You are on page 1of 1

நன்றி நவிலல்

இவ்விடுபணியை நன்முறையில் எந்தவொரு தடையுமின்றி செய்து முடிக்க அருள் புரிந்த


எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

இவ்விடுபணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கச் சிரமம் பாராமல் நேரத்தை ஒதுக்கி


இன்முகத்துடன் வழிகாட்டிய விரிவுரைஞர் ஐயா திருவாளர் மணிமாறன் கோவிந்தசாமி
அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மேலும்,
இவ்விடுபணியைச் செவ்வனே செய்வதற்குக் கைக்கொடுத்த துவான்கு பைனூன்
தமிழ்ப்பிரிவு விரிவுரையாளர்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து, இவ்விடுபணிக்குத் தேவையான தகவல்களைத் திரட்ட உதவிய துவான்கு


பைனூன் za’ba நூல் நிலைய நிர்வாகத்திற்கும் இத்தருணத்தில் எமது நன்றியைக் கூற
ஆசைப்படுகிறேன். அத்துடன், இணையத்தளம் இவ்விடுபணிக்குத் தகவல் திரட்ட மிகவும்
பங்காற்றியுள்ளது.

அடுத்ததாக, பண உதவியும் மன சோர்வுகளின்போது ஊக்குவிப்பும் அளித்து எனக்குத்


தூண்டுகோளாக விளங்கிய அன்பு பெற்றோர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும்
இவ்வேளையில் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். மேலும், ஐயங்களைத் தீர்க்கவும்,
புத்தகங்களை இரவல் பெறுவதற்கும் உதவி நல்கிய எனது சக நண்பர்களுக்கும்
இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இறுதியாக, இவ்விடுபணியைத் திறம்பட செய்து முடிக்க எனக்கு உதவி கரம் நீட்டிய


அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மிக்க நன்றி

You might also like