You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2021

வாரம் 21
திகதி 01.07.2021
கிழமை வியாழன்
பாடம் கணிதம்
வகுப்பு 2 பாரதி
மாணவர் எண்ணிக்கை /4
நேரம் 10:35 – 11:35
கருப்பொருள் பணம்
தலைப்பு பணத்தில் எண்மானம், எண்குறிப்பு அறிவோம்
உள்ளடக்கத் தரம் 4.1 நோட்டும் சில்லறை காசுகளும்
கற்றல் தரம் 4.1.1 RM100 வரையிலான மலேசிய நாணயங்களை அடையாளம் காண்பர்.
பாட நோக்கம் மாணவர்கள் 3/4 சில்லறை காசுகளையும் 5/6 நோட்டுகளையும் அடையாளம்
கண்டு எண்மானத்திலும், எண்குறிப்பிலும் எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் மாணவர்கள் மலேசிய நாணயங்களை அடையாளம் காண்பர்.
மாணவர்கள் மலேசிய நாணயங்களின் மதிப்பைக் கூறுவர்.
மாணவர்கள் மலேசிய நாணயங்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும்
எழுதுவர்.
பீடிகை —மாணவர்கள் பாடல் ஒன்றைச் செவிமடுத்தல். பாடல் தொடர்பான
கேள்விகளுடன் ஆசிரியர் பாட அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை (https://www.youtube.com/watch?v=SSh3Bjv1888)
- பணத்தின் வரலாறு கூறுதல்.
படி 1 — ஆசிரியர் கடந்த ஆண்டு பாட மீள்பார்வையுடன், மலேசிய
நாணயங்களை அறிமுகம் செய்தல். மாணவர்கள் மலேசிய நாணயங்களை
அடையாளம் காணுதல்.
(https://jamboard.google.com/d/1ZfgXZdwoZs2gp1mzLgqDaCOFWve2K
g-o7iIFO_LfYVU/viewer?f=0)
படி 2 — ஆசிரியர் மலேசிய நாணயங்களின் மதிப்பை எண்மானத்திலும்
எண்குறிப்பிலும் எழுதும் முறையை விளக்குதல். (POWERPOINT SLIDE)
படி 3 — மாணவர்கள் “Quizizz” முறையில் சரியான மலேசிய
நாணயங்களின் மதிப்பை அடையாளம் காணுதல். (https://quizizz.com/join?
gc=13176966)
படி 4 —
மாணவர்கள் : மாணவர்கள் மலேசிய நாணயங்களின் மதிப்பை
எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுதல்
மாணவர்கள் : மாணவர்கள் மலேசிய நாணயங்களைக் கொண்டு திரட்டேடு
செய்தல்.
முடிவு – ஆசிரியர் சில கேள்விகள் கேட்டு இன்றைய பாடத்தை நிறைவு
செய்தல்.
 பொருள் வாங்குவதற்குப் பணம் தவிர்த்து வேறு எதனை எல்லாம்
பயனடுத்தலாம்? (உயர்நிலை சிந்தனைத் திறன்)
- கட்டண அட்டை/ கட்டண சாவடி அட்டை
- கடன் பற்று அட்டை
- பற்று அட்டை/ வைப்பு அட்டை
- காசோலை
- மின்னியல் கட்டணம்
இந்தக் கொரோனா நச்சுயிரி காலக் கட்டத்தில், பணம் செலுத்துவதற்கு
நீங்கள் மேற்கண்ட அட்டைகளைத் தவிர வேறு என்ன உருவாக்கி
இருப்பீர்கள்?
பண்புக்கூறு முயற்சி
21-ஆம் நூற்றாண்டு க.க. கூடிக் கற்றல்
நடவடிக்கை
விரவிவரும் கூறு ஆக்கமும் புத்தாக்கமும்
பா/து. பொருள் குறிப்பு, மாதிரி பணம், Quizizz
சிந்தனை மீட்சி /4 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்து, வளப்படுத்தும் பயிற்சி
செய்தனர்.
/4 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைதீர் பயிற்சி
செய்தனர்.
/4 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
/4 மாணவர்கள் வெளிநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like