You are on page 1of 37

BENGKEL

TEKNIK MENJAWAB BAHASA TAMIL


TINGKATAN 1 – KUMPULAN GALUS

வணக்கம்
படிவம் 1 ன் தமிழ்மொழி (33)
மாதிரி வினாக்கள் ...
BAHAGIAN A
 புறவயக் கேள்விகள்- செய்யுளும் மொழியணிகளும் [20 புள்ளி]

கீழ்க்காணும் வினாக்களுக்கு A,B,C,D எனும் நான்கு தெரிவுகள்

கொடுக்கப்பட்டுள்ளன. தூண்டல் பகுதி கொடுக்கப்பட்டிருந்தால் அதிலுள்ள

விவரங்களைக் கூர்ந்து கவனித்து வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.

 கேள்வி 1 முதல் 3 வரை - இரட்டைக்கிளவி


கேள்வி 4 முதல் 6 வரை - இணைமொழி
கேள்வி 7 முதல் 9 வரை - உவமைத்தொடர்
கேள்வி 10 முதல் 12 வரை - மரபுத்தொடர்
கேள்வி 13 முதல் 15 வரை - பழமொழி
கேள்வி 16 முதல் 18 வரை - திருக்குறள்
கேள்வி 19 முதல் 20 வரை - செய்யுள்
இணைமொழி

உவமைத்தொடர்

மரபுத்தொடர்

பழமொழி

இரட்டைக்கிளவி
செய்யுளும் திருக்குறளும்
கேள்வி 1 முதல் 3 வரை இரட்டைக்கிளவி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான
விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

அத்தியாவசிய பொருள்கள் திடீரென விலையேற்றம் கண்டதால் மக்கள் சிரமத்தை


எதிர்நோக்குகின்றனர்.

A கடகட B சடசட
C கிடுகிடு D விறுவிறு

கேள்வி 4 முதல் 6 வரை இணைமொழி தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான


விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

தோட்டத்தில் ____________________ இருந்த பூச்செடிகளுக்குத் தாத்தா நீர்


பாய்ச்சினார்.

A நாணிக் கோணி B வாடி வதங்கி


C அகமும் புறமும் D சட்ட திட்டம்
கேள்வி 7 முதல் 9 வரை உவமைத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் புதுமணத் தம்பதிகளை


___________________ இணைப்பிரியாமல் வாழவேண்டுமென வாழ்த்தினர்.

A பசுமரத்தாணி போல
B அழகுக்கு அழகு செய்வது போல
C மணியும் ஒலியும் போல
D இலைமறை காய் போல
கேள்வி 10 முதல் 12 வரை மரபுத்டொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

எப்பொழுதும் பாடங்களைச் செய்யாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக்


கண்டு களித்த குமரனின் செயலை அவனுடைய அம்மா கடுமையாக
________________.

A அளவளாவினார் B இடித்துரைத்தார்
C பாட்டு வாங்கினார் D தலை வணங்கினார்
கேள்வி 13 முதல் 15 வரை பழமொழித் தொடர்பான வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

கோடிட்ட இடத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

_____________ என்பது போல முரளிதரன் கணினி விளையாட்டில் அதிகம்


ஈடுபட்டாலும் இவ்வாண்டு பி.தி 3 தேர்வில் 10 ஏக்கள் பெற வேண்டுமென்று
அயராது படித்தான்.

A ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு


B அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
C கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
D இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
கேள்வி 16 முதல் 18 வரை திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு


செய்க.
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

A கோபம் ஒருவரை வாழ வைக்கும்.


B கோபம் ஒருவரை அழ வைக்கும்.
C கோபம் ஒருவரை அழிக்கும்.
D கோபம் ஒருவரின் புகழை அழிக்கும்.
கேள்வி 19 முதல் 20 வரை செய்யுள் தொடர்பான வினாக்களுக்கு மிகச்
சரியான விடையைத் தெரிவு செய்க.

மாதிரி வினா:

கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.

எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு


__________________________________
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.

A மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்


B மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
C வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
D மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

• (தூண்டல், சூழல்,உரையாடல்)
Bahagian B
(20 நிமிடம்)

பிரிவு அ : இலக்கணம் [20 புள்ளி]

 எழுத்தியல்

 சொல்லியல்

 புணரியல்

 வலிமிகும் இடங்கள்

 வலிமிகா இடங்கள்

 பிழையாய்வு
எழுத்தியல்

சுட்டெழுத்துகள் இரண்டு வகைப்படும். அவற்றைப் பட்டியலிடுக.

அ) _____________________

ஆ) _____________________
(2 புள்ளி)

சொல்லியல்
கீழ்க்காணும் சொற்குவியலில் காணப்படும் இடுகுறிப்பெயர் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) _____________________ இ) _______________________

ஆ) _____________________ ஈ) ________________________

(4 புள்ளி)
புணரியல்

சரியான புணரியல் வகையோடு இணைத்திடுக.

திரிதல் விகாரம் பூவரும்பு

யகர உடம்படுமெய் கூலியாள்

கெடுதல் விகாரம் கற்கண்டு

வகர உடம்படுமெய் காரவடை

(4 புள்ளி)
வலிமிகும் இடங்கள் & வலிமிகா இடங்கள் / பிழையாய்வு

கீழ்க்காணும் வாக்கியங்களில் காணப்படும் பிழைகளை அடையாளங்கண்டு வட்டமிடுக.

அ) தொழிலாளிகளிடம் பாதிபணம் மட்டுமே வழங்கியதால் அவர்கள் வேலையை


முடிக்கவில்லை.

ஆ) பின்வரும் கவிதைகளில் எவை சிரந்தவை என ஆசிரியர் கேட்டார்.

இ) முக்கனிகளுள் பலாபழமும் ஒன்று.

ஈ) மற்ற தலைவர்கள் அனைவரும் மாநாட்டிற்குப் புறப்பட்டு விட்டார்கள்.

(4 புள்ளி)
வாக்கிய வகைகள்

அ) செய்தி வாக்கியம் ஒன்றை எழுதுக.

____________________________________________________________________ (2 புள்ளி)

ஆ) கீழ்க்காணும் சரியான வேண்டுகோள் வாக்கியத்திற்கு (/) என


அடையாளமிடுக.

1. பல்லாண்டு வாழ்க! ( )

2. பாடம் படித்து வா. ( )

3. எனக்கு விரலியை இரவல் தருக. ( )

(2 புள்ளி)
Bahagian C
(15 நிமிடம்)
பிரிவு ஆ : கருத்துணர்தல் (பல்வகை)
[15 புள்ளி]
 அறிவிப்பு / அழைப்பிதழ் / பதாகை
 தமிழ்ச்சார்ந்த தமிழ்ச்சான்றோர்/படைப்பாளிகள்/சாதனையாளர்கள்
 விளம்பரம்
 பொன்மொழிகள் / முதுமொழிகள்
 மரபுக்கவிதை / புதுக்கவிதை / உரைவீச்சு
 கருத்துப்படம்
 சின்னங்கள் / குறியீடுகள்
 குறிவரைவு / வரிப்படம் / விளம்பரம்
 சிறு உரைநடைப்பகுதி
பொன்மொழி
நரம்பில்லா நாவிற்குப் பிறரைக்
காயப்படுத்தும் வலிமையுண்டு!

மேற்காணும் முதுமொழி உணர்த்தும் கருத்து யாது?

___________________________________________________________ (2 புள்ளி)
கருத்துப்படம்

மறைகாணி / இரகசிய காமிரா

மேற்காணும் வளாகத்தில் இக்கருவி எப்படி உதவும் என நீ


நினைக்கிறாய்?

_________________________________________________________ (2
புள்ளி)
ஆசிரியர் சுப.கலைமுகிலன் அவர்களின்
பதாகை தலைமையில்

‘நினைவாற்றலை வளப்படுத்துவோம்’
பயிலரங்கம்

முதற்சலுகை :
இவ்வாண்டு தேர்விற்கு அமரும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு

முற்றிலும் இலவசம்

நாள் : 16 மார்ச்சு 2019


நேரம் : இரவு 7.45
இடம் : சவிரா கிளாப், செபராங் ஜெயா, பட்டர்வொத்

இந்நிகழ்வில் பங்குபெறும் மாணவர்கள் அடையும் நன்மை யாது?

___________________________________________________________ (2 புள்ளி)
அழைப்பிதழ்
பல்நோக்கு மண்டப
அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்

இனி, தமிழ்ச்சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இலவசம்.....

நாள் : 02.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)


நேரம் : காலை மணி 10.00க்கு
இடம் : தமிழ்ச்சோலை தோட்டம்
ஏற்பாடு : இளைஞர் மணிமன்றம், பாரிட் பெசார்.

மேற்காணும் அழைப்பிதழின் நோக்கம் யாது?

___________________________________________________________ (2 புள்ளி)
புதுக்கவிதை பெற்றெடுத்த அன்னையைப்போல்
பெருந்தெய்வம் வேறேது?
வற்றாத அவளன்பில்
மாசு கிடையாது...

இக்கவிதை உணர்த்தும் கருத்து யாது?


________________________________________________________ (2 புள்ளி)

மரபுக்கவிதை
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

பாரதிதாசன்

கவிதையில் கோடிடப்பட்ட வரி உணர்த்தும் கருத்து யாது?


________________________________________________________ (2 புள்ளி)
குறிவரைவு
மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் இறப்புகளும்

டிங்கிக் காய்ச்சல் ஆண்டுதோறும் அதிகரிப்பதற்கான காரணம் யாது?

___________________________________________________________________________
___________________________________________________________________________
__ (2 புள்ளி)
___________________________________________________________________________
_
சிறு உரைநடைப்பகுதி

கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

தமிழை ‘முத்தமிழ்’ என்று அழைப்பர். இயல், இசை, நாடகம் என முத்தமிழைப் பகுத்துள்ளனர்.


இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும்.
நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். இது உளநூற் அறிஞர்களின் கருத்து. இதை
நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

அ) தமிழுக்கு _______________________ எனப் பெயர் உண்டு. (1 புள்ளி)

ஆ) உளநூற் அறிஞர்களின் கருத்துகளுள் ஒன்றனை எழுதுக. (2 புள்ளி)

___________________________________________________________________

இ) தமிழிசை கற்பதன் அவசியத்தை எழுதுக.

i)___________________________________________________________________
___________________________________________________________________

ii)___________________________________________________________________
___________________________________________________________________ (4 புள்ளி)
Bahagian D
(20 நிமிடம்)
பிரிவு இ: கருத்துரைத்தல்
(15 புள்ளி)

அல்லது
Bahagian D
(20 நிமிடம்)
பிரிவு இ: தொகுத்தல்
(15 புள்ளி)

ஏதாகிலும் ஒன்று மட்டுமே கேள்வியாகக் கேட்கப்படும்


கருத்துரைத்தலுக்கான வரைமானம்

 பத்தியில் 4 கருத்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


 அவற்றுள் ஏற்படுவற்கான காரணங்கள், விளைவுகள் (நன்மை, தீமை), பாதிப்புகள், தடுக்கும்
நடவடிக்கைகள், பரிந்துரை போன்ற இன்னும் பல.
 தூண்டலுக்கு ஏற்புடைய கருத்துகளாக இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம்.
 எழுதிய கருத்தையே மீண்டும்2 எழுதக்கூடாது.

(இ) சொற்கள் வரையறை

 எதிர்பார்ப்பு 50 சொற்களுக்குள் எழுதியிருக்க வேண்டும்.


 விடை / படைப்பு ஒரே பத்தியில்இருத்தல் வேண்டும்.
 முன்னுரையோடு சேர்த்து மொத்தமாக 5 கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒருவேளை,
மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 60 சொற்களுக்குள் 5 கருத்துகளுக்கு மேல்
எழுதியிருந்தாலும் பாதகமில்லை.
 கூடுதலாக படைப்பு/விடை 10 சொற்கள் அதிகரிக்கலாம்.
 மாணவர் படைப்பில் 60க்கு மேற்போகும் சொற்களைத் திருத்த வேண்டாம்.
படிவம் 1 – 1.5.1 – குறிவரைவைக் கருத்துரைத்தல்
காட்டு : கீழ்க்காணும் குறிவரைவையொட்டி 50 சொற்களில் கருத்துரைத்திடுக.

மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் இறப்புகளும்

லேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் இறப்புகளும்


இறப்புகளும்
மாதிரி விடை :

மேற்காணும் குறிவரைவு மலேசியாவில் டிங்கிக் காய்ச்சலும் மற்றும்


அதன் இறப்புகளும் பற்றிய தகவலைக் காட்டுகிறது.(முன்னுரை-2பு).
இன்று நாட்டில் சில இடங்களில் தொடர்ந்து டிங்கிக் காய்ச்சல்
அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. (க1) இதற்கு மக்களின்
பொறுப்பின்மையே காரணம் எனலாம். (க2) வீட்டைச் சுற்றி
தேங்கியிருக்கும் நீரால் டிங்கிக் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. (க3)
மேலும், நீர் தேங்கியிருக்கும் காலி டின்கள், போத்தல்கள், டயர்களிலும்
இவை முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. (க4) டிங்கிக்
காய்ச்சலில் கவனக்குறைவாக இருந்து விட்டால் உயிரிழப்பு ஏற்படும்.
(க5) அரசாங்கம் தற்பொழுது இச்சிக்கலைத் தடுப்பதற்குத் தகுந்த
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. (முடிவுரை-2பு)

(58 சொற்கள்)
தொகுத்தலுக்கான வரைமானம்

படிவம் 1 – 3.3.1 – அட்டவணையில் காணும் தகவல்களைத் தொகுத்தல்


படிவம் 2 – 3.3.2 – குறிவரைவில் காணும் தகவல்களைத் தொகுத்தல்
படிவம் 3 – 3.3.3 – வரிப்படத்தில் காணும் தகவல்களைத் தொகுத்தல்
படிவம் 3 – 3.3.4 – விளக்கப்படத்தில் காணும் தகவல்களைத் தொகுத்தல்

கருத்து : 10 புள்ளி
மொழி : 5 புள்ளி (வரைமானம் காண்க)

மொத்தம் : 15 புள்ளி

கருத்து : 10 புள்ளிக்கான வரைமானம்

(அ) முன்னுரை : 2 புள்ளி (தலைப்பை/கருவை மையப்படுத்தி எழுதியிருத்தல்)


(ஆ) தெரிநிலை கருத்து

தூண்டல் பகுதியையொட்டி நேரடி கருத்து


தேர்வர் ஏதாகிலும் பொதுவான தன் கருத்தினை தூண்டலிலிருந்து எடுத்து
எழுதுவர்.

(இ) புதைநிலை கருத்து

தூண்டல் பகுதியையொட்டி புதைநிலை கருத்து


தேர்வர் சுயமாக தூண்டல் பகுதியையொட்டி கருத்துரைப்பர்.

 அவற்றுள் தெரிநிலையும் புதைநிலையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்


 3 கருத்துகளும் தெரிநிலையாக/புதைநிலையாக இருப்பின் 2 புள்ளி
குறைக்கப்படும்.

(ஈ) முடிவுரை – பரிந்துரை/எதிர்பார்ப்பு/சுயகருத்து – 2 புள்ளி (1 கருத்து)


(ஈ) சொற்கள் வரையறை

 எதிர்பார்ப்பு 50 சொற்களுக்குள் எழுதியிருக்க வேண்டும்.

 விடை / பத்திப் பிரித்து எழுத வேண்டும். (முன்னுரை, தெரிநிலை


கருத்து, புதைநிலை கருத்து, முடிவுரை என பிரித்து எழுதப்பட
வேண்டும்.

 மொத்தமாக 5 கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒருவேளை,


மாணவர்கள் 60 சொற்களுக்குள் 5 கருத்துகளுக்கு மேல்
எழுதியிருந்தாலும் பாதகமில்லை.

 கூடுதலாக படைப்பு/விடை 10 சொற்கள்அதிகரிக்கலாம்.


கீழ்க்காணும் வரிப்படத்தையொட்டி 50 சொற்களில் தொகுத்து எழுதுக.

ஒருவருக்கொருவர் ஒன்றாக அமர்ந்து உணவு


விட்டுக் கொடுத்து உண்பது
மரியாதை அளிப்பது

குடும்ப உறவை
வலுப்படுத்தும்
முறைகள்

சிக்கல்களைக் கலந்து அடிக்கடி குடும்ப


ஆலோசித்து உறவுகளுடன் ஒன்று
முடிவெடுப்பது கூடுவது
மாதிரி விடை:

மேற்காணும் வரிப்படம் குடும்ப உறவை வலுப்படுத்தும் முறைகளை


விவரிக்கின்றது. (முன்னுரை -2பு)

குடும்ப உறவை வலுப்படுத்த நாம் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து


உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.(தெ.க1-2பு)
குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை ஒன்றாக அமர்ந்து
கலந்தாலோசித்து முடிவெடுப்பது மிகச் சிறந்த பண்பாகும்.(தெ.க2-
2பு)

குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தைச் செலவிடாமால் இருப்பதால்


அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படுகிறது.(பு.க1-2பு)
அடிக்கடி குடும்பங்களில் சண்டைச் சச்சரவுகள் ஏற்படுவதற்கும்
இந்நிலையே காரணமாகின்றது.(பு.க.2-2பு)

எனவே, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கொப்ப


ஒற்றுமையாக வாழ அனைவரும் முற்பட வேண்டும்.(முடிவு-2பு)
Bahagian E
(35 நிமிடம்)

பிரிவு ஈ : படைப்பாக்கம்
(30 புள்ளி)

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி


180 சொற்களில் ஓர் எழுத்துப்படிவத்தை எழுதுக.

திறந்தமுடிவு கட்டுரை
அ) இணையம்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

அமைப்புக் கட்டுரை
ஆ) நீ புதிய வீட்டிற்குக் குடிப்புகுந்துள்ளாய். உனக்குப் புதிய வீட்டில் ஏற்பட்ட
அனுபவத்தைப் பற்றி உன் நண்பனுக்கு ஒரு நட்புக் கடிதம் எழுதுக.

கற்பனைக் கட்டுரை அல்லது கதை எழுதுதல் (ஏதாகிலும் ஒன்று மட்டும்தான்)


இ) ‘நான் ஒரு தொழிலதிபரானால்’ இத்தலைப்பில் ஒரு கற்பனைக் கட்டுரை
எழுதுக.
கேள்வி 3

கேள்வி 3
கனவு
இத்தலைப்பில் ஒரு கதை எழுதுக.

அல்லது

கேள்வி 3

கீழ்க்காணும் குறிப்புகளின் துணையுடன் ஒரு கதை எழுதுக.

வேந்தன் - படிவம் 3 - பேரங்காடியில் சுற்றித் திரிதல் - பகடிவதை -


வன்முறை - பிடிபடுதல் - பெற்றோருக்குத் தெரிவித்தல் - மனம்
கலங்குதல் - மனம் மாறுதல்
கேள்வி நேரம்...
நன்றி

You might also like