You are on page 1of 16

செய்யுளும் மொழியணியும்

ஆண்டு 5
கோ. ஞானகுரு
க. கணேந்திரன்
ப. உமாமகேஸ்வரி
4.0 செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
4.4 உலகநீதியின் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர். 4.4.3 ஐந்தாம் ஆண்டுக்கான உலகநீதியின் பொருளை
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.5 வெற்றி வேற்கையின் பொருளை அறிந்து கூறுவர்; 4.5.2 ஐந்தாம் ஆண்டுக்கான வெற்றி வேற்கையின்
எழுதுவர். பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.6 திருக்குறளின் பொருளை அறிந்து கூறுவர்; 4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளின் பொருளை
எழுதுவர். அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.7 மூதுரையின் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர். 4.7.2 ஐந்தாம் ஆண்டுக்கான மூதுரையின் பொருளை
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.8 பல்வகைச் செய்யுள்களின் பொருளை அறிந்து 4.8.3 ஐந்தாம் ஆண்டுக்கான பல்வகைச் செய்யுளின்
கூறுவர்; எழுதுவர். பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.
4.9 இணைமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் 4.9.5 ஐந்தாம் ஆண்டுக்கான இணைமொழிகளின்
பயன்படுத்துவர். பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4.10 உவமைத்தொடர்களின் பொருளை அறிந்து 4.10.3 ஐந்தாம் ஆண்டுக்கான உவமைத்தொடர்களின்
சரியாகப் பயன்படுத்துவர். பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4.11 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் 4.11.5 ஐந்
தாம்ஆண ் டு
க்கான இரட் டைக் கி ளவி
களைச்
பயன்படுத்துவர். சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
4.12 மரபுத்தொடர்களின் பொருளை அறிந்து சரியாகப் 4.12.5 ஐந்தாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களின்
பயன்படுத்துவர். பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4.13 பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் 4.13.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளின்
பயன்படுத்துவர். பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
 

உலக நீதி
• மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

• மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

• மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.

• பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.

• தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்.

• செல்வத்தைத் தேடி, அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்கக் கூடாது.

• தருமத்தை யொருநாளும் மறக்க கூடாது.

• அறம் செய்ய ஒரு போதும் மறக்க கூடாது.

• சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

• கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது.

• சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

• கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்.


வெற்றி வேற்கை

• அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.


அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசனும் விரும்புவார்.
• மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
• செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
பணக்காரர்களுக்குச் சிறப்பு, சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
 
திருக்குறள்

• அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு


என்புதோல் போர்த்த உடம்பு
அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள்.
அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக்
கருதப்படுகின்றது.
• காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன்
தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக்
கருதப்படும்.
• தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீயச்செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையனவாக இருக்கின்றன.
ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச
வேண்டும்.
• ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவதற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்து வரக்கூடிய ஏழு
பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
• கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக்
கருதப்படாது.
• எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எந்தப் பொருளைப்பற்றி யார் யார் எப்படி எப்படியெல்லாம் சொன்னாலும் அவற்றைக்
கேட்டு அவற்றுள் எது உண்மை என்பதைக் கண்டறயச் செய்வதுதான் அறிவு.
• மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு
நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
• வாய்மை எனப்படும் யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத
சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
பழமொழி
• ஆழம் அறியாமல் காலை விடாதே
நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராந்த பிறகே அச்செயலில் ஈடுப்பட வேண்டும்.
• ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுப்பட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க
முடியாது.
• தீட்டின மரத்திலே கூரி பார்ப்பதா?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.
• நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.
• புத்திவான் பலவான்
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
• மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும்
தானாகப் பிறக்கும்.
• வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
• வெள்ளம் வருமுன் அணைபோடு
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ
இடர்களையோ தவிர்க்கலாம்
• வருந்தினால் வாராதது இல்லை
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
• நிறைகுடம் தளும்பாது
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்து
கொள்வர்.
மூதுரை

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு
கொக்கானது வாய்க்காலில் ஓடிகிற சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, அவற்றைப்
பிடிக்க எண்ணாமல் பெரிய மீன்கள் வரும்வரையும் அடங்கிக் காத்திருக்கும். அதைப்
போன்று அடக்கமாயிருப்பவரை அவரது வலிமையை அறியாது அறிவற்றவரென்று
கருதி, அவரை வெல்வதற்கு முயலக்கூடாது. அதனால் துன்பமே வந்து சேரும்.
நீதிநெறி விளக்கம்

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்


எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்- செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
ஒருவர் தான் நினைத்த செயலை முடித்திடும் மனவுறுதி பெற்றவராக இருப்பின் அச்செயல் முடிவுறும்
வரை உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்தாததோடு பிறர் தனக்குச் செய்யும்
தீங்கினையும் காதுக்கினியவற்றையும் அல்லது போற்றுதலையும் தூற்றுதலையும் கருதாது
அச்செயலிலே கருத்தூன்றி இருப்பார். செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம் கொண்ட
ஒருவர் வேறு எதையும் கருதார்.
 
இணைமொழி

• பேரும் புகழும்- புகழ்


• ஒளிவு மறைவு- ஒளித்தலும் மறைத்தலும்
• அறை குறை- முழுமை பெறாத நிலை
• கல்வி கேள்வி- கல்வி அறிவு
உவமைத் தொடர்

• இலைமறை காய் போல


மிகவும் பாதுகாப்பாக
• சிலை மேல் எழுத்து போல
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
• காட்டுத் தீ போல
ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்
இரட்டைக் கிளவி

• பளீர் பளீர்- சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி


• மட மட- விரைந்து சரிதல்
• தட தட- வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

 
மரபுத்தொடர்
• கரைத்துக் குடித்தல்- முழுக்க படித்து அறிதல்
• கை கூடுதல்- நிறைவேறுதல்
• தட்டிக் கழித்தல்- ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
• ஈவிரக்கம்- கருணை
• பெயர் பொறித்தல்- புகழை நிலைநாட்டுதல்
• திட்டவட்டம்- உறுதியாக
• கையும் களவுமாய்- குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
• காது குத்துதல்- சாமர்த்தியமாகப் பொய் சொல்லுதல்
• கிள்ளுக் கீரை- அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
• கை கொடுத்தல்- தக்க நேரத்தில் உதவி செய்தல்

You might also like