You are on page 1of 4

ஒருமைப்பாடு

ஒருமைப்பாடு எனப்படுவது இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து


உயிரினங்களுக்கும் அவசி்யமான ஒன்றாகும். ஆதிகால மனிதர்கள்
கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.
கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தந்தது. அது
போல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் உட்பட
அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்தலை விரும்புவதால்
அவை பெரும்பாலும் இன்றும் கூட்டாகவே வாழ்ந்து வாழ்கின்றன.
இது போல் உலகெங்கும் வாழும் மக்களும் ஒருமைப்பாட்டினை
அடிப்படையில் வாழ்ந்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது..

இதனையே,பண்டைய காலம்தொட்டு இன்று வரை புலவர்களும்,


அறிஞர்களும் ஒருமைப்பாட்டின் பலத்தை வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
முண்டாசுக் கவிஞனாகப் போற்றப்படும் பாரதியார்,
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு;
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே”
அதாவது ஒருமைப்பாடு இல்லையேல் அனைவரும் தாழ்ந்து விடுவர்
என்று குறிப்பிட்டுள்ளார். ஒருமைப்பாடு என்ற உடனே நம் சிந்தனைக்கு
வருவது நமது நாடே. ஆம், பல்லின மக்களை தன்னகத்தே கொண்டிருக்கும்
மலேசியா திருநாட்டில் ஒருமைப்பாடு எனும் மலர் மலர்ந்து மணம் வசீ
காரணகர்தாக்களாக இருப்பவர்கள் இந்தியர்கள், மலாய்க்காரர்கள் மற்றும்
சீனர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

இனத்தால், மதத்தால், மொழியால் வேறுபட்டு இருந்தாலும் ஒரு


தாய் வயிற்றில் பிறந்தவர்கள் போல் அவர்களிடையே காணப்பட்ட
இந்த உன்னதமான ஒருமைப்பாடு மலேசிய திருநாட்டை பிற
நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல்
முன்னுதாரணமாகவும் திகழ செய்தது.

அந்நியர்களின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது மூவின


தலைவர்களின் ஒருமைப்பாடு நம் நாட்டை அந்நியர்களிடம் இருந்து
சமூகமாக நாட்டை அவர்களிடமிருந்து விடுதலை அடைய செய்தது.
நம் நாட்டில் எந்தவொரு நிகழ்வை நடைபெற்றாலும் அங்கு மூவின
மக்களிடையே ஒருமைப்பாட்டை காணமுடிந்தது. குறிப்பாக தேசிய
தின கொண்டாட்டம் பெருநாள் காலங்களில் நாட்டு மக்களின்
ஒருமைப்பாடு ‘குன்றின் மேலிட்ட விளக்கைப் போல்’ மிக தெளிவாக
காணப்பட்டது. தேசிய தின அணிவகுப்பில் மூவினமும் நாங்கள்
மலேசியர்கள் என்ற உணர்வோடு கம்பீரமாக அணிவகுத்து செல்லும்
அழகே அழகு.தத்தம் பெருநாளின் போது பலகாரங்களைப் பரிமாறி
கொள்வதும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதும் பார்ப்பதற்கு
மலேசிய குடும்பங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் ஓர்
இன்பகரமான திருநாளாக இருக்கும்.

மக்களிடையே காணும் ஒருமைப்பாட்டை மெம்மேலும்


அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் மாணவர்களின் பங்கு மிக
முக்கியமானதாகும். ஆரம்ப பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று
இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவனும் இதை
கருத்தில் கொள்ள வேண்டும்.
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’

என்ற பாரதியின் உணர்வை மலேசிய திருநாட்டில் வளர்கின்ற


ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும். இந்த நாட்டில் மதத்தால்,
மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் என்று
பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணம், சொல்,
செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் எப்போதும் ஒன்றுபட்ட
மலேசியாவைக் காணமுடியும். இன்றைய மாணவர்களே நாளைய
தலவர்கள் எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு
அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டு


வருகின்றது. உலக நாடுகள் தமக்குள் வேற்றுமைகளை மறந்து
ஒன்றுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் மலேசிய திருநாட்டில் வாழும்
பல்லின குடியினர் அனைவரும் “நாம் ஒன்றே” என்ற உணர்வு மாணவ
பருவத்திலே ஏற்படவேண்டும். பொதுவாக அவரவர் தாய்மொழி
அவரவருக்கு பெருமையுடையது. இதனால் மொழிகளுக்குள் வேறுபாடு
காட்டாது அனைத்து மொழிகளையும் சமமாக மதித்து போற்றுவதில்
மாணவர்களின் கடமை மகத்தானது. தாய்மொழியோடு பிற
மொழிகளையும் கற்று பயனடையவேண்டும். மதங்களின் பெயரால்
மாறுபட்டுள்ள மனித உள்ளங்களை திருத்த முயலவேண்டும். நம்
நாட்டில் இனம் மற்றும் மொழி வேறில்லை,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா


செய்தொழில் வேற்றுமை யான்”.

என்ற திருவள்ளுவரின் கருத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.


பிறப்பினால் மனித இனத்தினிடையே எவ்வித வேறுபாடு இல்லை
என்பதை உணர்த்த வேண்டும். மத, இன மற்றும் மொழி
வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன்
வட்டிலிருந்தே
ீ தொடங்குவது ஒருமைப்பாட்டை வழுப்படுத்தும்.

கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர்


இயக்கம், செம்பிறை இயக்கங்கள் போன்ற இயக்கங்களில்
ஆர்வத்துடன் சேர்ந்து ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். இதன்
மூலம் மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர வழி ஏற்படும்.

ஒரு கால் இந்த ஒருமைப்பாடு மலேசிய மக்களிடையே


இல்லாமல் இருந்திருந்தால் நாட்டின் நிலை என்னவாக
இருந்திருக்கும்? நிச்சயமாக இன கலவரம், அமைதியின்மை இப்படி
நாடு செழிப்பற்று இருந்திருக்கும் அல்லவா? பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக் காப்பது நமது கடமை. ஒரு முறை இழப்போமானால் மீ ண்டும்
பெறுவது கடினம். நாடு வாழவும் நாட்டு மக்களின் ஒருமைப்
பாட்டுணர்வு வளரவும் நாம் நம்மால் இயன்ற பணிகளைச்
செய்வோமாக. இறுதியாக நம் மலேசியர்களிடையே இந்த
ஒருமைப்பாடு மென்மேலும் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்று
கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.

You might also like