You are on page 1of 2

சனியினால் ஏற்படும் சங்கடங்களைப் போக்கும் பைரவர் - 27

நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய முறை... By C


Jeyalakshmi| Published: Monday, October 21, 2019, 10:46 [IST]
காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை
மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின்
அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ
கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர்
இவர்தான். சன ீஸ்வரரின் குரு பைரவர் என்பதால்,
பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும்
துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை
வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி,
கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை
வணங்கலாம். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை
நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம்
உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள்
இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை
உணர்ந்ததால் சமீ பகாலமாக சிவ ஆலயங்களில் பைரவர்
சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும்
சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித
கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள்
என்பது நம்பிக்கை. நாளைய தினம் அனைத்து
சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு
விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர்
ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம்,
சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக
பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம்
சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில்
பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம்
போன்றவை நடைபெறும். வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று
மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீ
சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட
பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர்
யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ
அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/theipirai-ashtami-viratham-


for-kala-bhairava-27-stars/articlecontent-pf197235-026711.html

You might also like