You are on page 1of 4

கல்வி கவிதை

கல்வி என்பது கடல்

அதை கற்றுக் கொடுப்பது தொழில் அல்ல தவம்.

நம்பிக்கை கை விட்டாலும் நீ கற்ற கல்வி என்றும்

உன்னை கை விடாது.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தான் கல்வி!

அறிவு எனும் பெட்டகத்தை

திறக்க உதவும் ஒரே

சாவி தான் கல்வி!

அறியாமையை அகற்றி

அறிவைக் காட்டும் அற்புத

விளக்கு தான் கல்வி!

கல்லா இருக்கும் நம்மை சிலையாக மாற்றுவது கல்வி!

காற்று இல்லை என்றால் உயிர் இல்லை!

கல்வி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை!


கல்வியின் அழகான விஷயம் என்னவென்றால்,

கல்வியை உங்களிடமிருந்து

யாரும் பறிக்க முடியாது!

கல்வி என்பது வெறும் மூன்றெழுத்து தான் ஆனால்,

மனிதர்களின் தலையெழுத்தை மாற்றும் எழுத்து.

கல்வி என்னும் கற்கண்டு

உன் வாழ்வை கற்பக விருட்சம் போல வளரச் செய்யும்!

ஏடுகள் பல நீ புரட்டினதால் ஏற்றம்

கண்டது உன் வாழ்க்கை!

மனிதர்களிடமிருந்து திருட முடியாத மிகப் பெரிய

சொத்து கல்வி!

கல்வி ஒன்றே தாழ்ந்து கிடக்கும் மக்களை

மேலே உயர்த்தும்.

இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி


பயணிப்பதே கல்வி!

கல்வியின் மிக உயர்ந்த குணமே சகிப்புத்தன்மை.

கல்வியின் நோக்கம் வெற்று மனதை திறந்த மனதாக மாற்றுவதாகும்.

ஒரு மனிதனை பெரிய பணக்காரனாக மாற்றுவது

சிறந்த கல்வி அல்ல!

அவனை நல்ல மனிதனாக மாற்றுவதே உண்மையான கல்வி!

தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது

முதல் தோல்வியே

கல்வியின் ஆரம்பம.

உழவனிடம் கற்பது

வேளாண் கல்வி!

பெற்றோரிடம் கற்பது

வாழ்க்கைக் கல்வி!

கண் போன்ற கல்வியை


நீ பொன்போல பாதுக்காத்தால், மண்ணுலகில்

சான்றோனாய் வாழ்ந்து

விண்ணைத் தொடலாம்!

கல்வி இல்லையேல்

காரியம் இல்லை!

காரியம் இல்லையேல்

ஊதியம் இல்லை!

ஊதியம் இல்லையேல்

வாழ்க்கையில் சாத்தியம் இல்லை!

ம.வித்யா

இளங்கலை முதலாமாண்டு தமிழிலக்கியம்

You might also like