You are on page 1of 8

_____________________________________________________________________

PROGRAM
BACHELOR OF TEACHING (PRIMARY EDUCATION) WITH HONOURS

SEMESTER JANUARI 2020

Kod Kursus
HBTL2203

Tajuk Kursus
TATABAHASA BAHASA TAMIL II

NAME : MALARVILY A/P RATHAKRISHNAN.

NO.MATRIK : 960411085466001.

NO.TEL : 012-5241357

E-MEL : malarvily5466@gmail.com

LEARNING CENTRE : IPOH LEARNING CENTRE.(LIM BOH SENG)


Bahagian A (SOALAN 1 DAN SOALAN 3)

அ) தமிழ் +மொழி
தமிழ்+மொழி எனும் இவ்விரண்டு சொற்களையும் சேர்க்கும் பொழுது எவ்வித மாற்றமும் இல்லாமல்

தமிழ்மொழி என்று இயல்பாக தொன்றுகிறது. எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகப் புணர்வது

இயல்பு புணர்ச்சியாகும். இதில் நிலைமொழியின் ஈற்றெழுத்திலும் வருமொழியின் முதலெழுத்திலும்

எந்தமாற்றமும் இல்லை. மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி

என்பர்.

தமிழ் ( நிலைமொழி ) + மொழி (வருமொழி ) = தமிழ்மொழி (இயல்பு புணர்ச்சி)

தமிழ் + இசை

இவ்விரு சொற்களை சேர்ப்பதன் மூலம் (தமிழ் + இசை) = தமிழிசை என தொன்றுகிறது. தமிழ்


எழுத்துகளின் மரபனது, 'ழ்' உம் 'இ' சேர்ந்தால் இயல்பாகவே 'ழி' தோன்றும் என்பதனை கூறுகின்றது

. ஆகவே, இவ்வகையில் அமையும் புணர்ச்சிகளை இயல்பு புணர்ச்சி என்றே நமது இலக்கணம்


கொண்டுள்ளது.

தமிழ் (ழ்) + இசை (இ) = தமிழிசை ( ழ் + இ = ழி )

ஆ) இருச்சொற்கள் சேரும் பொழுது இடையில் புதிய எழுத்து தோன்றினாலோ அல்லது வேறு

மாற்றங்கள் ஏற்படுமின் அதனை விகாரப் புணர்ச்சி என்போம். இதில் 3 வகைப்படும்


திருக்குறள் ( தோன்றல் விகரம் )
இரண்டு சோற்கள் சேர்ந்து புதிதான ஓர் எழுத்து தோன்றினால் அது தோன்றல் விகாரமாகும். (
திரு + குறள் ) = திருக்குறள் ( க் என்ற எழுத்துத் தோன்றியது )

கடற்கரை ( திரிதல் விகாரம்)


இரு சொற்கள் சேர்கின்றபொழுது நிலமொழியின் இறுதியிலோ வருமொழியின் முதலிலோ உரு

மாறினால் அப்புணர்ச்சியினைத் திரிதல் விகாரம் எனப்படுவர்.

கடல் + கரை = கடற்கரை ( நிலைமொழி இறுதி ல் என்பது ற் எனத் திரிந்துள்ளது)

மரவேர் ( கெடுதல் விகாரம் )

இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போனால் கெடுதல் விகாரம்

எனப்படும். (கெடுதல்-மறைதல்)

மரம் + வேர் = மரவேர் ( நிலை மொழி இறுதி ம் என்பது மறைந்தது )

SOALAN 3

1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு: தமிழ் + கற்றென் = தமிழ் கற்றென் ( தமிழைக் கற்றென்)


2. மூன்றாம் வேற்றுமையான ஒடு மற்றும் ஓடு என உயிர் ஈறு கொண்டவை. இவற்றின் முன் வரும்

வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு: (ஓடு) - கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது

(ஒடு) - பூ வொடு + சேர்ந்த - பூ வொடு சேர்ந்த

3. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருந்தால் அதன்முன் வரும்

வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு: தாய் + பாடினாள் = தாய் பாடினாள்

4. ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும், இன் என்பதோடு நின்று

என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன. இவ்விரு உருபுகளின் முன்வரும்

வல்லினமும் மிகாது.

எடுத்துக்காட்டு: வீட்டிலிருந்து சென்றோம் (இருந்து)

5. எழுவாய் தோடரில் வலி மிகாது

எடுத்துக்காட்டு: பாம்பு + கடித்தது = பாம்பு கடித்தது

6. ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது மற்றும் உடைய என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது

எடுத்துக்காட்டு: எனது கடிகாரம் (அது)

என்னுடைய பென்சில் ( உடைய )

7. ஏழாம் வேற்றுமை தோகையில் வலி மிகாது ( இல், இடம், கண், பால் )

எடுத்துக்காட்டு: மரக்கிளி என்பது ‘மரத்தின் கண் கிளி’

BAHAGIAN B (SOALAN 1)

இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி இருதியிலும் வருமொழி முதலிலும்

உயிரெழுத்துகளாக இருக்கும் . அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டு இசைக்கும். அவை

சேர்ந்து இசைப்பதற்கு, உடம்படாத அவ்விரண்டு ம் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின்

இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய்


என்று கூறலாம்.

நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால் , இடையில் (ய்)

யகர உடம்படுமெய் ஆகும்

எடுத்துக்காட்டு: கணி (இ) + அழகு = கணியழகு

தீ(ஈ) + அழல் = தீயழல்

வாழை (ஐ) + இலை = வாழையிலை.

நிலைமொழியின் இருதி எழுத்தாக , அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ, ஔ வந்து வருமொழி முதலில் உயிர்

வந்தால், இடையில் (வ்) வகர உடம்படுமெய் ஆகும். எடுத்துக்காட்டு: பல(அ) + விதம் = பலவிதம்

பலா(ஆ) + அடியில் = பலாவடியில்

நடு(உ) + இடம் = நடுவிடம்

பூ(ஊ) + வாழ் = பூவாழ்

எ(எ) + அழகு = எவ்வழகு

கோ(ஓ) + இல் = கோவில்

நிலைமொழியின் இருதி எழுத்தாக, ஏ வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய், வ்) யகரம்

வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் கணலாம்.

எடுத்துக்காட்டு: சே + அழகு = சேயழகு

சே + அழகு = சேவழகு

Bahagian B (Soalan 2)

[1]
சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு.

தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப்

பாங்குகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று

குறிப்பிடுகிறது. தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை,

பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு


பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1. வினைமுற்றுத் தொடரில் உயிர் முன் மெய்

எடுத்துக்காட்டு: உரியது பணம்

சிறியது கோழி

2. வினையேச்ச தோடரில் உயிர் முன் மெய்

வினையேச்சத் தோடரில் உயிர் முன் மெய் இயல்பாக புணர்கிறதா இல்லையா என்பதை

நிலைமொழியின் தன்மையை பொருத்து அமையும் .

எடுத்துக்காட்டு: கொடுத்துப் பார்த்தாள்

3. பெயரெச்ச தொடரில் உயிர் முன் மெய்

பெயரெச்ச தொடரில் உயிர் முன்வல்லினம் வருவது இயல்பு

எடுத்துக்காட்டு: உடைந்த + கடை = உடைந்த கடை

தைத்த + சட்டை = தைத்த சட்டை

செய்த + தயிர் = செய்த தயிர்

உடைந்த + பானை = உடைந்த பானை

4. இடைச்சொல் தொடரில் உயிர் முன் மெய்

இடைச்சொல் பல் வகைப்படும். அனைத்து வகைக்கும் ஒவ்வொரு விதமான உயிர் முன் மெய்

வந்து சொற்கள் புணர்கின்றன .

எடுத்துக்காட்டு: அ + கடை = அக்கடை

இ + சுவடு = இச்சுவடு

எ + நிலை = எந்நிலை

5. உரிச்சொல் தொடரில் உயிர் முன் மெய்

எடுத்துக்காட்டு: சால + பெசினான் = சாலப் பெசினான்


நனி + பேதை = நனி பேதை

6. அடுக்குத் தொடரில் உயிர் முன் மெய் வரின்

அடுக்குத் தொடரில் உயிர் முன் மெய் வந்து இயல்பாகப் புணர்கின்றன.

எடுத்துக்காட்டு: சிரி சிரி

பாம்பு பாம்பு

7. வினைத்தொகையில் உயிர் முன் மெய் வரின்

வினைத்தொகையில் உயிர் முன் மெய் வரின் இயல்பாகப் புணர்கின்றன.

எடுத்துக்காட்டு: ஊது குழல்

சுடு காடு

8. பண்புத்தொகையில் உயிர் முன் மெய் வரின்

பண்புத்தொகையில் உயிர் முன் மெய் வந்து இயல்பாக புணரும் .

எடுத்துக்காட்டு: கரு மழை

சிரு நகை

9. உவமைத்தொகையில் உயிர் முன் மெய் வரின்

உவமைத்தொகையில் உயிர் முன் மெய் பெரும்பாலும் வலிமிகுகிறது.

எடுத்துக்காட்டு: உயிர் முன் வல்லினம்

தாமரைக் கண்

முத்துப் பல்

உயிர் முன் மெல்லினம்

தாமரை முகம்

முத்து நகை

10. உம்மைதொகையில் உயிர் முன் மெய் வரின்

உம்மைதொகையில் உயிர் முன் மெய் பெரும்பாலும் இயல்பாம்


எடுத்துக்காட்டு: வரவு செலவு

இரவு பகல்

You might also like