You are on page 1of 9

வக்ரபலம்

வக்ரமடைந்த கிரகங்கள் உச்சத்திற்கு சமமான வலிமையை அடைகின்றன.


ஆனால் உச்சம் அடையவில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நமது அனுபவ ஜோதிடர்கள் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்தாலே தீமைதான் என்ற ரீதியில் போதித்து வருகின்றனர். அதுவும்
தவறு.
வக்கிரம் பெற்ற கிரகம் சுபரா பாவரா என்பதை பொருத்தே அதன் பலனைதரும். உதாரணமாக லக்ன சுபர் வக்கிரம் பெற்று
வலிமைபெறும் போது நல்ல பலனையும், லக்கனபாவர் வக்கிரம் பெற்று பலவீனமடையும் போது தீய பலனையும் தரும்.

ஆட்சி கிரகம் வக்கிரம் அடைதல்:


ஆட்சி கிரகம் வக்கிரம் அடைந்தால் உச்சத்திறகு சமமான வலிமையை பெறும்.
ஒரு்கிரகம் அடையும் அதிகபச்ச வலிமையே உச்சம்தான். அதாவது 100 மதிப்பெண்.
எந்தவொரு கிரகமும் உச்சத்தைவிட அதிகமான வலிமையை பெறமுடியாது.
வக்கிரம் ஆகும் கிரகங்கள் வக்கிரம் பெறும்போது எதிரிடையான ஒரு நிலையை அடைவதாக மகரிஷி பராசரமுனிவர்
குறிப்பிடுகிறார்.
அப்படியெனில் உச்சமான கிரகம் வக்கிரம்பெறும்போது அதைவிட வலிமையினை அடையமுடியாது என்பதால் உச்சத்திற்கு
எதிர் நிலையான நீசபலனை அடைகிறது.
அப்படியானால் வலிமைகுறைந்த கிரகங்கள் வக்கிரம் அடையும்போது அதற்கு எதிர்நிலையான உச்சநிலை வலிமையை
அடைகின்றன.
உதாரணமாக பகை,நீசம்,சம்ம் நட்பு,
ஆட்சி, மூலதிரிகோண வலிமை பெற்ற கிரகங்கள் வலிமைபெறும்போது உச்சபச்ச வலிமையை அடைகின்றன. அதாவது
பலவீனத்திற்கு எதிர்நிலையான பலமான உச்சத்திற்கு சமமான நிலையை அடைகின்றன.
ஆட்சிபெற்ற கிரகம் உச்சத்தோடு மதிப்பிடும்போது பலவீனமான கிரகமே. ஏனென்றால் உச்சம் 100 மதிப்பெண் ஆட்சி 50
மதிப்பெண்.
இதைதான் முதல்பதிவில் பார்தத ் மகாகவி காளிதாசரின் வக்ரபலம் அத்தியாயம் பற்றிய பதிவில் விளக்கமாக பார்த்தோம்.
சுபர்கள் வக்கிரமாகும்போது சுபக்கிரகங்கள் அதிக வலிமையடைந்து நன்மை செய்கின்றன.
சனி, செவ்வாய் போன்ற பாவிகள் வக்கிரம் ஆகும்போது மிகுந்த தீயபலனை செய்கின்றன.
அதாவது சனி,செவ்வாய்,,மற்றும் 6,8,12 க்கு அதிபதிகள் தீயகிரகங்கள். இவர்கள் சுபத்தன்மையை அடையாமல்
வலிமையடையும்போது பாபத்துவ வலிமை அதிகரித்து தீயபலன்கள் அதிகரிக்கின்றன. 
வக்கிரம் பெற்ற கிரகம் எதிர்தன்மை பெறும்.
1. வக்கிர கிரகம் உச்ச பலனை தரும்.
2. உச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் நீசபலன்.
3. நீச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலன்.
4.வக்கிர கிரகங்கள் சுபமானால் தனது காரகத்துவத்தை அதிகமாக தரும். ஆதிபத்தியத்தை குறைவாக தரும்.
5. வக்கிர கிரக ஆதிபத்திய பலன் காலம் கடந்து ( குத்துமதிப்பாக 40 வயதிற்கு மேல்) பலன் தரும்.
6. சில ஜோதிடர்கள் வக்கிரம் பெற்றாலே கெடுதல் செய்யும் என்று குறிப்பிடுகின்றனர். அது தவறு. நல்ல கிரகங்கள், சுபர்கள்
வக்கிரமாகி வலுபெற்றால் நல்லபலன். கெட்டவன் வக்கிரமாகி வலு அதிகரித்தால் கெட்ட பலன்.
7. சில ஜோதிடர்கள் ஆட்சி கிரகம் வக்கிரம் பெற்றால் வலு குறையும் என்கின்றனர்.
அது தவறு. 
பகை,சம்ம், நட்பு, ஆட்சிபெறும் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் உச்சபலனைதான் தரும். உச்ச கிரகம் மட்டுமே வக்கிரம் பெற்றால்
நீச பலனைதரும். மகாகவி காளிதாசர் தனது உத்தரகாலாமிர்தம் என்ற ஜோதிட கடலில் கூறியதை தான் உங்களுக்கு
கூறியுள்ளேன். இது பற்றி கருத்து வேறுபாடு இருந்தால் அனுபவம் நிறைந்த குருமார்கள் இருந்தால் தயவுசெய்து
தெளிவுபடுத்தலாம். 
8. வக்கிராஸ்தமனம் கூடாது.
9. ராகுவோடு சேர்ந்த கிரகங்களும் , வக்கிரம் பெற்ற பாவிகளும் கெடுதல் செய்யும் என்கிறார் காளிதாசர். ஆனால் வக்கிர
கிரகங்களோடு சேரும் கிரகங்கள் ஆட்சி பலம் தரும் என்கிறார். இதில்தான் சூட்சும்மே உள்ளது. பாவிகள் பலம் பெறக்கூடாது.
சுபர்கள் பலம் பெற வேண்டும்.
வக்ரபலன்

சுபகிரகங்கள் சுபமாக அதாவது புதன், சுக்கிரன், குரு வக்கிரமாகி பலமானால் தனது தசையில் ராஜ்யம், ராஜ்யபதவி,
அதிகாரம், அல்லது அரசனுக்கு இணையாக அதிகாரம் புகழை தரும்.

பாவக்கிரகங்களான சனி , செவ்வாய் பாவத்துவமாகி வக்கிரமாகி பலமானால் வீண்அலைச்சல், தேச சஞ்சாரம், துக்கம்,
மனக்கலக்கத்தை தரும்.
சூரியசந்திரர்களுக்கு வக்கிரபலம் கிடையாது.

விளக்கம்: 
ஆதி மூலான சூடாமணி கிரகங்கள் அடையவேண்டிய ஆறுவகை பலங்களில் ஒன்றுதான் சேஷ்டாபலம். இதிலுள்ள
வக்கிரபலம் முக்கியமானது என்கிறது.
ஒரு சுபர் வக்கிரமாகி அதிபலம் பெறும்போது சுபத்தன்மையும் , சுபத்துவத்தை அடையாத பாவி வக்கிரமாகி அதிபலம்
பெறும்போது தீயபலன்களும் மிகும் என்பது இதன் மூலம் அறியலாம்.
வக்ரபலம்:
தமிழ் ஜோதிட நூல்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருப்பதாலும், வக்கிரத்தை பற்றிய போதிய அனுபவம் இருந்தாலும்
பல ஜாதகங்களில் ஆய்வு செய்து பார்க்காமல் அதாவது ஆய்வு என்றால் நமக்கு நன்கு தெரிந்த பலரது ஜாதகங்களில் " வக்ரம்
பெற்ற கிரகம் தசா நடக்கும் நிகழ்வுகளையும் பல பிரபலங்களில் வக்ரம் பெற்ற கிரகங்கள் அளித்த பலன்களையும் நுட்பமாக
ஆய்வுசெய்ய வேண்டும்."

மகரிஷி பராசரமுனிவர் பராசர சம்ஹிதை, பூர்வபராசரியம் போன்ற நூல்களில் வக்ரம் பற்றி கூறியுள்ளார். ஆனால்
அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக கூறாமல் சூட்சும மாக விளக்கியுள்ளார். நாம் இவ்வளவு விளக்கமாக பதிவுகளை
போடுகிறோமே இது ஜோதிடர்களுக்கு கூட புரியவில்லையே.

அப்புறம் எப்படி பராசரமுனிவரின் சூட்சும்ம் நிறைந்த வார்த்தைகளை புரிந்துக்கொள்வது?


நானும் எனக்கு புதன் அமைந்த பலத்திற்கேற்ப புரிந்துக்கொண்டு ( நல்லபுரிதலோ கெட்ட புரிதலோ) குரு எனது ஜாதகத்தில்
கிடைத்த யோகத்தின் அளவிற்கேற்ப உங்களுக்கு புரியவைத்துக்கொண்டிருக்கிறேன்.
இதே நிலைதான் உங்களுக்கும்.

வக்ரம் பெற்ற கிரகங்கள் எதிரிடையான பலன்களை தரும்.

இதை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் ஒரு ஜாதகத்திற்கு ஒரு கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை
தெரிந்திருப்பது அவசியம்.
1. ஒரு கிரகம் உச்சம் பெற்றிருந்தால் 100 சதவீத பலம் என வைத்துக்கொண்டு மதிப்பெண் அடிப்படையிலே காணவேண்டும்.
இதில் ஒரு சூட்சும ம் என்னவென்றால் உச்சம் பெற்ற கிரகம் உச்சராசியில் இருந்தால் மட்டும் போதாது. அது அதி உச்ச
பாகையில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.கிரகங்களின் உச்ச பாகையை கீழே கொடுத்திருக்கிறேன்.
சூரியன் மேசத்தில் பத்து பாகை.
சந்திரன் ரிசபத்தில் மூன்று பாகை.
செவ்வாய் மகரம் 28 பாகை.
புதன் கன்னி 15 பாகை.
குரு கடகம் 5 பாகை.
சுக்கிரன் மீனம் 27 பாகை.
இதற்கு எதிர் ராசியில் அதாவது சரியாக 180 பாகையில் உச்சகிரகங்கள் நீசம் பெறும்.
பல பெரிய, புகழ்வாய்ந்த ஜோதிடர்கள்கூட உச்சளவு தெரியாமல் உள்ளனர்.அல்லது பலன் கூறும்போது கடைபிடிப்பதில்லை
என்பதற்கு அவரது எழுத்துக்களே சாட்சி.
2. மூலத்திரிகோணம் பெறும் கிரகங்கள் 75 மதிப்பெண் பெறும்.( எந்த கிரகம் எங்கே மூலத்திரிகோணம் ,எத்தனை பாகையில்
அடையும் என்பதை தனிப்பதிவாக கொடுத்துள்ளேன்)
3. ஆட்சிபெறும் கிரகம் 50 மதிப்பெண்.
4. நட்புபெற்ற கிரகம் 40 மதிப்பெண்.
5. நட்போ பகையோ இல்லாமல் சமபலம் பெறும் கிரகம் 25 மதிப்பெண்கள்.
6. பகைகிரகங்கள் 12 மதிப்பெண்கள்.

மகாகவி காளிதாசர் தனது உத்தரகாலாமிரதம் என்ற நூலில் கூறியதை பதிவிடுகிறேன்.


அ) ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் உச்சத்திற்கு " சமமான" ( நன்கு புரிந்துக்கொள்ள) பலத்தை அடைகின்றன.
ஆ) வக்ரம் பெற்ற கிரகத்துடன் இணையும் கிரகம் ஆட்சிக்கு சமமான பலம் பெறும்.
இ) உச்சம்பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் நீசத்திற்கு சமமான ( கவனிக்க) பலம்பெறும்.
ஈ) நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் உச்சத்திற்கு சமமான ( கவனிக்கவும்) பலம்பெறும்.
அவ்வளவுதாங்க.

மகாகவி காளிதாசர் மிகவும் தெளிவாகத்தானே விளக்கியுள்ளார். என்றாலும் பலருக்கு புரியாமல்போகும் அல்லது தவறாக
புரிந்துக்கொள்கிறார்கள் என்பதால் மீண்டும் விளக்குகிறேன்.

சிலர் மகாகவி காளிதாசர் ஆட்சிபெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் என்னபலன் என்று தனியாக குறிப்பிடாத காரணத்தால்
அதுபற்றிதான் குழப்பமடைகின்றனர்.

ஏன் இன்று முன்னனியில் இருக்கும் பல ஜோதிடர்களுக்கே ஆட்சிபெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன பலன் என்று
நேரடியாக விளக்கத்தெரியாது. சுருக்கமாக விளக்கத்தெரியாது. நான் சொல்வது தவறென்றால் நீங்கள் அவரது புத்தகங்கள்
வீடியோக்களை பாருங்கள். நீங்கள் மேலும் குழப்பமடைவீர்கள் நிச்சயமாக. பலர் நான் சொன்னால் உங்களுக்கு புரியாது என்று
மழுப்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை.

ஆனால் மகாகவி காளிதாசர் ரத்னசுருக்கமாக விளக்கிவிட்டார். அதில் உள்ள சூட்சும்ம் பலருக்கு புரியாததால்தான் இவ்வளவு
முரண்பாடுகள்.

" ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் உச்சத்திற்கு சமமான பலத்தை தரும்." அப்படியானால் ஆட்சி, பகை,சம்ம், மூலத்திரிகோணம்,
பெற்ற கிரகங்கள் உச்சத்திற்கு சம்மான பலம்பெறும் என்பது அதன் சூட்சுமவிளக்கம்.

அதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான்.

"நேரடியாக உச்சம் பெற்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றால் பலமிழக்கும். அது நீசத்திற்கு சம்மான பலனளிக்கும்.
இதில் உள்ள ரகசியம் ஒரு கிரகம் உச்சம்பெற்றால் 100 மதிப்பெண். வக்கிரம்பெற்றாலும் 100 மதிப்பெண்.
உச்சக்கிரகம் வக்கிரம்பெற்றால் 100 க்கு மேலே வலிமைபெறாமல் பலவீனத்தை அடைகின்றன.
ஏனென்றால் வக்கிரம்பெற்றால் கிரகங்கள் எதிர்தன்மையை அடைகின்றன.

வக்கிரம் சம்மான வலிமை: விளக்கம்:


ஒரு கிரகம் எந்த ராசியில் உச்சம் பெறும் அந்த ராசியில் சென்று உச்சபாகையில் உச்சம் அடைவதுதான் நேரடியான பலம்
.வக்கிரத்தால் ஒரு கிரகம் அடையும் பலம் என்பது சம்மான பலம்தான். இதில்தான் வக்கிர கிரகங்களின் சூட்சும்மே
அடங்கியுள்ளது. அதை அடுத்த பதிவில் விரிவாக விளக்குகிறேன். இந்த பதிவு எத்தனை நண்பர்களுக்கு புரிகிறது என்று
கமெண்ட் பண்ணுங்க. இதை அடிப்படையாக கொண்டு அடுத்த பதிவினை தருகிறேன்.

வக்ரபலம்:
இதை படிக்குமுன்பு வக்ரபலம்3 என்ற எனது பதிவை படித்துவிட்டு இதை படிக்கவும். அப்போது புரிந்துக்கொள்ள எளிதாக
இருக்கும். வக்ர கிரகங்கள் உச்சத்திற்கு சமமான வலிமையை பெற்றாலும் அவை உச்சக்கிரகங்கள் அல்ல. எனது இந்த
விளக்கம் பல ஜோதிடர்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கலாம்.
ஆனால் நமது மூலநூல்களில் மகரிஷி பராசரமுனிவர், மகாகவிகாளிதாசர், வராஹமிகிர்ர், கல்யாணவர்மர் போன்றோர்
இவ்வாறு விளக்கியுள்ளதை பல ஜாதகங்களில் ஆய்வுசெய்துவிட்டுதான் இங்கே விளக்கியுள்ளேன்.

1. ஆட்சி பெற்ற கிரகங்கள் வக்கிரம் ஆனாலும் உச்சத்திற்கு சமமான வலிமையைதான் பெறும்.


2. பகை, நீசம், நட்பு,ஆட்சி,சமம் பெறும் கிரகங்கள் அனைத்துமே உச்சபலத்தை பெறும்.
3. உச்ச கிரகங்கள் வக்கிரம் ஆனால் நீசத்திற்கு சமமான பலத்தை அடைந்து நீசவலிமையை பெறுகின்றன.

உச்சம் என்பது முழுமையான வலிமையினை ஒரு கிரகம் அடைவது. அதாவது 100 மதிப்பெண்களை பெறுவது. அதற்கு மேல்
ஒருகிரகம் ராசியில் ( D1) பெறமுடியாது. மகரிஷி பராசரமுனிவர் உச்சம் பெறும் கிரகம் எதிர்நிலையை அடைகின்றன என்பது
இதை அடிப்படையாக கொண்டுதான். அதாவது பலம் குறைந்த கிரகங்கள் வக்கிரம் அடையும்போது அதற்கு எதிர்நிலையான
உச்சபச்ச வலிமையை பெறுகிறது. ஆட்சிபெற்ற கிரகம் என்பது உச்சகிரகத்தோடு ஒப்பிடும்போது பலவீனமான கிரகம்தான்.
அதாவது ஆட்சிபெற்ற கிரகம் 50 மதிப்பெண்களையே பெறும். நீசம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்போது நீசபலனை இழந்து
உச்சபலத்தை அடைகிறது. இதை அடிப்படையாக கொண்டதுதான் கிரகங்களின் சூட்சும வலிமையை அளவிட பயன்படும்
முறையில் ஒன்றான காலபலத்தின் உட்பிரிவாக இந்த வக்ரபலம் வைக்கப்பட்டுள்ளது.

சட்பலம் என்பது ஆறுவிதமான பலம். 


1. ஷ்தானபலம் 2. திக்பலம் 3. காலபலம் 4. சேஷ்டாபலம் அல்லது நைசர்கிகபலம் 5. அயனபலம் 6. நதோன்னதபலம் மற்றும்
திருக்பலம். இந்த ஆறு பிரிவுகளும் 22 உட்பிரிவுகளை கொண்டது. இவற்றை எல்லாம் கணித்தால்தான் ஒரு கிரகத்தின்
உண்மையான சூட்சும வலிமையை தெரிந்துக்கொள்ள முடியும்.

இந்த சட்பலத்தில் ஒன்றான காலபலத்தில் ஒன்றுதான் இந்த வக்ரபலம். வக்ரபல மதிப்பீடும் சட்பல கணிதத்தில்
கூட்டப்படுவதன் மூலம் இதன் பலதரப்பட்ட முக்கியத்துவங்களை அறியலாம்.
அடுத்து மிகமுக்கியமான ஒன்றைக்கூறுகிறேன். அதாவது சுபத்தன்மை அடைந்த சுபர்கள் வக்கிரம் ஆனால் அது
வலுவடைந்து அதிக வலிமையை அடைந்து நன்மைகளை செய்கின்றன. சனி, செவ்வாய் போன்ற பாவிகள் வக்கிரம் ஆகி
எந்த சுபர்களின் சேர்க்கையோ, பார்வையையோ பெற்று சுபத்தன்மையை அடையாவிட்டால் பாவத்துவம் அதிகமாகி தீமையை
செய்கின்றன. 6,8,12 க்குரியவர்கள் வக்கிரம் அடைந்தாலும் தீயபலனே அதிகரிக்கும்.

பாவகிரகங்களை பொருத்தவரை சுபத்துவம்தான் முக்கியம். இதை மன்னர் கல்யாணவர்மர் தனது சாராவளியில் "வக்கிரம்
அடைந்த சுபகிரகங்கள் தனது தசாவில் ராஜ்யம், பதவி, செல்வம், சுகம், கௌரவம், மரியாதை போன்ற சுப பலன்களை அதிக
அளவில் வழங்கும்.

வக்கிரம் அடைந்த பாவர்கள் நோய், விரோதி, பணநஷ்டம், கடன், பதவியை இழத்தல், வறுமை போன்ற தீய பலன்களை தனது
தசாவில் வழங்கும்". என்று பொதுபலனாக குறிப்பிட்டுள்ளதிலிருந்து அறியலாம்.
மிகமிக முக்கியமான ஒரு விசயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

" உச்சத்திற்கு சமமான பலம்" உச்சம்பெற்ற கிரகங்கள் உடனடியாக சுப, அசுப பலன்களை வழங்கும். சுபர்கள் உச்சமானால் சுப
பலன்களும், பாவர்கள் உச்சமானால் பாவபலன்களும் நடைபெறும். உதாரணமாக நான்காமதிபதி உச்சமானால் பிறக்கும்போதே
வீடு, வாகனம், வசதிவாய்ப்புகளுடன் பிறந்திருப்பார். பூர்வபுண்ணிய ஸ்தானம் கெட்டு லக்னம் மட்டும் வலுத்திருந்தால்
படிப்படியாக சொந்த முயற்சியில் சிரமமின்றி சப்பாதித்துவிடுவார். "ஆனால் வக்கிரம் பெற்று மறைமுகமாக வலிமைபெற்ற
கிரகங்கள் உச்சத்திற்கு சமமான
வலிமையை அடைந்தாலும் அது உடனடியாக பலன்களை தருவதில்லை. தனது தசாவிலும் உடனடியாக பலன்களை தராது.
வக்கிரம் ஆன கிரகம் வாழ்ககை ் யில் தடை, தாமதங்களையும், எல்லாவற்றையும் போராடிபெற வேண்டிய நிலையையும் தரும்.
கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிக்கு பிறகே நல்ல அல்லது கெட்ட பலன்களை வக்கிரம் ஆன கிரகங்களை பொருத்து
பலன்தரும். உதாரணமாக நான்காமதிபதி ஒருவருக்கு வக்கிரமாக இருந்தால் ஆரம்பத்தில் வீடு,வாகனம், வசதிகள்
அமையாது. கடுமையான முயற்சிக்கு பிறகு சுகபோக வசதிகளை பெறுவார். ஆரம்பத்தில் தடைதாமதங்களை அடைவார்.
அடுத்த பதிவில் வக்கிர கிரகங்கள் யோகி,அவயோகி,திதிசூன்யம் ,புஷ்கரநவாம்சம் போன்ற அமைப்பில் தரும் பலன்களை
பார்த்துவிட்டு வக்ர கிரகங்களுக்கு மிகதுல்லியமாக கணிக்கப்பட்டு பிரபலமாக உள்ளவர்களின் ஜாதகங்களை உதாரண
ஜாதகங்களாக பார்ப்போம்.
வக்ரபலம்:
வக்ரம் அடைந்த கிரகம் தீமை செய்வதாக ஜோதிடர்கள் சொல்கிறார்களே உண்மையா?
சில பிரபல ஜோதிடர்கள் நீசம், பகை, வக்கிரம் அடைந்த கிரகங்கள் தீமைசெய்யும் என்று பொத்தாம்பொதுவாக
எழுதுகிறார்களே உண்மையா?

மகாகவி காளிதாசர்கூட வக்கிரம் அடைந்த கிரகம் உச்சத்திற்கு சமமான பலமடையும் என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில்
நீசம், பகை, கிரகயுத்தத்தில் தோல்வி, ராசி மற்றும் பாவசந்தியில் உள்ள கிரகங்கள், வக்கிராஸ்தமத்தை அடைந்த கிரகங்கள்
தீமையை தரும் என்று முரண்பட்டவாறு கூறியுள்ளாரே!

உச்சம் என்பது வேறு உச்சத்திற்கு சமமானது என்பது வேறு என்பதை முதலில் புரிந்துக்கொள்வோம். தேன் என்பது வேறு
தேனுக்கு சமமான சுவை என்பது வேறு.

ஒரு கிரகம் ராசியில் உச்சமடையும்போது அது நன்மையளிக்கும் யோகராக இருந்தால் அக்காரக ,பாவகரீதியான நல்ல
பலன்களை உயர்வாக உடனடியாக தங்குதடையின்றி உடனடியாக அளிக்கும். உச்சமடைந்த அவயோகர்கள் தீயபலன்களை
அதிகமாக தசாமுழுவதும் தங்குதடையின்றி வாரிவழங்கும். ஆனால் உச்சமடைந்த கிரகங்கள் யோகபங்கநிலைகளை
பெற்றிருக்க கூடாது என்பது முக்கியம்.
ஒரு கிரகம் உச்சமடைவது நன்மையை மட்டும் தரும் அமைப்பு மட்டும் அல்ல. நல்லவர் உச்சமடையும்போது நல்லபலன்களும்
தீயவர்கள் உச்சமடையும் போது தீயபலன்களும் உடனடியாக தரும். உச்சமடைந்த கிரகங்கள் தனது தசாவில்தான் யோகம்தரும்
என்றாலும் அக்கிரகத்தின் காரக ,ஆதிபத்திய பலன்கள் தசா வராவிட்டாலும் உயர்ந்து இருக்கும்.
உதாரணமாக நான்காமதி நல்லநிலையில் உச்சமாக இருந்தால் பிறக்கும்போதே நல்லவீடு, வசதி, வாகனம், கல்வி, சுகம்
இருக்கும். நான்காமதிபதி தசாக்காலத்திலும் சுகபோக வசதிகள் உண்டாகும்.
ஆனால் வக்கிரம் ஆன கிரகங்கள் உச்சத்திற்கு சமமான வலிமையை பெறும்போது உடனடியாக தடையின்றி சுப அல்லது அசுப
பலன்களை வாரிவழங்கிவிடுவது இல்லை.
பல போராட்டத்திற்கு பிறகு , ஆரம்பகாலத்தில் பலவித தடைகளையும் தொய்வுகளையும் காரக,ஆதிபத்தியரீதியாக
வழங்கியபிறகே உயர்வான பலன்களை அதாவது நல்ல அல்லது கெட்ட பலன்களை தரும்.
அதாவது வக்கிரம் ஆன கிரகங்கள் நீசபங்கமடைந்து பலமடைந்த கிரகங்களைப்போல நின்று நிதானமாக பலன்களை
வாரிவழங்கும்.
வக்கிரமடைந்த கிரகங்கள் எதிர்தன்மையை அடைவதாக மகரிசி பராசரமுனிவர் கூறியுள்ளாரே அதற்கு பொருள் கூறும்போது
நல்ல கிரகங்கள் வக்கிரம் ஆனால் தீயபலன்களும் தீயகிரகங்கள் வக்கிரம் ஆனால் நல்ல பலன்களும் நடைபெறும் என்று
புரிந்திக்கொண்டால் புதன் நம் புத்தியை கெடுத்து வைத்துள்ளான் என்று பொருள்.
பலவீனமடைந்த கிரகங்கள் வக்கிரமடைந்தால் பலமாகவும் பலமான ( உச்சம்) கிரகம் வக்கிரமானால் பலவீனமும் ஏற்படும்
என்பதுதான் உண்மை.
சூரியனுக்கு அருகில் உள்ள புதன் சுக்கிரன் வக்கிரமடைவால் அளவுக்கு மீறிய காரகத்துவ பலன்களை அடைகிறார்கள்.
சுக்கிரன் வக்கிரமடையும்போது நல்ல இடங்களில் யோகத்துவம் பெறவேண்டும்.
இதைபற்றியும் யோகி அவயோகி, திதிசூன்ய கிரகங்கள் வக்கிரமடையும்போது உண்மையில் எதிர்தன்மை பெறுகிறதா
என்பதையும் அடுத்த தொடரில் பார்ப்போம்.

வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்:


ஏற்கனவே வக்கிரம் பற்றி ஆறு பதிவுகள் பதிவுசெய்துள்ளேன்.அதற்கி பல உதாணஜாதகங்களையும் பதிவிட்டு விளக்கம்
அளித்துவிட்டேன். இருந்தாலும் நமது குழுவிலுள்ள பலர் வக்கிரம் பற்றியே நிறைய சந்தஏகங்களை முகநூலில் எனது
messenger ல் கேட்டுவருவதால் இந்த " சுருக்கமான மறுபதிவு":
நீங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டிய கொள்கைகள் மூன்று. அவை:

1. எந்த மூலநூல்களிலும் கிரகங்கள் வக்கிரமடைந்தால் பலமிழப்பதாக கூறவே இல்லை. அது சட்பலம் என்னும் ஆறுவித
பலங்களில் ஒன்று. வக்கிரம் அடையும் கிரகம் உச்சத்திற்கு சமமான மகாகவி காளிதாசர் தனது ஒப்பற்ற மூலநூலான
"உத்தரகாலாமிர்தம்" என்ற பொக்கிஷத்தில் விளக்கிவிட்டார். உச்சம் பெற்ற கிரகங்கள் நீசத்திற்கு சமமான வலிமை
பெறுமென்றும் நீசம் பெறும் கிரகம் உச்சத்திற்கு சமமான வலிமைபெறுமென்றும் காளிதாசர் கூறியுள்ளதை மட்டுமே
கவனத்தில் கொள்ளவேண்டும். மூலநூல் அறிவும் , ஜோதிடஞானமும், அனுபவமும் ஒருங்கிணைந்த ஜோதிடர்களால் மட்டுமே
இதைபுரிந்துக்கொள்ள முடியும். வேண்டுமென்றால் முகநூல் பதிவுகளில் சென்று ஜோதிடர்களின் வக்ரபலம் பற்றிய
பதிவுகளை படித்துவிட்டு ஆய்வுசெய்துபாருங்கள். நான் கூறுவது புரியும். பல ஜோதிடர்கள் வக்ரம் பற்றி தவறான அனுபவமும்
எண்ணமும் கொண்டிருப்பதோடு பலரையும் குழப்பியும் வருகின்றனர்.

2. ஆட்சிபெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன பலனளிக்கும் என்ற பலனையும் ஜோதிடர்கள் மூலநூல்களிலும் அனுபவம்
இல்லை, வக்கிரம் பெற்ற கிரகங்கள் என்னசெய்யும் என்ற பல ஜாதகங்களில் ஆய்வுமனப்பான்மையும் இல்லை. சிலர்
நீசபலனளிக்கும் என்று எழுதிவருகின்றனர். இன்று பணத்திற்காக போதிய ஜோதிட ஞானம் இல்லாமல் இரண்டு நாள்களில்
ஜோதிடம் கற்றுத்தருவதாக கூறப்படும் வகுப்புகளில் கற்றுக்கொண்டு ஜோதிடம் பார்க்கவரும் ஜோதிடர்களால்தான் இவ்வாறு
நிகழ்கிறது. ஆட்சிபெற்ற கிரகம் உச்சத்திற்கு சமமான பலனையே தரும். ஆட்சி என்பது அரைபலம் . நட்பு என்பது கால்பலம்.
வக்கிரம் என்பது ஒரு எதிர்மறை வலிமையை அடைவதாக பராசர முனிவர் தெளிவாகவே விளக்கிவிட்டார். எனவே வலிமை
குறைந்த கிரகங்கள் வலிமை பெறுவதும், வலிமையான கிரகங்கள் வலிமை இழப்பதும் ஜோதிடவிதி. முழுமையான என்பது
உச்சம். உச்சத்திற்கு மேல்ஒரு வலுமை உண்டா?

வக்கிரம் பெறும் எல்லா கிரகங்களும் அதன் அதிகபட்ச வலிமையான உச்ச வலிமையை பெறும் ,பெறத்தான் செய்யும். ஆனால்
உச்சம்பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் அதற்கு எதிர்மறைபலனாக நீசபலனைதான் பெறும். இதன் நாம் புரிந்துக்கொள்ள
வேண்டியது.

2. வக்கிர கிரகங்களை பற்றி புரிந்துக்கொள்வதில் மற்றுமொரு உண்மை உள்ளது. வக்கிரம்பெறும் கிரகம் பாவியா சுபரா
என்பதை பொருத்தே பலன் நடைபெறும். அதாவது பாவக்கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தீமையை அதிகம் தரும்.
சுபக்கிரகங்கள் வக்கிரம் சுப்பலனை அதிகம் தரும்.ஏனென்றால் தீயபலனைதரும் சனி செவ்வாய் போன்ற பாவிகள் வக்கிரம்
பெற்றால் தீயபலனை அதிகமாக தரும். சனி செவ்வாய் போன்ற பாவிகள் சுபரோடு சேர்ந்தால் மட்டுமே நன்மையை தரும்
என்று மகாகவி காளிதாசர் கூறியுள்ளார்.குரு ஆதித்ய குருஜி ஐயா அவர்கள் பாவகிரகங்கள் சுபத்துவத்தை அடைந்தால்
மட்டுமே பாவக்கிரகங்கள் நற்பலனை தரும் என்று கூறியுள்ளார். எனவே பாவக்கிரகங்கள் சுபத்துவமின்றி வலிமைப்பெறுவது
நல்லதல்ல என்பது எனது கருத்து.
மன்னர் கல்யாணவர்மர் சாராவளியில் சுபர்கள் வக்கிரம் அடைந்து தசா நடத்தினால் ராஜ்ய பதவி,செல்வம், சுகம், வாகனம்
அளிக்குமென்றும் ,பாவக்கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தேச சஞ்சாரம், அலைச்சல், துக்கம்,
வீண்பயம் தரும் என்றும் , வேலையின்றி சுற்றி வருவதாகவும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

பலதீபிகை ஆசிரியர் மந்தரேஸ்வர முனிவர் வக்கிரம் அடையும் கிரகங்கள் நல்லபலனையே தரும் என்று பொதுபலனாக
கூறியுள்ளார். ஆனால் இன்று வக்கிரம் அடையும் கிரகங்கள் தீமையை தரும் என்று சில ஜோதிடர்கள் கூறிவருவது
பொதுபலன் மட்டுமே.

3. இதே வக்கிரபலனையொட்டியே திதிசூன்ய தோசம் அடையும் கிரகங்கள் , யோகி அவயோகி கிரகங்கள் வக்கிரம்
அடைந்தால் அடையும் மாறுபாடான பலன்களை துல்லியமாக கணிக்கவும் வக்ரபல சூட்சுமத்தை பற்றி துல்லியமாக தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.

திதி, யோகம், கரணம், நாள், நட்சத்திரம் ஆகிய ஐந்து உறுப்புகளை கொண்டதே பஞ்சாங்கமாகும். ஜோதிட மூலநூல்கள்
இதைப்பற்றி பெரும்பாலும் விளக்குவதில்லை. ஏனென்றால் அவை கிரகபலன்களை பொதுவாக விளக்குபவை.
அக்கிரகங்களின் சஞ்சாரத்தை கூறும்மூலநூல்களுக்கு எல்லாம் மூலநூல் . இதைப்பற்றி நான் ஏற்கனவே ஆதாரத்தோடு
விரிவாக விளக்கியுள்ளேன்.மேசமுதல் சூரியனின் பாகையோடு சந்திரனின் பாகையை கூட்டினால் நித்திய நாமயோகமர,
கழித்தால் திதி. நிறைய பேருக்கு ராஜயோகங்கள் உள்ளிட்ட பல யோகங்கள் யோகபங்க விதிகள் இல்லாதபோதும்
யோகமளிக்காதநிலைக்கு இந்த யோகி அவயோகி, திதிசூன்யம் மட்டுமே காரணம்.
பொதுவாக திதிசூன்ய ராசியாதிபதியும், திதிசூன்ய ராசியில் உள்ள கிரகங்களும் நல்லபலனை அளிப்பதாக பல ஜோதிடர்கள்
பொதுவாக , (பொதுபலன்) கூறிவருவது நோக்கத்தக்கது.

அதாவது அவயோகி மற்றும் திதிசூன்ய கிரகங்கள் வக்கிரம் அடைவதன் மூலம் மீண்டும் பாவத்துவத்தை அடைந்தால்
மட்டுமே திதிசூன்ய , அவயோக பலன்கள் மாறி யோகமளிக்காது. இதை பற்றி தனியாக விளக்குகிறேன். விதிகளுக்கு
விதிவிலக்குகள் நிரம்பியதுதான் ஜோதிடம். மூலநூல்களில் ராஜயோக விதிகளை விட ராஜயோக பக்க விதிகளே அதிகம்.
ஆனால் இன்றைய ஜோதிடர்களில் பெரும்பான்மையானோர் ராஜயோகபங்க விதிகள் எதையும் தெரிந்துகொள்வதில்லை
என்பதை அவர்களது எழுத்துக்கள் மூலம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். ஜோதிடக்கலை அழியாமலும் , துல்லியமாகவும்
போதிக்க வேண்டும் என்றால் விதிவிலக்குகளை அதிகம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.இதில் உள்ள நிறைகுறைகளை
ஜோதிட ஆசான்களும் , குருமார்களும் குறிப்பிட்டு பதியுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

You might also like