You are on page 1of 5

பாடம் : நன்னெறிக் கல்வி

தலைப்பு : நன்றி மறவேல்

நெறி : 4 நன்றி நவில்தல்:

உள்ளடக்கத் தரம்: 4.0 ÀûÇ¢ìÌÊ¢Éâ¼õ ¿ýÈ¢ À¡Ã¡ðξø

கற்றல் தரம் : 4.1 பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்


முறைகளைப் பட்டியலிடுவர்.

4.5 பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்


மனப்பான்மையைச் செயல்படுத்துவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :-


1. பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் முறைகளைப்
பட்டியலிட்டு, எழுதுவர்.
2. பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்
மனப்பான்மையைச் செயல்படுத்துவர்.
3. பள்ளிக்குடியினரின் பங்களிப்பையும் மற்றும்
தியாகங்களை மதிக்கும் வகையில் செயல்படுவர்.
உரையாடல் 1
பள் ளி வ ளா கத் தி ல் . .. .

பாதுகாவலர் : குமார், நீ ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை?

குமார் : நான் பள்ளிப் பேருந்தைத் தவற விட்டு விட்டேன்


ஐயா.

பாதுகாவலர் : அப்படியா? நீ சாப்பிட்டு விட்டாயா?

குமார் : இன்னும் இல்லை ஐயா.

பாதுகாவலர் : சரி கவலைப்படாதே! இந்தப் பொட்டலத்தில் உணவு உள்ளது.


இதை முதலில் சாப்பிடு. எனது கைத்தொலைப்பேசியைப்
பயன்படுத்தி பெற்றோரைத் தொடர்பு கொள். பெற்றோர் வரும்
வரை பள்ளி வளாகத்திலேயே இரு.

குமார் : மிக்க நன்றி ஐயா.


உரையாடல் 2
சிற்றுண்டிச் சாலையில்.....

திரு லிங்கம் : திவ்யா, ஏன் சாப்பிட்டாமல் உட்கார்ந்திருக்கிறாய்?

திவ்யா என்னிடம் பணம் இல்லை ஐயா.


:
திரு லிங்கம் : என்னுடன் வா. நான் உணவு தருகிறேன்.

திவ்யா ஆனால்....
:
திரு லிங்கம் :
பணம் இல்லையென்றால் பரவாயில்லை. முதலில் சாப்பிடு.
பிறகு அருந்த குளிர்பானம் தருகிறேன்.

திவ்யா : மிக்க நன்றி ஐயா. நாளை மீண்டும் இப்பணத்தை உங்களிடம்


தருகிறேன்.
உரையாடல் 3
வ கு ப் பறை யி ல் .. ..

ஆசிரியர் : கண்மணி, ஏன் நொண்டி நொண்டி நடக்கிறாய்?

கண்மணி : கீழே விழுந்து விட்டேன் அம்மா.

ஆசிரியர் : எங்கே உன் காலைக் காட்டு பார்க்கலாம். முட்டியில் இரத்தம்

வழிகிறதே! வா, நான் காயத்தைச் சுத்தம் செய்து மருந்து

போடுகிறேன்.

கண்மணி : சரி அம்மா.

ஆசிரியர் : நான் உன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு விவரத்தைச்

சொல்கிறேன். வீடு திரும்பியதும் மருத்துவமனைக்குச் செல்.

கண்மணி : மிக்க நன்றி அம்மா.


உரையாடல் 4
க ழி வ றை யி ல் . .. ..
வருண் வணக்கம் அண்ணா.
:
தோட்டக்காரர் : வணக்கம் தம்பி.
வருண் அண்ணா! வகுப்பறையில் தவறுதலாக நீரை
: ஊற்றி விட்டேன். அதனைத் துடைக்க நீர் துடைப்பான்
வேண்டும்.
தோட்டக்காரர் : நீ வகுப்பறைக்குச் செல் தம்பி. நான் வந்து துடைக்கிறேன்.

வருண் எனது புத்தகப் பையும் நனைந்து விட்டது அண்ணா!


:

தோட்டக்காரர் : அதனை எடுத்து வகுப்பறையின் வெளியே வை தம்பி.


நான் காய வைத்துக் கொடுக்கிறேன்.

You might also like