You are on page 1of 3

‘பழமொழி சுடர்’ எனும் துணைக்கருவி.

‘பழமொழி சுடர்’ எனும் துணைக்கருவியைச் செயல்படுத்தும் முறை.

‘பழமொழி சுடர்’ எனும் துணைக்கருவி

முழுமையாகத் தயார் செய்தப் பாடக் கற்பித்தலுக்கேற்ப துணைக்கருவியைத்


தனியாள் முறையில் உருவாக்கும் இச்செய்பணி கற்றல் கற்பித்தலில் இலக்கவியல்
புத்தாக்கம் (BTMB 3152) எனும் பாடத்துடன் தொடர்புப்படுத்தி வழங்கப்பட்டச்
செய்பணியாகும். இச்செய்பணி ஆழக்கற்றல் (NPDL) அடிப்படையில் வழங்கப்பட்ட ஒரு
பணியாகும்.

அவ்வகையில் தயார் செய்தப் பாடக் கற்பித்தலுக்கேற்ப ‘பழமொழி சுடர்’ எனும்


ஒரு துணைக்கருவி உருவாக்கப்பட்டது. இத்துணைக்கருவி படிநிலை இரண்டிலுள்ள
மெதுபயில் மாணவர்கள் நான்காம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அதன்
பொருள்களையும் அறிந்து கொள்வதற்குப் பயன்படும். ஆசிரியர்களின் வழிக்காட்டலுடன்
மெதுபயில் மாணவர்கள் இத்துணைக்கருவியின் வாயிலாக நான்காம் ஆண்டுக்கான
பழமொழிகளையும் அதன் பொருள்களையும் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். மேலும்,
இத்துணைக்கருவியின் வாயிலாகப் பழமொழிகளையும் அதன் பொருள்களையும்
படிப்பதற்கான ஆர்வத்தையும் ஊக்கத்தையும் மெதுபயில் மாணவர்களிடத்தில் வளர்ப்பது
மட்டுமல்லாமல் வகுப்பறையில் மனமகிழ் கற்றலையும் செயல்படுத்த முடியும். மெதுபயில்
மாணவர்களால் இத்துணைக்கருவியை ‘டிவிடியின்’ (DVD) மூலம் மடிக்கணினி அல்லது
கணினியின் வாயிலாக ஆசிரியரின் வழிக்காட்டலுடன் எளிதில் அணுகிட முடியும்.
இத்துணைக்கருவியில் பழமொழி தொடர்பான விளக்கமும் படங்களும் காணொளியும்
இணைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மெதுபயில் மாணவர்களால் பழமொழிகளின்
விளக்கங்களைச் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலும்.

You might also like