You are on page 1of 4

தசாவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக

உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி ந ø வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில்

செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று

அழைக்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள்.

மச்ச அவதாரம்

இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம்

நடைபெறும்போது திருமால் மீன் வடிவில் தோன்றி வேதங்களையும், உலக உயிர்களையும்

காப்பாற்றினார்.

கூர்ம அவதாரம்

இத திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.

சிரஞ்சீவியாக வாழச் செய்யும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு தேவர்களும், அசுரர்களும்

பாற்கடலை இறைவனின் ஆணைப்படி கடைய ஆயத்தமானர். அப்போது மந்திர மலையை

மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். அப்போது மலை அதன்

பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. திருமால் ஆமையாக கூர்ம அவதாரம் செய்து மலையைத் தாங்கி

கடலையை கடைய துணைபுரிந்தார்.

வாரக அவதாரம்

இது திருமாலின் மூன்றாவது அவதாரம் ஆகும். வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.
இரண்யாட்சன் என்ற அரக்கன் பிரம்ம தேவரிடம் பெற்ற தவத்தின் வலிமையால் மூன்று உலகையும்
ஆட்டிப்படைத்தான். இரண்யாட்சன் பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து
வைத்துவிட்டான். இறைவன் வெள்ளைநிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இறுதியில்
வாரகமூர்த்தி இரண்யாட்சனை வெற்றி கொண்டு பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து
உலக உயிர்களைக் காத்தார்.

நரசிம்ம அவதாரம்

இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது.

நரசிம்மம் என்பதனை நரன் சிம்மம் என்று பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால்

சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன்

அருள்பாலிக்கிறார். திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார்.

இரண்ய¨½ வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை

துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

வாமன அவதாரம்

இது திருமாலின் ஐந்தாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. வாமனன் என்றால் குள்ளவடின்

என்பது பொருள்.

இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து

மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.


வாமன அவதாரத்தில் அந்தணச்சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மறுகையில்

கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார்.

பரசுராமர் அவதாரம்

இது திருமாலின் ஆறாவது அவதாரம் ஆகும். இவர் கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமானவர். தந்தை சொல்லை தட்டாது

செய்பவர். தந்தை இட்ட ஆணைக்கிணங்க தாயையும், சகோதரர்களையும் கொன்று மீண்டும்

அவர்களை தந்தையின் மூலம் உயிர்பித்தவர். சிவனிடமிருந்து பெற்ற பரசு எனப்படும் கோடாரி

கையில் ஏந்தி அருள்பாலிக்கிறார்.

ராமவதாரம்

இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். புகழ்பெற்ற இதிகாச நூலான இராமாயணம் இராமரை

மையப்படுத்தியே எழுதப்பட்டது.

இவர் சீதா, வட்சுமணன், அனுமான் ஆகியோருடன் கையில் கோதண்டமாகிய வில்லை ஏந்தி

காட்சியளிக்கிறார். ராமேஸ்வரத்திலுள்ள கோதண்ட ராமர் கோவிலில் ராமாவதாரத்தில் இறைவன்

அருளுகிறார்.
பலராமர் அவதாரம்

இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. பலராமர் என்பவர் வசுதேவர் மற்றும்

ரோகிணிக்கும் பிறந்த குழந்தையாவர். இவரே கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணனுடன் இருந்து

கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் பல லீலைகள் புரிந்தார்.

கிருஷ்ணன் அவதாரம்

திருமாலின் ஒன்பதாவது அவதாரம். எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம்.

குழந்தைப் பருவ கிருஷ்ண லீலைகள் எல்லோராலும் இன்றைக்கும் ரசிக்கக் கூடியவை. மனித

வாழ்க்கைக்குத் தேவையானவை அனைத்தும் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. இவர் பெரும்பாலும்

குழலினை ஊதிய வண்ணம் காட்சியளிக்கிறார்.

கல்கி அவதாரம்

இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின்

இவ்வாதரம் நிகழும் என்று நம்பப்படுகிறது. தர்மச்செயல்களின் அளவைவிட அதர்மத்தின் அளவானது

அதிகரிக்கும்போது கல்கி பகவான் தோன்றுவார். அவர் வெள்ளை நிறக்குதிரையின்மீது ஏறி கையில்

கத்தி மற்றும் கேடங்களைப் பெற்றிருப்பார். உலகில் நடைபெறும் அதர்ம செயல்களை தடுத்து

மக்களை நல்வழிப்படுத்துவார். அதன்பின் கிருத யுகம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.


தசாவதாரம் என்னும் திருமாலின் பத்து அவதாரங்களைப் போற்றி வணங்கி வாழ்வில் நன்னிலை
அடைவோம்.

You might also like