You are on page 1of 3

துயர் நிறை மறை உண்மைகள்

I. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!

1. பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார் . அவர், "நான் அங்கே போய்
இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" என்றார். (Mat 26: 36-37)
2. அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். (Mat 26: 37)
3. அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே
தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார். (Mat 26: 38)
4. பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம்
வேண்டினார்; (Luke 22: 41)
5. "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என்
விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினார். (Luke 22: 42)
6. அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார் . (Luke 22:
43)
7. அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது
வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. (Luke 22: 44)
8. அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், "ஒரு
மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? சோதனைக்கு உட்படாதிருக்க
விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார். (Mat 26: 40-41)
9. இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான்.
அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும்
வந்நது. (Mat 26: 47)
10. அவன் நேராக இயேசுவிடம் சென்று, "ரபி வாழ்க" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். அப்பொழுது
சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். (Mat 26: 49-50, 56)

II. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!

1. படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,


முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். (John 18: 12-13)
2. தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.
இயேசு அவரைப் பார்த்து, "நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். நான் பேசியதைக் கேட்டுக்
கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே"
என்றார். (John 18: 20-21)
3. அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர் , "தலைமைக் குருவுக்கு
இப்படியா பதில் கூறுகிறாய்?" என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். (John 18: 22)
4. அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார். (John 18:
24) அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க
அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். (Mat 26: 57,59)
5. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, "போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய
மெசியா நீதானோ?" என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, "நானே அவர்; மேலும் மானிடமகன்
வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீரக ் ள்
"என்றார். (Mark 14: 60-62)
6. தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, "இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?
இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்க,
அவர்கள் அனைவரும், "இவன் சாக வேண்டியவன்" என்று தீர்மானித்தார்கள். (Mark 14: 63-64)
7. பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, "இறைவாக்கினனே, யார்
எனச் சொல்" என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர். (Mark 14:
65)
8. அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் பேதுரு அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை
உற்றுப்பார்த்து, "இவனும் அவனோடு இருந்தவன்" என்றார். அவரோ, "அம்மா, அவரை எனக்குத்
தெரியாது" என்று மறுதலித்தார். (Luke 22: 56,57)
9. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; "இன்று சேவல் கூவு முன் நீ என்னை
மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே
சென்று மனம் நொந்து அழுதார். (Luke 22: 61,62)
10. பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும்
தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம்
ஒப்புவித்தனர். (Mark 15: 1)

III. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும்
செபிப்போமாக!

1. பிலாத்து இயேசுவை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க இயேசு, "அவ்வாறு நீர்
சொல்கிறீர்" (Mark 15: 2) உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்;
இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச்
செவிசாய்க்கின்றனர்" என்று பதில் கூறினார். (John 18: 37)
2. பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, "இவனிடம் நான் குற்றம்
ஒன்றும் காணவில்லை" என்று கூறினான். ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா
வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று
வலியுறுத்திக் கூறினார்கள். (Luke 23: 4,5)
3. இயேசு ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று பிலாத்து அறிந்து, அப்போது
எருசலேமிலிருந்த ஏரோதிடம் இயேசுவை அனுப்பினான். (Luke 23: 7)
4. இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவர் அரும் அடையாளம்
ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம்
பல கேள்விகள் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. (Luke 23: 8,9)
5. ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு
உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். (Luke 23: 11)
6. அப்போது பிலாத்து இயேசுவை நோக்கி, "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும்
எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது
உனக்குத் தெரியாதா?" என்றான். இயேசு மறுமொழியாக, "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு
என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும்
பாவம் செய்தவன்" என்றார். (John 19: 10,11)
7. மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், "நான் யாரை விடுதலை செய்யவேண்டும்
என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?" என்று கேட்டான்.
(Mat 27: 17)
8. தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக்
கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். (Mark 15: 11) அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீரப் ்பு
அளித்தான். (Luke 23: 24) இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
(Mat 26: 26)
9. பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர்
அனைவரையும் கூட்டினர்; (Mar 15: 16)
10. அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக்
கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, "யூதரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர்.
அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;. (Mat 26: 29,30)

IV. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்ககை


் ச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச்
செபிப்போமாக!

1. அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை
அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். (Mat 27: 31)
2. காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்;
அவரை நாம் மதிக்கவில்லை. (Is 53: 3)
3. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; (Is 53:
4)
4. அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தச ீ ்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு
நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (Is
53: 5)
5. ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம் ; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;
ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். (Is 53: 6)
6. அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை;
அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத
செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். (Is 53: 7)
7. அப்பொழுது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார் .
படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். (Mar 15: 21)
8. பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே
சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீஙக ் ள் எனக்காக
அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள் என்றார். (Luke 23: 27-28)
9. இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார்.
அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். (John 19: 17)
10. அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. (Mark 15: 23)

V. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்
வரம் கேட்போமாக!

1. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து
அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். (Mar 15: 24)
2. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,” இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று
வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு
பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். (Luke 23: 39,42-43)
3. அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று
இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். (Luke 23: 34)
4. இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம் , "அம்மா, இவரே உம்
மகன்" என்றார். (John 19: 26)
5. பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு
அளித்து வந்தார். (John 19: 27)
6. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" என்று உரக்கக் கத்தினார். "என்
இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். (Mar 15: 34)
7. இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார்.
அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து
ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். (John 19: 28-29)
8. அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (John 19: 30) "தந்தையே, உம்கையில்
என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (Luke 23: 46)
9. அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே
நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, "இம்மனிதர்
உண்மையாகவே இறைமகன்" என்றார். (Mar 15: 34)
10. படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
(John 19: 34)
11. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில்
வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
(Mar 15: 43,46)

*******

You might also like