You are on page 1of 2

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG REGENT

72000 GEMENCHEH, NSDK.


ரீஜண்ட் தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
KOD SEKOLAH: NBD5031
TEL/FAKS/ தொ.பே / தொ.நகல்:06-4316643 email:sjktregent@yahoo.com.my

திகதி: 07.11.2022

அன்புடையீர்,
கரு:நிரவல் விடுமுறையின் பள்ளி நாள்

வணக்கம். இக்கடிதத்தின் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த மாதம் நாம்


அனைவரும் கொண்டாடிய தீபாவளியை முன்னிட்டு நமது கல்வி அமைச்சு
தமிழ்ப்பள்ளிகளுக்காக கடந்த 28.09.2022 வெள்ளிக்கிழமை நிரவல் விடுமுறை
(CUTI GANTI) வழங்கியதை அனைவரும் அறிந்ததே.

2. அந்த நிரவல் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் எதிர்வரும்


12.11.2022 ஆம் நாள் சனிக்கிழமை பள்ளி நாளாகக் கருதப்படுவதை
அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

3. அந்நாளில் வெள்ளிக்கிழமை கால அட்டவணையைப் பின்பற்றி


ஆசிரியர்களால் பாடங்கள் போதிக்கப்படவுள்ளதால் மாணவர்கள்
அனைவரும் பள்ளிக்கு மட்டம் போடாமல், பாடப்புத்தகங்களையும், பயிற்சி
புத்தங்களையும் மற்றும் நோட்டுப் புத்தகங்களையும் தவறாது எடுத்து
வருவதைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர்
கேட்டுக் கொள்கின்றனர்.

4. அந்நாளில் வழக்கம்போல் மதியம் மணி 12.00 க்குப் பள்ளி களையுமென


கூறிக் கொள்கிறோம்.தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம்.

நன்றி.

‘கல்வி மனிதனின் கருவிழி’

இங்ஙனம்,

_________________________
(திருமதி.பூ.நவநீதம்)
(தலைமையாசிரியர்)

You might also like