You are on page 1of 1

அரவிந்தன்

கணேசன் (எஸ் 6)

பார்வை குறைந்த மாணவருக்கான கற்பித்தல் முறை, உத்திகளை விளக்கி எழுதவும்.

ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறுவது ஒரு கரணியம். சத்துக்


குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும்
கண்நோய் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக் குறைவு, இரத்த ஓட்டம் தடை
படுதல், இரத்த அழுத்தம் குறைவு கரணியமாகவும் கண்நோய்கள் வரலாம். பரம்பரைக்
கரணியமாகவும் கண்நோய் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள் காற்றில் வஉகின்ற
கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

பார்வைக் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முறையான


கற்பித்தலையும், உத்திகளையும் வழங்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களின் பார்வைக்
குறைபாட்டை சரியாக அடையாளம் காணவேண்டும். இதனால், இம்மாணவர்களின்
தேவைகளை ஆசிரியர் பூர்த்திச் செய்ய இயலும். ஆசிரியர்கள் தனது அறிவினைப்
பெற்றோருக்கு ஆலோசனையாக வழங்க வேண்டும். இதனால், இம்மாணவர்கள் வீட்டிலும்
ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

ஆசிரியர் கற்பித்தலின்போது மாணவர்களை முன்வரிசையில் அமரவைக்க


வேண்டும். இதனால், கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் தெளிவாகக் காண இயலும்.
ஆசிரியர் இம்மாணவர்களுக்காக வகுப்பில் போதிய அளவுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த
வேண்டும். இதனால், இம்மாணவர்களின் எழுச்சியும், ஆர்வமும் கூடும்; கற்கத்
துணைப்புரியும். ஆசிரியர் வெண்பலகையை சரியான இடத்தில் பொறுத்த வேண்டும்.
இல்லையேல், இம்மாணவர்களால் சரியக எழுத்துகளைப் பார்க்க இயலாது.

ஆசிரியர் பார்வைக் குறைந்த மாணவர்களுக்கு எழுத்துக் கற்பித்தலைக் குறைத்து,


வாய்மொழிக் கற்பித்தலை அதிகப்படுத்த வேண்டும். இதனால், இவர்கள் குறைகொண்ட
புலன் பயன்பாடு குறைந்து, காதால் நன்கு கேட்பர். ஆசிரியர் மூக்குக்கண்ணாடியைப்
பயன்படுத்தும் மாணவர்களுக்குச் சரியாகப் பயன்படுத்தும் உத்திகளைக் கற்பிக்க
வேண்டும். இதனால், இம்மாணவர்களின் பாதுகாப்பும், பார்வையும் பாதுகாக்கப்படும்.

ஆசிரியர் இம்மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


இதனால், மாணவர்கள் கடினப்பட்டு வேளைகளைச் செய்ய நேராது. அனைத்திலும்
மேலானது, இம்மாணவர்களை புரக்கணித்தல், இழிவுபடுத்தல் போன்றவற்றைத் தவிர்த்து
அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால், பிற மாண்வர்கள் இவர்களை மதிப்பர்;
உதவிகளையும் செய்வர். இவைகளை கவனத்தில் கொண்டு, ஆசிரியர்கள் இவ்வகை
மாணவர்களை உருவாக்கினால் சுய தேவைகளை பூர்த்திச் செய்யும் சமுகத்தினரை
உருவாக்கலாம்.

You might also like