You are on page 1of 5

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க , இமைப்பொழுதும் என் நெஞ்சில்


நீங்காதான் வாழ்க எனக் கூறி இங்கு வருகைப் புரிந்திருக்கும்..

சிறப்பு பிரமுகராக வீற்றிருக்கும் பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளியின்


தலைமையாசிரியர் திரு.விஸ்வலிங்கம் அவர்களே, மதிப்பிற்குரிய பள்ளியின்
துணைத்தலைமையாசிரியர்களே, மரியாதைக்குரிய ஆசிரியப்
பெருந்தகைகளே, அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே உங்கள்
அனைவருக்கும் பள்ளியின் சார்பாக எனது வணக்கத்தைத் தெரிவித்துக்க்
கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனின் பேரருட் பெருங்கருணையால் இந்நிகழ்வு


மென்மேலும் சிறப்படைய இறை வாழ்த்துடன் தொடங்குவோம். இறை
வாழ்த்தினைப் பாட ஆசிரியை திருமதி பவித்ரா அவர்களை அன்புடன்
அழைக்கிறேன். சபையோர் அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.
இறைவாழ்த்து

இறைவாழ்த்தினைப் பாடிச் சென்ற ஆசிரியைக்கு நன்றி. தொடர்ந்து, தேசியக்


கீதம் பாடுதல். அனைவரும் எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேசியக் கீதம்

அனைவரும் அமரவும்.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக ஒரு தமிழ்ப்பண்பாட்டு நடனம். இதனை வழங்க


ஆறாம் ஆண்டைச் சேர்ந்த மாணவன் ஹரிஹரனை அழைக்கிறேன்.

பரதம் 1

அருமையான நடனத்தை வழங்கிய மாணவனுக்கு நன்றி.

குழந்தைகளை உலகிற்கு தருபவர்கள் பெற்றோர்கள், ஆனால் உலகத்தையே


குழந்தைகளுக்குத் தருபவர்கள் ஆசிரியர்கள். மாதாவையும் பிதாவையும்
குருவாகிய ஆசிரியர்களையும் தெய்வமாக வணங்கும் ஒரு மாணவன்
எதிர்காலத்தில் சமூகம் மதிக்கும் பண்பான தலைமையாசிரியராக அதுவும் தன்
தந்தை தலைமையாசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி
கற்று இன்று அப்பள்ளியிலேயே தலைமையாசியராகப் பொறுப்பேற்று அன்பிலும்
பண்பிலும் மட்டுமல்லாது நேர்மையிலும் தியாகத்திலும் விடிவெள்ளியாக
மிளிரும் நம் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் நீங்கா
இடம் பிடித்த நம் பள்ளித் தலைமையாசிரியர் திரு.விஸ்வலிங்கம் அவர்களைச்
சிறப்புரை ஆற்றி பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2021/2022
ஆண்டுக்கான விருதளிப்பு விழாவினை அதிகாரப்பூரவமாகத் திறந்து
வைப்பதற்காக அன்புடன் அழைக்கிறேன்

சிறப்புரை

எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என்ற கூற்றின் அடிப்படையில் சிறப்பான


முறையில் சிறப்புரை ஆற்றி இவ்வாண்டு விருதளிப்பு விழாவினை வெகு
விமரிசையாகத் திறந்து வைத்த சிறப்பு விருந்தினரான பள்ளித்
தலைமையாசிரியர் திரு.விஸ்வலிங்கம் அவர்களுக்கு நினைவுப் பரிசினை
வழங்க பள்ளியின் துணைத்தலைமையாசிரியர் திரு.யோகேஸ்வரன்
அவர்களை அழைக்கிறேன்.

சபையோரே, மாற்றங்கள் ஒன்றே மாறாறது. இதற்கு சிறந்த உதாரணம் நம்


நடனக் கலைகளே,

இவ்வரிசையில் இடம்பெற்ற நவீன நடனம் ஒன்றினை வழங்க படிநிலை 1


மாணவர்களை அழைக்கிறேன்.

நடனம் 1

கண்கவரும் அருமையான ஒரு நடனத்தை நமக்காக வழங்கி சென்ற


மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து,

எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால்


சிலந்தி வலையும் நம்மைச் சிறை பிடிக்கும். இதற்கு உதாரணமாக அனைத்து
பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு.
சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பரிசுகளை எடுத்து வழங்க சிறப்பு பிரமுகராக வருகை புரிந்திருக்கும் பள்ளியின்


தலைமையாசிரியர் திரு விஸ்வலிங்கம் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
பரிசுகளை வழங்கிய தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து,

நம் காதுகளுக்குக் குளிர்ச்சி ஊட்டும் வகையில் அடுத்து வருவது ஒரு பாடல்.


அம்மாவின் தியாகங்களை உணர்த்தும் இந்த அருமையான பாடலைக் கேட்டு
மகிழ்வோம். இதனை வழங்க ஆண்டு 5 வள்ளுவரைச் சேர்ந்த மாணவன்
இரா.பவித்திரன் அன்புடன் அழைக்கிறேன்.

பாடல் 1

நம்மில் உள்ள உணர்ச்சிகளை வெளிகொணரும் வகையில் நமக்காக பாடலை


வழங்கிச் சென்ற மாணவனுக்கு நன்றி.

தொடர்ந்து,

புறப்பாட நடவடிக்கை போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியடைந்த


வெற்றியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நற்சான்றிதழ்களை எடுத்து வழங்க பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளியின்


தலைமையாசிரியர் திரு விஸ்வலிங்கம் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்..

நற்சான்றிதழை எடுத்து வழங்கிய தலைமையாசிரியருக்கு நன்றி. வெற்றி பெற்ற


மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக, கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் வகையில்


ஒரு நடனம். இதனை வழங்க படிநிலை 2 மாணவர்களை அழைக்கிறேன்.

நடனம் 2
கண்கவரும் அருமையான ஒரு நடனத்தை நமக்காக வழங்கி சென்ற
மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து, நற்சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கும் நிகழ்வு. நற்சான்றிதழ்


மற்றும் கோப்பைகளை எடுத்து வழங்க சிறப்புப் பிரமுகர் அவர்களை முன்
அழைக்கிறேன்.

நற்சான்றிதழ்களையும் கோப்பைகளையும் எடுத்து வழங்கிய ஐயாவுக்கு நன்றி.

நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக, ஒரு நவீன நடனம். இதனை நமக்காக


வழங்க படிநிலை
2-யைச் சேர்ந்த ஆண் மாணவர்கள்.

நடனம் 3

அனைவரையும் தங்களின் நடனத்தால் மகிழ்வித்த மாணவர்களுக்கு நன்றி.

நாம் இப்பொழுது நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். ஆம்


சபையோரே, நிகழ்ச்சியினை நிறைவுச் செய்யும் வகையில்
நன்றியுரை..நன்றியுரையை ஆற்ற புறப்பாட நடவடிக்கை துணைத்
தலைமையாசிரியர் திரு.தம்பிராஜ் அவர்களை அழைக்கிறேன்.

நன்றியுரை

நன்றியுரையை ஆற்றி சென்ற ஆசிரியருக்கு நன்றி.

2021/2022 ஆம் ஆண்டு விருதளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.


இந்நிகழ்ச்சியின் நிறைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி
குறைகள் இருப்பின் இருகரம் கூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சில
வரிகளுடன் இந்நிகழ்வினை நிறைவு செய்கிறோம்.
பார்த்திருந்தால், எதிர்ப்பார்த்திருந்தால் காத்திருந்தால் எதுவும் நடக்காது ;
கிடைக்காது, இறங்கிப் போராடு. சோதனைகள் சாதனைகள் ஆகும். வெற்றி
உன் மகுடம் ஆகும்.

நன்றி வணக்கம்.

You might also like