கக் ___________________ வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் ___________________
வாடி யிருக்குமாங் கொக்கு.
A) ரறிவிலரென், கருதவும், வருமளவும்
B) வருமளவும், ரறிவிலரென், கருதவும்
C) கருதவும், வருமளவும், ரறிவிலரென்
D) வருமளவும், கருதவும், ரறிவிலரென்

10) ‘அடக்க முடையா....’ எனும் செய்யுளடியை அருளியவர் யார்?

A) திருவள்ளுவர்
B) பாரதியார்
C) ஒளயையார்
D) உலகநாதப் பண்டிதர்

பிரிவு ஆ: இலக்கணம்
( கேள்வி 11 – 20 )
( 10 புள்ளிகள் )

11) கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

உன் அப்பா _______________ அம்மாவும் நாளை பள்ளிக்கு அழைத்து வா.

A) உம்
B) எனவே
C) அல்லது
D) ஆகவே

அ + துறை = அத்துறை

12) மேற்கண்ட புணர்ச்சிக்கு ஏற்ற இலக்கண விதியைத் தெரிவு செய்க.

A) கெடுதல் விகாரம்
B) தோன்றல் விகாரம்
C) இயல்பு புணர்ச்சி
D) திரிதல் விகாரம்
13) கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

கவியழகன் கலகலப்பானவன். ______________,


நண்பர்களைத் தேர்ந்தெடுத்தே பழகுவான்.

A) அதற்காக
B) எனினும்
C) என்றாலும்
D) அல்லது

14) பின்வரும் வாக்கியங்களில் தன்மையைக் குறிக்கும் வாக்கியம் எது?

A) காவியா அழகிய ஓவியம் வரைந்தாள்.


B) நான் சாரணர் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
C) அனைவரும் நடிப்புத் திறனை மேடையில் காட்டினர்.
D) குழந்தைகள் தேவாரப் பாடலை இனிமையாகப் பாடினர்.

15) கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை வாக்கியம் எனத் தெரிவு செய்க.

செல்வநாயகி பரதக் கலையை முறையாகக் கற்றாள்; மேடையில் சிறப்பாக


ஆடினாள்.

A) தனி வாக்கியம்
B) கட்டளை வாக்கியம்
C) செய்தி வாக்கியம்
D) தொடர் வாக்கியம்

16) கீழ்க்காணும் வாக்கியத்தில் காலியிடங்களுக்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு


செய்க.

மாணவர்கள் திடலுக்குச் சென்றனர் காற்பந்து விளையாடினர்

A) , .
B) ; .
C) : .
D) : ;

17) பின்வருவனற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

A) கரி - யானை
B) இல்லம் - மனை
C) தீ - நெருப்பு
D) கருமை - வெள்ளை

18) பின்வரும் வாக்கியத்திற்கு மிகப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

சிங்கத்திற்குப் பசி. ____________________ அஃது இரைத் தேடி காட்டினுள் திரிந்தது.

A) ஆனால்
B) மேலும்
C) ஆகையால்
D) ஏனென்றால்

19) வட்டமிடப்பட்டுள்ள நிறுத்தக்குறியைப் பெயரிடுக.

“ நீங்கள் வாங்கித் தந்த கதைப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் அப்பா,


என்றான் தரனி. ”

A) அரைப்புள்ளி
B) ஒற்றை வேற்கோள் குறி
C) முக்காற்புள்ளி
D) இரட்டை மேற்கோள் குறி

20) சரியான இணையைத் தெரிவு செய்க.

வகை உருபு
A இரண்டாம் வேற்றுமை ஐ
B முதல் வேற்றுமை கு , இல்
C மூன்றாம் வேற்றுமை அது , உடைய
D நான்காம் வேற்றுமை உருபு இல்லை

(20 புள்ளிகள்)

பிரிவு B

கேள்வி 21

அ. பின்வரும் வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை அடையாளங்கண்டு


வட்டமிடுக.

1) தம்பி கடைக்கு சென்று மிட்டாய்கள் வாங்கினான். (1 புள்ளி)

2) நாய்கள் ஓடியது. (1 புள்ளி)

3) கவிதா அலகிய ஓவியம் வரைந்தாள். (1 புள்ளி)


4) அப்பா வாழைத் தன்டை வெட்டினார். (1 புள்ளி)

ஆ. கீழே கொடுக்கப்பட்டுள்ள மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத்


தேர்ந்தெடுத்து எழுதுக.

1) எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

______________________________________________________

2) நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

______________________________________________________

நிலையற்றது என்று தெரிந்தும் அதை மனசாட்சிக்கு விரோதமாகப் பொய்


நிலைநிறுத்த முயலக்கூடாது. சொல்லக்கூடாது.

கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.


கடவுளுக்கு நிகராவார்.

(2 புள்ளி)
[6 புள்ளி]

கேள்வி 22

கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிம்மாஸ்.


மும்மொழி மேடை பேச்சுப் போட்டி
தமிழ், ஆங்கிலம், மலாய்

நாள் : 20 ஏப்ரல் 2022


நேரம் : காலை மணி 9.00
இடம் : பள்ளி மண்டபம், சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிம்மாஸ்.

விதிமுறைகள் :-
1. இரண்டாம் படிநிலை மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.
2. கொடுக்கப்படும் தலைப்பில் 3-5 நிமிடம் வரை பேச வேண்டும்.
3. மாணவர்கள் தெரிவு செய்யும் மொழிப் போட்டியை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.

பரிசு
 ஒவ்வொரு மொழியிலும் மூவர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 வெற்றியாளர்களுக்கு லங்காவி சென்றுவர விமானச் சீட்டுகள் வழங்கப்படும்.
1) இவ்விளம்பரம் எதைப் பற்றியது?

__________________________________________________________________________________________
_________________
(1 புள்ளி)

2) இவ்போட்டியில் எந்தப் படிநிலை மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்?

__________________________________________________________________________________________
_________________
(2 புள்ளி)

3) இப்போட்டியில் பங்கேற்பதால் மாணவர்கள் அடையும் நன்மைகள் யாவை?

i)________________________________________________________________________________________
________________

ii)________________________________________________________________________________________
_________________
(2 புள்ளி)

[ 5 புள்ளி ]

கேள்வி 23

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுது.

1) மேற்காணும் இப்படம் உணர்த்தும் சிக்கல் யாது?

__________________________________________________________________________________
_________________
(1 புள்ளி)

2) இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்ன?


__________________________________________________________________________________
_________________
(2 புள்ளி)

3) இச்சிக்கலினால் ஏற்படும் விளைவுகளை எழுதுக.

i) _________________________________________________________________________
_________________________________________________________________________
______________________________

ii) _________________________________________________________________________
_________________________________________________________________________
_____________________________

(2 புள்ளி)

[ 5 புள்ளி ]

கேள்வி 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைநடைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக.

அவைத் தலைவர் அவர்களே! ஆசிரிய ஆசிரியர்களே! பெற்றோர்களே! அனைவருக்கும் என்


வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவையினரே,
இன்று கனிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வெளிநாட்டுக் கனிகள் தான். அதுவும்
வைட்டமின் ‘சி’ என்றால் ஆரஞ்சுப் பழம் தான் நினைவில் தோன்றும். ஆனால், வைட்டமின் ‘சி’யின்
களஞ்சியமாக விளங்கும் கொய்யா நம் நினைவுக்கு வருவதில்லை.
கொய்யாக் கனியில் ஆரஞ்சை விட நான்கு மடங்கு உயிர்ச்சத்து ‘சி’ மிகுந்துள்ளது. அதே
வேளையில் உயிர்ச்சத்து ‘பி’ அதிக அளவில் உள்ளது. எலுமிச்சையும் ஆரஞ்சும் சேர்த்தால்கூட
கொய்யாவில் உள்ள உயிர்ச்சத்து ‘பி’க்கு இணையாகாது. கொய்யாவிலுள்ள உயிர்ச்சத்து தோலைப்
பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் தோல் நோயிலிருந்து விடுபடவும் உதவுகிறது. சளி, தடுமன்
போன்ற நோய்கள் ஏற்பட்டாலும் தடுக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கொய்யாவை யாரும் அணுகுவதில்லை. அதிக விலை
கொடுத்து ஆரஞ்சு வாங்குவதில் தான் அதிகம் விருப்பம் கொள்கின்றனர். இதற்கு வெளி நாட்டுப்
பழங்களின் மீது இருக்கும் மோகமும் ஒரு காரணம். இதனால்,விலை குறைவாக இருந்தாலும் யாரும்
உள்நாட்டுக் கனிகளை வாங்குவதில்லை.
நம் நாட்டுப் பழமான கொய்யாவை வீட்டுக்குப் பக்கத்தில் நடலாம். அதிகப் பாதுகாப்பு தர
வேண்டிய அவசியமும் இல்லை. நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு வெளிநாட்டுக் கனி
வகைகளைப் பயிர் செய்வதே பொருந்தி வராது. ஆகவே, நம் நாட்டுப் பழங்களை வாங்குங்கள்
என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி.

1) கொய்யாக்கனியை உண்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.

___________________________________________________________________
(2 புள்ளி)
2) ‘பொருந்தி வராது’ எனும் சொற்றொடருக்கு மிகப் பொருத்தமான பொருளுக்கு ( / )
குறிப்பிடுக.
I. சிறப்பை அளிக்காது ( )
II. ஏற்புடைய ஆகாது ( )
III. பலனைத் தராது ( )
(2 புள்ளி)

3) கொய்யாக்கனியில் உள்ள உயிர்ச்சத்து ‘பி’ எம்மாதிரியான நோயிலிருந்து விடுபட


உதவுகிறது?

____________________________________________________________________________
______________
( 1 புள்ளி)
4) உள்நாட்டுப் பழங்கள் அதிக அளவில் விற்பனை ஆகாததன் காரணம் என்ன?

____________________________________________________________________________
______________
( 2 புள்ளி)

[ 7 புள்ளி ]
கேள்வி 25
கீழ்க்காணும் சிறுகதையை வாசித்து, பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

“சிவா அப்படிக் கல் எறிஞ்சி விளையாடாதே! ஆபத்துடா...” என்று அகிலன் கத்தியும் சிவா
கேட்பதாக இல்லை.

மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து கற்களை மேலே எறிந்து


கொண்டிருந்தான். சிவாவும் அகிலனும் எப்பொழுதும் அவர்களின் வசிப்பிடத்தின் அருகில்
இருக்கும் கம்பத்துத் திடலில் விளையாடச் செல்வார்கள். விளையாடிவிட்டு மீதி இருக்கும் நேரத்தில்
அங்குள்ள மாமரத்தின் மேலே ஏறி காற்று வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதுவும் அகிலனுக்குக்
குருவிகளை வேடிக்கை பார்க்க மிகவும் பிடிக்கும்.

“சிவா! வா வீட்டுக்குப் போகலாம். இருட்டற மாதிரி இருக்கும். நீ கல்லுலாம்


விளையாடத்தான் மரத்துல ஏறனீயா?” என்று அகிலன் மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும்
சிவாவை நோக்கிக் கூச்சலிட்டான்.

“அகி! இப்ப இந்தக் கல்லை வீசறேன் பாரு...” என்று கூறியவாறே சிவா பலம் கொண்டு
ஒரு கல்லைத் தூக்கி வீசினான். அது திசை மாறி ஒரு கம்பத்து வீட்டின் கூரையின் மீது விழுந்தது.

“ஐயோ! சிவா, என்ன காரியம்டா செஞ்சே? சொன்னேன் கேட்டீயா?” என்று அவ்வீட்டைப்


பார்த்தவாறே கத்தினான் அகிலன். அதற்குள் சிவா சட்டென மரத்திலிருந்து கீழே இறங்கிப்
புதருக்குள் பதுங்கினான்.

“நீ இங்கயே இரு. நான் போய் பாக்கறேன்,” எனக் கூறிவிட்டு அகிலன் கல் விழுந்த
அவ்வீட்டை நோக்கி ஓடினான். சிவா பயத்தால் சூழ்ந்திருந்தான்.

“இன்னிக்கு அடி எனக்கா? இல்ல சிவாவுக்கா? பயமா இருக்கே... ஹலோ யாராவது


இருக்கீங்களா? மன்னிச்சிருங்க...” என்று கூவிக்கொண்டே அகிலன் அவ்வீட்டின் முன் வந்து
நின்றான்.

கதவில் ஏதோ எழுதியிருந்தது. ஆனால், பலநாள் மழையில் நனைந்து எழுத்தெல்லாம்


அழிந்திருந்தன. ஒரு சிட்டுக்குருவி வீட்டின் கூரையில் வந்தமர்ந்துவிட்டு மீண்டும் பறந்து சென்றது.

“ஹலோ! அண்டி! யாரும் இருக்கீங்களா?” மீண்டும் அகிலன் கூவினான்.

“என்ன தம்பி ஆள் இல்லாத வீட்டுல வந்து யாரையோ கூப்டிகிட்டு இருக்க?” என்கிற குரல்
பின்னாலிருந்து ஒலித்ததும் அகிலனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
-கே.பாலமுருகன்

1. அகிலனும் சிவாவும் எப்பொழுதும் எங்கு விளையாடச் செல்வார்கள்?

____________________________________________________________________________
__________
(2 புள்ளி)
2. அகிலன் ஏன் மரத்தில் ஏற ஆர்வம் கொள்வான்?
____________________________________________________________________________
___________
(1 புள்ளி)
3. சிவா புதருக்குள் பதுங்க காரணம் என்ன?

____________________________________________________________________________
___________
(2 புள்ளி)
4. அகிலனிடம் காணப்படும் நற்குணம் என்னவென்று நீ நினைக்கிறாய்?

____________________________________________________________________________
___________
(2 புள்ளி)

[ 7 புள்ளி ]

You might also like