You are on page 1of 17

I N S T IT U T P E N D ID IK A N G U R

UKAMPUS TUANKU BAINUN

BORANG MAKLUM BALAS KERJA KURSU


S

N a m a : THUVENTHAR A/L SHANMUGAM Angka Giliran


: 2 0 2 1 3 0 2 3 4 0040
K o d : BTMB3182 N a m a K u rs u s : 5 P IS M P
P e n s y a ra h : E N C IK MANIMARAN A/L GOVINDASAMY
T a r i k h H a n ta r 13 F E B R U A R I 20 23 T a r i k h T e r i m a : 13 MAC 2 0
: 23

P e n g a k u a n P e la ja r
S a y a m e n g a k u b a h a w a k e r j a k u rs u s i n i a d a l a h h a s i l k e r j
a sayasendiri kecuali nukilan dan ringkasan yang setia
p s a tu n y a s a y a j e l a s k a n s u m b e rn y a .

T a n d a ta n g a n P e l a j Tarik
ar : h:

P e r in c ia n M a k lu m B a la s K e r j a K u rs u s

Pemeriksa M o d e ra t o r ( j ik a b e rk a i ta n )
K e k u a ta n : K e k u a ta n :

A s p e k y a n g b o l e h d ip e r b a ik i A s p e k y a n g b o l e h d ip e r b a ik i
: :

T a n d a ta n g a n : T a r ik h : T a n d a ta n g a n : T a r ik h :

P e n g e s a h a n P e la ja r
Saya mengesahkan bahawa maklum balas yang diberik
a n o l e h p e n s y a ra h te l a h s a y a r u j u k i d a n f a h a m i .

C a ta ta n ( j i k a a d a )

T a n d a ta n g a n P e la ja r : T a r ik h :

1
நன்றி நவில்தல்

இந்த இடுபணியை நன்முறையில் எந்தவொரு தடையுமின்றி செய்து முடிக்க அருள் புரிந்த


எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்த இடுபணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கச் சிரமம் பாராமல் நேரத்தை ஒதுக்கி
இன்முகத்துடன் வழிகாட்டலை வழங்கிய விரிவுரைஞர் ஐயா திரு.மணிமாறன் த/பெ
கோவிந்தசாமி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கக்
கடமைப்பட்டுள்ளேன். மேலும், இவ்விடுபணியைச் செவ்வனே செய்வதற்குக் கைக்கொடுத்த
துவான்கு பைனூன் தமிழ்ப்பிரிவு விரிவுரையாளர்களுக்கும் எமது நன்றியினத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
தொடர்ந்து, இவ்விடுபணிக்குத் தேவையான தகவல்களைத் திரட்ட உதவிய துவான்கு
பைனூன் za’ba நூல் நிலைய நிர்வாகத்திற்கும் இத்தருணத்தில் எமது நன்றியைக் கூற
விழைகிறேன். அத்துடன், இணையத்தளம் இவ்விடுபணிக்குத் தகவல் திரட்ட மிகவும்
பங்காற்றியுள்ளது.
அடுத்ததாக, பண உதவியும் மன சோர்வுகளின்போது ஊக்குவிப்பும் அளித்து
எனக்குத் தூண்டுகோளாக விளங்கிய அன்பு பெற்றோர்களுக்கும் குடும்ப
உறுப்பினர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். மேலும், ஐயங்களைத்
தீர்க்கவும், புத்தகங்களை இரவல் பெறுவதற்கும் உதவி நல்கிய எனது சக நண்பர்களுக்கும்
இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இறுதியாக, இவ்விடுபணியைத் திறம்பட செய்து முடிக்க எனக்கு உதவி கரம் நீட்டிய
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

2
உள்ளடக்கம்

எண்
1 பள்ளிசார் பட்டறிவு விடய அறிக்கை
2 விடய ஆய்வறிக்கையின் நழுவங்கள்
3 மேற்கொள்
4 பின்னிணைப்பு
 வினாநிரல் பாரம்
 நேர்காணல் – நிழற்படங்கள்
 விரைவுக் குறியீடு (QR Code)
5 சிந்தனை மீட்சி

3
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி தமிழ் இலக்கண ஆசிரியர்கள் இலக்கணக்
கற்பித்தலில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அச்சவால்களைக் களைய புதிய இலக்கணக்
கற்பித்தல் உத்திமுறைகள்

பள்ளிசார் பட்டறிவு ஒவ்வொரு பயிற்சி ஆசிரியர்களும் பள்ளியின் சுற்றுசூழலையும்


பள்ளியின் சமுக செயல்பாடுகளையும் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ள பெரும்
பங்காற்றுகிறது. அவ்வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் திகதி அன்று நான்
பள்ளிசார் பட்டறிவை பெற லாடாங் பாடாங் மெகா தமிழ்ப்பள்ளிக்கு அணுப்பப்பட்டேன்.
என்னுடன் மேலும் இரு பயிற்சி ஆசிரியர்கள் அமர்த்தம் செய்யப்பட்டனர். இந்த பல்ளிசார்
பட்டறிவை பெறுதளின் போது அப்பள்ளி தமிழ் ஆசிரியர்களை நேர்காணல் செய்யும்படி
எங்களுக்கு இடுபணி வழங்கப்பட்டது. அந்த நேர்காணலில் தமிழ் ஆசிரியர்கள் தமிழ்
இலக்கணம் பாடத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொழுது எதிர்நோக்கிய
சவால்களையும் அதனைக் களைய பயன்படுத்திய உத்திமுளைகளையும் எடுத்துரைத்தனர்.

எனது முதல் நேர்காணலை பள்ளிக்குச் சென்ற இரண்டாம் நாளன்று தமிழ்


ஆசிரியரான திருமதி வசந்தா அவர்களிடமிருந்து தொடங்கினேன். முதலில் திருமதி
செயபாரதி அவர்களிடம் வணக்கத்தையும் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க நேரத்தை
ஒதுக்கியதற்கு நன்றியையும் கூறி நேர்காணலைத் தொடங்கினேன். முதல் கேள்வியாக
பலதரப்பட்ட பின்னனியிலிருந்து வரும் மாணவர்களை உள்ளடங்கி இருக்கும் வகுப்பில்
எவ்வாறான இலக்கணத்தை கற்பிக்கும் அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதை
வினவினேன். ஆசிரியர் செயபாரதி அவர்கள் முதல் நிலை, இடைநிலை, கடைநிலைப்
போன்ற வெவ்வேறான தரப்பு மாணவர்களுக்கு இலக்கணம் போதிப்பதில் தாம் பெரும்
சவாலை எதிர்நோக்குவதாகக் கூறினார். இதன் காரணம், ஒவ்வொருவரின் புரிதல் நிலை
வெவ்வேறாக இருக்கும் என்றார். முதல்நிலை மாணவர்களும் இடைநிலை மாணவர்களும்
ஆசிரியர் போதிப்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள். மாறாக கடைநிலை மாணவர்கள்
இலக்கண விதிகளைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்வார்கள். இதனால்,
கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஆசிரியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் ஓர்
இலக்கண விதியை கற்பிப்பதில் சிரமம் உண்டாகிறது என்றார். இறுதியில் ஆசிரியர்களால்
பாட நோக்கத்தை அடைய இயாலாமல் ஆகிவிடுவது வெள்ளிடமலை என்றார்.
மாணவர்களின் அடைவு நிலையும் குன்றி விடுகிறது என்று கூறினார்.

4
இவ்வாறான சிக்கலை ஆராய்ந்ததில் ஆசிரியர்கள் பயிற்று துணைபொருள்
கொண்டே கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் செயபாரதி
கூறினார். பயிற்று துணைப்பொருள் கற்றல் கற்பித்தலுக்கு துணையாக இருந்தாலும்
மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாணவர்களும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்றார். காட்டாக,
முதலில் ஆசிரியர் பீடிகையின் போது கணினியைப் பயன்படுத்தலாம்; ஆசிரியர்
கணினியைப் பயன்படுத்தி வலிமிகும் எடுத்துகாட்டுக்களை வெண்திரையில் ஒலிபரப்பலாம்
என்றார். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் கூர்ந்து கவனிப்பர் என்று கூறினார். மேலும்,
இவ்வுத்திமுறையை கையாளும்பொழுது வகுப்பில் தாம் பெற்ற அனுபவத்தை விவரித்தார்.
இந்த அணுகுமுறையை தாம் கையாளும்பொழுது தொலைவில் உள்ள சில மாணவர்களால்
காண முடியவில்லை என்றார். அதனால், அந்த மாணவர்கள் மட்டும் சரிவர
கவனிக்கவில்லை. இதற்கு மாறாக, ஆசிரியர் பாடல் வழி வலிமிகும் இடங்களைக் கற்றுக்
கொடுத்தால் அனைத்து மாணவர்களின் கவனமும் பாடத்தில் இருக்கும் என்று கூறினார்.
ஏனென்றால், இசை அனைவரையும் ஈர்க்கவல்லது. இசை கேட்டும்போது உள்ளத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். மகிழ்ச்சியோடு ஒரு பாடத்தைக் கற்கும் பொது அப்பாடப்பொருள்
எளிமையான முறையில் உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. எனவே, மாணவர்களுக்குப் பாடல்
வழி இலக்கணப் பாடத்தைக் கற்பித்தால் அவர்களின் மொழித்திறன் சிறப்புற விளங்கும்
என்றார் திருமதி செயபாரதி.

எனது பார்வையில் அனைத்து ஆசிரியர்களாலும் பாடல் வழி கற்பிக்க இயலாது


என்பதால் திரையிசைப் பாடல்களைக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தி கொள்ளலாம்.
மாணவர்கள் நவீன ஊடகங்களைப் பெரிதும் நுகர்வோராகத் திகழ்கின்ற காரணத்தினால்
அவ்வுடகங்கள் வழியே அவர்களுக்கு கல்வி சிந்தனையைப் புகட்டும் கற்றல் கற்பித்தல்
அனுகுமுறை மிகச் சிறந்த பலன் தரும்.

அடுத்ததாக 4-ஆம் ஆண்டு தமிழாசிரியரான திருமதி உதய சந்திரிகா அவர்களை


நேர்காணல் செய்தேன். மாணவர்களிடையே தமிழ்மொழி பாடத்தின்பால் காணப்படும்
ஆர்வமின்மையானது அப்பள்ளி ஆசிரியருக்கு தமிழ் இலக்கணம் போதிப்பதற்குச்
சவாலாக அமைகிறது என்றார். ஆர்வமற்ற மாணவர்களிடத்தே இலக்கண விதிகளை
அறிமுகம் படுத்துவது என்பது அசிரியர்களுக்கு ஒரு இடராகும். ஏனெனில், மாணவர்களின்

5
ஈடுபாடு குறைந்தே காணப்படும் என்று கூறினார். ஆர்வமின்றி பயிலும் ஒரு பாடமானது
அவர்கள் நினைவில் நிலைத்து நிற்காது. அக்கறையின்றியும் ஆர்வமற்றும் பயிலும்
மாணவர்கள் இலக்கண விதிகளை உள்வாங்கி புரிந்து படிக்க மாட்டார்கள்.
அதுமடுமல்லாது, இவ்வகையான மாணவர்கள் வகுப்பில் அதிகம் குறும்புத்தனம்
செய்வதுமல்லாமல் பிறரையும் தொல்லை படுத்துவார்கள். இந்த சூழ்நிலை ஆசிரியர் கற்றல்
கற்பித்தலை நடத்துவதற்கு பெரும் தடையாக அமைகிறது என்றார் திருமதி உதய
சந்திரிகா.

மேலும், தமிழ் மொழி வகுப்பில் தாய்மொழி தமிழ் மொழி இல்லாத மாணவர்கள்


பயிலும் போது ஆசிரியர் இலக்கணத்தை போதிப்பதில் எதிர் நோக்கும் சவால்கள்
எண்ணிலடங்கா. தமிழ்மொழி புரியாத மாணவர்களிடயும் ஆர்வமின்றி பயிலும்
மாணவர்களிடையும் ஆசிரியர்கள் ஒரே மதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வாறான சிக்கலை களைய ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் ஈர்க்கத்தக்க


வகையில் இருக்கும் உத்திமுறையை ஆசிரியர் கையாள வேண்டும் என்றார் திருமதி உதய
சந்திரிகா. இலக்கணத்தைக் கதை வழி கற்பிக்கும் உத்திமுறையை பயன்படுத்தி
மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று கூறினார். ஆசிரியரே கதைகளை உருவாக்கி
இலக்கண குறிப்புகளை எளிமையாக கற்பிக்கலாம். உதாரணத்திற்கு, சில, பல
என்பனவற்றிற்குப் பின் வலிமிகாது என்பது கற்றல் தரமாகும். எனவே, ஆசிரியர்
மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோட்டி கதைகளை உருவாக்கி அதனுள் கற்றல்
தரத்தை இணைத்தால், அன்றைய கற்றல் கற்பித்தலின் நோக்கம் அடைந்திருக்கும். மேலும்,
ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த புதிய உத்தியை பயன்படுத்தினால்,
மாணவர்கள் வகுப்பில் மனமகிழ்வோடு கற்பார்கள் என்பது திண்ணம். மாணவர்களிடத்தே
ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த உத்திமுறையானது அமையும் என்றார்.

தொடர்ந்து, மூன்றாவதாக நான் தமிழாசிரியர் திருமதி வசந்தா அவர்களை


நேர்காணல் செய்தேன். திருமதி வசந்தா பார்வையில் தாம் இலக்கணம் கற்பிப்பதில்
எதிர்நோக்கும் சவலானது மாணவர்களால் நீண்ட காலம் இலக்கண விதியை நினைவில்
கொள்ள முடியாது என்பது முதன்மை சவாலாகும். இதற்கு அடிப்படை காரணமாக
அமைவது, மாணவர்கள் இலக்கண விதிகளை மனனம் செய்வதே ஆகும். மனனம் செய்து
படிக்கும் ஒரு பாடமானது ஒரு கால கட்டத்திற்கு மட்டுமே நினைவில் நிலைத்திருக்கும்
பிறகு நினைவிலிருந்து அழிந்துவிடும். அதுவே, புரிந்து படிக்கும் ஓர் இலக்கண விதியானது
நீண்ட காலம் அழியாது நினைவிலும் மனதிலும் சிலைமேல் எழுத்து போல

6
அழியாதிருக்கும் என்றார் திருமதி வசந்தா. மாணவர்கள் ஓர் இலக்கண விதிகளை மனனம்
செய்கையில் அவ்விதியின் பயன்பாட்டினை அறிந்து பயன்படுத்துவதிலிருந்து தவறி
விடுகிறார்கள். இதனால் இவர்கள் தேர்வின் போது தவறாக பதிலளித்து குறைந்த
மதிப்பெண்களை பெறுகிறார்கள் என்றார். மேலும், இவ்வாறு ஓர் இலக்கண விதியின்
பயன்பாட்டினை அறியாது வெறும் மனனம் செய்யும் மாணவர்களுக்கு தாம் மற்றொரு
விதியைப் போதிக்க சவாலை எதிர்கொள்வதாகக் கூறினார். அவையாவன, இரண்டு
விதிகளுக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதிலும், மற்றொரு புதிய விதியை அறிமுக்ம்
படுத்துவதிலும் ஆகும். புதிய விதியை போதிக்கையில் மாணவர்கள் இதற்கு முன் படித்து
மனனம் செய்த விதிகளை மறக்க நேரிடுகிறது. இதனால் தாம் இலக்கண விதிகளை நன்றே
போதிக்க பெரும் சிக்கலை எதித்கொள்வதாக கூறினார்.

மாணவர்களை நீண்ட காலமாக இலக்கண விதியை மனதில் நினைவு


வைத்திருக்கும் படி செய்யவேண்டுமானால் புதிய உத்திமுறையை கையாள வேண்டும்.
எனவே, திருமதி வசந்தா அவர்கள் தற்காலத்தில் மாணவர்கள் தொழிநுட்ப பயன்பாட்டில்
மூழ்கி கிடக்கும் காரணத்தால் முன்னோக்கு சிந்தனையுடன் இருப்பது அவசியமாகிறது
என்கிறார். காட்டாக, ஆசிரியர் கணினியைப் பயன்படுத்தி இலக்கணம் தொடர்பாக
மொழி விளையாட்டு ஒன்றனை உருவாக்கி போதிக்கலாம் என்கிறார். காஹூட் என்ற
இணையதளத்தில் உள்ள மிக நவீன கற்பித்தலுக்கென உருவாக்கப்பட்ட
அகப்பக்கமும் இலக்கணத்தைப் போதிக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. இது புதிர்ப்போட்டி
உத்தியைப் பயன்படுத்தும் விளையாட்டுமுறை ஆகும். இதில் ஆசிரியர்கள் இலக்கண
கேள்விகளை, போதிக்கும் அலகுக்கு ஏற்றவாறு பிரித்துத் தயாரித்து வைக்கலாம். காஹட்
அகப்பக்கத்தில் எழுத்துகள் கொண்ட கேள்விகள் மட்டும் தயாரிக்க வேண்டும் எனும்
அவசியத்தைக் கொள்ளவில்லை. செவிபுலன்களை திறனுடன் பயன்படுத்தும் வகையில்
காணொளிகளையும், பாடங்களையும், குரல்பதிவுகளையும், பாடல்களையும் பதிவேற்றம்
செய்து கேள்விகளைத் தயாரிக்கலாம். காஹூட் அகப்பக்கத்தின் மூலம் மாணவர்கள்
தங்களது முழுமையான கவனத்தைக் கேள்விகளிலேயே செலுத்துவர். மாணவர்களுக்கு
குறிப்பிட்ட நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதிலே குறிக்கோளாக இருப்பார்கள்.
கற்றல் கற்பித்தலின் நோக்கத்தை அடைவதற்கு காஹூட் ஒரு புதிய உத்தியாகும்.
இலக்கணத்தின் பால் மாணவர்களுக்கு ஆர்வமும் கற்றல் முழுமையாக நிகழ காஹூட்
பயன்படுத்துவது சிறந்த முறையாகும். இதனால், மாணவர்களுக்கு நீண்ட நாள் கற்றது
நினைவில் இருக்கும்.

7
இலக்கணம் போதிப்பதன் வழி பல விளைபயன்களை பெற இயல்கிறது. ஒவ்வொரு
சிக்கலுக்கும் நிச்சயம் ஒரு களையும் முறை இருக்கும். அதனை ஆசிரியர்கள் அறிந்து
இலக்கண பாடத்தை பயனுள்ள வழியில் கற்பிக்க முன்வர வேண்டும். தொழில்நுட்ப வளர்சி
அடைந்த இப்புவியில் இணையம் அல்லது தொழொல்நுட்பம் சார்ந்த உத்திமுறைகளை
பயன்படுத்தி போதிப்பது சிறப்பாகும். பருவம் மூன்றில் நான் மேற்கொண்ட பள்ளிசார்
பட்டறிவின் வழி தேசிய பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தைக்
கற்பிக்க எதிர்நோக்கிய சவால்களை கண்டறிந்தேன். ஆசிரியர் அச்சாவால்களை
எதிர்கொள்ள கையாண்ட உத்திமுறைகளையும் கண்டறிந்தேன். இந்த அனுபவங்கள் வரும்
காலங்களில் நல்ல தமிழாசிரியராக உதவும் என்று பெரிதும் நம்புகின்றேன்.

அறிக்கை தயாரித்தவர், 22 பிப்ரவரி 2023

…………………………

(ச.துவேந்தர் த/பெ சண்முகம்)

பருவம் 5 இசைக்கல்வி 2

துவான்கு பைனுன் வளாகம்

8
மேற்கொள்

கணபதி, வி. (1993). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை: சாந்தா பதிப்பகம்.


கணபதி.க.(2010). தமிழ்மொழிக் கல்வி. ராயப்பேட்டை, சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ்

கணபதி.வி & ஜெயராமன்.பூ (2010).நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் பகுதி-2


ராயப்பேட்டை, சென்னை : சாந்தா பப்ளிஷர்ஸ்.

கணபதி.வி, ரத்தினசபாபதி.பி. ஜெயராமன்.பூ & சந்திரிகா.ர (2013). பாடப்பொருள்


மற்றும் தமிழ் கற்பித்தல் (பொதுத்ததமிழ்). ராயப்பேட்டை, சென்னை : சாந்தா
பப்ளிஷர்ஸ்.

சுப்புரெட்டியார். நா. (2015). தமிழ் பயிற்றும் முறை. புதுத்தெரு, சிதப்பரம் :


மெய்யப்பன் பதிப்பகம்.

9
குமரன்.எஸ், கிருஷ்ணன் மணியம், அரங்க பாரி, பத்மாவதி விவேகானந்தன் & அபிதா
சபாபதி. (2014). தமிழ் வழி கற்றல்- கற்பித்தலில் புதிய உத்திகள். கண்ணதாசன்
தியாகராய நகர், சென்னை : கலைஞன் பதிப்பகம்.

பின்னிணைப்பு

10
பாடத்துணைப்பொருள்

பலத்தரப்பட்ட மாணவர்கள்

திருமதி செயபாரதியுடன் அவர்களுடன் நேர்காணல்

11
திருமதி வசந்தா அவர்களுடன் நேர்காணல்

12
திருமதி உதய சந்திரிகா அவர்களுடன் நேர்காணல்

வினா நிரல் பாரம்

1. இலக்கணம் கற்றல் கற்பித்தலின் போது பெரும்பாலான மாணவர்கள் நாட்டம்

செலுத்தாததன் காரணம் என்ன?


2. இலக்கணம் இரு வரட்ச்சியான பாடமென பலர் கருதுகின்றனர். தங்களின் கருத்து

என்ன?
3. வகுப்பில் இலக்கணம் கற்பித்தலை 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தலுக்கேற்ப

பயனுள்ள படி எவ்வாறு நடத்துவது?


4. மாணவர்கள் இலக்கணம் கற்றலின் போது எவ்வாறான சிக்கலை

எதிர்நோக்கின்றனர்?
5. முதல் நிலை, இடை நிலை, கடை நிலை மாணவர்களுக்கேற்ப எவ்வாறு

வெவ்வேறான அணுகுமுறைகளை ஒரே பாடவேளையில் கையாளுவது?


6. மாணவர்கல் இலக்கண அறிவை முழுமையாகவும் மனதில் ஆழமாகவும் பதியும்

படி பெற்றுள்ளனரா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

13
7. கற்றல் கற்பித்தல் முடிந்த பிறகு மாணவர்களின் புரிதலையும் அடைவு நிலையையும்
அறிந்து கொள்ள தொடர் மதிப்பீடு ஏற்றதா அல்லது முழுமை மதிப்பீடு ஏற்றதா?

நேர்காணல் நிரல்படங்கள்

திருமதி செயபாரதியுடன் அவர்களுடன் நேர்காணல்

14
திருமதி வசந்தா அவர்களுடன் நேர்காணல்

15
திருமதி உதய சந்திரிகா அவர்களுடன் நேர்காணல்

விரைவுக் குறியீடு (QR Code)

16
17

You might also like