Professional Documents
Culture Documents
ஏ டூ இஸட் தகவல்கள் - 83
ஏ டூ இஸட் தகவல்கள் - 83
வணக்கம் வாசகர்களே.
இந்த அத்தியாயத்தில், நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில்
இதுதான் கடைசி நட்சத்திரம். அதாவது 27 வது நட்சத்திரம். ரேவதி நட்சத்திரம் புதனின் மூன்று
நட்சத்திரங்களில் ஒன்று. இந்த நட்சத்திரம் மீன ராசியில் முழுமையாக இடம் பெற்றிருக்கக் கூடிய
நட்சத்திரம். பரிபூரண சுப நட்சத்திரம் என்று ரேவதி நட்சத்திரத்தைச் சொல்லுவார்கள்.
அது மட்டுமல்ல... இதே ரேவதி நட்சத்திரத்தில்தான் நம்முடைய விதிகளை, விதிப் பயன்களை, பூர்வ
புண்ணியங்களை... கணக்கிட்டு நம் ஆயுளை கண்காணிக்கும் சனீஸ்வர பகவான் பிறந்தார். நாம்
எல்லோரும் நினைப்பது போல் சனீஸ்வர பகவான் ஆயுளை எடுப்பவர் என்றே நினைத்துக்
கொண்டிருக்கிறோம். அவர் ஆயுளைக் காப்பாற்றுபவர். நம்முடைய கர்ம வினைகள் முடிந்துபோவதற்கு
முன்னதாக, நாம் இறந்து போகாமல் நம்மைக் காப்பாற்றக் கூடியவர் சனீஸ்வர பகவானே! எனவேதான்
இவர் ஆயுள்காரகன் என்று சொல்லப்படுகிறார். அதாவது, நம் கடமை முடியும் வரை, கடன் அடையும்
வரை, கர்மா நிறைவுறும் வரை ஆயுளைக்காப்பவர். ஆயுளை முடிப்பவர் இல்லை அவர்!
நம்முடைய கர்மவினைகளை முழுமையாகக் கரைத்து, நம்முடைய விதிப்பயன் முடிந்ததும் நமது
கர்மாவை, நமது ஆன்மாவை ரேவதி எனும் மகா விஷ்ணுவின் திருப்பாதத்தில் கொண்டு சேர்க்கும்
வேலையை சனீஸ்வர பகவான் செய்கிறார். அதனால்தான் சனீஸ்வர பகவான் ரேவதி நட்சத்திரத்தில்
அவதரித்தார்.
ரேவதி நட்சத்திரம் குறித்து இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.