You are on page 1of 3

வாரும் தூய ஆவியே

உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்


உம் வல்லமையால் என்னை நிறைத்து –
நீர்
ஆளுகை செய்யும் – (2)

1. ஜீவ தண்ண ீர் நீரே


தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) – வாரும்

2. அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்
ஊற்றுத் தண்ண ீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே


கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ண ீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே —
ஊற்று

2. ஜீவத் தண்ண ீராம் எந்தன் நல்ல கர்த்தாவே


ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவர்ீ
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட —
ஊற்று

3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே


இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட — ஊற்று
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே


கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின்


நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ண ீரெல்லாம் கிருபையின்


பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன்
துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி


ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

You might also like