You are on page 1of 9

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி

நாள் / கிழமை 29.06.2021 (செவ்வாய்க்கிழமை)

ஆண்டு 3 அகத்தியர்
மாணவர் வருகை / 27
கருப்பொருள் உணவு
தலைப்பு பழங்கள்

நேரம் காலை 8.30 – 9.30


மாணவர்கள் இதற்கு முன்பு அன்றாட வாழ்வில் பொதுவாக தொகுதிப் பெயர்கள் தொடர்பான சில சொற்களைப்
மாணவர் முன்னறிவு
பயன்படுத்தி உரையாடியுள்ளனர்.

1.7.9 சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய தொகுதிப் பெயர்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப்
கற்றல் தரம்
பேசுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
அ) சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய தொகுதிப் பெயர்களின் தன்மைகளை அறிந்து கூறுவர்.
பாட நோக்கம்
ஆ) சீப்பு, தார், குலை, கொத்து, கதிர் ஆகிய தொகுதிப் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்துக்
கூறுவர்.

6C ஆற்றல்

 தொடர்பாடல் – இருவழி தொடர்பாடல்


தற்கால பயிற்றியல் நடைமுறை
தகவல் தொழில்நுட்ப அறிவு

 வலையொளி காணொலி, ‘ஜிக்சாவ்’ படப்புதிர், ‘குய்சீஸ்’ செயலி (Quizizz app)

மானுடவியல் திறன் வாழ்நாள் முழுவதும் கற்றல்


 அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சொற்களை மாணவர்கள் அறிவர்.

தொடர்பாடல் திறன்

 மாணவர்கள் கூகொள் கூடலின் வழியாக இருவழி தொடர்பாடலில் ஈடுபடுவர்

பயிற்றுத்துணைப்பொருள் வலையொளி காணொலி, ‘ஜிக்சாவ்’ படப்புதிர், ‘குய்சீஸ்’ செயலி (Quizizz app), ‘சுழற்சி சக்கரம்’ (spinning wheel)

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

பீடிகை தலைப்பு: முறைதிறம்


பழங்கள் 1. ஆசிரியர் மாணவர்களின் நலம் விசாரித்தல்.
(±5 நிமிடம்)  வகுப்புமுறை
(இயங்கலை)
2. மாணவர்கள் ஆசிரியர் ஜிக்சாவ் படப்புதிர் செயலியின்வழி ப.து.பொ
ஜிக்சாவ் படப்புதிர்
காண்பிக்கும் படப்புதிரை நன்கு கவனித்தல்
 ஜிக்சாவ் படப்புதிர்
3. மாணவர்கள் படப்புதிரை இணைக்க ஒருவர் பின் செயலி (jigsaw
ஒருவராகச் சரியான படத்தை ஆசிரியரிடம் குறிப்பிடுதல் puzzle)

4. ஆசிரியர் மாணவர்கள் குறிப்பிடும் படத் துண்டுகளை


இணைத்தல்

5. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டல்.

காட்டு:

அ) இணைக்கப்பட்ட படத்தில் என்னென்ன பழங்கள்


இருக்கின்றன?

ஆ) இரண்டாவது படத்தில் எத்தனை வாழைப்பழங்கள்


இருக்கின்றன?

இ) நிறைய வாழைப்பழங்கள் வரிசையாக அடுக்கி ஒன்றாக


இருப்பதை நாம் என்னவென்று அழைப்போம்?

6. மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

7. ஆசிரியர் மாணவர்களின் பதில்களைக் கொண்டு இன்றைய


தலைப்பிற்கு இட்டுச் செல்லுதல்.

படி 1 தலைப்பு: 1. ஆசிரியர் கூகொள் கூடலில் வலையொளி காணொலி முறைதிறம்


பழங்கள் ஒன்றனைப் பகிருதல்.
(±15 நிமிடம்)  வகுப்புமுறை
(இயங்கலை)
2. ஆசிரியர் வலையொளி காணொலியின் துணைகொண்டு
ப.து.பொ
வலையொளி காணொலி
இன்றைக்கான தொகுதிப் பெயர்கள் தொடர்பாக
விளக்கமளித்தல்  வலையொளி
காணொலி
3. மாணவர்கள் ஆசிரியர் கூறும் விளக்கத்தை நன்கு
தற்கால பயிற்றியல்
செவிமடுத்தல்.
நடைமுறை
4. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளை வினவுதல்
 6C ஆற்றல் –

காட்டு: தொடர்பாடல்
 தகவல்
அ) தொகுதிப் பெயர் என்றால் என்ன? தொழில்நுட்ப அறிவு

ஆ) நாம் இப்போது எத்தனை தொகுதிப் பெயர்களை மானுடவியல் திறன்

அறிந்துள்ளோம்? அவை என்னென்ன?  வாழ்நாள் முழுவதும்


கற்றல்
இ) தார் என்னும் தொகுதிப் பெயர் எதற்குப்
 தொடர்பாடல் திறன்
பயன்படுத்துவோம்?

5. மாணவர்கள் ஆசிரியர் வினவும் கேள்விகளுக்குப்


பதிலளித்தல்.

6. ஆசிரியர் மாணவர்கள் கூறும் பதில்களைக் கூகொள்


கூடலில் கலந்துரையாடி சரிபார்த்தல்.

படி 2 தலைப்பு: 1. ஆசிரியர் கூகொள் கூடலில் ‘குய்சீஸ்’ செயலிக்கான முறைதிறம்


பழங்கள் அகப்பக்கத்தைப் பகிருதல்.
(±10 நிமிடம்)  தனியாள் முறை
(இயங்கலை) 2. ஆசிரியர் சில மாணவர்களைத் தெரிவுசெய்தல்.
ப.து.பொ
‘குய்சீஸ்’ செயலி 3. தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் ‘குய்சீஸ்’ செயலில்
காண்பிக்கப்படும் தொகுதிப் பெயர்கள் தொடர்பான புதிர்  ‘குய்சீஸ்’ செயலி
(Quizizz app)
கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிவித்தல்.
தற்கால பயிற்றியல்
4. ஆசிரியர் மாணவர்கள் கூறும் பதில்களை அழுத்துதல்.
நடைமுறை
5. மாணவர்கள் கூறும் பதில்களை ஆசிரியர் அவ்வபோது
‘குய்சீஸ்’ செயலியின் துணைகொண்டு சரிபார்த்தல்.  6C ஆற்றல் –
தொடர்பாடல்
 தகவல்
தொழில்நுட்ப அறிவு

மானுடவியல் திறன்

 வாழ்நாள் முழுவதும்
கற்றல்
 தொடர்பாடல் திறன்

படி 3 தலைப்பு: 1. ஆசிரியர் கூகொள் கூடலில் ‘சுழற்சி சக்கரம்’ (spinning முறைதிறம்


பழங்கள் wheel) எனும் அகப்பக்கத்தைப் பகிருதல்.
(±10 நிமிடம்)  தனியாள் முறை
(இயங்கலை) 2. ஆசிரியர் மாணவர்களைத் தெரிவுசெய்தல்.
ப.து.பொ
‘சுழற்சி சக்கரம்’ (spinning wheel) 3. ஆசிரியர் பெயர்களின் சக்கரத்தைச் சுழற்றி கிடைக்கப்பெற்ற
தொகுதிப் பெயரைத் தெரிவுசெய்யப்பட்ட மாணவருக்கு  தொகுதிப் பெயர்கள்
அடங்கிய ‘சுழற்சி
வழங்குதல். சக்கரம்’ (spinning
wheel)
4. தெரிவுசெய்யப்பட்ட மாணவர் கிடைக்கப்பெறும் தொகுதிப்
தற்கால பயிற்றியல்
பெயரைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்துக் கூறுதல்.
நடைமுறை
5. மாணவர்கள் கூறும் வாக்கியங்களை ஆசிரியர் கூகொள்
கூடலில் கலந்துரையாடி சரிபார்த்தல்.  6C ஆற்றல் –
தொடர்பாடல்
 தகவல்
தொழில்நுட்ப அறிவு

மானுடவியல் திறன்

 வாழ்நாள் முழுவதும்
கற்றல்
 தொடர்பாடல் திறன்

மதிப்பீடு தலைப்பு: 1. ஆசிரியர் மாணவர்களை நடவடிக்கை நூலில் பக்கம் 45 இல் முறைதிறம்


பழங்கள் இருக்கும் பயிற்சியைச் செய்ய பணித்தல்
(±15 நிமிடம்)  தனியாள் முறை
(முடக்கலை) 2. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கிணங்க முடக்கலையில்
ப.து.பொ
நடவடிக்கை நூல் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சியைச் செய்தல்
3. மாணவர்கள் செய்த பயிற்சியைப் படமெடுத்து புலனம்வழி  நடவடிக்கை நூல்

ஆசிரியருக்கு அனுப்புதல்
4. பின்னர், ஆசிரியர் மாணவர்களின் பதில்களைச் சரிப்பார்த்து
சரியான பதில்களை மாணவர்களுக்கு அனுப்புதல்

முடிவு தலைப்பு: 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல் செய்தல். முறைதிறம்


பழங்கள் 2. மாணவர்கள் ஆசிரியரின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
(±2 நிமிடம்)  வகுப்பு முறை
(இயங்கலை) காட்டு:
அ) இன்றைய தலைப்பு என்ன?
ஆ) தொகுதிப் பெயர் என்றால் என்ன?
இ) சீப்பு என்னும் தொகுதிப் பெயரை எதனைக் குறிக்க
பயன்படுத்துவோம்?
3. மாணவர்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருப்பின் ஆசிரியர்
அதனைத் தீர்த்து வைத்தல்
4. ஆசிரியர் இன்றைய பாடத்தை நிறைவுக்குக் கொண்டு
வருதல்
தொடர் தலைப்பு: வளப்படுத்தும் நடவடிக்கை முறைதிறம்
நடவடிக்கை பழங்கள்  ஆசிரியர் மாணவர்களைச் சுயமாக ஏதேனும் இரண்டு
 தனியாள் முறை
(முடக்கலை) தொகுதிப் பெயர்களைப் பயன்படுத்தி சூழல் ஒன்றனை
(வீட்டுப்பாட
எழுதப் பணித்தல்.
ம்)
குறைநீக்கல் நடவடிக்கை

 ஆசிரியர் மாணவர்களுக்கு நிறைவுபெறா வாக்கியங்களை


வழங்கி, அதனைச் சரியான தொகுதிப் பெயர்களைக்
கொண்டு நிறைவுசெய்யப் பணித்தல்.

சிந்தனை மீட்சி:

அ) இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடைந்த மாணவர்கள் (16/27)

 இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடைந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கையானது பதினாறு ஆகும். கூகொள்
கூடலின்வழி நிகழ்த்திய கற்றல் கற்பித்தலில் இப்பதினாறு மாணவர்களும் கலந்துகொண்டனர். இம்மாணவர்களில் பெரும்பாலும்
ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுவதில் ஆர்வமாகத் துலங்கினர். பீடிகையின்போது மாணவர்களுக்கு ‘ஜிக்சாவ்’
படப்புதிரை அறிமுகப்படுத்தி படத்துண்டுகளை இணைக்கப் பணித்தேன். மாணவர்களும் எனது கட்டளைக்கிணங்க, அழைத்தவுடன்
எந்தப் படத்தை இணைக்க வேண்டுமென்பதைக் குறிப்பிட்டனர். பிறகு, படத்தை இணைத்தவுடன் அப்படம் தொடர்பாகக் கேள்விகளை
எழுப்பியபோதும் மாணவர்கள் நான் எதிர்பார்த்த பதில்களையே முன்வைத்தனர். மாணவர்கள் கூறிய பதில்கள் யாவும் இன்றைய
பாடத் தலைப்போடு ஒன்றிணைந்தே அமைந்தன. அடுத்து, படி ஒன்றில் இன்றைய தொகுதிப் பெயர்களை வலையொளி காணொலியின்
மூலம் நான் விளக்கமளித்தேன். நான் கண்ணோட்டமிட்டதில் இப்பதினாறு மாணவர்களில் ஐவர் மிக விரைவில் நான்
விளக்கமளித்ததைப் புரிந்துகொண்டர். இதர மாணவர்களின் புரிதலை மேம்படுத்த தொகுதிப் பெயர்கள் தொடர்பாகத் தகவல்களை
மீண்டும் விளக்கமாகக் கூறி அதன் தொடர்பான கேள்விகளையும் எழுப்பினேன். சுமார் மூன்று முறை மாணவர்களுக்கு விளக்கியப்
பிறகே அனைவரும் என் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் புரிதலைச் சோதிக்கவும்
மேம்படுத்தவும் படி இரண்டில் நான் ‘குய்சீஸ்’ புதிர் கேள்விகளை கூகொள் கூடலில் படைத்தேன். ‘குய்சீஸ்’ செயலியில் வரும்
கேள்விகளை விடையளிக்க மாணவர்களைத் தெரிவுசெய்தேன். தெரிவுசெய்த 13 மாணவர்களும் சரியான பதில்களையே தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின்போது மாணவர்களை நானே தெரிவுசெய்ததால் மாணவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ‘நான் வருகிறேன்,
நான் சொல்கிறேன்’ என்று கூறியதால் சிறுது நேரம் கூகொள் கூடலில் சத்தம் அதிகரித்தது. மாணவர்களைக் கட்டுபடுத்த அவர்களைத்
தெரிவுசெய்வதற்குச் சுழற்சி சக்கரத்தைப் பயன்படுத்திருக்கலாமென நான் உணர்ந்தேன். இதன்வழியாக மாணவர்கள் தொகுதிப்
பெயர்களை நன்கறிந்து கொண்டனர் என்பதை உணர்ந்தேன். அதன் பிறகே, படி மூன்றில் மாணவர்களைத் தொகுதிப் பெயர்களைப்
பயன்படுத்தி வாக்கியம் அமைக்கப் பணித்தேன். சுழற்சி சக்கரத்தின்வழி மாணவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற தொகுதிப் பெயரைப்
பயன்படுத்தி மாணவர்கள் வாக்கியம் கூறினர். வாக்கியம் கூறிய ஆறு மாணவர்களில் நான்கு மாணவர்களின் வாக்கியங்களானது
சரியான முறையில் அமைந்தது. மீதமுள்ள இரண்டு மாணவர்களின் வாக்கியங்களில் சில பிழைகள் இருந்த காரணத்தினால் அதனை
மாணவர்களுக்குத் திருத்திக் கூறினேன். தொடர்ந்து, மதிப்பீடு நடவடிக்கையாக மாணவர்களை முடக்கலையில் நடவடிக்கை நூல் பக்கம்
45 இல் இருக்கும் பயிற்சியைச் செய்யப் பணித்தேன். அதையும் மாணவர்கள் நன்முறையில் செய்து எனக்குப் பலனம்வழி அனுப்பினர்.
அதிலும் சில மாணவர்களின் வாக்கியங்களில் பிழையிருந்ததால் அதற்கான சரியான வாக்கியத்தை அனுப்பி திருத்திக்கொள்ள
பணித்தேன். இறுதியாக, முடிவின்போது மீண்டும் மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை மீட்டுணர்வு செய்யும் நோக்கில் தொகுதிப்
பெயர்கள் தொடர்பாகக் கேள்விகளை வினவினேன். மாணவர்களும் அதற்கான சரியான பதில்களைத் தெரித்தனர். இன்றைய பாட
நோக்கங்களை அடைந்த இம்மாணவர்களுக்கு வளப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்படும்.

ஆ) இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடையாத மாணவர்கள் (11/27)


 இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடையாத மாணவர்களின் மொத்த எண்ணிக்கையானது பதினொன்று ஆகும்.
இப்பதினொன்று மாணவர்களும் நிகழ்த்திய கூகொள் கூடல் வகுப்பில் நுழையவில்லை. கூகொள் கூடலில் கலந்துகொள்ளாத
மாணவர்களுக்கென்று சுருக்கமாகப் புலனத்தில் ‘zepeto’ செயலின்வழி நான் தயாரித்த காணொலியை அனுப்பினேன்.
அக்காணொலியானது இன்றைக்கான தொகுதிப் பெயர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியதாகும். மாணவர்கள்
அக்காணொலியைப் பார்த்தும் நான் கொடுத்த மதிப்பீடு நடவடிக்கையை செய்து எனக்குப் புலனம்வழி அனுப்பவில்லை. இதன்
காரணமாகவே, இம்மாணவர்கள் இன்றைய பாட நோக்கங்களை அடையவில்லையென உறுதிப்படுத்தினேன். இம்மாணவர்கள் பற்றி
ஆசிரியரிடம் தகவல்களைத் திரட்டி அவர்களின் நிலையை அறிந்து குறைநீக்கல் நடவடிக்கையை வழங்கலாமென
முடிவெடுத்துள்ளேன்.

You might also like