You are on page 1of 5

“சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாகவுள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக

உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்தவல்லது மொழி.”

இப்பொன்மொழியை ஜே. வென்றிஸ் என்ற மொழியியல் அறிஞர் தெரிவித்துள்ளார் என்பது யாவரும்


அறிந்த உண்மையே. மொழியானது மனித இனங்களை ஆக்குவது மட்டுமல்ல, மனித இனத்தை
ஆட்டுவதும் அதுவே; மொழி இல்லாவிட்டால் இனங்களல்ல, இனமே தோன்றியிராது. இதனையே
பன்மொழிப் புலவரான கா. அப்பாத்துரை மொழி வளம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மொழி
என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையோடு அஃது அறிவை உயர்த்தும் அரிய
கருவியாகும். மொழி உண்மையில் மனிதப் பேரினமளாவியது மட்டுமன்று; அது கடந்து உயிர்ப்பெரும்
பேரினத்தையே அளாவி வளர்வது. ஓர் இனமாய் அல்லது ஒரு சமுதாயமாய் வாழ்வதற்குத்
துணையாகவுள்ளச் சிறந்த கருவியே மொழியாகும் என்பது ஒப்புநோக்க தக்கது. மொழியானது
ஒருவரின் நாகரிகத்தோடும் சமுதாய உணர்வுகளோடும் பின்னிப்பிணைந்து இயங்கி வருகிறது என்றும்
குறிப்பிடப்படுகிறது.

ஆனால் இன்றோ அம்மொழியானது பல சிதைவுகளைக் கொண்டிருக்கிறது என்று கூறினால்


மிகையாகாது. பல சான்றோர்களால் கட்டிக் காக்கப்பட்டு வந்த நம் தமிழ்மொழியானது இன்று நம்மிடம்
மாட்டிக் கொண்டு படும் பாட்டினை என்னவென்று சொல்வது. அதுமட்டுமல்லாமல், தமிழ், ஆங்கிலம்,
பிராஞ்சு, இந்தியென பல மொழிகளில் புலமைபெற்றிருந்த முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி,
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்’
என்று பாடி மெய்சிலிர்க்க வைத்த காலமெல்லாம் மலை ஏறியது என்று தான் கூற வேண்டும். இன்று
நம் பேச்சு வழக்கிலும் படைப்புகளிலும் நிறைய மொழிச்சிதைவினைக் காணலாம். மொழிச்சிதைவு
என்பது ஒரு மொழியின் தூய்மையினையும் தொன்மையினையும் சிதைப்பது என்று பொருள்படும்.
மேலும் மொழிக்கென உள்ள தனிச்சிறப்பை அழிக்கும் செயலையும் மொழிக்கான உள்ள விதிகளைப்
பிழையாரக் கையாளுவதும் மொழிச்சிதைவே என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் தமிழ்மொழியில்
காணப்படும் மொழிச்சிதைவுகள் எண்ணிலடங்கா. தமிழ்மொழியில் மொழிச்சிதைவுகள் ஏற்படும்
நிலைகள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது இலக்கண வரம்பை மீறுதல், தொடர்ந்து
மரபுப் பிழைகள், பிழையான மொழிப் பெயர்ப்பு மற்றும் தமிழில் பிற மொழியின் தாக்கம் ஆகும்.

இம்மொழிச்சிதைவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் ஊடகங்களின் அலட்சியப்


போக்கும் சமுதாயத்தின் மனப்போக்கும் ஆகும்.
டிஸ்கவரியில் கூடத் தமிழ் வந்துவிட்டது,
தீ ஹிந்தியில் கூடத் தமிழ் வந்துவிட்டது,

அட, ஆப்பிள் தொலைப்பேசியில் கூடத் தமிழ் வந்துவிட்டது,

ஆனால் ஏன் தமிழன் நாக்கில் மட்டும் தமிழ் வர மறுக்கிறது

என்று பல அறிஞர்களும் எழுத்தாளர்களும் கேள்வி கேட்பதும் உண்டு. நம் தாய்மொழியான


தமிழ்மொழி சிதைவுக்குண்டானதற்கு இன்னொரு முக்கியக் காரணம் ஊடகங்கள் படைப்புகளை
வெளியிடுவதற்கு முன்பு சரிபார்க்காமின்மையே ஆகும். தமிழ்மொழியில் அதிகம் மொழிச்சிதைவுகள்
காணப்படுவதனால் காலப்போக்கில் நம் மொழியானது அழிவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளது என்பது
உள்ளங்கையில் நெல்லிக்கனியாகும்.

இம்மொழிச்சிதைவினை ஆராய்வதற்கு, இணையத்தளத்திலிருந்து ஒரு கட்டுரையினைத் தேர்ந்தெடுத்து


ஆய்வினைத் தொடங்கினேன். நான் தேர்ந்தெடுத்த கட்டுரையானது தமிழ் குருவி பக்கத்தைச் சேர்ந்த
தொலைப்பேசியைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் என்பதாகும். இக்கட்டுரையில் 80
சதவிகித மொழிச்சிதைவினை என்னால் பார்க்க முடிந்தது என்று கூறினால் மிகையாகாது.

தவறான சொல் சரியான சொல்


செல்ஃபோன் தொலைப்பேசி
போஸ்ட் கார்ட் அஞ்சலட்டை
மொபைல் காலக் கட்டத்தில் தொழில்நுட்ப காலக் கட்டத்தில்
எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்தி
‘மிஸ்டு கால்’ தவறான அழைப்பு
‘மல்டிமீடியா’ பல்லூடகத்தை
‘காமிரா’ நிழற்படம்
வீடீயோ காணொளி
ரிங் டோன் அழைக்கும் இசை
கிளிக் தட்டுதல்
முதலாவதாகப் கம்யூட்டர் கணினி பிற மொழி
கான்டெக் நம்பர்கல் தொடர்பு எண்கள்
பெர்சனல் போட்டோக்கள் சுய படங்கள்
பாஸ்வர்ட் கடவுச்சொல்
காப்பி பிரதி
சிம் கார்ட் தகவல் அட்டை
பாக்கெட் சட்டைப்பை
தோல்திசுக்கள் தோல் தசைகள்

தாக்கத்தினைப் பார்த்தோமானால் இக்கட்டுரையில், தொலைப்பேசி என்ற சொல்லினைப்


பயன்படுத்தாமல் செல்ஃபோன் என்று இக்கட்டுரை முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,
அஞ்சலட்டை என்று பயன்படுத்தாமல் போஸ்ட் கார்ட் என்று பயன்படுத்தியுள்ளனர். இரண்டாவது
பத்தியில் தொழில்நுட்ப காலக் கட்டத்தில் என்று கூறாமல் மொபைல் காலக் கட்டத்தில் என்று
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது பத்தியில் குறுஞ்செய்தி என்று பயன்படுத்தாமல் எஸ்.எம்.எஸ்
என்ற ஆங்கில வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவறான அழைப்பு என்று பயன்படுத்தாமல்,
‘மிஸ்டு கால்’ என்றும் பல்லூடகத்தை, ‘மல்டிமீடியா’ என்றும் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தெரிந்த வார்த்தையான நிழற்படம் என்று குறிப்பிடாமல் ‘காமிரா’ என்று குறிப்பிட்டு
நம் தமிழ் மொழியினைத் தாரை வாக்குகின்றனர். பதினொன்றாவது பத்தியில் வீடியோ, ரிங் டோன்,
கிளிக், கம்யூட்டர், ஃபோன் மெமரி, போட்டக்கள், பாஸ்வேர்டு என்று பல ஆங்கில வார்த்தைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன இக்கட்டுரையில். கட்டுரைகளில் வேற்று மொழிகளுக்கு அதிகம்
முக்கியத்துவம் கொடுப்பதனால் நம்முடைய தமிழ்மொழியின் சொற்களஞ்சியங்கள் நாளடைவில்
அழிந்துவிடும்

தொடர்ந்து, இக்கட்டுரையில் இலக்கணப் பிழைகளும் மிகுந்த வண்ணமாகவேதான் காட்சியளிக்கிறது.


இரண்டாவது பத்தியில் பேசுவதற்காக செலவழிக்கும் என்ற சொற்றொடரில் ஆக என்ற வினையடை
விகுதியின் பின் வலிமிகாமல் எழுதப்பட்டுள்ளது. அதே பத்தியில் சாப்பிடுவதற்கு செலவழிப்பதை
என்ற சொற்ரொடரிளும் இருப்பவர்களுக்கு தந்தி என்ற சொற்றொடர்களிலும் கு-என்ற நான்காம்
வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகாமல் எழுதப்பட்டுள்ளது. குப்பைப் பேச்சுகளைத் என்ற
சொற்றொடரில் வேர் சொல்லான குப்பை என்ற சொல்லுக்குப் பின் வலிமிகாமல் எழுதப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் இக்கட்டுரையில் வலிமிகுந்து தவறாக எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது
பத்தியில் உபயோகத்தை குறைத்து மற்றும் பத்தாவது பத்தியில் சாலையை கடப்பது என்ற
சொற்றொடரில் இரண்டாம் வேற்றுமை உருபிற்கு பின் வலிமிகாமல் எழுதப்பட்டுள்ளது. இந்த தகவல்
இந்த சோதனை, இந்த கதிர் என்ற சொற்றொடர்களில் அந்த இந்த எந்த என்ற சொற்களின் பின்
வலிமிகும் என்ற இலக்கண வரம்பை மறந்து வலிமிகாமல் இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

இலக்கணப் பிழைகள் கொண்ட திருத்தப்பட்ட பிழைகள்


சொற்கள்

பேசுவதற்காக செலவழிக்கும் பேசுவதற்காகச் செலவழிக்கும்


சாப்பிடுவதற்கு செலவழிப்பதை சாப்பிடுவதற்குச் செலவழிப்பதை
இருப்பவர்களுக்கு தந்தி இருப்பவர்களுக்குத் தந்தி
உபயோகத்தை குறைத்து உபயோகத்தைக் குறைத்து
இந்த தகவல்கள் இந்தத் தகவல்கள்
இந்த கதிர் இந்தக் கதிர்
இந்த சோதனை இநக்ச் சோதனை
இந்த தகவலை இந்தத் தகவலை
நேரத்தை செலவிடுகிறார்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்
பயன்படுத்துவதாக தெரிய பயன்படுத்துவதாகத் தெரிய
படங்களை பரப்புவது படங்களைப் பரப்புவது
எந்த பேச்சும் எந்தப் பேச்சும்
சுருக்கமாக பேசுவதே சுருக்கமாகப் பேசுவதே
சாலையை கடப்பது சாலையைக் கடப்பது
மூளைக்கு செல்லும் மூளைக்குச் செல்லும்
குழாய்களை சேதப்படுத்துகிறது குழாய்களைச் சேதப்படுத்துகிறது
மேலும், நான் ஆய்வு செய்த கட்டுரையில் நிறைய சொற்பிழைகளும் வாக்கியப் பிழைகளும் காண
முடிந்தது. காட்டாக, நான்காவது பத்தியில் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்ற தொடரில்
உயிரெழுத்துக்கு முன் ஓர் என்ற எண்ணுப் பெயர் வர வேண்டும். பத்தாவது பத்தியிலோ எனவே
யோசித்து சுருக்கமாகப் பேசுவதே எப்போது நல்லது என்ற வாக்கியத்தில் எப்போதும் என்ற
சொல்லுக்குப் பதிலாக எப்போது என்று பயன்படுத்தப்பட்டதால் அவ்வாக்கியமே தவறாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், ஒரே பொருளைத் தரக்கூடிய இரண்டு சொற்கள் ஒரே வாக்கியத்தில்
பொருத்தப்பட்டுள்ளது. காட்டாக, பின்லாந்து நாட்டைச் சார்ந்த சேர்ந்த டாரியுஸ், இவ்வாக்கியத்
தொடரில் சார்ந்த சேர்ந்த என்ற ஒரே பொருளைத் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இணையக் கட்டுரைகளில் காணப்படும் மொழிச்சிதைவுகளினால் ஏற்படும் விளைவுகள் கடலளவு


பெரியதாகும் என்பது திண்ணம். எங்கும் எதிலும் மொழிச்சிதைவுகள் மிளிர்ந்து காணப்படுவதனால்
ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சிறந்தொரு படைப்பிலக்கியத்தை
கொண்டு சேர்க்க இயலாது. மேலும், ஈராயிரம் ஆண்டுகளுக்குப் முன்பே செம்மொழியாக
விளங்கப்பட்ட நம் தாய் மொழியான தமிழ்மொழி இன்று பல சிதைவுக்குள்ளாகுவதால், வரும் இளைய
சமுதாயத்தினர் நம் மொழியின் மீது பற்று இல்லாதவர்களாகவும் ‘தமிழ்மொழி சோறு போடுமா?’ என்ற
வீண் கேள்விகளையும் கேட்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. மொழிச்சிதைவுகள் தொடர்ந்து நம்
தமிழ்மொழி படைப்பிலக்கியங்களில் காணப்பட்டு வந்தால், விரைவில் நம் தமிழ்மொழி அழிய நேரிட
அவல நிலை ஏற்படும்.

நற்றமிழில் நஞ்சு கூட்டி

டமுக்கு டப்பா இசை என்பார்!

தமிழ் பகைவரிவர் வாழத் தாய்த்தமிழை

கொலை செய்கின்றார்!

கலப்படமே இல்லாத கலைகளையே காணேனோ


இத்தமிழ் இனத்தில்!

என்ற கலைஞர் கருணாநிதியின் கருத்து முற்றிலும் உண்மை என்று மார்த்தட்டிக் கூறலாம். மொழிச்
சிதைவே ஓர் இனத்தின் சிதைவு என்பதை நாம் நன்கு உணர்ந்து தமிழ்மொழியைப் பிழையறக் கற்க
வேண்டும். மேலும், நம் மொழியைப் பிழையறக் கற்பதனால் சிறந்த படைப்பாளர்களை
உருவாக்குவதோடு தமிழ்மொழியின் மரபுகள் அழிந்து போகாமல் காக்க முடியும் என்பது
நிதர்சணமான உண்மையாகும். தமிழர்களாகிய நாம் மொழிச் சிதைவினை உணராமல் கொடுந்தமிழுக்கு
முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதனை உணர்ந்து அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வேற்று மொழிக்கு முதல் இடம் கொடுக்காமல், சங்கம் வைத்து வளர்த்து வந்த நம் தமிழுக்கு முதல்
இடம் கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் தலையாயக் கடமையாகும் என்று கூறினால் கிஞ்சிற்றும்
ஐயமில்லை.

You might also like