You are on page 1of 34

ஆண்டு 5

நான் ஒரு நீர்ப்புட்டி

நான் மனிதனால் உருவாக்கப்பட்டேன். நான் பல வடிவங்களிலும்

வர்ணங்களிலும் இருப்பேன். என்னை மனிதர்கள் பயன்படுத்துவர். குறிப்பாகப் பள்ளி

மாணவர்கள் என்னை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். என்னுள் நீர் இருக்கும்.

இப்பொழுது தெரிகிறதா நான் யாரென்று ? ஆம், நான்தான் நீர்ப்புட்டி.

நான் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு நீர்ப்புட்டி தொழிற்சாலையில் பிறந்தேன்.

என்னுடன் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான நண்பர்களும் பிறந்தார்கள். நான் உருளை

வடிவில் இருப்பேன். நான் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இருப்பேன். என்னுள்

இருக்கும் நீர் வெளியாகாமல் இருக்க என் தலைப் பகுதியில் வட்டமான மூடியைப்

பொருத்தியுள்ளனர்.

ஒரு நாள் என்னையும் என் நண்பர்களையும் பெட்டியில் அடுக்கி வைத்தனர்.

பிறகு, எங்களைக் கனவுந்தில் ஏற்றினர். அப்போது ஓட்டுனர் ஒருவர் கோத்தா திங்கியில்

உள்ள எக்கோன்சேவ் எனும் பேரங்காடிக்குக் கொண்டு செல்வதாக உரையாடிக்

கொண்டிருந்தது என் செவிக்கு எட்டியது. கனவுந்தும் நகர்ந்தது. நாங்கள் இருட்டில்

இருந்ததால் கிடுகிடுவென பயத்தால் நடுங்கினோம்.


ஆண்டு 5

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்களை அப்பேரங்காடியில் இறக்கினர்.

அப்பேரங்காடியின் உரிமையாளர் பணம் கொடுத்து வாங்கினார். அதன் பிறகு,

அக்கடையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் என்னையும் என் நண்பர்களையும் ஒரு

நீண்ட கூடையில் அடுக்கி வைத்தார். எங்கள் மீது ரி.ம 25 ஒட்டப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அப்பேரங்காடிக்கு அதிகமானோர் வந்து பொருட்களை

வாங்கிச் செல்கின்றனர். ஆனால், இதுவரை நானும் சில நண்பர்களும் யாருடைய

கண்களுக்கும் தென்படாமல் அங்கேயே உள்ளோம். ஒரு நாள் சிறுவன் ஒருவன் தன்

அம்மாவோடு அப்பேரங்காடிக்கு வந்தான். அவனுடைய நீர்ப்புட்டி உடைந்ததால்

புதியதாக ஒன்றை வாங்குவதற்கு அங்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன்,

இறுதியில் காந்தம் இரும்பைக் கவர்வது போல நான் அவனுடைய மனதை ஈர்த்தேன்.

நான்தான் வேண்டும் என்று குரங்குப் பிடியாக அவனுடைய அம்மாவிடம் பிடிவாதம்

பிடித்தான். அவரும் வேறுவழியில்லாமல் என்னைப் பணம் கொடுத்து வாங்கினார்.

அச்சிறுவன் மிகவும் உச்சிக் குளிர்ந்தான்.

என் எஜமான் என்னைச் சுத்தமாகக் கழுவி காய வைத்தார். மறுநாள் காலையில்

பள்ளிக்குச் செல்லும் போது என்னுள் நீரை நிரப்பி எடுத்துச் சென்றார். நான் பார்ப்பதற்கு

அழகாக இருந்ததால் அவருடைய நண்பர்கள் பலர் என் அழகை இரசித்தனர். என்

எஜமான் தன் நண்பர்களிடம் என் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.


ஆண்டு 5

ஒவ்வொரு நாளும் என் எஜமான் என்னை மறவாமல் பள்ளிக்குக் கொண்டு செல்வார்.

அவருக்குத் தாகம் எடுக்கும் போது என்னுள் இருக்கும் நீரை அருந்திக் கொள்வார்.

மேலும், பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றாலும் என்னைக் கையோடு கொண்டு

செல்வார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டாலும் என்னுள்

நீரை நிரப்பிக் கொண்டு எடுத்துச் செல்வார். என் எஜமான் கண் இமை காப்பது போல்

என்னை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறார்.

வருடங்கள் உருண்டோடின. நானும் நிறம் மாறினேன். என் எஜமான்

இடைநிலைப் பள்ளிக்குச் செல்லவிருப்பதால் என்னை மறுபயனீடு செய்யும்

குப்பைத்தொட்டியில் வீசி புதிய நீர்ப்புட்டி ஒன்றை வாங்கினார். என் வாழ்க்கை

இத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அவ்வழியே

அட்டைகளையும் புட்டிகளையும் சேகரித்துக் கொண்டிருந்த ஓர் ஏழை முதியவர்

என்னையும் அவர் வைத்திருந்த நெகிழியில் போட்டார். வீட்டிற்குச் சென்றதும்

அம்முதியவரும் அவருடைய பேரனும் நெகிழியில் இருந்த புட்டிகளைத் தரம்

பிரித்தனர். அப்போது அச்சிறுவன் நான் இன்னும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால்,

அவன் என்னைப் உபயோகிக்க ஆரம்பித்தான்.


ஆண்டு 5

நான் ஒரு பாடப்புத்தகம்

‘அன்று வள்ளுவன் கையிலே நான் ஓர் எழுத்தோலை, இன்று மாணவன்

கையிலே நான் ஒரு பாடப்புத்தகம்” .ஆம், மாணவர்களே! நான்தான் ஒரு பாடப்புத்தகம்.

வானவில்லின் ஏழு வர்ணங்கள்தான் என் முகப்பின் அடையாளங்கள்.

நான் நனிச்சிறந்த ஆசிரியர்களின் எழுத்து வண்ணத்தில் உதித்தேன். என்னுடன்

பல உடன்பிறப்புக்கள் பிறந்தனர். மலேசியாவின் பிரபலமிக்க உமாபதிப்பகம் என்னை

அச்சடித்தது. “தமிழ்மொழி ஆறாம் ஆண்டு” என்று தலைப்பிட்டு என்னை

வெளியிட்டனர். என் மேல் ரிம.12.00 விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும்


ஆண்டு 5

மலேசியக்கல்விஅமைச்சால் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவேன் என்பதை

அறிந்தேன்.என் உடன்பிறப்புகள் புடைசூழ என்னை கனவுந்தில் ஏற்றினர். கருவறையில்

காத்திருக்கும் சிசுவைப்போல நாங்கள் கனவுந்தில் அடைக்கப்பட்டோம்.

கனவுந்தின் கும்மிருட்டு என்னைக் கலங்கவைத்தது. ஓடிக்கொண்டிருந்த கனவுந்து

திடீரென்று ஓரிடத்தில் நிற்பதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு பெட்டியாகக் கீழே

எங்களை இறக்கி வைத்தனர். “ஜாசின் தமிழ்ப்பள்ளி” என்று சுவரில் எழுதப்பட்ட

எழுத்துகள் என்னைப் பணிவாய் வரவேற்றன. ஜாசின் தமிழ்ப்பள்ளியின் கம்பீரமான

தோற்றம் என்னை மகிழ்ச்சிப்படுத்தியது.தமிழில் செப்பிக்கொண்டே

என்னைப்பதிவேட்டில் பதிந்தார் ஆசிரியை திருமதி. வாசுகி.

ஒவ்வொரு மாணவரும் வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை

வாங்கிச்சென்றனர். என் இளம்தேகத்தை ஒரு கரம் பற்றி நிற்பதை உணர்ந்தேன்.

முத்துபற்கள் பளிச்சென சிரிக்க, கரங்கள் இரண்டும் என்னைத் தழுவிப்பார்ப்பது ஆறாம்

ஆண்டு மாணவியான தமையந்தி என்பதை உணர்ந்தேன். அவர்தான் என் எஜமான்

என்றுபிறகுதான் தெரியவந்தது. என் மேனிக்கு மேலாடையாக நெகிழி அட்டையை

அணிவித்தாள் மாணவி தமையந்தி. தமிழ்மொழி தருணத்தின்போது என்னை மறவாமல்

பயன்படுத்துவாள். என்னுள் இருக்கும் கதைகள்,கவிதைகள்,தகவல்களைப்படித்து


ஆண்டு 5

இன்புறுவாள். என் மேனியின் ஏடுகளை வேகமாக புரட்டும்பொழுது எனக்கு வலி

ஏற்படும்.அதனை நான் அவளுக்காகப் பொறுத்துக்கொள்வேன்.

கண்ணின் இமைக்காப்பதுபோல் என்னை அவள் பார்த்துக்கொள்வாள். என்

மேனியில் ஒரு கிறுக்கல்கள்கூட விழாமல் பாதுகாக்கும் அவளின் அன்பு என்னைச் சில

வேளைகளில் கிரங்கடித்துவிடும்.என்னையும் என் எஜமானையும் எவ்வேளையும்

பிரித்துவிடாதே இறைவா என்று நான் இறைஞ்சும் வேளையில்தான் அந்தத் துயரச்

செய்தி என் காதுகளுக்கு எட்டியது. “யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிந்தவுடன் உங்கள்

பாடப்புத்தகங்களை என்னிடம் ஒப்படைத்துவிடவேண்டும்” என்று ஆசிரியை திருமதி.

வாசுகியின் கட்டளை என்னை நிலைகுழையவைத்தது.

ஓராண்டுக்கு மட்டும்தான் என் எஜமான் என்னைக் குத்தகைக்கு வாங்கியுள்ளார்

என்பதைஉணர்ந்தேன் நான். மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டு வாழும்

நோயாளியைப்போல் என் எஜமானின் குத்தகை முடிவுறும் நாட்களை

எண்ணிக்கொண்டு வாழ்கிறேன்.

நான் ஒரு காலணி

கண் விழித்தேன். கண்கள் என் உரிமையாளரைத் தேடின. ஒரே இருட்டு. என்

நெஞ்சம் பயத்தால் படபடத்தது. இருட்டிலிருந்து எப்படியாவது வெளியே வர


ஆண்டு 5

வேண்டும் என்று தவித்தேன். அங்கும் இங்கும் முட்டிக் கொண்டேன். நான் குப்பைத்

தொட்டினுள் இருப்பதை உணர்ந்தேன். என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன.

என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன். நான் ஒரு காலணி.

நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர் அடிடாஸ். மல்லிகைப் பூ

போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.

அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன்

அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு ஒருபுறம். என்னுடன் ஆயிரக்கணக்கான

நண்பர்களும் பிறந்தார்கள். ஒரு நாள், ஷா ஆலமிலிருந்து குளுவாங் எனும் ஊருக்கு

ஒரு கனரக வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டோம். அங்கு ஒரு பெரிய கடையில்

எங்களை இறக்கினார்கள். அக்கடைக்காரர் எங்களைக் கண்ணாடி அலமாரியில்

முறையாக அடுக்கி வைத்தார். அந்தக் கடைக்குப் பலர் வந்து சென்றனர். இப்படியே பல

நாட்கள் ஓடின. நான் மிகவும் மகிழ்ச்சியாக என் நண்பர்களுடன் அளவளாவிக்

கொண்டிருந்தேன். நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.

ஒரு நாள், ஒரு சிறுமி தன் தாயுடன் அங்கு வந்தாள். என்னைக் கூர்ந்து

நோக்கினாள். தன் தாயின் காதில் கிசுகிசுத்தாள். அவர் அந்தக் கடைக்காரரிடம் என்னைச்

சுட்டிக் காட்டி என் மதிப்பை விலை பேசினார். இறுதியில், என்னை விலைகொடுத்து

வாங்கினார். என் கன்னத்தில் ஏதோ வழிந்தோடியது போல் இருந்தது. தொட்டுப்

பார்த்தேன். சந்தேகமில்லை. அஃது என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர்தான்.

என் சகோதரிகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கவலையுடன் அச்சிறுமியுடன்

சென்றேன். என் உரிமையாளரின் அரவம் கேட்டு நான் எண்ண அலைகளிலிருந்து

விடுபட்டேன்.
ஆண்டு 5

என் உரிமையாளர் ஒவ்வொரு புதன்கிழமையும் என்னைத் தரமான ஷாம்புவால்

குளிப்பாட்டுவார். வெள்ளைப் பூசி என்னை வெயிலில் உலர வைப்பார். இதமான

வெயிலின் ஒளியில் நான் குளிர்காய்ந்து கொண்டிருப்பேன். நான் எப்பொழுதும்

தூய்மையாக இருப்பேன். என் உரிமையாளர் என்னை எங்குச் சென்றாலும் என்னைத்

தம் காலில் அணிந்து கொள்வார். நானும் அவருக்கு இரவு பகல் பாராமல் உழைத்தேன்.

எனக்கு வயது ஏறிக்கொண்டே போனது. வயதானதால் அடிக்கடி உடல் நலம்

சரியில்லாமல் இருந்தது. இதை என் எஜமானியான அச்சிறுமி கவனித்தார். நான்

இன்னும் பல நாட்களுக்கு உழைக்க மாட்டேன் என்று முடிவு செய்து அருகில் உள்ள

ஒரு குப்பைத் தொட்டியில் வீசினார். அவர் என்னை வீசிய வேகத்தில் என் தேகம்

முழுவதும் காயம்பட்டு, வேதனையில் துடிதுடித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா

என் பரிதாப நிலையை!


ஆண்டு 5

நான் ஒரு தொலைக்காட்சி

‘நான் தான் தொலைக்காட்சி.’ என்று கம்பீரமாக சொல்லும் நிலைமையில் நான்

இப்போது இல்லை. நான், அழுது அழுது நொந்து போய்விட்டேன். அது மட்டும்

இல்லாமல், நான் யாருமில்லாத அனாதை வேறு. முன்பு, அந்தக் கறுப்பு நிற அலமாரி

மீது கம்பீரமாக வீற்றிருந்தேன். இப்போது, சொல்லவே கவலையாக இருக்கிறது. மிகவும்

அசுத்தமாக, பயன்படாதப் பொருளாக ஆகிவிட்டேன். குப்பைத்தொட்டியில்

கிடக்கிறேன்.

என்னை முதன் முதலில் ‘பூச்சோங்கில்’ உள்ள ஒரு தொழிற்சாலையில்

செய்தார்கள். அதுதான் என் பிறந்த இடமும் கூட. பிறகு நான் விற்பனைக்கு வந்தேன்.

வந்த சில வாரத்தில் ஒருவர் என்னை வாங்கிச் சென்றார். என்னை அவர் அழைத்துச்

செல்லும்போது அவரின் அன்பான தொடு உணர்வு எனக்குப் பேரின்பத்தை அளித்தது.

அவர் வீட்டில் என்னை ஒரு பெரிய அலமாரி மீது வைத்தார்.

அவரும், அவர் குடும்பத்தாரும் என்னை விரும்பிப் பார்ப்பார்கள். ஆடல், பாடல்,

நாடகம், திரைப்படம், என என்னைத் துருவித் துருவி பார்ப்பார்கள். நான்

அனைத்திற்கும் ‘ஆமாம் சாமி’ போட்டு அவர்களுக்கு உழைத்தேன். மாதம் முடிந்த

பின்பு மின்சார கட்டணம் ‘கிடு கிடு’ என ஏறி இருப்பதைப் பார்த்தும் அவர்கள்

கவலைப் பட்டதாக தெரியவில்லை. நானும், விசுவாசமாக உழைத்தேன். அதற்கு வேட்டு

வைக்க ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு நாள் வீட்டுக்காரர் தன் குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்று விட்டார். தன்

பெரிய மகன் மட்டும் வீட்டைக் கவனித்துக் கொள்ள வீட்டிலேயே விட்டு சென்று

விட்டார். அவனோ, தான் வாங்கி வந்த திருட்டு ‘விசிடி’ படத்தை வாங்கி என்

வயிற்றுனுள் போட்டான். முதலில் நான் அது என்ன படம்” என பார்த்தேன். ஐயோ! அது
ஆண்டு 5

ஆபாச படம். உடனே அதனை நான் படம் வெளியே வராதபடி சில கோளாறு

உள்ளதாக நடித்தேன். அவன் மீண்டும் மீண்டும் என்னைத் தட்டி தட்டிப் பார்த்தான். நான்

அவனுக்கு வழி விடவில்லை.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. என்னைத் தூக்கிக் கீழே போட்டான். நான்,

‘படார்’ என விழுந்தேன். எனக்குச் செம்ம அடி. என் உறுப்புகள் சில கிழே விழுந்து

சிதறின, சிறிது நேரத்தில் நான் மயங்கி விழுந்தேன்.

என்னை யாரோ எழுப்புவது போல் உணர்ந்தேன். சற்று கண்விழித்தேன். என்

முதலாளிதான் என்னைத் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மட்டும்

வாயிருந்தால் அவர் மகன் செய்த சேட்டைகளை ஒன்று விடாமல் சொல்லிருப்பேன்.

எனக்கு மட்டும் கை இருந்தால் அவனை ஓங்கி அடித்திருப்பேன். முடிந்தால்

போலிஸ்காரரைக் கூப்பிட்டு அவனைச் சிறைக்கு அனுப்பி இருப்பேன். ஆனால், ஆ…

ஆ… என் கண்கள் மீண்டும் சொருகுதே! அவனை அடுத்த பிறவியில் பார்த்துக்

கொள்கிறேன். கடவுளிடம் சென்று வருகிறேன். பாய்,,,பாயி…


ஆண்டு 5

நான் ஒரு கதைப்புத்தகம்

அந்த மாணவியின் கைகளில் நான் தவழ்ந்து கொண்டிருந்தேன். அவள் ஒவ்வொரு

பக்கமாக என்னைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னைக் கடையிலிருந்து

வாங்கிய நாள் முதல் அவளுக்கு ஓய்வு நேரங்களில் துணையாக நான் மட்டுமே

இருந்தேன்.

மலேசியாவின் தலை சிறந்த எழுத்தாளரான திரு அருணன் அவர்களின்

கற்பனையில் நான் மலர்ந்தேன். நான் சிறுவர்களுக்கான நீதிக் கதைகள் எனப்

பெயரிடப்பட்டேன்.என்னுடலில் மொத்தம் 81 பக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

ஒரு நாள் அக்கடைக்கு ஒரு மாணவி தன் தாத்தாவுடன் வந்திருந்தாள். அவள்

அங்குள்ள புத்தகங்களை எல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவள் என்னை

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் இவளாவது என்னை

வாங்குவாளா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பின் என்னை எடுத்துச் சென்று அவள் தாத்தாவிடம் என்னை

வாங்கித் தருமாறு கேட்டாள். அவள் தாத்தாவும் அதனை வாங்கித் தந்தார்.


ஆண்டு 5

அன்று முதல் அவள் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். எனக்கு நெகிழி

அட்டையைப் போட்டு என் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தாள். ஒரு நாள் அவள்

என்னைப் படித்துக் கொண்டிருக்கும் போது அவள் தாயார் அவளை அழைக்கும் ஓசை

கேட்டு சமையலறைக்கு ஓடினாள். அவ்வேளையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த

அவளது இளைய தங்கை என்னை நோக்கி வந்தாள்.

என்னைக் கையில் எடுத்து அவள் முன்னும் பின்னும் திருப்பி பார்த்தாள். அவள்

என்னை என்ன செய்யப் போகிறாளோ என்று என் உள்ளம் படபடத்தது. நான் என்

கண்களை இறுக மூடிக் கொண்டேன். அப்பொழுது யாரோ என்னைப் பிடித்து

இழுப்பதை உணர்ந்தேன். “கடவுளே! கடவுளே!” என்று முணுமுணுத்தேன். அப்பொழுது

அம்மாணவியின் குரல் கேட்க மெல்ல கண் திறந்து பார்த்தேன். நல்ல வேலை! எந்த

அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் அவள் என்னைத் தன் தங்கையிடமிருந்து

காப்பாற்றிவிட்டாள். அன்று முதல் அவள் என்னை எங்கும் தவறவே விடுவதில்லை.

என்னைப் படித்து முடித்ததுமே மறவாமல் கண்ணாடி பேழைக்குள் வைத்துக் கண்ணை

இமை காப்பது போல் காத்து வருகிறாள்.


ஆண்டு 5

உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைத்தால்……

உருவத்தை மறைக்கும் ஆற்றல் கிடைப்பது அரிதாகும்.அவ்வாறு கிடைத்தால் அரிய

பல காரியங்களைச் செய்ய முடியும். உருவத்தை மறைக்கும் ஆற்றலைக்

நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவதே சிறப்பாகும். .தீமையான செயலுக்கு

அவ்வாறான ஆற்றலைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறாகும்.எனக்கு அப்படியோர்

ஆற்றல் கிடைத்தால் சொல்லாலான மகிழ்ச்சியடைவேன்.

இவ்வுலகில் இன்று பல குற்றச்செயல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.பெரியவர்

முதல் சிறியோர் வரை பல தீமை தரும் செயல்களைச் செய்து வருகின்றனர்.இதனால்

பொது மக்களுக்கும் நாட்டுக்கும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன.எனக்கு உருவத்தை

மறைக்கும் ஆற்றல் கிடைத்தால் இவற்றைத் தடுக்க முயற்சி செய்வேன்.

பொதுமக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் போதைப் பொருள்களை

ஒழித்தே ஆக வேண்டும்.ஆனால்,மிகவும் இரகசியமாகச் செயல்படும் தீய சக்தியினர்

காவல் துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுத் தப்பித்து


ஆண்டு 5

விடுகின்றனர்.அவர்கள் செயல்படும் இடங்களுக்கு மாயமாய்ச் சென்று தகவல்களை

அறிந்து காவல்துறைக்குத் தெரிவிப்பேன்.இதன் மூலம் நாட்டின் இளையோரைக்

கெடுக்கும் போதைப்பொருள் விநியோகத்தை முற்றாகத் துடைத்தொழிக்கப்

பாடுபடுவேன்.

கள்ளக் குடியேறிகளாலும் நம் நாட்டிற்குப் பல சங்கடங்கள் ஏற்பட்டு

வருகின்றன.இவ்வாறு ஆயிரக்கணக்கில் கள்ளத் தோணிகள் மூலம் கொண்டு வரப்படும்

இவர்களைக் கட்டுப்படுத்தவில்லையெனில் நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம்

ஏற்படுவது திண்ணம்.எனவே,எனக்குள் உருவத்தை மறைக்கும் ஆற்றலைப்

பயன்படுத்தி அவர்கள் நாட்டுக்குள் நுழையும் இடங்களைக் கண்காணித்துக்

காவல்துறைக்கு உதவுவேன்.

இதுமட்டுமல்லாது,கடலில் பயணம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்

கடற்கொள்ளையர்களைக் கண்காணிப்பேன்.அவர்கள் பயணிக்கும் திசையினை

மாயமாய் மறைந்து நோட்டமிட்டுக் கடல் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல்களை

உடனுக்குடன் தெரிவிப்பேன்.இதன் மூலம் கடற்பயணிகள் நிம்மதியாகப் பிராயணம்

செய்வதை உறுதி செய்வேன்.

இவ்வாறு நாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு உருவத்தை

மறைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வேன்.அத்தகைய ஆற்றல்

கிடைத்தால்,நான் பேரின்பம் அடைவதோடு இறைவனுக்கு நன்றி மாலையினைச்

சமர்ப்பிப்பேன்.
ஆண்டு 5

நான் ஒரு மருத்துவரானால்….

உலகில் பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு

தொழிலைத் தங்கள் வாழ்க்கை இலட்சியமாக கொண்டிருப்பர். அத்தகைய கனவுகளில்,

அவர்கள் பலவாறாக மிதந்திருப்பர். அத்தகைய கனவு நனவாகும் போது, வாழ்வே

அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அப்படிப்பட்ட ஒரு கனவு எனக்கும் உண்டு. நான் ஒரு

மருத்துவரானால்……….

எனக்கு இத்தகைய கனவு தோன்றுவதற்கு முக்கியக் காரணமாய் இருப்பவரே என்

மாமா டாக்டர் மதியழகன் தான். மிகப் பெரிய வீடு, அழகான நவீன வாகனம்,

சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு போன்றவற்றைக் காணும் போது,


ஆண்டு 5

நானும் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்ற வைராக்கியம் என்னும் உறுதி பெற்றுக்

கொண்டே வருகிறது.

நான் ஒரு மருத்துவரானால், முதலில் ஒரு அரசாங்க மருத்துவமனையில்

பணிபுரிவேன். பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுடன் பழகி, அவர்களின்

பிரச்சினையைக் கண்டறிவேன். அவர்களை அன்பாக விசாரித்து, நோய்க்கேற்ற மருந்து

கொடுப்பேன். அவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பேன். கைராசிக்கார மருத்தவர்

என அனைவரும் போற்றும் வண்ணம் நடந்து கொள்வேன்.

அடுத்து, நான் சொந்தமாக ஒரு மருத்துவ மையம் திறப்பேன். அது ஒரு நிபுணத்துவ

மையமாக இருக்கும். அங்குப் பலவித நோய்களுக்கும் நிபுணர்கள் இருக்கும் வண்ணம்

பார்த்துக் கொள்வேன். ஏழைகளுக்கு அங்குச் சிறப்புக் கழிவில் மருத்தவ வசதிகள்

கிடைக்கச் செய்வேன். மிக ஏழைகளாக இருப்பின், இலவச மருத்தவ வசதிகள்

கிடைக்குமாறு பார்த்துக் கொள்வேன். என் மருத்துவ நிபுணத்துவ மையத்தில், பல சிறந்த

மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவேன்.

நான் ஒரு மருத்துவரானால் பள்ளிகளுக்கு இலவச மருத்தவ பரிசோதனைகளை

அடிக்கடி மேற்கொள்வேன். கண், பல், தோல் இன்னும் ஏனைய பிரச்சினைகள் உள்ள

மாணவர்களுக்கு இலவச மருத்தவ வசதிகள் வழங்குவேன். நான் சொந்தமாக

அறவாரியம் ஒன்றை நிறுவி, இத்தகைய மாணவர்கள் இலவச மருத்தவ வசதிகள்

பெறுவதை உறுதி செய்வேன்.

நான் ஒரு மருத்துவரானால், என்னை உயர்த்திய சமுதாயத்தையும் மறக்க

மாட்டேன். என் அறவாரியத்தின் வழி, பள்ளிக்கூடம், கோயில் போன்றவற்றிற்கு

என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத ஏழை


ஆண்டு 5

மாணவர்களுக்கு, என் அறவாரியத்தின் வழி கல்வி உபகாரச் சம்பளம் வழங்குவேன்.

அவர்களும் என் போல் மருத்துவர்களாகி, என் வாழ்க்கையில் உயர உதவி புரிவேன்.

மருத்துவ தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் என் வாழ்க்கை நிலையை

உயர்த்திக் கொள்வேன். பெரிய வீடு, விலையுள்ள வாகனம் போன்ற வசதிகளைப்

பெற்று சமுதாயத்திலும் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவேன். ‘செல்வர்க்கழகு

செழுங்கிளை தாங்குதல்’ என்பதற்கொப்ப என் உறவினர்களுக்கும் பொருளாதார

வசதிகள் ஏற்பாடு செய்வேன்.

நான் ஒரு மருத்துவரானால் என் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வேன்.

என்னுடைய கனவு நிறைவேற கடுமையாக படிப்பேன். என் கனவுக்கான பாதை

கல்வியே என நான் உணர்வேன். எனவே, கல்வியில் என் முழுக்கவனத்தையும்

கல்வியில் செலுத்தி வருகிறேன்.

எனக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால்…..


ஆண்டு 5

அன்று இரவு உணவு உண்டபின் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த

மந்திரப்படத்தை என் பெற்றோருடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படத்தில்

மந்திரக்கிழவி ஒருத்தி தன்னிடம் உள்ள ஒரு மந்திரக்கோலால் பலவித சாகசங்களைத்

செய்து கொண்டிருந்தாள். அவள் செய்த மந்திரச் செயல்கள் என் விழிகளைத்

தொலைக்காட்சி பெட்டியிலிருந்து அகற்ற மறுத்தன. அத்தகைய மந்திரக்கோல் ஒன்று

எனக்குக் கிடைத்தால்….கற்பனைகள் சிறகைக் கட்டிக் கொண்டு கேட்பாரற்று பறக்கத்

தொடங்கின.

எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால், முதலில் என் தாயாரின் நோயைப்

போக்குவேன். சில காலமாகவே என் தாயார் ஏதோ ஒரு கடுமையான நோயால்

பாதிக்கப்பட்டு, நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். என்னைப்

பெற்று வளர்த்த பேசும் தெய்வம் பழைய நிலையை அடைந்து, மீண்டும் எங்களிடம்

கலகலப்பாகப் பழக இம்மந்திரக்கோலைப் பயன்படுத்திக் கொள்வேன்.

அடுத்து, ஓர் அழகான பெட்டியை வாங்குவேன். அப்பெட்டியில் எப்பொழுதும்

பணம் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்வேன். பணம் குறையும் போதெல்லாம்

மந்திரக்கோலைக் கொண்டு பணத்தை நிரப்புவேன். அதனால் என் குடும்பம் வறுமைப்

பிடியின் கோரத்திலிருந்து மீளும். மிகப்பெரிய வீடு, அழகான கார் போன்றவற்றை

வாங்கிக் கொள்வோம். ஏழைகளாக உள்ள எங்கள் உறவினர்கள் மட்டுமின்றி,

நண்பர்களுக்கும் பண உதவி செய்வேன்.

தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற

தீயச்செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால்

இத்தகைய குற்றங்கள் புரியும் பாதகர்களை நானே தண்டிப்பேன். என் மந்திரக்கோலை


ஆண்டு 5

அனுப்பி, அவர்களை ஆசை தீர அடிக்குமாறு சொல்வேன். அவர்கள் தவறு செய்யும்

போதெல்லாம், என் மந்திரக்கோல் அவர்களைத் தண்டிக்குமாறு சொல்வேன். இதன்

மூலம், நாட்டில் நடக்கும் தவறான செயல்களைக் களைவதில் நானும் பங்காற்ற முடியும்.

எனக்கு மந்திரக்கோல் கிடைத்தால், என் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யச்

சொல்வேன். துணி துவைத்தல், சமைத்தல், வீடு கூட்டுதல், பாத்திரங்கள் கழுவுதல்,

வாகனம் கழுவுதல், வீட்டிற்கு வண்ணப்பூச்சு பூசுதல் போன்றவற்றைச் செய்யச்

செய்வேன். இதனால், என் தாயாரும் அக்காவும் சிரமப்படாமல் தங்கள் வேலைகளைக்

கவனிக்க முடியும். வீட்டு வேலைகளும் எளிதில் முடியும்.

கற்பனைகள் எவ்வளவு அழகானவை. நாம் நினைக்கும் அனைத்தும் நடந்தால்……!

அச்சமயம், நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பழைய

பாடல் என் செவிமடல்களைத் தட்டியது. அப்பா, அலைவரிசையைத் தமிழ்ப்படத்திற்கு

மாற்றி விட்டார். நான் சிரித்துக்கொண்டே, என் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு

அறைக்குச் சென்றேன்.
ஆண்டு 5

நான் உருவாக்க விரும்பும் அதிசய மிதிவண்டி

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஓர் ஆசை இருக்கும். அதே போல் எனக்கும் ஓர்

சிறிய ஆசை உண்டு. அது என்னவென்றால் நான் விரும்பும் ஓர் அதிசய மிதிவண்டியை

உருவாக்குவதுதான்.மிதிவண்டியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், நான் ஒரு

விநோத மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதிவண்டியைப் பற்றி

அனைவரும் பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோதத் தன்மைகள் இருக்கும்.

நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும். அம்மிதிவண்டியில்

உள்ள விசையை அழுத்தினால் சுயமாக இரண்டு இறக்கைகள் வெளிவரும். அது

அதிவேகமாக செல்லக்கூடியதாக இருக்கும். தேவைக்கேற்ப வேகத்தைக் குறைக்கவும்,

கூட்டவும் முடியும். அதனால், நெடுந்தூரப் பயணம் செய்ய முடியும். உதாரணத்திற்கு,

அம்மிதிவண்டியைக் கொண்டு, நான் இந்த மலேசியத் திருநாடு முழவதும் பறந்து

செல்வேன் மற்றும் ஸ்பேயின், ஜப்பான், இந்தியா, அமேரிக்கா, ரஸ்யா போன்ற

நாடுகளை ஒரி வலம் வந்து உலக சாதனைப் படைப்பேன்.அம்மிதிவண்டியின் மூலம்,

நம் நாட்டின் அழகிய காட்சிகளைக் கண்டு இரசிப்பேன் அதோடு இம்மிதிவண்டியைக்

கொண்டு விண்வெளிக்குச் செல்லும் எனது கனவை நினைவாக்கிக் கொள்வேன்.

அதுமட்டுமின்றி, எனது மிதிவண்டி கேட்கும் தன்மையும், பேசும்

தன்மையுடையதாகவும் உருவாக்குவேன். இம்மிதிவண்டிக்கு “ஜிபிஎஸ்” எனும்

கருவியே தேவையில்லை. நாம் செல்லவிருக்கு இடத்தை கூறினால் போதும், அதனை

கிரகித்துக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் சுலபமாக கொண்டு சேர்த்துவிடும்.


ஆண்டு 5

உதராணமாக, நான் கோலாலம்பூரிலுள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுக்குச் செல்ல

வேண்டுமென்றால் அதற்கேற்ப அவ்விடத்தைக் கிரகித்துக் கொண்டு செல்லும் வழியில்

உள்ள இடத்தையும் , சரியான பாதையையும் நமக்கும் கூறிக்கொண்டே செல்லும். இதன்

மூலம் நாம் செல்லும் வழியில் உள்ள அனைத்து இடத்தையும் தெரிந்துக் கொள்வதுடன்

குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தையும் அடைய முடியும்.

அதிசயங்கள் நிறைந்திருக்கும் இம்மிதிவண்டியில் உருமாறும் சக்தியும்

அடங்கியுள்ளது. அம்மிதிவண்டி செல்லக்கூடிய இடங்களை அறிந்து அதற்கேற்ப

தன்னை உருமாற்றிக் கொள்ளும். இம்மிதிவண்டி வானத்திற்கு செல்லும் பொழுதும் ,

கடலுக்கடியில் செல்லும் பொழுதும் தன்னுடைய உடலை தேவைக்கேற்ப உருமாற்றிக்

கொள்ளும்.உதாரணமாக,வானத்திற்கு செல்லும் போது இறக்கைகள் விரித்து பறந்து

செல்லும் மற்றும் கடலுக்கடியில் செல்லும் போது சுற்றிலும் கண்ணாடிப் பேழையாக

உருவெடுக்கும். அதனால், கடலுக்கடியில் உள்ள இயற்கைக் காட்சிகளையும் நாம்

இரசிக்க முடியும்.

இம்மிதிவண்டி மறையும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும்.

இக்காலகட்டங்களில் திருட்டிச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றன.

ஆதலால், இத்தன்மையை உடைய இம்மிதிவண்டி தன்னை மறைத்து தற்காத்துக்

கொள்ளும்.இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல்

பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியை

உருவாக்குவேன்.
ஆண்டு 5

எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி கிடைத்தால் …

நம் நாடு துரித வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடு. பிற நாடுகளுக்கு ஈடாக நமது

நாடும் தகவல் யுகத்திற்கு ஏற்ப மாற்றங்கண்டு வருகிறது. எல்லாத்துறையிலும் தகவல்

தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வேளையில்

எனக்குப் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினி ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும்?

முதலில் அக்கணினி ஒரு தானியங்கியாகச் செயல்படும். நான் கல்வி தொடர்பாகப்

பெற விரும்பும் தகவல்களைக் கேட்டவுடனேயே, அது ஒப்புவிக்கும். போதுமான

ஆதாரங்களுடன் விளக்கமளிக்கும். எழுத்து வடிவில் பெறும் தகவலை விட அதன்

பேசும் சக்தியால் கேட்கப்பெறும் தகவல் எனக்கு மட்டும் அல்ல என்னைச்

சார்ந்தவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், அக்கணினியை எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க நான்

பயன்படுத்துவேன். தினசரி நான் கற்கும் பாடங்களை அது ஒப்புவிக்கும். பாடத்தில்

எழும் சந்தேகங்களைக் கணினி திரை காட்சியில் எனக்கு மேலும் விளக்கப்படுத்தும்.

இதன் வழி எனது கல்வித் திறனை நான் மேம்படுத்திக் கொள்வேன். தொடர்ந்து


ஆண்டு 5

அக்கணினியின் வழி நமது சான்றோர்களான திருவள்ளுவர், ஔவையார், பாரதியார்

போன்றோர் இயற்றிய செய்யுள்களையும் கவிதைகளையும் முறையாக உச்சரிக்க

வைத்து நானும் முறையாகக் கூறிப் பழகுவேன். அத்தோடல்லாமல் பிற மாணவர்களும்

அதன் பயன் பெற்று இன்புற வழி வகுப்போம்.

பள்ளி மாணவர்களும் என் பேசும் ஆற்றல் கொண்ட மடிக் கணினியால் மகிழ

வேண்டும் அல்லவா? அதனால் என் மடிக் கணினியைக் கொண்டு விடுகதைகள்,

குறுக்கெழுத்துப் போட்டி, புதிர்போட்டி போன்ற மொழிவிளையாட்டுகளை

நடத்துவேன். என் மடிக் கணினி கேள்விகள் கேட்க மாணவர்கள் பதில் அளிப்பார்கள்

அல்லது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என் மடிக் கணினியும் பதில் அளிக்கும்.

இதன் மூலம் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தும் தரும்.

இத்தகையப் பயன் மிக்க மடிக் கணினி கிடைக்குமென நான் எதிர்பார்த்துக்

கொண்டிருக்கிறேன்.

நான் கோடிஸ்வரனானால்…

பணம்.. வாழ்வின் எல்லாத் தேவைகளுக்கும் அடிப்படை. நன்றாகச் சம்பாதிக்க

வேண்டும்; மகிழ்வடன் வாழ வேண்டுமென்பது அனைவரின் கனா. பணம் என்றால்

பிணமும் வாயைத் திறக்கும் எனக் கூறுவர். அத்தகைய பணம் கொழிக்கும்

கோடிஸ்வரனானால்… கற்பனைக் குதிரைகளைச் சற்றுத் தட்டி விட்டேன்..

நான் ஒரு கோடிஸ்வரனானால், முதலில் என் கற்பனை இல்லத்தைக் கட்டுவேன்.

என் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் அந்த இல்லத்திற்கு ஒரு வடிவம்

கொடுப்பேன். மிக நவீன வீடாகவும் அதீத பாதுகாப்பு நிறைந்ததாகவும் அவ்வில்லம்

இருக்கும். வீடா..அது.. அரண்மனை என்று பார்ப்போர் வாயைப் பிளக்கும் அளவுக்கு


ஆண்டு 5

அது இருக்கும். மேலும், அதிநவீன வாகனம் ஒன்றையும் எனக்கும் என் குடும்பத்திற்கும்

வாங்குவேன். அவ்வாகனத்தில் இந்த அழகிய மலேசியாவையே வலம் வருவேன்.

அதுமட்டுமல்லாமல், என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோரை மகாராஜா,

மகாராணி போல் வைத்திருப்பேன். அவர்கள் எந்த வேலையையும் செய்யாமல்

பார்த்துக் கொள்வேன். அவர்களைக் கவனிக்க மூன்று நான்கு வேலைக்காரர்களை

அமர்த்துவேன். அவர்களின் எல்லாத் தேவைகளையும் வேலைக்காரர்கள் கவனித்துக்

கொள்ளுமாறு செய்வேன்.

நான் ஒரு கோடிஸ்வரனானால் உலக நாடுகள் அனைத்தையும் சுற்றிப் பார்ப்பேன்.

அத்தகைய நாடுகளில் மிக விலையுயர்ந்த நட்சத்திர விடுதிகளில் தங்குவேன். உலகின்

மிக அற்புதமான உணவு வகைகளை இரசித்து உண்பேன். சினிமாக்களிலும்

தொலைக்காட்சிகளிலும் பார்த்த நாடுகளை நேரடியாகப் பார்த்து அகம் மகழ்வேன்.

அத்தகைய நாடுகளுக்கு என் பெற்றோரையும் அழைத்துச் செல்வேன்.

இந்தச் சமூகத்தை மறக்க முடியுமா ? என்னைச் சமுதாயத்தில் மிக உயர்ந்த

மனிதனாக உயர்த்திக் கொள்வேன். கோவில், பள்ளிக்கூடங்கள், அன்பு இல்லங்கள்,

முதியோர் இல்லங்கள் போன்றவற்றிற்கு என்னால் ஆன பண உதவிகளை

வழங்குவேன். கல்வியில் மிகச் சிறந்த மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக ஒரு

அறவாரியம் அமைப்பேன். அவ்வற வாரியத்தின் வழி, அவர்கள் மேற்கல்வியைத்

தொடர உதவி புரிவேன்.

மேலும், என் சொத்துகளைப் பெருக்கிக் கொள்ள பல புதிய சொத்துக்கள்

வாங்குவேன். நிலம், விடுதிகள், முதலீடு போன்றவற்றின் வழி என் பணத்தைப் பெருக்க


ஆண்டு 5

முயற்சி மேற்கொள்வேன். வெளிநாடுகளிலும் என் வர்த்தக இறக்கைகளை விரித்துப்

பறப்பேன். உலகமே பேசும் வண்ணம் ஒரு மிகச் சிறந்த தொழிலதிபராவேன்.

ஆஹா.. கோடிஸ்வர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்யும்

போதே இனிக்கிறதே! நான் கோடிஸ்வரனானால் என் கனவுகள் அனைத்தையும்

நிறைவேற்றிக் கொள்வேன்.

ஆசிரியர் தினக்கொண்டாட்டத்தில் மாணவர் தலைவர் உரை

செந்தமிழே வாழ்க! எந்தமிழர் வாழ்க !


ஆண்டு 5

மதிப்பிற்குரிய இவ்வார கடைமையாசிரியர் திருமதி சாந்தி அவர்களே, அன்பிற்கும்

பண்பிற்கும் உரிய தலைமையாசரியர் அவர்களே, எங்கள் பாசத்திற்குரிய

துணைத்தலைமையாசிரியர்களே, நேசத்திற்குரிய ஆசிரிய ஆசிரியைகளே, என் சக

மாணவர் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இவ்வினிய காலை வேளையில் என்

வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நன்னாளில் மாணவர்கள்

சார்பில் ஆசிரியர் தின உரை ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பை மிகப்

பெருமையாகக் கருதுகிறேன். ஆசிரியப் பெருந்தகைகளே, உங்கள் அனைவருக்கும் என்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மாணவர்களே,

இன்று மே 16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத்

திலகங்களைக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில்

இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க

வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு

புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை

உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள்.

அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம்.

என் இனிய மாணவர்த் தோழர்களே,

இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் நாம் ஒரு பொறியியலாளராகவோ,

மருத்துவராகவோ, விஞ்ஞானிகளாகவோ, கணினி நிபுணர்களாகவோ, ஏன் ஒரு பெரும்

செல்வந்தராகவோ இவ்வாழ்க்கைப் பாதையில் வலம் வரலாம். ஆனால் நம்


ஆண்டு 5

ஆசிரியர்கள், இங்கேயே இன்னும் நம்மைப் போன்று இன்னும் பல ஆயிரம்

மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாதைகளைக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.

அன்புச் சகோதர சகோதரிகளே,

கல்வியில் மட்டுமா நாம் வழிகாட்டப்படுகிறோம். அன்பால், பண்பால்,

எதிர்காலத்தில் குடும்பத்திற்கு நன்மக்களாய், நாட்டிற்கு நன்குடிமக்களாய்,

சமுதாயத்திற்கு வைரமாய் உருவாக்கப்படுகிறோம்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’

என்றார் திருவள்ளுவப் பெருகமனார். அப்படிப்பட்ட சிறந்த மனிதராக, மனித

நெறிப்படி வாழ வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கான, இத்தினத்தைத்

கொண்டாடுவது நமக்கல்லவோ பெருமை.

எங்கள் அன்புத் திலகங்களான ஆசிரியர்களே,

இந்நாளில் நாங்கள் வழங்கும் வாழ்த்துகள், பரிசுகள், விருந்துகள் மட்டும்

உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டாது என எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு

மகிழ்ச்சியூட்டும் வகையில் நாங்கள் கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து,

சமுதாயத்தில் மலராய் மலர்ந்து மணம் பரப்புவோம் என இவ்வேளையில் உங்களுக்கு

உறுதி கூறுகிறோம். உங்கள் கனவுத்தோட்டங்களில் நாங்கள் என்றென்றும் மணம்

பரப்புவோம் என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை.


ஆண்டு 5

இறுதியாக, நான் விடைபெறும் முன் மீண்டும் உங்கள் அனைவருக்கும்

மாணவர்கள் சார்பில் என் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்

கொள்கிறேன்.

புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்

மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே

உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம். இப்பொன்னாளில், புறப்பாட

நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்கள் முன் பேச வாய்ப்பளித்த

ஆசிரியருக்கு நன்றி.

அவையோர்களே,

புறப்பாட நடவடிக்கை மாணவர் பருவத்தில் இன்றியமையாததாக

விளங்குகின்றது. வகுப்பில் கல்வியைப் பயிலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே

மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்குப் பள்ளிப் புறப்பாட நடவடிக்கை பெரிதும்

துணைப்புரிகிறது.

நாளைய தலைவர்களே,

பள்ளிப்புறப்பாட நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்கள்

அடையும் நன்மைகள் எண்ணிலடங்கா. சீருடை இயக்கங்களில் மாணவர்கள்

ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக,

கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில்

கலந்துக்கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு,


ஆண்டு 5

தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற

நற்பண்புகள் மேலோங்கச் செய்கின்றது.மாணவர்கள் இவ்வாரான பண்புகளை கற்று,

பின்பற்றும் பொழுது அவன் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழச் செய்ய புறப்பாட

நடவடிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.

அறிவுக்களஞ்சியங்களே,

தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்கள்

மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதற்கேற்ப மாணவர்களின் ஆற்றலை

மேலும் ஊக்கப்படுத்த மொழிக்கழகங்கள் துணைப்புரிகின்றன. எடுத்துக்காட்டாக,

மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின்

மொழியாற்றலை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் முடிகின்றது.

அதுமற்றுமின்றி, மொழி கழகத்தில் ஒரு மாணவன் தலைவர் பொறுப்பு வகிக்கும்

பொழுது அவனுள் தன்னொழுக்கம், கட்டளை இடுதல், கட்டொழுங்கைக் காத்தல்,

பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகள் இணைந்தே வர வாய்ப்புண்டு.

இளம் விளையாட்டு வீரர்களே,

“ ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா ” என அன்றே

பாரதியார் பாடியுள்ளார். உடல் நலத்தைப் பேண விளையாட்டு ஒரு முக்கியமானதாக

விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் விளையாட்டில் கலந்து கொள்ளும்

மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமாக

வாழ உடற்பயிற்சி முக்கியம் என சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு

வலியுறுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் நேரத்தை நல்வழியில்


ஆண்டு 5

செலவிடவும், அவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும்

முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டு பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சொங்

வே ஒரு நேர்காணலில் தனது இந்த வெற்றிக்குக் காரணம் தனது சிறுவயதிலிருந்தே

புறப்பாட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் எனக் கூறினார்.

அன்பார்ந்த மாணவர்களே,

ஆகவே மாணவர்களே, ஒரு மனிதனை உருவாக்குவது பள்ளிப் புறப்பாட

நடவடிக்கையாகும். நற்பண்புள்ளவனாகவும் , தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக

பள்ளி புறபாட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.ஆகையால், ஒவ்வொரு

மாணவனும் கட்டாயம் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு மேன்மை பெற வேண்டும்

என கூறி, நன்றியையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி,வணக்கம்.

கிராமப்புற வாழ்க்கையைவிட நகற்புற வாழ்க்கையே சிறந்தது.

துரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.நாட்டின்

வளர்ச்சிக்கேற்ப நமது வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ளவேண்டும்.நமது

வாழ்க்கை தரம் மேம்படுவதற்குக் கிராமப்புற வாழ்க்கை விட நகர்ப்புற வாழ்க்கையே

மிகச் சிறந்ததாகும்.

மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குக் கல்வி மிகவும் தேவை.கல்வியைப்

பெறுவதற்கான பல வசதிகள் நகர்ப்புறங்களில் அதிகமாகக்

காணப்படுகின்றன.தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள் தவிர்த்து

உயர்கல்வியைத் தொடர்வதற்கும் நகர்ப்புறங்களில் வாய்ப்புகளும் வசதிகளும்


ஆண்டு 5

அதிகமாக உள்ளன.உதாரணத்திற்குப் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்

நகர்ப்புறங்களிலேயே அமைந்திருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாகும்.

தற்காலத்தில், மனிதன் பல்வேறான நோய்களுக்கு

ஆளாகிறான்.இந்நோய்களுக்கான மருத்துவ வசதிகள் நகர்ப்புறங்களிலே மலிந்து

காணப்படுகின்றன.அதோடு, இப்பொழுது அதிகமான விபத்துகள்

நடக்கின்றன.விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க

நகர்ப்புறங்களில் காணப்படும் மருத்துவமனைகளும் மருத்துவ நடுவங்களுமே

பெரும்பங்காற்றுகின்றன.

நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல ஆங்கங்கே

தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் நகர்ப்புறங்களில் அதிகமான உருவாகி

வருகின்றன.இவை நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி

தருகின்றன.குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, தாசேக், பிறை போன்ற நகர்ப்பகுதிகளில்

வேலை வாய்ப்புகளுக்குப் பெயர்பெற்ற இடங்களாக விளங்குகின்றன.

ஆகவே, கிராமப்புற வாழ்க்கையைவிட நகர்ப்புற வாழ்க்கையே சிறந்தது என்பது

ஆணித்தரமான உண்மையாகும்.

கணினி

தற்பொழுது உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கருவி கணினி

ஆகும். கணினியின் பயன்பாடு உலக அரங்கில் பரவிக்கொண்டிருக்கிறது. நமது

நாட்டிலும் கணினியின் பயன் ‘காட்டுத் தீப்போல்’ பரவி வருகிறது என்பதை மறுக்க

இயலாது. நமது முன்னாள் பிரதமர் விடுத்த “வீட்டிற்கு ஒரு கணினி” என்னும்

கோரிக்கையும் இதற்கு ஒரு காரணமாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் கணினி


ஆண்டு 5

முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி, தொழிற்துறை, வியாபாரம் போன்ற அனைத்துத்

துறைகளிலும் கணினி வெற்றிநடை போடுகிறது.

கணினி மக்களின் வேலைகளைச் சுலபமாக்குகிறது. நாம் நமது பாடங்களுக்குத்

தேவையான வேலைகளைச் செய்யவும் அலுவலகத்தில் தயாரிக்க வேண்டிய

அறிக்கைகளைச் செய்யவும் கணினி தேவைபடுகிறது. நாம் கைகளால் தயாரிக்கும்

அறிக்கைகள் சில சமயம் எழுத்து வடிவங்களாலும் நேர்த்தியின்மையாலும்

மனநிறைவை ஏற்படுத்தாது. ஆனால், கணினியால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை

நாம் நமது நிறைவுக்கு ஏற்றவாறு தயாரித்துக் கொள்ளலாம். பலவகையான எழுத்து

வடிவங்களையும் வண்ணங்களையும் பயன்படுத்தித் தெளிவாகவும் அழகாகவும்

அறிக்கையைத் தயாரிக்கலாம்.

கணினி மக்களின் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும்

சிக்கனப்படுத்துகிறது. நாம் கைகளால் அறிக்கைகளைத் தயாரிக்கும் பொழுது நமது

கைகளுக்குச் சோர்வு ஏற்படுகிறது. மாறாகக், கணினியைப் பயன்படுத்தும் பொழுது

விரல்களை மட்டும் பயன்படுத்தி விசைக்கருவியை அழுத்தினால் போதும். அறிக்கை

தயாராகிவிடும். அறிக்கைகளைத் தயாரிக்கத் தூவல், அழிப்பான், அடிக்கோல், இன்னும்

சில பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவற்றைப்

பயன்படுத்தாமலேயே இவற்றின் பயன்பாட்டைக் கணினி மூலம் அடையலாம். மேலும்

இவற்றை வாங்கும் செலவுகளையும் குறைக்கலாம்.

அலுவலகங்களில் தேவையான முக்கிய விவரங்களைச் சேமித்து வைக்கவும்

பாதுகாக்கவும் கணினி தோள் கொடுக்கிறது. கணினியில் உள்ள விவரங்களை நம்மால்

எளிதாகப் பெற முடியும். மேலும் வங்கிகளில் கணினி ஒரு முக்கியமான கருவியாக


ஆண்டு 5

உள்ளது. மக்களின் சேமிப்பு விவரங்களைக் கணினி துல்லியமாகக் கண்டுபிடிக்கிறது.

இதனால், வேலைகள் எளிதாகின்றன.

கணினி மக்களின் நேரத்தை நல்ல வழியில் செலவிட வகை செய்கிறது.

இணையத்தளம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. கணினியில் உள்ள

விளையாட்டுகள் வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்புவர்களுக்குப்

புத்துணர்ச்சியை அளித்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது. தொழிற்நுட்பம்

சம்பந்தமான தகவல்களைப் பெறவும் மக்களின் அறிவை வளர்க்கவும் கணினி

முக்கியப் பங்காற்றுகிறது.தொடர்ந்து சிறுவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்வழியில்

செலவிட இவ்வகையான விளையாட்டுகள் துணைபுரிகின்றன.

கணினி இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்யவும்

உதவுகிறது. தொற்சாலைகளில் இயந்திரங்களைக் கொண்டுதான் அதிக வேலைகளைச்

செய்கின்றனர். அவற்றில் ஏற்படும் கோளாறுகளுக்குக் கணினியைக் கொண்டுதான்

பழுது பார்ப்பர். அந்த இயந்திரங்களைச் சீராக இயக்குவதும் கணினியே. எனவே,

வீடுகளில் மட்டுமல்லாது தொழிற்சாலையிலும் கணினியின் பங்கு அளப்பரியதாக

உள்ளது.

கணினி மக்களின் வாழ்க்கையிலும் அன்றாடத் தேவைகளுக்கும் மிக

அவசியமாகும். கணினி பற்றியும் அதன் இயக்கத்தைப் பற்றியும் நாம் அறிந்து

பயன்படுத்தினால் அதன் முழுப்பயனையும் அடைவோம் என்பதை அறுதியிட்டுக்

கூறலாம்.
ஆண்டு 5

You might also like