You are on page 1of 2

தொகுதி 1 : அறிவியலும் நாமும்

பாடம் 1 : இயற்கையை நேசிப்போம்

செவிடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளையொட்டிக் கருத்துகளைக் கூறுக.

அதிகளவு மழைப் பொழிவைப் பெறும் காடுகளை


மழைக்காடுகள் என்று அழைக்கிறோம்.
இக்காடுகளில் மரங்கள் உயரமாகவும், அடர்ந்த
இலைகளுடனும் காணப்படுகின்றன. உலகில்
உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை
இக்காடுகளில் வாழ்கின்றன.
உலகின் உணவுக் கிடங்காக மழைக்காடுகள்
திகழ்கின்றன. உலகில் உள்ள உயிர்வளியில் 20
விழுக்காட்டினை இக்காடுகள் வழங்குகின்றன.
உலகில் உள்ள மருந்துகளில் 25 விழுக்காடு
இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும்.
இக்காடுகளைப் பாதுகாக்க நாம் சுற்றுச்சூழலுக்குத்
தீங்கு விளைவிக்காத பொருள்களைப்
பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிப்பதை
முற்றிலும் தடை செய்ய வேண்டும். மக்களிடையே
விழிப்புணர்வு வருவதற்காக பசுமைத் திட்டம்
வழியுறுத்தப்படுகிறது. மழைக்காடுகளைப்
பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை
அனைவரும் உணர வேண்டும்.
‘ இயற்கையை நேசிப்போம்

அடைந்தார்

அடையவில்லை

ஆசிரியர் கையொப்பம் : _________________________

ஆசிரியர் குறிப்பு : __________________________________________________________

___________________________________________________________________________
தொகுதி 1 : அறிவியலும் நாமும்
பாடம் 2 : விந்தை உலகம்

கருத்துணர் கேள்விகளுக்கு விடையளித்திடுக.

மாற்று சக்தி மூலங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்
உள்ளன. முதல் காரணம் பூமியில் உள்ள நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற இயற்கை சக்தி மூலங்கள்
குறைந்து வருவது. இரண்டாவது காரணம் இயற்கை சக்தி மூலங்களைப் பயன்படுத்துவதால்
தூய்மைக்கேடு ஏற்படுகிறது.

நாம் பயன்படுத்தும் வகையில் மாற்று சக்தி மூலங்கள் நிறையவே உள்ளன. காற்று சக்தி, சூரிய
சக்தி, புவிவெப சக்தி, நீர் சக்தி போன்றவை அவற்றுள் சில. காற்று சக்தி என்பது பெரிய
காற்றாலைகளின் உதவியோடு காற்றை ஒருமுகப்படுத்தி பெரிய விசையாழிகளைச் சுழலச் செய்து
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகள் உள்ள இருக்கும் இடங்களில் விவசாயம்
செய்யலாம். காற்றாலைகள் நன்முறையில் இயங்க காற்று பலமாக வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.
காற்றின் வேகம் குறையும்போது மின்சார உற்பத்தியும் குறையும்.

You might also like